சசிகலாவின் அவதாரங்கள்!

மற்றுமொரு குமாரசாமியாகத்தான் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தீர்ப்பு உள்ளது.

"தனது பெயரில் வந்த பதவி விலகல் கடிதம் தன்னை மிரட்டி வாங்கப்பட்டது.என்னை ஆட்சியமைக்க  அழைக்க வேண்டும்,நான் பெரும்பாண்மை நிரூபிக்கிறேன்" என்று முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சசிகலா தன்னை முதல்வராக்க கூறி கடிதம் கொடுத்துள்ளார்.
அவர் பலமுறை கூறியும் அவரையோ ,  பன்னீர் செல்வத்தையோ அழைக்காமல் மவுனமாக இருந்த ஆளுநர் சசிகலா சிறைக்கு சென்றபின்னர் அழைக்கக்கோரி  எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதப்படி அவரை அழைத்து முதல்வராக பதவியேற்க வைத்துள்ளார்.

முறைப்படி தற்போதைய முதல்வர் பன்னீர் செல்வத்தை முதலில் அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க வைக்காமல் ,தன்னை மிரட்டி கையொப்பம் வாங்கி விலகல் கடிதம் சசிகலாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தன்னை அழைத்து பெரும்பானமையை காட்டக்  கூறினால் பெரும்பான்மையை காட்டுவேன் என்ற பன்னீர் செல்வத்தை அழைக்காமல் எடப்பாடியை அழைத்தது சரி என்றால் ,இதற்கு முன்னர் கடிதம் கொடுத்த எடப்பாடியை கொத்தடிமையாக வைத்துள்ள  முதலாளியம்மா சசிகலாவை இதே ஆளுநர் அழைக்காதது ஏன்?

இப்போது மட்டும் சசிகலா ஆடசி இல்லாமல் போய்விட்டதா?சிறையில் இருந்தே ஆட்டிவைக்க மாட்டாரா?
தான் இல்லாவிட்டாலும் தனது மன்னார் குழுமம் தினகரனை உள்ளே பொறுப்பில் வைத்து விட்டாரே?
கட்சியில் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்த பின்னர்தான் தினகரன் அதிமுக உறுப்பினராகவே சேர்க்கப்படுகிறார்.அது பழைய தேதியிட்டுதான் இருக்கும்.

சிறைக்கு சென்றபின்னரும் அரசு சட்ட திட்டங்களை,விதிகளை மதிக்காவிட்டாலும் சரி அதற்கு எதிராகவே செயல்படும் ஆணவம் சசிகலாவுக்கு கொஞ்சமும் மாறவில்லை.தனக்கு குடியரசுத்தலைவரே ஆனாலும் கட்டுப்பட்டவர் என்ற திமிர் அவர் ஜீனிலேயே கலந்துவிட்டது போல் நடந்து கொண்டுதான் இருக்கிறார்.

இன்னும் சில காலத்தில் வரப்போகிற ரா.கி,நகர் (R .K .நகர்தான் )இடைத்தேர்தலில் தினகரன் நிற்பார்.
வென்றால் அவர்தான் முதல்வர்.
ஓ.பன்னீர் செல்வம் கதைதான் நடக்கும்.

இதெல்லாம் தெரியாத அளவு ஆளுநர் இல்லை.இருந்தும் இப்படி நடக்க காரணம் அவர் சார்ந்த கட்சி தலைமை எண்ணத்தை அவர் செயல்படுத்தியுள்ளார்.
பாஜக தலைமையை பொறுத்தவரை சசிகலா தங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சமும்  கிடையாது.

அதானால் சசிகலா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கை தீர்ப்பை பார்த்து பின்னர் அழைப்பது என்பதும்,தங்களையும் தமிழக அதிகாரிகள்,அமைசர்களைப்போல் எண்ணி நடந்து கொண்டால் என்ன வெல்லாம் நடக்கும் என்பதையும் காட்டத்தான் ஆளுநரின் இவ்வளவு நாள் காத்திருப்பின் பின்னணி.

இப்போது சசிகலா நன்கு உணர்ந்து கொண்டார் என்பதற்கு எடுத்துக்காட்டு "திமுகவை அடையாளம் இல்லாமல் ஆக்குவேன் என்று ஜெயலலிதா சமாதியில் முனுமுனு சபதம் எடுத்தது.

அவர் முணுமுணுத்ததில் உச்சரிக்கப் பட்ட கட்சியின் பெயர்தான் வேறு.வெளியே சொன்ன பெயர் வேறு.

சமாதியை ஓங்கி அறைந்ததும் தனது தலையில் கையை வைத்து அமுக்கியவர் தலையாக அதை எண்ணியதுதான் காரணமாக இருக்கலாம்.

ஆளுநர் ஓ.ப.வை அழைக்காவிட்டாலும் பரவாயில்லை.ஆனால் தன கையில் 129 ச.ம.உ.என்ற கொத்தடிமைகள் இருப்பதாகவும்,அவர்கள் கூவத்தூரில் தங்கள் ஆசையில் தங்கியிருப்பதாகவும் தனித்தனி கடிதம் , பட்டியல் கொடுத்துள்ள எடப்பாபழனிசாமிக்கு தனது ஆதரவை நிரூபிக்க இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அதிகமாக 15 நாட்கள் காலம் கொடுத்தது எதனால் ?

அவர் ஆளுநர் முன் 129 சசி அடிமைகளை கொண்டுவந்து நிறுத்துகிறேன் என்று சவால் விட்ட நிலையிலும் இவ்வளவு காலம் எதற்கு வழங்கப்பட்டுள்ளது ?

நாளைக்கே சட்டமன்றத்துக்கு சொகுசு பேருந்தில் 129 ச.ம.உங்களையும் கூவத்தூரில் இருந்து கொண்டுவந்து குவிக்கும் வாய்ப்பிருக்கையில் 15 நாட்கள் அதிகமாக எல்லாம் அறிந்த ஆளுநருக்கு தெரியாமலா இருக்கும்.

இதன் பின்னரும் ஏதோ ஒழிந்திருக்கலாம்.

எது எப்படியோ ஜெயலலிதா,ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி பழனிசாமி,(அடுத்து தினகரன்)என்று ஒரு வாக்கில் நான்கு முதல்வர்களுக்கு வாக்களித்த பெருமை தமிழனுக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள் .

ஆனால்  இந்த நான்கு பேர்களும்  ஒரே  சசிகலாவின் பல்வேறு அவதாரங்கள்தான் .என்ன ஒரு அவதாரம் தான் குழப்பி விட்டது.தன்னிசையாக செயல்பட பார்த்தது.அதையும் மோடி பெயரால் அமுக்கியாயிற்று.

ஆக சசிகலாவின் பெயர்கள்தான் மாறி,மாறி வந்துள்ளது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.
========================================================================
சசிகலா சிறைக்கு வந்த போது அவரை பொதுமக்கள் காறி துப்பி அவமானப்படுத்திய வீடியோ வலைதளங்களில் பரவியுள்ளது.
===================================================================================
ன்று,
பிப்ரவரி-17.

  • சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்றது(1867)
  • நியூஸ் வீக், முதலாவது இதழ் வெளிவந்தது(1933)
  • மக்கள் சீன குடியரசுக்கும், வியட்நாமுக்கும் இடையே போர் ஆரம்பமானது(1979)
  • விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது(2000)
  • கொசோவா விடுதலையை அறிவித்தது(2008)
  • ====================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?