கூட்டணி அமைத்தாலும்

 மண்ணைக் கவ்வுவது உறுதி

தமிழக  சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

 தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில் பாஜக தலைவர்கள் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார்கள். மத்திய தொழிலகம் பாதுகாப்புப் படையின் 50 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த  உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு விழாவிலேயே அரசியல் பேசு கிறார். 

அமித் ஷா வருகைக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறுகிறார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியோ, திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுகவும் தயாராக உள்ளது; எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான்; மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடை யாது என்கிறார். அதாவது அதிமுக - பாஜக இடையே ‘கூட்டணி’ ஏற்படப்போவதை சூசகமாக அவர் தெரிவித்துள்ளார்.

 2011ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றன. அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. ஊழல் செய்து   எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் அமைச்சர்களும் குவித்து வைத்துள்ள சொத்துக்களை மோப்பம் பிடித்த ஒன்றிய மோடி அரசு அதை வைத்தே அதிமுகவை வளைக்கப் பார்க்கிறது. 

பாஜக தனித்துப் போட்டியிட்டு தமிழகத்தில்  2026 தேர்தலில்  ஆட்சி அமைக்கும் என்று கடந்த வாரம் வரை சொல்லிக்கொண்டிருந்த அண்ணா மலையும் தங்களுக்கு திமுகவை வீழ்த்தவேண்டும் என்பதுதான் முதன்மையான பணி என்று கூறு கிறார்.

 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்வியால் அதிமுக  சிதறு தேங்காய் போல் பல துண்டுகளாக சிதறிக்கிடக்கிறது. நான் தான் உண்மையான அதிமுக என்று ஓ.பன்னீர்செல்வம் ஒரு பக்கமும், பிளவுபட்டுள்ள அதிமுகவை ஒன்றுபடுத்தி அம்மா ஆட்சியை அமைப்பேன் என்று சசிகலா மறுபக்கமும் எடப்பாடி தலை மையை ஒழித்துக்கட்டி அதிமுகவை கைப்பற்று வதே எனது வேலை என்று டிடிவி தினகரனும் தனித்தனி செயல்திட்டங்களோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

 கடந்த காலங்களில் குடி யுரிமை திருத்தச்சட்டம் உள்பட பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகள் அனைத்தையும் ஆதரித்த கட்சிதான் அதிமுக.

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக உட்கட்சிப் பிரச்சனையில் சிக்கித் தவித்த நிலையில் நிர்பந்தம் காரணமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதே நேரத்தில் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்து தனித்தனியே அணி அமைத்தன.

 வரும் சட்டப்பேரவைத் தேர்த லில் இந்த இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டி யிட்டாலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டா லும் அறிவார்ந்த தமிழக வாக்காளர்கள் அவர் களை மண்ணைக் கவ்வ வைப்பது உறுதி. ஏனென் றால் தமிழக மக்களுக்கு இந்த இரண்டு கட்சிக ளும் செய்துள்ள துரோகம் அப்படியானது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?