பொய் நெல்லில் பொங்கல்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சீனாவை
சேர்ந்த மூன்று ஆராய்ச்சியாளர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தை
பிறக்க உதவியதாக 3 ஆண்டு சிறை தண்டனையும் 3 கோடி ரூபாய் அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்
ஜியன்குய் மற்றும் அவரது உதவியாளர்கள் சேர்ந்து எச்ஐவி தொற்று உள்ள
ஒருவரையும் தொற்று இல்லாத பெண் ஒருவரையும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி
அவர்களின் கரு முட்டை மற்றும் உயிரணுவை இணைந்து, செயற்கையாக கருத்தரிப்பு
செய்துள்ளனர்.
இதில் எச்ஐவி தொற்றை நீக்குவதற்காக கருவின் மரபணுவில்
மாற்றங்களையும் இந்த குழுவினர் செய்துள்ளனர். இதில் வெற்றியும்
கண்டுள்ளனர். அந்த வகையில் இரட்டைப் பெண் குழந்தைகளும் எச்ஐவி தொற்று
இல்லாமல் பிறந்துள்ளன.
இந்நிலையில்
இவ்வெற்றி மருத்துவ உலகில் பெரும் சாதனை என்று கருதிய தலைமை
ஆராய்ச்சியாளர் ஜியன்குய் இச்சாதனை குறித்து தகவலை வெளியிட்டார்.
ஆனால் இவர்களின்
இம்முயற்சியை கண்ட ஆராய்ச்சி தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், "ஜியன்குய் இது
போன்ற ஆராய்ச்சியில் ஈடுபட சட்டப்படி தகுதியற்றவர். இவர்களின் குழுவும்
இதற்கு தகுதியானவர்கள் அல்ல.
இவர்களின் முயற்சி சட்டபடி குற்றம். மனிதர்களோ
மனித குழந்தைகள் மீதோ ஆராய்ச்சி நடத்துவதற்கு இதுவரை அனுமதி இல்லை.
வரம்புகளை மீறி கருவில் மரபனு மாற்றம் செய்தது குற்றம்" என அறிவித்தனர்.
இதையடுத்து
ஆராய்ச்சியாளர் மற்றும் அவரது உதவியாளர்கள் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை
தண்டனை மற்றும் 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------
அனலி
அனலி
2019, திசம்பர் 26 அன்று முழு
வளைய சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்தக் கிரகணம் சவுதி, அரேபியா, கத்தார்,
ஐக்கிய அரபு அமீரகம், தென்னிந்தியா, அமீரகம், சுமத்ரா, மலேசியா,
சிங்கப்பூர் என பல பகுதிகளில் காண முடிந்தாலும், திருச்சியில் அதிகபட்சமாக
95 சதவீதம் வரை சூரிய மறைப்பைக் காண முடிந்தது.
சூரியன் என்பதைத் தனித்து SUN என்றும் , சூரியனுடன் தொடர்புபடுத்துகையில்ஊ SOLAR என்றும் சொல்லப்படுகிறது. உதாரணம், சூரியக் கிரகணம் (SOLAR ECLIPSE), சூரிய குடும்பம் (SOLAR SYSTEM). சன் , சோலார் இரண்டும் ஒன்றா? இதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன ?
சுள் - சுர் - சூர் - சூரி. சுள் என்றால் நெருப்பு என்று பொருள். இதன் திரிபுதான் சூரி - சூரியன். சுள் என்பதற்கு எரித்தல் என்றொரு பொருள் உண்டு.
தொல்காப்பியம், திருக்குறளில் சூரியன் என்கிற சொல் இடம்பெறவில்லை. ஆகவே சூரியன் என்பது தமிழ்ச்சொல் அல்ல, என்பாரும் உண்டு. ரிக் வேதத்தில் ஸூர்ய என்கிற சொல் இடம் பெற்றுள்ளது. சூரியநாராயண சாஸ்த்திரி என்கிற தன்பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.
தனித்தமிழ் இயக்கம் சூரியனைப் பரிதி என்கிறது.
சூரியனுக்கு நிகரான சொற்களாவன: ஞாயிறு, கதிரவன், பகவன், பகலவன், என்றூழ், எல், எல்லி, எல்லோன், இரவி, வெய்யவன், வெங்கதிர், கதிர், வெய்யோன், அனலி, ஆதித்தன், ஆதவன், அழற்கதிர், இளம்பரிதி, எரிகதிர், எழுஞாயிறு, ஒளியவன், செஞ்சுடர்,....
ஞாயிறை ‘பகல் செய் மண்டிலம்’ என்கிறது பெரும்பாணாற்றுப்படை. மண்டிலம் என்றால் வட்டம் என்று பொருள்.
“கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ என்கிறது சிறுபாண்ணாற்றுப்படை.
‘ஞாயிறு போற்றுதும்’ சிலப்பதிகாரம்.
வெண்கதிர் என்பது சூரியன். இதற்குள் ஏழு வண்ணங்கள் உண்டு என்பதால் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் சூரியன் செல்கிறான் எனப்பாடுகிறார் கபிலர். ‘எல்லை செல்ல ஏழுர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கல்சேர்வு மறைய” (குறிஞ்சிப் பாட்டு).
‘என்றூழ் உறவரு மிருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை யுள்படுவோரும்’ என்கிறது பரிபாடல்.
இங்கு என்றூழ் என்பது சுழலும் ஞாயிறு.
ஞாயிறு ஒளி மறைப்பு பற்றி புறநானூறு பாடியுள்ளது.
‘அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்துஇடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்’ அதாவது, அசுரர் தேவர் இரு தரப்பினருக்கும் போர். அசுரர்கள் ஞாயிறை மறைத்து வைக்கிறார்கள். திருமால் அதை மீட்டெடுக்கிறான்.
ஞாயிறு, பரிதி என்பது Sun. இது கோளவடிவமானது.
இதிலிருந்து வெளியாகும் நெருப்பு, வெப்பம், அனல், ஆற்றல் என்பது solar.
அழற்கதிர் - சூரியன்; அழற்கரத்தோன் - நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கும் சிவபெருமான்; அனலம் - நெருப்பு; அனலன் - அக்கினிதேவன்; அனலாடி - சிவன்; அனலி - நெருப்பு, சூரியன்; அனலிமுகம் - சூரியபுடம்; அனலேறு - இடி.
‘அனலிபாற் கரனுந் தீயுமாகும் ‘ என்கிறது பொதிகை நிகண்டு. ஞாயிற்றின் இன்னொரு பெயர் பாற்கரன். இதலிருந்து திரிந்தது பாஸ்கரன்.
சூரியன், அணுக்கரு இணைவு’ (Nuclear fusion) என்கிற தத்துவத்தின் மூலம் இயங்குகிறது.இதன் மையம் 15 மில்லியன் பாகை வெப்பநிலை உடையது. மேற்பரப்பு வெப்பநிலை 6000 பாகை. இதன் மேற்பரப்பு மண்டிலம்தான் சோலார்.
Sun என்பது கோளவடிவத் தீம்பிழம்பு. Solar என்பது தீம்பிழம்பின் அனலி. சூரிய கிரகணம் என்பது சூரியனை மறைத்தல் அல்ல. அதன் அனலியை மறைத்தலே. ஆகவேதான் விண்ணியல் Solar eclipse என்கிறது. இதை தமிழில் அனலி மறைப்பு என்று சொல்லலாம்.
-------------------------------------------------------------------------------------------------

இன்று,
முன்பு .
கல்கத்தா நகரம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது(1757)
ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன(1793)
ரயில் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன(1893)
முதலாவது செயற்கை கோளான லூனா 1, விண்ணுக்கு ஏவப்பட்டது(1959)
-------------------------------------------------------------------------------------------------------------------

நெல்லை
கண்ணன்
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேச்சாளர் நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் பெரம்பலூரில் போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லை கண்ணன் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்படி தமிழக பாஜகவினர் கைது செய்தே ஆக வேண்டும் என்று கொந்தளிக்கும் அளவுக்குக்கு பேசிய நெல்லை கண்ணன் யார் என்பதை தெரிந்துகொள்வோம்.
நெல்லை கண்ணன் தமிழகம் அறிந்த பட்டிமன்றம் மற்றும் கருத்தரங்க பேச்சாளர். 1946 ஆம் ஆண்டு ந.சு.சுப்பையா பிள்ளைக்கும் லக்குமி அம்மையாருக்கும் 4வது மகனாக பிறந்தார். இவருடைய குடும்பம் நெல்லையை பூர்வீகமாகக் கொண்டது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெல்லை கண்ணன் தமிழ் மொழி மீது ஆர்வமும் பாரதி பாடல் மீது தனியாத ஈடுபாடும் கொண்டவர்.
தமிழ்
இலக்கியத்தை கற்றுத்தேர்ந்த நெல்லை கண்ணன் தனது பேச்சாற்றல் மூலம் பல
பட்டிமன்றங்களில் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டவர்.
அரசு தொலைக்காட்சியில் பலமுறை பட்டிமன்ற நடுவராக இருந்தார்.
நெல்லை கண்னன் காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம் வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சிப் பணியாற்றினார்.
பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போது இவருக்கு திருநெல்வேலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இரு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
நெல்லை கண்ணன் தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றி கூட்டத்தினரை கட்டிப்போட்டு தனது மடைதிறந்த வெள்ளமான உரையைக் கேட்கவைத்தவர்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தநேரத்தில், அவர் பிரசாரத்திற்காக நெல்லை வந்தபோது நெல்லை கண்ணன் வீட்டில்தான் மதிய உணவு சாப்பிட்டார் என்று கூறுவர்.
அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெல்லை கண்ணன் நெருக்கமான நட்பு கொண்டவர்.
இப்படி ஒரு காங்கிரஸ்காரராக அறியப்பட்ட நெல்லை கண்ணன் 2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார்.
ஆனால், அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை.
ஒரு ஆண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.
அரசியலில் தீவிரமாக செயல்பட்டாலும் அவரால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், நெல்லை கண்ண்ணன் தொடர்ந்து, பட்டிமன்றம், இலக்கியம், சமய சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.
மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
தற்போது 75 வயதை நெருங்கும் நெல்லை கண்ணன் தனது பேச்சாற்றலால் பட்டிமன்றங்களிலும், இலக்கிய கருத்தரங்குகளிலும் அரசியல் மேடைகளிலும் தனிமுத்திரை பதித்து வலம்வருகிறார். தற்போது ஒரு பேட்டியில், தன்னை அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறினார்.
அசுரன் படத்திற்கு வசனம் எழுதிய சுகா நெல்லை கண்ணனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், அரசியல் மேடைகளில் அரிதாக பேசிவந்த நெல்லை கண்ணன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வீடியோ வெளியானது.
இதையடுத்து பாஜகவினர் அவர் மீது புகார் அளித்தனர்.
பாஜகவின் புகாரைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உள்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதோடு விடாமல், நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் நெல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை மெரினாவில் பாஜகவின் மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அவருக்கு உடல்நிலை சரியில்லையென சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பெரம்பலூரில் புதன்கிழமை இரவு நெல்லை கண்ணனை ஒரு தனியார் ஹோட்டலில் பெரம்பலூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------------------
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேச்சாளர் நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெல்லை கண்ணன் பெரம்பலூரில் போலீசாரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லை கண்ணன் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்படி தமிழக பாஜகவினர் கைது செய்தே ஆக வேண்டும் என்று கொந்தளிக்கும் அளவுக்குக்கு பேசிய நெல்லை கண்ணன் யார் என்பதை தெரிந்துகொள்வோம்.
நெல்லை கண்ணன் தமிழகம் அறிந்த பட்டிமன்றம் மற்றும் கருத்தரங்க பேச்சாளர். 1946 ஆம் ஆண்டு ந.சு.சுப்பையா பிள்ளைக்கும் லக்குமி அம்மையாருக்கும் 4வது மகனாக பிறந்தார். இவருடைய குடும்பம் நெல்லையை பூர்வீகமாகக் கொண்டது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெல்லை கண்ணன் தமிழ் மொழி மீது ஆர்வமும் பாரதி பாடல் மீது தனியாத ஈடுபாடும் கொண்டவர்.
நெல்லை கண்ணன் |
அரசு தொலைக்காட்சியில் பலமுறை பட்டிமன்ற நடுவராக இருந்தார்.
நெல்லை கண்னன் காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இளம் வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சிப் பணியாற்றினார்.
பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் போது இவருக்கு திருநெல்வேலி தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இரு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
நெல்லை கண்ணன் தமிழகத்தில் 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தபோது அவர் வருகைக்கு முன் நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றி கூட்டத்தினரை கட்டிப்போட்டு தனது மடைதிறந்த வெள்ளமான உரையைக் கேட்கவைத்தவர்.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தநேரத்தில், அவர் பிரசாரத்திற்காக நெல்லை வந்தபோது நெல்லை கண்ணன் வீட்டில்தான் மதிய உணவு சாப்பிட்டார் என்று கூறுவர்.
அதுமட்டுமில்லாமல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெல்லை கண்ணன் நெருக்கமான நட்பு கொண்டவர்.
இப்படி ஒரு காங்கிரஸ்காரராக அறியப்பட்ட நெல்லை கண்ணன் 2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அ.தி.மு.கவில் இணைந்தார்.
ஆனால், அவரால் அ.தி.மு.கவில் நீண்டநாட்கள் நீடிக்க முடியவில்லை.
ஒரு ஆண்டுக்குப் பிறகு அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.
அரசியலில் தீவிரமாக செயல்பட்டாலும் அவரால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும், நெல்லை கண்ண்ணன் தொடர்ந்து, பட்டிமன்றம், இலக்கியம், சமய சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.
மேலும், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
தற்போது 75 வயதை நெருங்கும் நெல்லை கண்ணன் தனது பேச்சாற்றலால் பட்டிமன்றங்களிலும், இலக்கிய கருத்தரங்குகளிலும் அரசியல் மேடைகளிலும் தனிமுத்திரை பதித்து வலம்வருகிறார். தற்போது ஒரு பேட்டியில், தன்னை அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறினார்.
அசுரன் படத்திற்கு வசனம் எழுதிய சுகா நெல்லை கண்ணனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், அரசியல் மேடைகளில் அரிதாக பேசிவந்த நெல்லை கண்ணன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலப்பாளையத்தில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வீடியோ வெளியானது.
இதையடுத்து பாஜகவினர் அவர் மீது புகார் அளித்தனர்.
பாஜகவின் புகாரைத் தொடர்ந்து, நெல்லை கண்ணன் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உள்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதோடு விடாமல், நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் நெல்லையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று சென்னை மெரினாவில் பாஜகவின் மூத்த தலைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, அவருக்கு உடல்நிலை சரியில்லையென சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பெரம்பலூரில் புதன்கிழமை இரவு நெல்லை கண்ணனை ஒரு தனியார் ஹோட்டலில் பெரம்பலூர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------------------
பொய் நெல்லில் பொங்கல்.
வைக்கும் மோடி அரசு
பாஜக தலைமையிலான மத்திய மோடி
அரசு 2014- 2019 கால கட்டத்தில் நாடாளுமன்றத்தில் கொடுத்த
வாக்குறுதிகளில் பெரும் பகுதியை நிறைவேற்றவே இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக
வெளி வந்திருக்கிறது. எல்லாம் வாக்குறுதி யோடு முடிந்து விடுகிறது.
மோடிக்கு முந்தைய 2வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதியை விட மோடி அரசு 300 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என்கிறது இந்தியா ஸ்பெண்ட் செய்தி நிறுவனத்தின் ஆய்வறிக்கை.
2018 -19 ல் மக்களவையில் அளித்த வாக்குறு திகளிலும் 76 சதவிகிதம் இதுவரை நிறைவேற்ற வில்லை. அதே போல் கடந்த 2019 பொதுத்தேர்தலுக்கு முந்தைய கடைசி மூன்று மக்களவை கூட்டங்க ளில் அரசு 582 வாக்குறுதிகளை வழங்கியது.
அவற்றில் 443 வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவே இல்லை. அதாவது 76 சதவிகித வாக்குறுதி கள் வெற்று வாக்குறுதிகளாக மாறியிருக்கிறது.
ஆனால் நாடாளுமன்ற விதிகளின் படி, நாடாளுமன்ற கூட்டங்களில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மூன்று மாதகாலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்; அல்லது அளித்த வாக்குறுதியை கைவிடுவதாக அறிவிக்க நாடாளுமன்ற உத்தரவாதக்குழுவிடம் அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்பதுதான் விதி.
ஆனால் இதில் எதையும் மோடி அரசு முழு மையாக பின்பற்றவில்லை.
ஆனால் பிரிவு 370, தேசிய குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றை நிறைவேற்றி நாட்டை மதரீதியாக பிளவுபடுத்துவதில் மட்டும் கவனமாக இருந்து வருகிறது.
அதாவது அரசின் செயல்திட்டத்தை அமலாக்குவதற்கு மாறாக ஆர்எஸ்எஸ் செயல்திட்ட அமலாக்கத்தில் மட்டுமே மோடி அரசு கவனம் செலுத்துகிறது.
தற்போதும் கூட இந்திய பொருளாதாரம் சர்வநாசமாகி வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உருக்கு உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் 1.5 சத விகிதம் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 4.5 சதவிகிதமாக வீழ்ச்சிய டைந்திருக்கிறது.
அதே போல் நவம்பர் மாத இறுதி நிலவரப்படி வரவிற்கும் செலவிற்குமான இடைவெளி ரூபாய் 8 லட்சத்து 7ஆயிரத்து 834 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இந்த நெருக்கடியிலும் கார்ப்பரேட்களின் வரியை 35 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைத்து, கார்ப்பரேட்களுக்கு காவடி தூக்கியிருக்கிறது.
ஆனால் மறுபுறம் சாமானிய மக்களின் கழுத்தை மேலும் நெறிக்கும் வகையில் ரயில் கட்டணம் மற்றும் கேஸ்சிலிண்டரின் விலையையும் கடுமையாக உயர்த்தியிருக்கிறது.
மோடி அரசு எடுத்து வரும் பொருளாதார சீர் குலைவு நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், இந்திய சமூகத்தை நேரடியாக சீர்குலைத்து வருகிறது.
இனியும் மோடி வகையறாக்களின் பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என்பதற்கு 2020ம் ஆண்டில் எழுந்து நிற்கும் போராட்டங்கள் சாட்சியாக இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------
நியாண்டர்தால் இனம் எப்படி அழிந்தது?
நியாண்டர்தால் மனிதர்கள் நமது தூரத்து பங்காளிகள் எனக் கருதப்படுகிறார்கள்.அவர்கள் 40000 வருடங்களுக்கு முன் திடீர் என மறைந்து விட்டனர்.
இதற்கான காரணத்தை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் கிலி கிரீன்பாம்(Gili Greenbaum) மற்றும் அவரது குழுவினரும் கண்டறிந்துள்ளனர்.
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சில ஆயிரம் வருடங்களில் நவீன மனித இனம் சிக்கலான நோய் பரிமாற்றத்தின் மூலம் நியாண்டர்தால் மனித இனத்தை அழித்துவிட்டதாக அவர்களது கருதுகோள்(hypothesis) கூறுகிறது.
இந்த அழிவு
விரைவாக நடக்காமல் ஏன் மெதுவாக நடந்தது என்பதையும் அது விளக்குகிறது.
தொல்லியல் ஆதாரங்களின்படி ஐரோப்பிய-ஆசியப் பகுதியில் வாழ்ந்த நியாண்டர்தால் மனித இனத்திற்கும் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு புதிய மனித இனத்திற்கும் இடையில் 130000 ஆண்டுகளுக்கு முன் தொடர்புகள் ஏற்பட்டது.
இது லேவண்ட் எனப்படும் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியில் ஏற்பட்டது.
நியாண்டர்தால் மனிதர்கள் நமது தூரத்து பங்காளிகள் எனக் கருதப்படுகிறார்கள்.அவர்கள் 40000 வருடங்களுக்கு முன் திடீர் என மறைந்து விட்டனர்.இதற்கான காரணத்தை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் கிலி கிரீன்பாம்(Gili Greenbaum) மற்றும் அவரது குழுவினரும் கண்டறிந்துள்ளனர்.
ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சில ஆயிரம் வருடங்களில் நவீன மனித இனம் சிக்கலான நோய் பரிமாற்றத்தின் மூலம் நியாண்டர்தால் மனித இனத்தை அழித்துவிட்டதாக அவர்களது கருதுகோள்(hypothesis) கூறுகிறது.இந்த அழிவு விரைவாக நடக்காமல் ஏன் மெதுவாக நடந்தது என்பதையும் அது விளக்குகிறது.
தொல்லியல் ஆதாரங்களின்படி ஐரோப்பிய-ஆசியப் பகுதியில் வாழ்ந்த நியாண்டர்தால் மனித இனத்திற்கும் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு புதிய மனித இனத்திற்கும் இடையில் 130000 ஆண்டுகளுக்கு முன் தொடர்புகள் ஏற்பட்டது.இது லேவண்ட் எனப்படும் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியில் ஏற்பட்டது.
இந்த இரு இனங்களுகிடையில் இனக்கலப்பு ஏற்பட்டு நமது மூதாதையர்கள் நியாண்டர்தால் இனத்தை புறந்தள்ளிவிட்டனர். இந்த இனக்கலப்பில் பிறந்தவர்கள் இரண்டு இனத்தின் நோய் எதிர்ப்பு மரபணுக்களை பெற்றிந்திருப்பார்கள்.
இது பரவி இரண்டு இனங்களிலும் நோய் சுமை அல்லது தொற்று நோய் விளைவுகள் குறையத் தொடங்கின. இறுதியில் ஒரு கட்டத்தில் நவீன மனித இனத்தவர்கள் போதுமான நோய் எதிர்ப்பு பெற்று லேவன்ட்டை தாண்டி நியாண்டர்தால் இனம் வசித்த உள்பகுதிக்குள்ளும் எந்தவித உடல் நலப் பிரச்சினையுமின்றி ஊடுருவியிருக்கும்.
இந்தக் கட்டத்தில் நவீன மனித இனம் பெற்றிருந்த நியாண்டர்தால் இனத்திடமிருந்ததைவிட மேலான ஆயுதங்கள் அல்லது மேம்பட்ட சமூகக் கட்டமைப்பு போன்ற பிற அனுகூலங்கள் முக்கிய பங்கு வகித்திருக்கும். ஒரு உடைப்பு ஏற்பட்டபின் நோய் சுமை பங்கு வகிப்பதில்லை;மற்ற காரணிகள் செயல்படத் தொடங்குகின்றன என்கிறார் கிரீன்பாம்.
வெப்ப மண்டலத்தில் நோய் சுமை மித வெப்ப மண்டலத்தை விட அதிகம்.நவீன மனித இனம் வெப்ப மண்டலத்திலிருந்து நியாண்டர்தால் மனிதர்கள் வசித்த மித வெப்ப மண்டலத்திற்கு சென்றனர். நவீன மனித இனம் நியாண்டர்தால் இனத்தை அழிப்பதற்குப் பதிலாக அவர்களால் ஏன் மனித இனம் அழியவில்லை என்பதற்கு இதைக் காரணமாக கூறுகிறார்கள்.
15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறி தாங்கள் எடுத்து சென்ற பயங்கரமான நோய்கள் மூலம் அங்கிருந்த பூர்வ குடிகளை முற்றிலும் அழித்ததை தங்களின் கருதுகோளுடன் ஒப்பிடலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
--------------------------------------------------------------------------------------------