கைத்தடிகள் தயார்?
கோவா பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாண்டுரங் மட்கைகர், தனது சொந்தக் கட்சி அரசை நோக்கி பற்றி, பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு "ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்
ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் புழல் மத்தியச் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து சுமார் மூன்று மணி நேரம் சோதனை செய்தனர். பெண் சிறைவாசிகளிடம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை உரிய வகையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறி ந்தனர்.
பின்னர், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவிடம் இந்த ஆய்வு குறித்து கூறுகையில், சிறையின் அனைத்துப் பகுதிகளும் தூய்மையாக இருந்தது என்றும் முறையாக பராமரிக்கப்படு கிறது என்றும் கூறினர்.
மேலும், கைதிகளுக்கான உணவு தரமாகவும் சுவையாகவும் இருக்கிறது என்றும் கூறியதுடன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அதிமுக இரட்டை வேடம்
சென்னை: “தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த கூட்டத்தில் அதிமுகவும் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த டி. ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசு கிறார்.
பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றிபெறப் போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை” என்று அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சோதனை
சென்னை மண்ணடியில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்திற்கு நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் வியாழக்கிழமை (மார்ச் 6) சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி பாதுகாப்புக்காக அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் வேகமாக பரவியதால், கட்சி அலுவலகம் முன்பு திரண்ட அந்த கட்சியினர் அதிகாரிகளைக் கண்டித்து கோஷமிட்டனர்.
11 ஆயிரம் மாணவர்கள் ‘ஆப்சென்ட்’
பிளஸ்-1 பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 பேரும், பள்ளி மாணவியர் 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 பேரும், தனித்தேர்வர்கள் 4 ஆயிரத்து 755 பேரும், சிறைவாசி தேர்வர்களாக 137 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் எழுதி இருப்பதாக அரசுத் தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது. முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வை 11 ஆயிரத்து 90 பள்ளி மாணவர்கள் எழுதவில்லை (ஆப்சென்ட்) என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
ஹால் டிக்கெட்
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 14 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
ஜாமீன் மனு தள்ளுபடி
விசாரணைக்கு சென்ற காவலர்களைத் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் பாது காவலர்கள் அமல்ராஜ், சுபாஷ் ஆகியோர் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திரு ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
சங்பரிவார்
கைத்தடிகள் தயார்?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கு தயாராக துவங்கிவிட்டதோ என்னவோ?
ஈடியும், ஐடியும் தேர்தலில் களமிறங்கிவிட்டன. இல்லை களமிறக்கிவிடப்பட்டுள்ளன. அமலாக்கத்துறை(ஈடி), வருமான வரித்துறை (ஐடி)- இன்றைக்கு இந்தியாவில் சர்ச்சைகளில் சிக்கும் முக்கிய ஒன்றிய அரசு துறைகள். இவை இரண்டுமே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஏவல் வேலைகளை செய்வதையே முக்கிய பணியாக கொண்டவை என்று எதிர்க்கட்சிகள் வர்ணிக்கின்றன.

ஆனால், அதற்காக பின்வாங்குபவர்களாக அவர்கள், இல்லை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாட்டை குறிவைத்து காய் நகர்த்திக் கொண்டே இருப்பது அவர்களது வாடிக்கை.
ஆனால், பாஜவை பொறுத்தவரை எதை செய்தாலும் அது தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ் மொழிக்கு விரோதமானதாகவே இருக்கிறது. காவிரி டெல்டாவில் பூமியை குடைந்து ஹைட்ரோகார்பன், மதுரையில் பூமியை பிளந்து டங்ஸ்டன், தூத்துக்குடியில் தாமிரம், தேனியில் மலையில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகம், பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடலில் ஆழ்கடல் எண்ணெய் கிணறுகள் என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்காக அறிவிக்கும் திட்டங்கள் எல்லாமே மக்களை, சுற்றுச்சூழலை, கடுமையாக பாதிக்கும் வகையில்தான் உள்ளது.
இந்த திட்டங்களால் பாஜ மீது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருவித ஒவ்வாமை.
கூட்டாட்சி தத்துவத்துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ஆபத்து என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, ஆளுநர்கள் ஒன்றிய அரசின் அரசியல் ஏஜென்டுகளாக செயல்படுவது, விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, மாநிலங்களின் அதிகாரத்தை பறித்துக்கொள்வது என்று ஒன்றிய அரசு தவறான பாதையில் செல்வதாக அவர் கூறினார்.
இதனால், மோடி பிரதமர் ஆனதும் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து நடப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், 2014ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற நாளில் இருந்தே, மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதையே ஒன்றிய அரசு முக்கிய வேலையாக செய்து வருகிறது.
அத்தோடு, மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டில் கைவைத்தது, வெள்ள நிவாரணம் கூட தர மறுப்பு, திட்டங்கள் அறிவிப்பில் பாரபட்சம், மும்மொழி என்ற பெயரில் இந்தி திணிப்பு, இந்தி திணிப்பை ஏற்காத தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தர மறுப்பது, ஈடி, ஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை நிலைகுலைய செய்வது என்று இன்றைக்கு மோடி அரசின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைப்பதாகவே அமைந்துள்ளது.
மோடி அரசின் இந்த செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி;தினகரன்.