எல்லாம் அறிந்த ஆர்.யன். ரவியும்,
படிப்பறிவில்லா கால்டுவெல்லும்!
“கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும் பள்ளிப் படிப்பே படிக்கவில்லை” என்று 200 ஆண்டுகளுக்குப்பிறகுகண்டுபிடித்திருக்கிறார் ஆர்.யன்.ரவி.
அவர் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதாகவும், அவர் காலடியில் கால்டுவெல்லும், பாப்பும் நின்று கொண்டிருப்பதாகவும் ஒரு நாளிதழ் கார்ட்டூன் போட்டுள்ளது.

தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்! செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்!
நானோ அதனை மரயமாக வளர்த்து வருகிறேன்'' -–- என்பார் பாவாணர். இதெல்லாம் ஆரியக் கூட்டத்துக்கு எப்படித் தெரியும்?
ஏன் இவர்களுக்கு கால்டுவெல் மீது கோபம்? எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை என்று ஆரியக் கும்பல் புரூடா விட்டுக் கொண்டிருந்தபோது, 'இதில் இருந்து தனித்த அடையாளம் கொண்டது தமிழ். திராவிட மொழிக் குடும்பத்துக்கும் சமஸ்கிருதத் துக்கும் தொடர்பில்லை' என்று நிறுவியவர் கால்டுவெல்.
தமிழ் தனித்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னதால் கால்டுவெல் மீது இவர்களுக்கு கோபம். அவர் அதை எழுதாமல் போயிருந்தால் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததாக அவித்து தட்டி இருப்பார்கள்.
திராவிட மொழிகள் ஒரு மொழியின் வட்டார வழக்குகள் அல்ல, திராவிட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து தனித்து நிற்பவை, ஆரியருக்கு முன் வாழ்ந்தோருடன் தொல். திராவிடர் கொண்டிருந்த அரசியல் சமூக உறவுகள், திராவிடர்களின் ஆரியத்துக்கு முந்தைய நாகரிகம், திராவிட இலக்கியங்களின் பழமை - ஆகியவை பற்றி விரிவாக எழுதியவர் கால்டுவெல் என்பதால்தான் அவர்களுக்குத் தீராத கோபம்.
குமரி முனைக்கு தென்பகுதியில் தோன்றிய தமிழர்கள், இந்தியா முழுவதும் பரவினார்கள். இந்தத் தமிழரை வடமொழிக்காரர்கள் 'திராவிடர்' என்று அழைத்தனர் என்று கண்டு பிடித்தவர் கால்டுவெல். ஆரிய இலக்கணத்தில் இருந்தே தமிழ் இலக்கணம் உருவாக்கப்பட்டதாகச் சிலர் கதை விட்டார்கள்.
இதை மாற்றி தமிழுக்கு தனி இலக்கணம் உண்டு என்றும், ஆரிய இலக்கணம் வேறு, - தமிழ் இலக்கணம் வேறு – என்றும் சொல்லி தலைக்கனத்தை உடைத்தவர் கால்டுவெல்.
1814 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தவர் கால்டுவெல். அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் படித்தவர். இலண்டன் மிஷனரியில் சேர்ந்தார்.
கிறித்துவம் பரப்புவதற்காகத் தான் 1838 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். 1841 முதல் நெல்லை மாவட்டம் இடையன்குடியில் தங்கி கிருத்துவப் பணியைச் செய்தார்.
இயல்பிலேயே மொழியியல் மீது ஆர்வம் கொண்டவராக இருந்ததால் தமிழ் கற்கத் தொடங்கினார். அது முதல் தமிழ்த் தொண்டை தொடங்கினார்.
A Comparative Grammar of the Dravidian or South Indian Family Languages - என்ற நூலை 1856 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். 'திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்பது இதற்குப் பெயர்.
இவை மட்டுமல்ல; பல்வேறு புகழ்பெற்ற நூல்களை அவர் எழுதினார்.
« தின்னவேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு, 1881– - திருநெல்வேலி வரலாறு
"தின்னவெல்லி ஷனர்ஸ்: ஒரு ஓவியம் - அவர்களின் மதம், மற்றும் அவர்களின் தார்மீக நிலை மற்றும் குணாதிசயங்கள், ஒரு நடிகர்; 1849 - – திருநெல்வேலி நாடார்கள் பற்றிய குறிப்புகள்
« The Inner Citadel of Religion – 1879 - மதத்தின் உள்ளீடு
"சேமிக்கப்படாதவர்களின் மார்ச் - ஒரு மதப் பகுதி. – -1896 – -மதத்தின் வழியில்
« குடுமி பற்றிய அவதானிப்புகள் - 1867 - குடுமிகள் பற்றி
« கிறித்துவத்திற்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பு - 1885. – - கிருத்துவத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையேயான தொடர்பு – - ஆகிய புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதினார்.
தமிழிலும் பல்வேறு புத்தகங்களை அவர் எழுதி இருக்கிறார்.
நற்கருணை தியான மாலை, தாமரைத் தடாகம், ஞான ஸ்நானம், நற்கருணை, பரதகண்ட புராணம் ஆகியவை அவர் எழுதிய தமிழ் நூல்கள்.
இதில் எதையாவது படித்திருப்பாரா ஆர்.யன்.ரவி?
கால்டுவெல் பள்ளிப் படிப்பு படித்தால் என்ன? படிக்காமல் போனால் என்ன?
அவர் புத்தகத்தை சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.
மூன்று முறை அவரது நாட்டுக்குப் போனார். அங்கேயே இருந்து விடாமல் தமிழ்நாடு திரும்பினார் கால்டுவெல்.
77 ஆவது வயதில், 1894 ஆம் ஆண்டு கொடைக்கானல் மலையில் அவர் மறைந்தார்.
உடலை இடையன்குடியில் அடக்கம் செய்தார்கள்.
53 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர் அவர். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பே இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஐரிஷ், ஸ்காட்டிஷ், ஜெர்மன், போர்ச்சுக்கல், ஸ்பானியம் ஆகிய மொழிகளைக் கற்றவர் கால்டுவெல் என்கிறார் தமிழ் மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியம்.
இதெல்லாம் ஆர்.யன்.ரவி ஆளுநருக்குத் தெரியுமா?