பொய் சொல்ல அஞ்சாத
வரியை குறைப்பதாக அமெரிக்காவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரியை குறைக்க சம்மதித்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு வரி குறைப்பது தொடர்பாக முடிவு எடுக்க செப்டம்பர் வரை அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
சங்கிகள்!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சுதந்திரமாக பெண்கள் நடமாட முடியவில்லை' என, அமைச்சர் எல்.முருகன் கூறினார் இருக்கிறார்.
வாயைத் திறந்தாலே பொய் சொல்லும் பிறவி அவர். இப்படிப் பேசுவதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? இல்லை.
ஏதாவது அறிக்கை வந்திருக்கிறதா? இல்லை.
அப்படி தொடர் சம்பவங்கள் நடக்கிறதா? இல்லை.
ஆதாரமாக எதையாவது காட்டினாரா எல்.முருகன்? ம்கூம், இல்லை.
ஆனால் துணிச்சலாக, கூச்சம் இல்லாமல், 'சுதந்திரமாக பெண்கள் நடக்க முடியவில்லை' என்று ஒரு ஒன்றிய அமைச்சர் பேசுகிறார். மனிதர்களை அமைச்சர்களாக பா.ஜ.க. வைத்திருக்கிறது பாருங்கள்!
ஒருவேளை பா.ஜ.க. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் செய்திகளை மனதில் வைத்துச் சொல்கிறாரா எல்.முருகன்?
*21.3.2024 அன்று 'தினமணி' நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டது. 'பாலியல் வழக்குகளில் முதலிடம் வகிக்கும் பா.ஜ.க. உறுப்பினர்கள்' என்று அதற்கு தலைப்பு போட்டிருந்தது. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் உள்ள அரசியல்வாதிகள் குறித்த அறிக்கையை தேர்தல் உரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது எழுதி இருந்தது 'தினமணி'.
2019, 2024 தேர்தல்களின் போது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களை முன் வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில் 16 எம்.பி.க்கள், 135 எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் 54 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்கிறது அந்த அறிக்கை. இதை மனதில் வைத்துத்தான், 'பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று சொல்கிறாரா எல்.முருகன்?
*மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்ட பிரிஜ் பூஷன், பா.ஜ.க.வின் எம்.பி. அவரை இதில் இருந்து காப்பாற்ற பா.ஜ.க. எடுத்த முயற்சிகளை இந்த நாடு அறியும்.இதை வைத்துச் சொல்கிறாரா எல்.முருகன்?
*மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டார்களே. அது பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மணிப்பூரில்தானே நடந்தது?
சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கழித்து சமூக ஊடகங்களில் வந்த பிறகுதானே வழக்குப் பதிவு செய்தார்கள்?
இது போன்ற குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங்கை இரண்டாண்டு காலமாக காப்பாற்றி வைத்திருந்தார்கள்.
முடியாத நிலையில்தான் அவர் பதவி விலகினார்.
இதனை மனதில் வைத்துச் சொல்கிறாரா எல்.முருகன்?
*காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீ சக்திசிங் கோஹில் 25.9.2024 அன்று ஒரு பேட்டி கொடுத்தார். “குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பிரதமரே குஜராத்தை சேர்ந்தவர், அவர் இது பற்றி ட்வீட் செய்வதில்லை, அவரே எதுவும் கூறுவதில்லை, பாதிக்கப்பட்டவர்களின் குரல் டெல்லியின் தாழ்வாரங்களை எட்டவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு, குஜராத்தின் தாஹோத் மாவட்டம் சிங்வாட் தாலுகாவில் ஒரு அரசு தொடக்கப் பள்ளி உள்ளது.
காலையில், பள்ளியின் முதல்வர் ஒரு பெண்ணின் வீட்டின் முன் தனது காரை நிறுத்தி, அவரது தாயிடம் - 'நான் பள்ளிக்குச் செல்கிறேன், உங்கள் மகளை என்னுடன் காரில் உட்காரச் சொல்லுங்கள்' என்று கூறுகிறார்.
அந்தத் தாய் தனது 6 வயது மகளை அவரின் காரில் உட்கார வைத்தார்.
அவர் காரை முன்னோக்கி எடுத்துச் சென்றார். பிறகு அந்த சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் அதே காரில் அவளை கழுத்தை நெரித்துக் கொன்றார். இவர் பா.ஜ.க. தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
வதோதராவின் அங்கத் கிராமத்தில், ஒரு பா.ஜ.க. தலைவர் ஒரு பெண்ணை அழைத்து, பின்னர் அந்தத் திருமணமான பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அவளை பாலியல் பலாத்காரம் செய்து, அவள் யாரிடமாவது சொன்னால், அவளைக் கொன்றுவிடுவேன் என்று கூறுகிறார்.
நேற்று போடாட்டில், மற்றொரு பள்ளியில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். பருச்சில், ஐந்து மாதக் குழந்தையைபாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி நடந்தது. நாம் எங்கே போகிறோம்?
சிந்து பல்கலைக்கழக சர்வதேச இயக்குனர் வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திலிருந்து ஒரு பெண் வெளியே வந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்.
குஜராத்திலும் வெளியேயும் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்களின் நிலை இதுதான். மோடி ஜி நல்லாட்சி பற்றி பேசுகிறார்” என்று சொல்லி இருக்கிறார்.இதை மனதில் வைத்து சொல்கிறாரா எல்.முருகன்?
கடந்த மாதம் 14 ஆம் தேதி அன்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க. க.வின் மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர் அந்த கட்சியின் பொருளாதாரப் பிரிவுத் தலைவராக இருக்கிறார்.
15 வயது மாணவிக்கு ஸ்கூட்டர் வாங்கித் தருவதாகச் சொல்லி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். 'எனது மகளின் செல்போனுக்கு எம்.எஸ்.ஷா ஆபாச தகவல்களை அனுப்பி இருக்கிறார்' என்று அந்த மாணவியின் தந்தை சொல்லி இருக்கிறார்.
அவரது செல்போன், லேப் டாப் ஆகியவற்றை ஆய்வு செய்த போது அனைத்தும் உண்மை என காவல் துறை உறுதி செய்தது.
இதை மனதில் வைத்துச் சொல்கிறாரா எல்.முருகன்?
பெண்கள் மிகவும் பாதுகாப்பாக பணியாற்றும் நகரமாக தேர்வு செய்யப்பட்டு சென்னைதான். அதிகளவிலான பெண்கள், பணியாற்றுவதும் தமிழ்நாட்டில்தான். இதனைக் கெடுக்கப் பார்க்கிறது
ஒரு கூட்டம்.
அதற்கான அவதூறுகளைத் தான் அறிக்கைகளாக, பேட்டிகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முருகன்தான் முரசொலி இடம் பஞ்சமி நிலம் எனக் கூறி பொய்கூறி அம்பலப்பட்டு அம்மனமானவர்.