ஏகாதிபத்திய துரோகம்!
"தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத்திட்டம்"முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்.

- "திமுகவுக்கு மாற்று அதிமுகதான்" பிரசாந்த் கிஷோர்கருத்துக்கு ஜெயக்குமார் பதிலடி!
- "தமிழ்நாடு இருமொழி கொள்கையைதான் பின்பற்றும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - சவரனுக்கு ரூ.560 உயர்ந்து 64 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை
- வந்தவாசியில் அடுத்தடுத்து இரு சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்கள் - உடனடியாக தீர்வுகாண பொதுமக்கள் கோரிக்கை
- தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையே இயக்கம்; புதிய நடைமுறை இன்று முதல் அமல் - இனி தாம்பரம் வரை இயக்கப்படாது
- கோவையில் தண்டவாளங்களில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் முற்றிலும் தடுக்கப்பட்டதாக தகவல் - வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி
- சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டி பூவிருந்தவல்லி நகராட்சி கொட்டி வைத்திருந்த குப்பைகள், கரும் புகையுடன் எரிந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
- எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாராலும் அதிமுகவை வழி நடத்த முடியாது - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.
- பிலிப்பைன்ஸில் அதிகரித்து வரும் வெயிலில் தாக்கத்தால் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏகாதிபத்திய துரோகம்!
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோர் ஜெலன்ஸ்கி யை “மரியாதையற்றவர்” எனப் பகிரங்கமாக அவ மதித்துள்ளனர். இது வெறும் தனிப்பட்ட தாக்கு தல் அல்ல; மாறாக அமெரிக்க வெளியுறவுக் கொள் கையின் அடிப்படை மாற்றத்தைக் குறிக்கிறது.
இதுதான் ஏகாதிபத்திய அமெரிக்காவின் உண்மை முகம்! மூன்று ஆண்டுகளாக ஜெலன் ஸ்கியை பாவையாக ஆட்டிவைத்து, ரஷ்யாவுக்கு எதிராக போரிட வைத்து, இப்போது உதவாக்கரை என்று தூக்கி எறிந்துள்ளது. டிரம்பின் புதிய நிர்வாகம் உக்ரைனுக்கான நிதியுதவியை குறைக்கிறது, ராணுவ உதவிகளை நிறுத்துகிறது, சைபர் பாதுகாப்பு உதவியையும் குறைக்கிறது.
ஏகாதிபத்திய நலன்களுக்காக மேற்கத்திய சக்திகள் உக்ரைனை ஒரு போர்க்களமாக மாற்றின. ஆனால் இப்போது, அதே சக்திகள் தங்கள் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களுக்காக உக்ரைனை கைவிடத் தயாராகி வருகின்றன. இது ஏகாதிபத்திய சக்திகளின் எப்போதும் மாறாத வரலாற்று நடைமுறையாகும் - அவர்களின் நலன்கள் முடிந்ததும் தங்கள் கூட்டாளிகளைக் கைவிடுவது.
இந்த அரசியல் விளையாட்டில் உண்மை யான பாதிப்பை அனுபவிப்பவர்கள் உக்ரைன் மக்கள். போரின் கொடூரங்களுக்கு இடையே, அவர்கள் இப்போது தங்கள் நாடு மேலும் துண்டா டப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
ஜெலன்ஸ்கியின் லண்டன் பயணமும், ஐரோப் பிய தலைவர்களுடனான சந்திப்பும் உண்மையில் அவரது நம்பகத்தன்மை எவ்வளவு குறைந்துள் ளது என்பதை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஆதரவு இல்லாமல், ஐரோப்பா உக்ரைனுக்கு தேவையான ஆதரவை வழங்க முடியுமா என்பது கேள்விக்குறியே!
இந்த நெருக்கடியில் இருந்து வெளியேற, உக்ரைன் மற்றும் உலகின் உழைக்கும் வர்க் கத்தின் ஒற்றுமையும், ஏகாதிபத்திய சக்திகளின் கையாட்களாக அல்லாத சுயேச்சையான தலை மையும் உக்ரைனுக்கு அவசியம்
உக்ரைன் எதிர்கொள்ளும் சவால்கள் அதன் ஏகாதிபத்திய எஜமானர்களின் பிடியிலிருந்து விடுபடுவதில் மட்டுமல்ல, உண்மையான மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அரசியல் அமைப்பை உருவாக்குவதிலும் உள்ளது.
ஏகாதிபத்திய சக்திகளின் விளையாட்டுக்க ளில் உழைக்கும் மக்களே எப்போதும் பலியாகிறார் கள். உண்மையான விடுதலை என்பது அனைத்து வகையான ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் மட்டுமே சாத்தியமாகும்.உலக அரசியல் வரலாற்றில் முன்னெப் போதும் இல்லாத வகையில், நாம் ஓர் உலக வல்லர சின் முழுமையான பிடியில் சிக்கிய ஒரு நாட்டின் தலைவரின் அவலகரமான நிலையை இன்று கண் கூடாகக் காண்கிறோம்.