இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

வலு­வான கடவு எழுத்து


நெட் பேங்கிங் எனப்­படும் இணையம் மூலம் வங்­கிச்­சே­வையை பெறும் வசதி, இருந்த இடத்தில் இருந்தே வங்­கிச்­சே­வை­களை அணுக வழி செய்­கி­றது. 

பில் செலுத்­து­வதில் துவங்கி, பண பரி­மாற்றம், கணக்கு விப­ரங்­களை அறிதல் என பல­வ­கை­யான சேவை­களை பெற இதை பயன்­ப­டுத்­தலாம்.

 இணையம் மூலம் வங்­கிச்­சே­வையை பெறும் போது பாது­காப்­பிலும் கவனம் செலுத்த வேண்டும். நாம் பயன்­ப­டுத்தும் கடவு எழுத்து(பாஸ்­வேர்டு) வலு­வா­ன­தா­கவும், பாது­காப்­பா­ன­தா­கவும் இருக்க வேண்டும். 

இதற்­கான குறிப்­புகள்:
வலு­வா­னதா? வலு­வான கடவு எழுத்து  குறைந்த பட்சம், எட்டு வெவ்­வேறு வித­மான எழுத்து வடி­வங்­களை பெற்­றி­ருக்க வேண்டும் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. ஏனெனில் தொடர்ச்­சி­யாக ஒரே வித­மான எழுத்­துக்கள் இருந்தால் அவற்றை ஹேக்­கர்­களால் எளி­தாக கணித்து விட முடியும். 

இதை தவிர்க்க, நிறுத்தல் குறி, சத­வீத குறி, புள்ளி, டாலர் குறி, ஹாஷ் உள்­ளிட்­ட­வற்றை பயன்­ப­டுத்­தலாம். அதே போல எழுத்­துக்­களை பெரிய எழுத்­துக்கள், சிறிய எழுத்­துக்கள், நிறுத்தல் குறிகள் கொண்­ட­தா­கவும் பயன்­ப­டுத்த வேண்டும்.


 பயன்­ப­டுத்­தப்­படும் கடவு எழுத்து எழுத்து நீளம் கூடாது வடிவம் தொடர்ச்­சி­யாக, மூன்று எழுத்­துக்­க­ளுக்கு மேல் இல்­லாமல் இருப்­பதும், எண்கள் தொடர்ச்­சி­யாக இரண்டு இலக்­கங்­க­ளுக்கு மேல் இல்­லாமல் இருப்­பதும் நல்­லது. இடையே வேறு வடி­வங்­களை பயன்­ப­டுத்த வேண்டும். 

அதே போல டெலிட் போன்ற வார்த்­தை­க­ளையும்  பயன்­கடவு எழுத்தில் ப­டுத்­து­வதை தவிர்க்க வேண்டும். இவை சிக்­கலை உண்­டாக்க கூடி­ய­வை­யாக கரு­தப்­ப­டு­கின்­றன.

தனித்­தனிவலு­வான
கடவு எழுத்து  உரு­வாக்­கினால் மட்டும் போதாது, அவற்றை நிர்­வ­கிப்­ப­திலும் சரி­யான அணு­கு­மு­றையை கடை­பி­டிக்க வேண்டும். பொது­வா­கவே ஒரே பாஸ்­வேர்டை ஒன்­றுக்கு மேல்­பட்ட சேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என சொல்­லப்­ப­டு­கி­றது. 

எனவே, ஒன்­றுக்கு மேற்­பட்ட வங்­கி­களில் இணைய வங்­கிச்­சே­வையை பயன்­ப­டுத்­தினால், அவை ஒவ்­வொன்­றுக்கும் தனித்­தனி பாஸ்­வேர்டு வைத்­தி­ருக்க வேண்டும். 

அதே போல கம்ப்­யூட்­டரில் நுழைய பயன்­ப­டுத்தும் பாஸ்­வேர்டில் இருந்து இணைய வங்­கிச்­சே­வைக்­கான கடவு எழுத்து வேறு­பட்­ட­தாக இருக்க வேண்டும்.

செய்­யக்­கூ­டா­தவையாரி­டமும் பாஸ்­வேர்டை பகி­ரவோ, அவற்றை குறித்து வைக்­கவோ வேண்டாம்.கம்ப்­யூட்­டரில் எந்த கோப்பு வடி­விலும் பாஸ்­வேர்டை சேமித்து வைக்க கூடாது. 


ஒரே பாஸ்­வேர்டை மாற்­றாமல்தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்­து­வதுநல்­லது அல்ல.பாஸ்­வேர்டை நினைவில் கொள்­ளவும் எனும் வச­தியை ஒரு போதும் கிளிக் செய்ய வேண்டாம்.

தவிர்க்க வேண்­டி­யவை உங்கள் 
கடவு எழுத்து ஆங்­கில மற்றும் தொழில்­நுட்ப அக­ரா­தி­களில் இடம் பெற்­றி­ருக்க கூடி­ய­தாக இருக்க கூடாது.

ஒரு­வரின் பெயர், பொருட்கள் அல்­லது இடங்­களில் பெயர்­களை குறிப்­ப­தாக இருக்க கூடாது. 
பிறந்த தினங்கள், தொலை­பேசி எண்கள், வாகன எண்­களை தவிர்க்­கவும். 

விசைப்­ப­லை­கையில் பார்க்க கூடிய எழுத்­துக்­களின் வழக்­க­மான சேர்க்­கை­யையும் தவிர்க்க வேண்டும்.
வரலாறு காணாத வறட்சியை நோக்கி தமிழகம்
-அ.அன்வர் உசேன்
தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையும் வடகிழக்கு பருவமழையும் மழைப் பொழிவை தருகின்றன. குறிப்பாக வடகிழக்கு பருவ மழை தமிழகத்திற்கு 48 சதவீத மழையை அளிக்கிறது. 
தமிழகத்தில் இந்த ஆண்டு இரண்டு பருவ மழைகளும் குறைவாகவே இருந்தன. தென்மேற்கு பருவமழை 19சதவீதம் குறைவாக பெய்துள்ளது. 
குறிப்பாக மேற்கு மாவட்டங்கள் மிகக்குறைவான மழையே பெற்றுள்ளன.வடகிழக்கு பருவ மழை தமிழகத்திற்கு 48சதவீத மழையை அளிப்பதால் இந்த மழை விவசாயத்திற்கும் குடிநீர்த் தேவைக்கும் மிக முக்கியமானது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை மிகவும் குறைவாக பெய்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 62சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
 பாண்டிச்சேரியில் இது 79சதவீதம் குறைவாக பெய்ந்துள்ளது. கடந்த 141 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டுதான் தமிழகம் இவ்வளவு குறைவான வடகிழக்கு பருவமழையை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 1876ஆம் ஆண்டுதான் இத்தகைய மோசமான நிலை இருந்தது. 
இந்த பின்னணியில் தமிழகம் எத்தகைய நெருக்கடியான சூழலை சந்திக்க உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள இயலும்.இயற்கையின் இந்த நெருக்கடி போதாது என்று கர்நாடக அரசாங்கமும் மோடி அரசாங்கத்தின் அரசியல் சுயநல அணுகுமுறை காரணமாகவும் காவிரியில் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரியில் தண்ணீர் இல்லை. 
பருவமழைகள் பொய்த்ததும் கர்நாடகா மற்றும் மோடி அரசாங்கத்தின் நயவஞ்சகமும் இணைந்து உருவாகியுள்ள சூழல் தமிழகத்தை வரலாறு காணாத வறட்சியின் பிடியில் தள்ளிவிடும் அபாயம் உருவாகியுள்ளது.
பொய்த்துப் போன விளைச்சல்
தமிழகத்தில் காவிரிப் படுகையில் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. 
இதில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் 11.35 லட்சம் விளைநிலங்கள் உள்ளன. இந்த மூன்று மாவட்டங்களிலும் காவிரி நீர் மற்றும் மழையை நம்பியே நெல் பயிரிடப்படுகின்றது. காவிரியில் நீர்வரத்து இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே குறுவை பயிரிடுவதை விவசாயிகள் வெகுவாக குறைத்துவிட்டனர். 
இந்த ஆண்டு சம்பாவும் பெரிய நெருக்கடியில் சிக்கிவிட்டது. 
இந்த மூன்று மாவட்டங்களும் பெற்ற மழை விவரங்கள்:
              சராசரி பெய்த மழை குறைவு,மழை அளவு
தஞ்சை 1140.02 619.62 520.50(45.66%)
திருவாரூர் 1230.20 645.30 584.90(47.55%)
நாகை 1174.00 446.12 721.14(61.43%)
(மழை அளவு மி.மீ)
இதர டெல்டா பகுதிகளான கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மழைப் பொழிவு குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இருநூறுக்கும் அதிகமான விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். மனவேதனை ஏற்படுத்தும் இந்த அசாதாரண நிகழ்வுகள் மட்டுமின்றி கடுமையாக அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் உருவாகிவருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் விவசாய உற்பத்தியில் கடும் வீழ்ச்சியில் சிக்கியுள்ளன. அரிசி மட்டுமின்றி அனைத்துப் பயிர்களின் உற்பத்தியும் கடுமையான சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. கரும்பு, பருப்புவகைகள், எண்ணெய்வித்துக்கள் ஆகியவை மட்டுமின்றி மல்லிகை, கனகாம்பரம் உட்பட மலர் வகைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் கத்தரி, மஞ்சள், வெண்டை, புடலங்காய் உட்பட காய்கறிகளும் இந்த பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இத்தகைய கடும் உற்பத்தி வீழ்ச்சி விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
குடிநீர்த் தட்டுப்பாடு ஆபத்து
தமிழகம் சந்திக்க உள்ள மற்றுமொரு ஆபத்து குடிநீர்த் தட்டுப்பாடு ஆகும். தமிழகத்தில் உள்ள பெரிய சிறிய அனைத்து அணைகளும் மிகக்குறைவான நீர் அளவையே பெற்றுள்ளன. சில முக்கிய அணைகளின் நீர் அளவு:
அணை தற்சமயம் உள்ள சென்ற ஆண்டு கடந்த 10
நீர் மொத்த இதே நேரத்தில் ஆண்டுகள்
கொள்ளளவில் % இருந்த நீர் சராசரி
மேட்டூர் அணை 10% 35% 42%
பவானி அணை 11% 42% 52%
வைகை அணை 3% 36% 34%
பரம்பிகுளம் 11% 61% 66%
ஆழியார் 2% 54% 55%
சோலையார் 0% 0% 15%
முல்லை பெரியார் 10% 50% 34%
தமிழகத்தில் உள்ள சிறிய அணைகளின் நிலைமையும் இதே போலவே உள்ளது. இந்த அணைகளில் உள்ள நீர் அதிகபட்சமாக பிப்ரவரி மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும். அதற்கு பின்னர் குடிநீருக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்பதே இன்றைய உண்மை நிலை ஆகும். 
இதே நிலைதான் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரப்பாக்கம் ஏரி, புழல் ஏரி உட்பட அனைத்து நீர்நிலைகளுக்கும் உள்ளது.

அதலபாதாளத்தில் நிலத்தடி நீர்
குடிநீருக்கு மற்றுமொரு வாய்ப்பு நிலத்தடி நீர் ஆகும். 
தமிழகத்தில் இதுவும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் நீலகிரி தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சென்ற ஆண்டைவிட நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சில மாவட்டங்கள்:
மாவட்டம் சென்ற ஆண்டு இந்தஆண்டு
நிலத்தடி நீர் இருந்த நிலைமை மாற்றம்/
ஆழம் மீட்டர் மீட்டர் மீட்டர்
கோவை 11.48 16.67 — 5.19
நாமக்கல் 8.12 13.28 — 5.16
தேனி 7.67 13.27 — 5.60
திருப்பூர் 8.93 12.97 — 4.04
சேலம் 7.71 12.83 — 5.12
ஈரோடு 5.95 12.62 — 6.67
திண்டுக்கல் 6.77 11.68 — 4.91
திருச்சி 6.56 10.55 — 3.99
தர்மபுரி 3.80 10.29 — 6.49
(மிக அதிகமாக பாதிக்கப்பட்ட 9ல் 5 மாவட்டங்கள் மேற்கு மண்டலத்தை சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.)நிலத்தடி நீரும் பாதாளத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள சூழலில் தமிழகத்தின் குடிநீர் தேவை எப்படி தீர்க்கப்படும் எனும் கேள்வி விசுவரூபமாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் முன் எத்தகைய சவால்கள் உள்ளன என்பதை இந்த விவரங்கள் தெளிவாக்குகின்றன. இந்த சவால் மிகுந்த சூழலை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது! 
ஆனால் தமிழகத்தை ஆளும் கட்சியில் பதவிகளுக்காக சண்டைகள் நடந்துகொண்டுள்ளன. 
யார் எவரை ஆதரிப்பது எனும் முரண்பாடுகளின் பின்னால் கொள்ளையடித்ததை பாதுகாப்பதும் எதிர்காலக் கொள்ளைகள் பற்றிய சூழ்ச்சி திட்டங்கள்தான் உருவாக்கப்படுகின்றன. தமிழக மக்கள் இத்தகைய சுயநலக் கட்சிகளை ஒரு போதும் மன்னிப்பது இல்லை!
மக்கள் முன் உள்ள அபாயச் சூழல்களை முன்கூட்டியே உணர்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களின் துயர் துடைக்க களத்தில் இறங்கியுள்ளது. 
தமிழக அரசாங்கம் இப்பிரச்சனைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையேல் போராட்ட இயக்கங்களை கட்சி மேலும் தீவிரமாக்கும் என தமிழக அரசாங்கத்தை எச்சரிப்பது நமது கடமை ஆகும்.

(ஆதாரம்: நீர் நிலைகள் பற்றிய விவரங்கள் மத்திய அரசாங்க நீர்வள அமைச்சக இணையதளம்/ நிலத்தடி நீர் பற்றிய விவரங்கள் தமிழக அரசாங்கத்தின் இணைய தளம்)
===================================================================================
ன்று,
பிப்ரவரி-13.
  • சர்வதேச வானொலி தினம்
  • ஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668)
  • இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)
  • பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு சர் பட்டம் பக்கிங்ஹம் அரண்மனையில் வழங்கப்பட்டது(1914)
  • பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960)

  • 1879 - பிப்ரவரி 13ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், டாக்டர் அகோர்நாத் - பரதசுந்தரிதேவி தம்பதிக்கு மகளாக, 1879ல் பிறந்தார் சரோஜினி நாயுடு. 
  • 12வது வயதில் மெட்ரிக்குலேஷன் தேர்வு எழுதிய அவர், மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். இளம் வயதில், 16 மொழிகளை, வெகு இயல்பாக பேசும் திறமை படைத்தவராகவும், கவிதை எழுதுவதில் மிகுந்த ஈடுபாடுடனும் இருந்தார். சரோஜினியின் முதல் கவிதை, 'தி கோல்டன் த்ரெஷோல்ட்' என்ற தலைப்பில், 1905ல் வெளிவந்தது. 

  • அதே ஆண்டு, வங்கப் பிரிவினையின் போது, தேசிய இயக்கத்தில் இணைந்தார். இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி, பல மேடைகளில் முழங்கினார்.'பெண்கள் அடுப்படியை விட்டு வெளியே வர வேண்டும்' என, வலியுறுத்தினார்.

  •  பெனாரஸ் இந்து பல்கலைக்கழகம், சரோஜினிக்கு, 1947 டிசம்பரில் முனைவர் பட்டம் வழங்கியது. லக்னோவில், 1949 மார்ச் 2ல் சரோஜினி இறந்தார்.
  • =====================================================================================