எதிர்பார்த்ததுதான்,....


15 கோடிகள்,3கிலோ தங்கம் என்றெல்லாம் ஆசை காட்டப்படுவதால் மனசு அலைபாயும் என்பதாலும்,

தொகுதியில் நடக்கும் பணிகள் ஒப்பந்தத்தில் தலைமைக்கு கிடைக்கும் பங்கில் சிலசதவிகிதம் இதுவே இல்லாதது விட்டு கொடுக்கப்படுவது என்றால் மனது அதை பெற துடிக்கும் என்பதாலும்,

இனிமேல் மறுமுறை ச.ம.உ,வேட்பாளர் வாய்ப்பு கிடைத்தாலும் இதுவரை தொகுதிக்கு தான் ஆற்றிய பணிகளை அனுபவித்த மக்கள் தனக்கு மறுமுறை தனக்கு வாய்ப்பு தருவது நிச்சயமில்லை என்பதாலும்,

மிச்சம் இருக்கும்நான்காண்டுகளில் எவ்வளவு வேண்டுமானாலும் உச்ச வரம்பின்றி முறைகேடுகள் செய்யலாம் என்ற வாக்குறுதி மே(லி)டத்தின் மூலம் வழங்கப்பட்டதாலும் எடப்பாடி பழனிசாமி இந்த வாக்கெடுப்பில் வெல்வார் என்பது முன்பே ............

 எதிர்பார்த்ததுதான்.

மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று யாராவது லட்சங்களை செலவிட்டு,வாக்காளர்களுக்கு ஆயிரங்களை வழங்கி கோடிகள் கிட்டே வந்து இறைத்து தேர்தலில் வெல்வார்களா?

இந்த அடிப்படை தேற்றம் விளங்காதவர்களா மக்கள்.

ஆனால் அந்த மக்களும் ஆயிரம்,இரண்டாயிரத்துக்கு தங்கள் வாக்குகளை விற்றபின்னர் இது போன்ற கூவத்தூர்வாசிகளை தட்டிக்கேட்க தங்களுக்கு தகுதி இருப்பதாக எண்ணுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை.

கைநீட்டி காசுவாங்கி வாக்குகளை விற்றபோதே அந்த தகுதி அவர்களிடமிருந்து விலகிவிட்டது.அதன்பின் அவர்களுக்கு இன்னொரு அயோக்கியரை பற்றி பேச எந்த உரிமையும் இல்லை.முதலில் அவர் கையை கழுவி சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்.

முதலில் கைநீட்டி வாங்கிய போதே கைக்கறையாகிவிடுகிறது.அதன் பின் வாங்கிய துட்டுக்கு வாக்களிக்கும் போது விரலில்  வைக்கும் மை  அவர்களை அசிங்கமாக்கிவிடுகிறது.

இன்றைய அவலங்களுக்கும்.அரசியல் அடாவடிக்களுக்கும் காரணம் 2011,2016 களில்  காசுக்கு விற்ற வாக்குகள்தான்.

எனக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள் என்று ஆடசி செய்த  தலைவியின் மறைவுக்கு பின்னால் ஒரு இரண்டாம் கட்ட தலைவர் என்று ஒருவரும் இல்லா கட்சிக்கு விற்ற வாக்குகள்தான்.

ஜெயலலிதாவுடன் இருந்த ஒரே காரணத்துக்காக மட்டும் தனக்குத்தான் கட் சி,ஆட் சி என்று உடனிருந்த சமையல்காரி,ஒப்பனைக்காரி,வேலைக்காரி,ஓட்டுநர்,காவல்காரர்,கறுப்புப்பூனை என  ஓரங்கட்டி வந்தவர் பார்த்த பாராவை.இன்று இந்திய முழுக்க தமிழக அரசியல் கூத்து சிரிப்பாய் சிரிக்கிறது.

இக்கூத்து சில மாதங்கள் கழித்து தினகரன் முதல்வராகும் போது உச்சக் கட்ட முடிவுடன்தான் முடியும்.

அதற்கும்,பொதுத்தேர்தலுக்கும் இன்னும் 5அல்லது 6 மாதங்களே  அதிகமானது,போதுமானது.
இவ்வளவு பட்டபின்னரும் வரும் தேர்தலிலும் காசுக்கு கை  நீட்டினால் தமிழகமே மண்(னார்குடி)தான்.

கமல் யோசனை

'மன உளைச்சலை, கவர்னருக்கு கடிதமாக எழுதுங்கள்' என, கமல் கூறியுள்ளார்.சட்டசபை ஓட்டெடுப்புக்கு பின், 'டுவிட்டர்' வலைதளத்தில் கமல், 'கவர்னரின் மின்னஞ்சல் முகவரிக்கு, மன உளைச்சலை தெரியப்படுத்துங்கள். அதில், மரியாதையாக பேச வேண்டும். அது, சட்டசபை அல்ல; கவர்னர் வீடு' என, கூறியுள்ளார். 
 இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் நேற்று, கவர்னரின் இ - மெயில் முகவரிக்கு தங்களுக்கு கருத்தை தெரிவித்தனர். இதில், 'முற்றிலும் விரோதமான, விரும்பத்தகாத ஆட்சி அமைந்துள்ளது. இவர்களை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. தற்போது தமிழகத்தை நீங்கள் மட்டும் தான் காக்க முடியும். 

தமிழக மக்களின் கருத்தை கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுஉள்ளது. இதேபோல், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் சித்தார்த் கூறியுள்ளதாவது:இந்நாள் ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடானது. அப்படியே சிறையில் உள்ள சசிகலாவிற்கு, ஒரு லேப்டாப் கொடுத்து விடுஙகள். நான்கு ஆண்டுகளுக்கு, இடைப்பாடி பழனிசாமி போக்குவரத்து செலவு மிச்சமாகும். நம் உணவில், இன்னும் அதிகமாக உப்பை போட வேண்டிய நேரம் இது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்
========================================================================================
ன்று,
பிப்ரவரி-19.
  • துருக்மேனிஸ்தான் கொடி நாள்
  • தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம்(1855)
  • கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்(1878)
  • கலிப்பொலி போர் துவங்கியது(1915)
  • ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து சைப்பிரஸ் விடுதலை பெற்றது(1959)
அவைக் காவலர்கள் வேடத்தில் காவல்துறையினர் வந்து எங்களை அப்புறப்படுத்தினர் என்று திமுக சொல்லி வரும் குற்றச்சாட்டுக்கு சான்று.
அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் ஐபிஎஸ், சபைக் காவலர் சீருடையில்
இப்படித்தான் இன்று திமுக எம்எல்ஏக்கள் அகற்றப்பட்டனர்.

சட்ட மன்றத்தில் இன்று நடந்த எடப்பாடி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடந்தது* என்பது குறித்து தமிழக அரசு செய்தி துறை வெளியிட்டுள்ள *வீடியோ* பார்த்திருக்கலாம்.
_இதுதான் வாக்கெடுப்பு நடத்தும் முறை என்றால் இதனை கூவதூருக்கே சபாநாயகரை அழைத்து நடத்தி இருக்கலாமே. 
இதற்கு ஏன் *சட்டமன்றம்*? 
ரகசிய வாக்கெடுப்பு நடத்தினாலும் இவர்களால் இதே *122 வாக்குகள்* வாங்க முடியும் என்ற தைரியம் இருந்தால் நடத்தி வாங்கி காட்டி இருக்கலாமே.
கூவத்தூர் போகாதவர்கள்,கூவத்தூரில் இருந்து தப்பி வந்தவர்கள்,எல்லோரும் மிரட்டி கையொப்பம் வாங்கப்பட்டது,கோடிகளில் ஆசை காட்டப்பட்டது என்று குற்றசாட்டுகளை அடுக்கியும் எடபபாடியை ஆளுநர் பதவிக்கு அழைத்தது மிகப்பெரிய தவறு என்றால் அதை விட முட்டாள்தனம் மிக்கது அப்படி மிரட்டப்பட்டவர்கள் தங்கள் உண்மையான ஆதரவை ரகசியமாக தெரிவிக்க வழி செய்யாமல் பகிரங்கமாக வாக்ககெடுப்பு நடத்தியது.

அதிலும் அசிங்கமான அயோக்கியத்தனம்  எடப்பாடிக்கு  எதிராக வாக்களிப்போம் என்று கூறியிருந்த எதிர்க்கட்ச்சிகளை வலுக்கட்டாயமாக சட்டையை கிழித்து வெளியேற்றி விட்டு வாக்கையெடுப்பு நடத்தியது.

(இதில் வேறு வழியே இல்லாமல் அயோக்கியத்தனம் என்று உபயோகித்தமைக்கு மன்னிக்கவும்.அதை  இடுகை குறிப்பில்  இருந்து நீக்கி விட்டு படிக்கவும்.)  

 ஏன் எதிர்கட்சியை வெளியேற்றி ஜனநாயக படுகொலையை அரங்கேற்றி இந்த வெற்றி கொக்கறிப்பு?

எத்தனை நாளைக்கு இந்த நிலை நீடிக்கும் என்று பார்க்கலாம். *ஜல்லிக்கட்டு* என்ற ஒற்றை உணர்வு பிரச்சனைக்காக வெகுண்டெழுந்த தமிழகம், ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமை பிரச்சனைக்காக தங்களை யார் ஆள வேண்டும் என்ற தெளிவிற்காக தெருவிற்கு வர மாட்டார்களா என்ன?
=========================================================================================
எதிர்கட்சி இல்லாத வாக்கெடுப்பு செல்லாது .

இதை திமுக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால்

 வாக்கெடுப்பு செல்லாது 

என்ற தீர்ப்பை பெறலாம். 

                                                                                                      -கர்நாடகா வழக்கறிஞர் ஆச்சார்யா......

==================================================================================================
 முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா :-
(1991 - 96 வரை, சட்டசபை சபாநாயகராக பதவி வகித்தார்).
சட்டசபையில், நேற்று நடந்த சம்பவங்கள், ஓட்டெடுப்பு குறித்து, நமது நாளிதழுக்கு, அவர் அளித்த பேட்டி:

சட்டசபையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் விதிமீறல்களாகும். ரகசிய ஓட்டெடுப்பு அல்லது சபையை ஒத்திவைத்து, எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு சென்று வந்ததும், ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, நான்கு கட்சிகளும் கேட்ட நிலையில், அதை மறுக்க, சபாநாயகருக்கு 
அதிகாரம் இல்லை.
கடந்த, 1988ல், நாங்கள் ஜெ., அணியில் இருந்த போது, நம்பிக்கை ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டது. அப்போது, உறுப்பினர்களை தகுதியிழப்பு செய்தும், எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றியும், ஓட்டெடுப்பு நடந்தது. அதில் நடந்த கலவரத்தில், போலீசார் சபையில் நுழைந்து அடித்தனர்; பலர் காயமுற்றோம். அரசின் ஓட்டெடுப்பு வெற்றி பெற்றது.
எதிரணியின், 94 எம்.எல்.ஏ.,க்கள் காயங்களுடன், ராஜ்பவனுக்கு சென்று, கவர்னரை சந்தித்து முறையிட்டோம். எங்கள் காயத்திற்கு அங்கேயே, சிகிச்சை தரப்பட்டது. இந்த 
அசாதாரண சூழலில் நடந்த ஓட்டெடுப்பு செல்லாது என, கவர்னர் உடனடியாக, பரிந்துரை கடிதம் அனுப்பினார். இரண்டே நாட்களில், ஜனாதிபதி ஆட்சி அமலானது.
அதைவிட மோசமான நிலை, தற்போது ஏற்பட்டுள்ளது. சபையில் சபாநாயகர் இல்லாத போது, போலீசார், அதாவது வெள்ளை நிற சீருடை அணிந்தவர்கள், சபைக்குள் வரக்கூடாது. ஆனால், நேற்று சபாநாயகர் அவரது அறையில் இருந்த போது, போலீசார் சட்டசபைக்குள் நுழைந்தது தவறான செயல்.
உறுப்பினர்களின் பெயரை, சபாநாயகர் சொன்னால் மட்டுமே, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். ஆனால், நேற்று யார் பெயரையும் சபாநாயகர் சொல்லாமல், ஒட்டுமொத்தமாக வெளியேற்றியதும் தவறானது. இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையே, ஓட்டெடுப்பு நடத்தியது, நிச்சயமாக செல்லாது.
பல மாநிலங்களில், ரகசிய ஓட்டெடுப்பு நடந்துள்ளது. அதை பல நீதிமன்ற தீர்ப்புகளும் 
உறுதிப்படுத்துகின்றன. பிரபலமான, எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பின்படி பார்த்தால், வெளிப்படையான, நியாயமான ஓட்டெடுப்பு நடத்தினால் தான் செல்லும்.
கூவத்துார் விடுதியில், எம்.எல்.ஏ.,க்கள் எப்படி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனரோ, அதேபோல் தான் சட்டசபையிலும் வைக்கப்பட்டனர். 
இதற்கு, சட்டசபைக்கு ஏன், அவர்களை அழைத்து வர வேண்டும். சபாநாயகர், நேராக கூவத்துார் விடுதிக்கு சென்று, ஓட்டெடுப்பு நடத்தியிருக்கலாம். அருணாசல பிரதேசத்தில், இதுபோன்ற சம்பவம் நடந்து, 
விவாதமானது.

சட்டசபை கூடியதும், முதலில் காலை, 11:00 மணிக்கு, ஓட்டெடுப்பு நடத்தும் தீர்மானத்தை, முதல்வர் முன்மொழிந்தார். ஆனால், சபை ஒத்திவைக்கப்பட்ட பின், மீண்டும் வந்து, அவர் முன்மொழிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
அவர், இரண்டு முறை முன்மொழிந்தார் என்றால், சபை விதிப்படி, அந்த தீர்மானம் நிச்சயமாக செல்லாது. எனவே, ஓட்டெடுப்பும் செல்லாது.
இதுகுறித்து, சபை நடவடிக்கை குறித்து, பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை, சபையிலுள்ள கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும். இரண்டு முறை முன்மொழிந்தது உண்மை என்றால், அந்த தீர்மானத்தை ரத்து செய்து, நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என. அறிவிக்க வேண்டும்.



சபாநாயகருக்கு அதிகாரமும் இல்லை!
சபாநாயகர் தனபால், உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்து, சபையை நடத்துவது குறித்த முடிவு எடுப்பது, தன்னுடைய 
அதிகாரம், உரிமை என, கூறியுள்ளார்; இது தவறான கருத்து. சபாநாயகருக்கு என, தனியாக எந்த அதிகாரமும் கிடையாது. சபாநாயகருக்கு, 
உறுப்பினர்கள் தான் அதிகாரம் அளிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகளான, எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கைப்படியே சபாநாயகர், சபையை நடத்த வேண்டும். அதனால் தான், சபையில் சபாநாயகர் பேசும் போது, 'உறுப்பினர்களின் முன் அனுமதியுடன்' என்ற வார்த்தையை பயன்படுத்துவர். எனவே, சபாநாயகர், நேற்று சபையை நடத்திய விதம் விதி 
மீறலாகும்.சபாநாயகருக்கு உண்மையில் அதிகாரம் இருக்கிறது என்றால், எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் விடுதியில் அடைக்கப்பட்டிருந்த போது, அங்கு சென்று, அவர்களை மீட்டிருக்க வேண்டும். நான் சபாநாயகராக இருந்த போது, எம்.எல்.ஏ., விடுதியில் தங்கியிருந்த ரகுமான்கானை, தாமரைக்கனி தாக்கி விட்டதாக புகார் வந்தது. தாமரைக்கனியை, இரண்டு மாதம், 'சஸ்பெண்ட்' செய்து, ரகுமான்கானுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டேன், "
போலீஸ் அதிகாரிகள் சிலர் சட்டசபை காவலர்கள் போன்ற மாறுவேடத்தில்  பேரவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக குற்றசாட்டு  எழுந்தது. 
இது தொடர்பாக  புகைப்படங்கள் சமூக வளைதளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்படி வெளியான புகைப்படங்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாறுவேடத்தில் வரச் சொல்லி சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு  இன்று பிற்பகலில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘‘இன்று கூடிய சிறப்பு சட்டசபை கூட்டத்தில் திமுக எம்எல்ஏ.களை வெளியேற்றும் படி கூறிவிட்டு பேரவையை பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். ஆனால் அதன் பின்னரும் திமுக எம்எல்ஏ.க்கள் பேரவையை விட்டு வெளியேறாமல் உள்ளேயே உட்கார்ந்து கொண்டுள்ளனர். அதனால் அவர்களை கண்காணிக்க கீழ்கண்ட போலீஸ் அதிகாரிகளை சபை காவலர்கள் ஆடையில் சட்டமன்றத்துக்குள் வர அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
"மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சுதாகர், இணை கமிஷனர்கள் சந்தோஷ்குமார், ஜோஷி நிர்மல் குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர்கள் ரவி, கோவிந்தராஜ், சிவபாஸ்கர், முத்தழகு, தேவராஜ் ஆகியோரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கெள்கிறேன்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபை காவலர்கள் போர்வையில் இருந்த குண்டர்கள் தங்களை குண்டுகட்டாக வெளியேற்றியதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. 
இது  உண்மைதான் என்று உணர்த்தும்  வகையில் இந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகளை தவிர மேலும் பல போலீசார் மற்றும் குண்டர்கள் சபை காவலர்கள் வேடத்தில் உள்ளே நுழைந்திருப்பது தற்போது மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது.













இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?