பட்டினி போட்டாலும்
எடை குறைப்பு அபாயம்.
உடல் எடையைக் குறைப்பதற்காக அதிக உணவு கட்டுப்பாட்டு எடுத்துக்கொண்டு `டயட்'டில் இருந்த 18 வயதான கேரள இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா(வயது18).
இவர் சற்று அதிகமான உடல் எடையுடன் இருந்தார். இதனால் இன்டர்நெட், சமூக வலைதளங்களில் வரும் உடல் எடைக் கட்டுப்பாடு யூடியூப் காணொலிகளைப் பார்த்து உணவுக் கட்டுப்பாட்டில்(`டயட்) இருந்தார்.
சுமார் 6 மாதங்களாக அவர் மிகக் குறைந்த அளவே உணவு எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனால் வெறும் 24 கிலோவுக்கு அவரது எடை குறைந்துவிட்டது.
கடந்த சில மாதங்களாக அவர் வெந்நீரை மட்டுமே அவர் குடித்து வந்துள்ளார். இதனால் உடல் மிகவும் மெலிந்து, நோயாளி போல மாறினார்.
இதையடுத்து அவரது பெற்றோர் அவரை தலச்சேரியிலுள்ள கூட்டுறவு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அனோரெக்ஸியா என்ற உணவுக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
'அனோரெக்ஸியா' என்பது ஒரு உணவுக் குறைபாடு ஆகும்.
எடை அதிகரித்துவிடும் என்ற பயம் காரணமாக இந்தவகைக் குறைபாடு ஏற்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீநந்தா, கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சாப்பாடு அதிகம் எடுத்துக் கொள்ளாததால் அவரது கல்லீரலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் நாகேஷ் மனோகர் பிரபு கூறும்போது, “18 வயதான இளம்பெண் ஸ்ரீநந்தா கடந்த 12 நாட்களுக்கு முன்புதான் எங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை ஐசியூவில் வைத்திருந்தோம். 24 கிலோ எடை மட்டுமே இருந்த அவர் படுத்தபடுக்கையாகவே இருந்தார். அவரால் எழுந்திருக்க கூட முடியவில்லை.
ரத்தத்தில் சர்க்கரை அளவு, சோடியம், ரத்த அழுத்தம் அனைத்தும் குறைவாகவே இருந்தது.
அவருக்கு செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. இருந்தபோதும், உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துவிட்டார்" என்றார்.
இதுகுறித்து ஸ்ரீநந்தாவின் உறவினர் ஒருவர் கூறும்போது, “பெற்றோர் உணவு கொடுக்கும்போது அதை ஸ்ரீநந்தா மறைத்து வைத்துவிட்டு சாப்பிடாமல் விட்டுவிடுவார்.
உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அவர் வெந்நீரை மட்டுமே குடித்து வந்தார்.வெறு எதையும் உட்கொள்ளவில்லை.அதுவே அவர் உயிரைப் பறித்து விட்டது' என்றார்.
பட்டினி போட்டாலும் பணியாது!
"அதிகாரத்திற்கு எதிராக நிமிர்ந்து நின்றால் நாகரிகமற்றவர்களா?"
இந்தியை ஏற்றால் தான், கல் விக்கான நிதியை தருவோம் என்று மிரட்டும் ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்ச்சமூகம் தக்க பாடம் புகட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில், ஒன்றிய அரசின் நிதி மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று, சு. வெங்கடேசன் எம்.பி. உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது:

கூட்டாட்சியின் மீதான தாக்கு தல் தான் நவ பாசிசத்தினுடைய கூறு.
நாங்கள் நீங்கள் கொடுத்த அறிக்கை யில் இருந்து சொல்கிறோம். நிதி ஆயோக்கின் அறிக்கை வறுமை ஒழிப்புத் திட்டத்தில் முன்மாதிரியாக இருக்கிற முதல் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது.
உங்களது பொரு ளாதார அறிக்கையில் மனிதவளத் தைப் பெருக்குவதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது.
நீங்கள் கொடுத்தி ருக்கிற அறிக்கையில் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக் கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல் கிறது.
உயர்கல்வி துவங்கி பொது சுகாதாரம் வரை தமிழ்நாடு முதலி டத்தில் இருக்கிறது. ஆனால் நாங் கள் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு நீங்கள் திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே என்பது எவ்வளவு அவலமானது.
ஆனால் பீகார் செலுத்துகிற 1 ரூபாய் வரிக்கு 7 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள். உத்தரப் பிரதேசம் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு 1.75 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள்.
இப்படி திருப்பிக் கொடுக்கிற எங்கள் உரிமையைக் கேட்டால், நீங்கள் எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள்.
நிதியில், கல்வியில், ஆட்சி நிர் வாகத்தில் என எல்லா முனைகளி லும் கூட்டாட்சியைத் தாக்குகிறீர் கள். மாநிலங்களைப் பட்டினி போட்டு பணிய வைக்கிறீர்கள்.
பட்டினி போட்டு பணிய வைக்கும் உங்களது அதிகாரத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்பவர்களை நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்திய வார்த்தையை நீங்களே திரும்பப் பெறுகிறீர்கள் என்றால், எவ்வளவு நாகரிகமற்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தி னீர்கள் என இப்போதாவது நீங்கள் உணர்கிறீர்களா என்று நாங்கள் கேட்கிறோம்.
நீங்கள் அந்த வார்த் தையைத் திரும்பப் பெற்ற பிறகும் தமிழ்நாட்டிலே இருக்கிற ஒரு ஒன் றிய அமைச்சர் உங்களது பேச்சை ஆதரிக்கிறார் என்றால், இது தான் நாகரிகமா என்று நாங்கள் கேட்க நினைக்கிறோம்.
கல்வி அமைச்சகத்தின் கீழே வருகிற ஐஐடியின் இயக்குநர் மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்கிறார், அது நாகரிகமா எனக் கேட்க உங்களால் முடியவில்லை. கல்விக்குக் காசு கேட்டால் எங்களைப் பார்த்து நாக ரிகமா என்று நீங்கள் எங்களைக் கேட்கிறீர்கள்.
அதேபோல இந்தியர்களைக் கை விலங்கிட்டு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அதன் மீது கோபம் வர வில்லை. அதற்கு எதிராக கார்ட்டூன் போட்ட ஆனந்த விகடன் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்கள். இது நாக ரிகமா என்று உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம். மூன்று வருடமாகப் பற்றி எரிகிறது மணிப்பூர். ஒருமுறை கூட பிரதமர் போகவில்லை.
ஒருமுறை கூட போகாத பிரதமர் இருக்கிற ஒரு அவைக்கு மணிப்பூரின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறீர்களே?
இது நாகரிகமா என்ற கேள்வியை உங்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம். இந்தியாவின் கூட்டாட்சியைக் காக்க உறுதி பூண்டுள்ளோம் இதே அவையில் 543 உறுப்பினர் கள் இருக்கிறோம். ஆனால் 848 இருக் கையை இந்த அவையிலே நீங்கள் அமைத்திருக்கிறீர்கள்.
உங்களது மறை முக சதித்திட்டத்திற்காக தென் மாநி லங்களின் உரிமையை நசுக்க நினைக்கிற உங்களின் சதிக்கு எதிராக இன்றைக் குத் தமிழ்நாடும் , தமிழ்நாட்டின் முதல மைச்சரும், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு ஓரணியில் நிற்கிறார்கள். தென்மாநிலங்களுக்கு நீங்கள் இழைக்கிற வஞ்சகத்திற்கு எதிராக இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டி ருக்கிறோம்.
அதேபோல இதே அவையில் நீங்கள் தாக்கல் செய்திருக்கிற இந்த நிதி நிலை அறிக்கையில் சிறு- குறு தொழில்களுக்கு மிக அதிகமான வட்டி. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு மிக அதிகமான வரிவிலக்கு. உங்களது வரிக் கொள்கையை ஒரு வரியில் விளக்கு வதற்கு இது ஒன்றே போதுமென்று நினைக்கிறேன்.
அதேபோல கடந்த மூன்று மாதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி (MNREGA) திட்டத் திற்கு கொடுக்க வேண்டிய தொகையை ஒன்றிய அரசு விடுவிக்க மறுக்கிறது. எங்களது மதுரை மாவட்டத்தில் மட்டும் 121 கோடி ரூபாய்- உழைத்த மக்களுக் கான கூலியை நிறுத்தி வைத்திருக் கிறார் பிரதமரும், நிதி அமைச்சரும் என்ற குற்றச்சாட்டை இந்த அவை யிலே நாங்கள் முன்வைக்க விரும்பு கின்றோம்.
அதேபோல இன்றைக்கு மும்மொழிக் கொள்கையைக் கடை பிடித்தால் தான் தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குக் கொடுக்க வேண்டிய 2500 கோடி ரூபாய் விடுவிப்போம் என்று கல்வி அமைச்சர் சொல்கிறார்.

அரசியல் சாசனத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை தமிழ்நாடு மீண்டும் மீண்டும் புரிய வைக்கும். இவ்வாறு சு. வெங்கடேசன் மக்களவையில் பேசியுள்ளார்.