ஆட்சிக்கு சிக்கல்

சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரிய போது, பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது.இதனால் எடப்பாடி பழனிசாமி  ஆட்சிக்கு சிக்கல் வரும் .
சட்டசபை விதிகளின்படி, சபை காவலர்களாக, சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். ஆனால், இம்முறை சட்டசபையில் இருந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற, சப் - இன்ஸ்பெக்டர் சீருடையில், துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் வந்திருந்தனர்.
சட்டசபைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால், சபாநாயகர், 'கூடுதலாக, 100 அல்லது 200 காவலர்கள் தேவை' என, கடிதம் அனுப்புவார். அதனடிப்படையில், போலீஸ் கமிஷனர், காவலர்களை அனுப்புவார். ஆனால், இம்முறை போலீஸ் அதிகாரிகள் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களை அனுப்பும்படி கடிதம் எழுதப்பப்பட்டு உள்ளது; இதுவும் விதிமீறல்.
சபை காவலர்கள், சட்டசபை அரங்கிற்கு வெளியே நிற்க வேண்டும். சபாநாயகர் அழைத்தால் மட்டுமே, உள்ளே செல்ல வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது, தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்றும்படி, சபைகாவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார்.
சபை காவலர்களால், அவர்களை வெளியேற்ற முடியவில்லை. சபையை ஒத்தி வைத்து, சபாநாயகர் வெளியேறினார். 
அதன்பின், கூடுதல் காவலர்கள் உள்ளே நுழைந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றினர். சபாநாயகர் இல்லாத போது, காவலர்கள் உள்ளே நுழைந்ததும் விதிமீறல்.
சபாநாயகர் இருக்கும் போது மட்டுமே, உறுப்பினர்கள் வெளியேற்றம் என்பது நடைபெற வேண்டும். மேலும், சபாநாயகர் ஒட்டுமொத்தமாக, அனைவரையும் வெளியேற்றுங்கள் என கூறுவதும், விதிமீறலே. அவர், தவறு செய்த உறுப்பினர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட்டே, வெளியேற்றும்படி உத்தரவிட வேண்டும்; அதை, அவர்பின்பற்றவில்லை.

இதே போல், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போது, பெயர் குறிப்பிடாததால், சபையில் இல்லாதவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்த வழக்கு,உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதற்கு பதில் கூற முடியாமல், அரசு தவித்து வருகிறது. இச்சூழ்நிலையில், மீண்டும் விதிமீறல்கள் நடந்துள்ளன. 
சட்டசபையில், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் என, நான்கு கட்சிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள, மூன்று கட்சிகளும், 'ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஓட்டெடுப்பை ஒத்திவைக்க வேண்டும்' என, வலியுறுத்தின.

இதை, ஏன் சபாநாயகர் பரிசீலனை செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் கோர்ட்டுக்கு சென்றால், ஓட்டெடுப்பு செல்லாது என, அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. 

=====================================================================================

கற்க கசடற தமிழ் வழியில்..! 

தாய்மொழி வழிக்கல்வியே மிகச்சிறந்த கல்வி என உலகின் பல்வேறு நாடுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாய்மொழி வழிக்கல்வியை மேற்கொண்ட பல்துறை தமிழர்கள் பலரும் பெரும் சாதனையாளர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.

முதலில் தாய்மொழி வழிக்கல்வி தேவையா? 

தேவையற்றதா? என்ற விவாதமே தேவையற்றது. 

பெற்ற தாய் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விபிள்ளைகளுக்கு எழுவதே உணர்வுப்பூர்வமானாலும் சரி, அறிவுப்பூர்வமானாலும் சரி நியாயமற்றது. 
தாய் என்ற உறவும், தாய்மொழியும் ஒரே உயிரைப் பெற்று உள்ள இரண்டு வடிவங்கள்தான்.
தமிழ் ஒரு மிகுந்த மேன்மையான பண்படுத்தப்பட்ட மொழி. இம்மொழி நாட்டின் பழம்பெரும் இலக்கிய வளம் உடையது என்கிறார் வடமொழி ஆய்வாளர் ஜெர்மானிய அறிஞர் மார்க்ஸ்முல்லர். 

தமிழ்மொழிக்கு இயற்கையிலேயே உள்ள ஈர்ப்பு சக்தியின் காரணமாகதான் அயல்நாட்டு 
அறிஞர்களாகிய ஜி.யு. போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர், ராபர்ட் டி நொபிலி போன்றவர்கள் தமிழை கற்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் மொழி சீர்த்திருத்தமும், தேன் சுவை சொட்டும் இலக்கி யங்களும் படைத்து பெருமை அடைந்தனர்.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளாக கருதப்படுகிறஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, சீனா, கொரியா போன்ற நாடுகளில் தாய்மொழி வழக்கல்வியே பின்
பற்றப்படுகிறது. 

1970களில் இருந்து ஈழத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வியை தமிழர்கள் தமிழிலேயே பயில்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா முதலான மாநிலங்களில் மாநில மொழியை கற்காமல் யாரும் மேல்படிப்புக்கு போக முடியாது.

தமிழகத்தில் மட்டுமே தமிழில் அ, ஆ தெரியாதவர்கள்கூட 'முனைவர்' பட்டம் வரை சென்று விட முடியும். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் எல்லாம் தமிழ் ஆட்சிமொழி. ஆனால், தாய்வீடான 
தமிழகத்தில் தமிழின் நிலை பரிதாபமாக உள்ளது.
ஆங்கிலம் தேவையா? தேவைதான். 

உலக மொழியாக இருக்கிற காரணத்தால் பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலை, படைக்கப்பட்ட இலக்கியங்களை, எழுதப்பட்ட வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளப்பயன்படும் மொழி என்ற அளவில் ஆங்கிலம்போதுமானது. 

தமிழக அரசின் பாடத்திட்டத்தில்ஆங்கிலம் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியை எழுதவும், பேசவும் கற்றுக்கொள்ளவும் விரும்புகிறவர்கள், இந்த வாய்ப்பையே சரியாக பயன்படுத்திக்கொள்ளலாமே? 

அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில்தான் கற்கவேண்டும் என்ற நிலைக்கு போகும்போது, அது நமது தாய்மொழியாகிய தமிழின் செல்வாக்கை குறைத்து, ஆங்கில மொழியின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்துவிடாதா?

முரண்பாடு மனப்போக்கு வீட்டில், விளையாட்டு திடலில், நண்பர்களிடம் பேசுகையில் காதலிக்கும் கவிதை எழுதுகையில் தாய்த்தமிழ் வேண்டும். படிப்பதற்கு மட்டும் ஆங்கிலம் வேண்டும் என்றால் அது எவ்வளவு பெரிய முரண்
பாடான மனப்போக்கு?

மொழி என்பது கல்வி சார்ந்த பிரச்னை மட்டுமல்ல. 
அம்மொழி பேசுகிற இனத்தின் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிப்பதுமாகும். 

அந்த வகையில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை வளரவிடுவது, பாரம்பரியமிக்க, பழமை வாய்ந்த நமது தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் நாமே குழிதோண்டி புதைப்பதற்கு சமம் ஆகாதா?

இந்த சிந்தனையின் அடிப்படையில்தான் தாகூர், தனது'கீதாஞ்சலி' கவிதை நுாலை, தாய்மொழியான வங்காள மொழியிலேயே முதன்முதலில் எழுதினார். 

காந்திஜியும் தனது சத்தியசோதனையைகுஜராத்தி மொழியிலேயே படைத்தார். 1956ம் ஆண்டில் இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டதும், இந்த உணர்வின் அடிப்படையில்தான்.
ஆங்கிலத்தில் படித்தால் தான் அதிமேதாவிகளாக உருவாக முடியும் என்ற மாயை சிலரால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டு, அதே தவறான கருத்து மக்களிடமும் நிரம்பி உள்ளது. 

அறிவியல் அறிஞர்களான அப்துல்கலாம், வ.செ.குழந்தைசாமி, மு.அனந்தகிருஷ்ணன், ஆதிசேஷய்யா, டாக்டர் பி.ராமமூர்த்தி, ச.முத்துக்குமரன் போன்றவர்கள் கிராமத்து பள்ளியில் படித்து உயர்நிலைக்கு வந்த வர்கள். 

அவர்கள் பெரும் சாதனை யாளர்களாக உருவாவதை எந்த விதத்திலும் தமிழ்வழிக்கல்வி பாதிக்கவில்லை. மாறாக வளர்த்திருக்கிறது.

கணினி யுகம் இன்னும் ஒரு ஆச்சரியமான செய்தி, தமிழ் இலக்கணமானது கணிப்பொறிக்குரிய கணிதத்தன்மையோடு ஒத்துப்போகிறதாம். இது வேகமாக வளர்ந்துவரும் கணினி யுகம் என்பதால் நாளை உலகத்து கணிப்பொறிகள் எல்லாம் நமது தாய்த்தமிழே அதிக செல்வாக்கு பெற்றிருக்கப்போகிறது என்பதில் சந்தகேமில்லை.

தொடக்கக்கல்வி, தாய்மொழி வழியாகவே கொடுக்கப்பட வேண்டும் என்பதே உலக உளவியல் அறிஞர்கள் பலரின் ஒருமித்த கருத்து.காந்திஜிகூட கல்வி,உளவியல்படி தாய்மொழியில் நல்ல அடித்தளம் அமைத்தால்தான், பிற மொழியறிவு கைகூடும் என்கிறார். 

முதல் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு முடிய தாய்மொழியே பாடமொழியாகவும், பத்தாம் வகுப்புக்கு பிறகே பிற மொழியை கற்க வேண்டும் என்றே சென்னார்.

முன்பொரு முறை வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பும், தொடக்கக்கல்வி, அவரவர் தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆங்கிலத்தை காதலிப்பவர்கள் இன்று நீதிமன்றங்களில் ஏறி, தமிழை சிறைக்கு தள்ள கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். 

அவர்களுக்கு சில அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் வாதாட முடிவெடுத்து செயல்படுவதுதான் வேதனை யிலும் வேதனை.
                                                                                                                                                                                                  -எல். பிரைட், 
=====================================================================================
ன்று,
பிப்ரவரி-21.
  • உலக தாய்மொழி தினம்
  • புரூசியக் கூட்டமைப்பு உருவானது(1440)
  • நீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது(1804)
  • வங்காள மொழி இயக்கம், கிழக்கு பாகிஸ்தானில் (பங்களா தேஷ் ) உருவாக்கப்பட்டது(1952)
======================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு