நழுவலும், மழுப்பலும்
‘பாரத் பந்த்’
இந்திய தொழிலாளி வர்க்கம் பிரம்மாண்ட எழுச்சியோடு இன்று (ஜனவரி 8) களமிறங்குகிறது.
சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இன்றைய நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று ‘எகானமிக்ஸ் டைம்ஸ்’ உள்ளிட்ட ஏடுகள் கணித்துள் ளன. ‘பாரத் பந்த்’ என்று இந்த ஏடுகள் அறிவித்துவிட்டன.
பிஎம்எஸ் தவிர 10 மத்திய தொழிற் சங்கங்கள், அனைத்து துறைவாரி சம்மே ளனங்கள், அனைத்து பொதுத்துறை நிறு வன ஊழியர் சங்கங்கள் உள்பட 60 அமைப்புகள் கூட்டாக விடுத்துள்ள அழைப்பினை ஏற்று நடைபெறுகிற இந்த மாபெரும் தேசபக்தப் போராட் டத்தில் அனைத்து விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர் சங்கங்கள், மாண வர், வாலிபர், மாதர், தலித், பழங்குடி மக்கள் இயக்கங்கள் உள்பட அனைத்து அமைப்புகளும் கரம்கோர்த்து வீதியில் இறங்குகின்றன.
இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்எல்) லிபரே சன் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் மறியல் களம் காண்கின்றன. தமிழகத்தில் இவ்வியக்கங்களுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கிற, வேலையின்மையை மேலும் மேலும் தீவிரப்படுத்துகிற, குறைந்த பட்சக் கூலியை வெட்டிக் குறைக்கிற, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாது காப்பு அம்சங்களை சீர்குலைக்கிற, பொதுத்துறை நிறுவனங்களை சூறை யாடுகிற மோடி அரசின் கொடிய நட வடிக்கைகளுக்கு எதிராக 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து பிரதான தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பிஎஸ் என்எல், ரயில்வே, சுரங்கங்கள், துறை முகங்கள் என அனைத்துத் துறைகளி லும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
அரசுப் போக்குவரத்து, ஆட்டோ, சாலை போக்குவரத்து, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்நாளில்,முன்னால் .
- மொனாக்கோ விடுதலை பெற்றது(1297)
- ஆல்பிரட் வெயில், புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்(1838)
- அலாஸ்காவில் ராணுவ ஆட்சி வந்தது(1900)
- பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி வெற்றி (1959)
1964 - ‘ஏழ்மையின் மீதான போர்’ என்பதை, குடியரசுத்தலைவர் உரையில், லிண்டன்-பி-ஜான்சன் அறிவித்தார்.
அமெரிக்காவில் அப்போது நிலவிய 19 சதவீத ஏழ்மையைச் சரிசெய்யும் நோக்கம்கொண்ட இவ்வுரையின் அடிப்படையில், பொருளாதார வாய்ப்புகள் சட்டம் என்பது நிறைவேற்றப்பட்டு, பொருளாதார வாய்ப்புகளுக்கான அலுவலகம் என்பதும் தொடங்கப்பட்டது.
இதற்கு ‘மகத்தான சமுதாயம்’ என்று பெயரிட்டிருந்த ஜான்சன், ஏழ்மையின் அடையாளங்களை மறைப்பது தங்கள் நோக்கமல்ல, அதைக் குணப்படுத்துவதும், மீண்டும் வராமல் தடுப்பதுமே நோக்கம் என்றார். கல்வியிலும், சுகாதாரத்திலும் அமெரிக்கக் கூட்டரசின் பங்களிப்பை
விரிவுபடுத்துவதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்று கருதிய அவர், ஏழைக் குழந்தைகளின் பள்ளிக் கல்வியையும், ஊட்டச்சத்தையும் உறுதிப்படுத்திய ‘ஹெட் ஸ்டார்ட்’ திட்டத்தை உருவாக்கிய, ‘தொடக்க, மேல்நிலைக் கல்விச் சட்டம்’, ஏழைகளுக்கு மருத்துவ வசதிக்கான ‘மெடிக்-எய்ட்’, முதியவர்களின் மருத்துவ வசதிக்கான ‘மெடிக்கேர்’ ஆகியவற்றை உருவாக்கிய ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம்’ ஆகியவற்றை இயற்றி, போதுமான நிதியும் ஒதுக்கினார்.
மொத்த வேலையின்மையைவிட, இளைஞர்களின் வேலையின்மை இரண்டு மடங்காக இருந்த நிலையில், ‘ஜாப் கார்ப்ஸ்’ என்ற திட்டத்தின்மூலம், பகுதிநேரப் பணியாற்றிக்கொண்டே, வேலைவாய்ப்புள்ள தொழில்நுட்பங்களைக் கற்றுத் தந்ததுடன், ‘சமூகச் செயல்திட்டம்’ உள்ளிட்டவைமூலம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.
ஏழைகளுக்கான உணவுக் கூப்பன்கள் வழங்க, ‘ஃபுட் ஸ்டாம்ப் சட்டம்’ இயற்றப்பட்டது. ‘ஹெட் ஸ்டார்ட்’ திட்டத்தின்மூலம் தொடக்கக் கல்வி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்ட பயிற்சிகள் அளிக்க ‘ஃபாலோ த்ரூ’ என்ற திட்டமும் தொடங்கப்பட்டது.
இவற்றின்மூலம், பத்தாண்டுகளுக்குள் ஏழ்மை விகிதம் 10 சதவீத மளவுக்குக் குறைந்தது. ஆனாலும், 1950களின் இறுதியிலேயே ஏழ்மை குறையத் தொடங்கியிருந்தது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த வியட்னாம் போரில், ஓர் எதிரி வீரரைக் கொல்ல 5 லட்சம் டாலர் செலவிடும் அரசு, ஓர் அமெரிக்கரின் நலனுக்கு வெறும் 53 டாலர்களைச் செலவிடு கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
ஊட்டச்சத்துள்ள உணவு, சுகாதாரமான இருப்பிடம், உடைகள் ஆகியவற்றுக்குத் தேவையான வருவாயை ஏழ்மைக்கான அளவு கோலாக நிர்ணயித்து, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், செலவுக்குறைப்பில் ஈடுபடுவதே வறுமையை அதிகரிக்கிறது!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மழுப்பலுரை.
தமிழக சட்டப் பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் திங்களன்று துவங்கியுள்ளது. இந்த உரை மாநில அதிமுக அரசின் நிலைபாடுகளை விளக்கும் உரையாக இல்லாமல் மத்திய பாஜக அரசு அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை வழி மொழியும் உறையாகவே அமைந்துள்ளது.
உதாரணமாக ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்பது மோடி அரசின் திட்டமாகும். பொது விநி யோக முறை ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கருதப்படும். தமிழகத்தில் இந்த திட் டத்தால் பெரும் குளறுபடியும் இழப்பும் ஏற்படும். ஆனால் இந்தத் திட்டத்தை தமிழக அரசு நடை முறைப்படுத்தி வருவதாக ஆளுநர் உரை பெருமிதம் கொள்கிறது. இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் என ஆளுநர் உரை கூறுகிறது. ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை அதிமுக ஆதரித்த நிலையில், இலங்கை அகதிக ளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்காமல் ஆளுநர் உரையில் அளந்து விடுவது ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பே.
தமிழக மக்கள் எந்த ஒரு மதத்தையோ அல்லது சமய வழியையோ பின்பற்றினாலும் அனை வரின் நலனும் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என ஆளுநர் உரை கூறுகிறது. ஆனால் குடியுரிமை சட்டத் திருத்தத்தையும், குடிமக்கள் பதிவேட்டையும் நடைமுறைப்படுத்த மாட்டோம் என கேரளம் உட்பட பல்வேறு மாநி லங்கள் தெரிவித்துள்ள நிலையில் அத்தகைய ஒரு நிலையை தமிழகமும் எடுக்கும் என ஆளுநர் உரையில் கூறத் தயங்குவது ஏன்? கேரள சட்ட மன்றம் நிறைவேற்றியுள்ளது போல அரசியல் சாசனத்துக்கு விரோதமான இந்த சட்டத்திருத் தத்தை ஏற்க மாட்டோம் என தமிழக சட்டப் பேரவையும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்.
தமிழகத்தில் வேலையின்மை கடுமையாக உயர்ந்துள்ளது. சிறு தொழிற்சாலைகள் மூடப்படு கின்றன. விவசாயம் கட்டுப்படியாகாத தொழிலாக மாறியுள்ளது. இதனால் இந்திய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் தமிழ கத்தையும் கடுமையாக பாதிக்கும் நிலையில், இதனால் இன்னலுக்குள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அறிவிப்பும் எதுவும் ஆளுநர் உரையில் இல்லை.
நிதி ஒதுக்கீடு, மானியம் மற்றும் வரி பங்கீட்டில் தமிழகத்திற்கு மோடி அரசால் அநீதி இழைக்கப்படுவது குறித்து ஆளுநர் உரை பொரு முகிறது. ஆனால் இதை தட்டிக்கேட்க அதிமுக அரசு தயாராக இல்லை. மொத்தத்தில் மோடி அரசின் திட்டங்களுக்கு முட்டுக் கொடுக்கும் விதமாக ஆளுநர் உரை அமைந்துள்ளதே அன்றி தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதாக இல்லை. நழுவலும், மழுப்பலும் நிறைந்த சொற்கோவை யாக இந்த உரை அமைந்துள்ளதே தவிர தெளி வான பார்வை இல்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, சிபிஎம்-மைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன்
அதிமுகவைச் சேர்ந்த முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, செல்வராஜ், விஜிலா சத்யானந்த், ஆகியோர் மாநிலங்களவை பதவி காலம் முடிகிறது.
தற்போதைய சபை எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பத்து நிமிடத்துக்கு ஒன்று.
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திநடைபெறும் சைபர் குற்றங்களும் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் 10 நிமிடத்திற்கு ஒரு சைபர் குற்றம் என்ற அளவில் நடப்பதாக சில ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகம் முதலிடம்
இத்தகைய ஆன்லைன் மோசடிகளின் மூலமாக அதிகமாக பணத்தை இழந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2016 - 2017ஆம் ஆண்டுமுதல் 2018 - 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 56 கோடி ரூபாய் அளவில் தமிழகத்தில் ஆன்லைன் மூலம்மோசடி செய்யப்பட்டதாகவும், 2ஆவது மாநிலமாக 46 கோடி ரூபாய் இழப்புடன் மகாராஷ்டிரா உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஆன்லைன் வங்கிமற்றும் வாலட் பணப்பரிமாற்ற முறை அதிகமாக முன்னெடுக்கப் பட்டது. இந்த திடீர் மாற்றங்களால் முழுமையான புரிதலும், பாதுகாப்பான செயல்முறையும் குறித்த விபரங்கள் ஏதும் தெரியாமல் எண்ணற்ற வாடிக்கையாளர்கள் பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி புதுப்புது மோசடிகளை தொழில்நுட்பத் திருடர்களும் அரங்கேற்றி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடிகள் பற்றி பல ஆயிரம் வழக்குகள் பதிவாகிவருகின்றன. கடந்த மார்ச் 2017 முதல் இந்த மோசடிகள் ஆறு மடங்காகஅதிகரித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நிலையில் 12 ஆகஸ்ட் 2016 முதல் மார்ச் 2017 வரை 977 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான கால கட்டத்தில் 2,441 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான காலத்தில் 4,955 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2019 வரையிலான 8 மாதகாலத்தில் மட்டும் 5,620 மோசடி வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மேற்கண்ட புள்ளிவிபரங்களை வைத்துப் பார்க்கும்போது சைபர்குற்றங்கள் மீதான அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லைஎன்பதையே இது காட்டுகிறது.

விதவிதமான மோசடிகள்
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக சந்தை 2021ஆம் ஆண்டில் 84 பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என்று டெலாய்ட் இந்தியாமற்றும் சில்லரை விற்பனை சங்கத்தின் அறிக்கை மதிப்பிட்டுள்ளது.எதையும் ஆன்லைனில் வாங்கலாம் என்ற போக்கு அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. ஆன்லைன் வர்த்தக மோகத்தைப் பயன்படுத்தி பல போலியான வணிக தளங்கள் உருவாக்கப்பட்டு மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன.
கியூஆர் கோட் மோசடிகள்
போலி இணைய தள மோசடி எனும்போது வங்கி இணைய தளங்கள், ஆப்கள் என அனைத்துமே இதில் அடங்குகின்றன. மின்னஞ்சல் இணைப்புகளைப் பயன்படுத்தி தவறான இணைய தளங்களுக்கு வாடிக்கையாளரை அழைத்துச் சென்று மோசடி செய்வது பழைய ரகம். தற்போது வங்கிக் கணக்கு விபரங்களை தட்டச்சு செய்யாமல் எளிதாக ஆப் மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் கியுஆர்கோட் (QR Code - Quick response code) முறையைப் பயன்படுத்தியும் மோசடிகள் நடைபெறுகின்றன. கியூஆர் கோட் என்பது இணைய முகவரிகள், வங்கிக் கணக்கு விபரங்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள், பொருட்களின் தயாரிப்பு விபரங்கள் எனப் பல தரப்பட்ட தகவல்களை தட்டச்சு செய்துநேரத்தை விரயமாக்காமலும், பிழையின்றியும் கணினி அல்லது ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனுக்குள் விநாடி நேரத்தில் பதிந்து கொள்ளஉருவாக்கப்பட்ட ஒரு விரைவான தகவல் கடத்தும் முறையாகும்.

போன் பே, பேடிஎம், கூகுள் பே போன்ற நிறுவனங்கள் தங்களுடன்இணையும் வர்த்தக நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை யுபிஐமுகவரியை கியூஆர் கோட் வடிவில் ஸ்டிக்கர்களாக மாற்றி ஒட்டிவைக்கின்றனர். மோசடிக்காரர்கள் இவற்றை போலவே தங்களுடையயுபிஐ முகவரி கொண்ட புதிய கியூஆர் கோட் ஸ்டிக்கர்களை தயார்செய்து கடைக்காரருக்குத் தெரியாமல் மாற்றி ஒட்டிச் சென்று விடுகின்றனர். இதனை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தும் வாடிக்கையாளரின் பணம் திருடர்களின் அக்கவுண்டிற்கு போய்சேருகிறது. எனவே, பொதுவெளியில் வைக்கப்படும் இத்தகைய கியூஆர் கோட்பலகைகளை பாதுகாப்பான இடத்தில் வைப்பதும், அதில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டிய பொறுப்பும் வர்த்தகர்களுக்கு உள்ளது.
இணையத்தில் பயன்படுத்திய பொருட்களை விற்க நினைப்பவர்களைக் குறிவைத்தும் புதிய மோசடிகள் நடைபெறுகின்றன. OLXபோன்ற தளங்களில் பொருட்களைப் பார்த்துவிட்டு அவற்றை வாங்கிக்கொள்வதாகக் கூறி தான் அனுப்பும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பின் எண் கொடுத்தால் உங்களுக்கு பணம் வந்துவிடும் என்று கூறுகின்றனர். இதனை நம்பி, வாட்ஸ்அப் செயலியில் வரும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பே (PAY) என்று கொடுத்தால், அவர்களுடைய பணம் நம் அக்கவுண்டிற்கு வருவதற்கு பதிலாக நம்முடைய பணம் அவர்களுடைய அக்கவுண்டிற்கு சென்றுவிடும்.கியூ ஆர் கோட் என்பது ஒருவருக்கு பணம் அனுப்புவதற்கு மட்டுமே.அதனைக் கொண்டு யாரிடமும் பணம் பெற முடியாது என்ற அடிப்படையான விஷயத்தை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
ஜன்தன் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மோசடி
அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற முழக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஜன்தன் வங்கி சேமிப்புக் கணக்குகளை அப்பாவி விவசாயிகளிடம் KYC நடைமுறைகளைக் காரணம் காட்டி அவர்களின் விபரங்களையும் கட்டை விரல் ரேகை பதிவுகளையும் பெற்று கணக்குகள் திறந்து அதில் மோசடி பணத்தை பரிவர்த்தனை செய்த சம்பவங்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

போலிகளிடம் கவனமாக இருக்கவும்
போலி ஷாப்பிங் தளங்கள், ஃபேஸ்புக் பயன்படுத்தி போலி நபர்களின் பக்கங்கள், யுபிஐ வாலட் ஆப்களில் போலி ஆப்கள், மணமகன் மணமகள் தேடும் மேட்ரிமோனியல் தளங்களில் மோசடி எண்ணத்துடன் போலியான தகவல்களைக் கொடுப்பவர்கள் என நம்மைச்சுற்றி நடைபெறும் எண்ணற்ற சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கவனமாகவும் எதையும் ஒருமுறைக்கு இருமுறையோசித்து செயல்படுவதும் அவசியமானதாகும்.

என்.ராஜேந்திரன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
தேவை தேசப்பற்றல்ல ,
முஸ்லிம்கள் குருதி.
“அவன் கைகளில் மூவர்ண கொடியை ஏந்தியிருந்தான்; அதற்குகூட அவர்கள் மரியாதை தரவில்லை. மூவர்ண கொடியோடு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிய அவனை அவர்கள் கொன்றிருக்கிறார்கள்” கண்களில் வழிந்தோடும் கண்ணீரை மறைக்க, தலையை குனிந்து பேசுகிறார் காவி குண்டர்களால் கொல்லப்பட்ட 18 வயது அமீர் ஹஞ்சிலின் தந்தை சோஹைல் அகமது.
பீகார் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 21-ம் தேதி புல்வார் சாரீப் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார் அமீர். அப்போது, குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடந்தது. ஜீன்ஸ், ஸ்வெட்டர் அணிந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தி போராட்ட களத்தில் அமிர் காட்சியளிக்கும் வீடியோ உள்ள நிலையில், வன்முறை சம்பவத்தின்போது காணாமல் போனார்.
காணாமல் போன அமீர் பத்து நாட்களுக்குப் பிறகு, அருகில் இருந்த நீர்நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவருடைய தலை நசுக்கப்பட்டிருந்தது; அவருடைய நெஞ்சிலும் வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்தன.
“கையில் தேசிய கொடியை ஏந்தியவனை கொல்பவர்கள் எத்தகையவர்களாக இருப்பார்கள்?” எனக் கேட்கிற சோஹைல், “போராட்ட படங்களைப் பாருங்கள். அவன் பெருமையுடன் தேசிய கொடியை ஏந்தியுள்ளான். அவன் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்களால் கொல்லப்பட்டான் என்பது அனைவரும் அறிந்ததே” என்கிறார்.
பத்தாவது படித்த அமீர், பை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். டிசம்பர் 21-ம் தேதி பணிக்குச் சென்ற அவர், அன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடந்த நிலையில் அதில் பங்கேற்றிருக்கிறார்.
மதியம் வரை குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த அவரை, அதன்பின் தொடர்பு கொள்ள இயலவில்லை. இரவு எட்டு மணியளவில் ஆங்காங்கே போராட்டத்தில் கலவரம் வெடித்ததாக வந்த செய்தியை அடுத்து, அவருடைய குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறது. மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தேடியபோதும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்நிலையில், பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் அமீர். அவரை கொன்றதாக நாகேஷ் சாம்ராட் (23), விகாஸ் குமார் (21) ஆகியோரை கைது செய்துள்ளது பீகார் போலீசு. இவர்கள் இந்து சமாஜ் சங்காதன் என்ற காவி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் போலீசு தெரிவித்துள்ளது.
“அமீர் போராட்ட இடத்தை விட்டு வெளியேறியபோது, அவரை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிடித்துச் சென்று அடித்து கொன்றுள்ளனர். உடல்கூராய்வு அறிக்கை செங்கல்லால் அவர் தாக்கப்பட்டும், கூரான ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டதை கூறுகிறது.” என்கிறார் போலீசு அதிகாரி.
இந்த படுகொலை தொடர்புடையதாக கைதான மேலும் ஐவர், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் போலீசு கூறுகிறது.
அமீரைக் கொன்ற முதன்மை குற்றவாளிகளான சாம்ராட்டும், குமாரும் டிசம்பர் 21-ம் தேதி நடந்த போராட்டத்தின் போது, அங்கு கலவரத்தை தூண்டும் வகையில் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில், போலீசு இந்துக்களை டார்ச்சர் செய்வதாகவும் அனைத்து இந்துக்களும் புல்வார் சாரீப்புக்கு வரவேண்டும் எனவும் தான் ஒரு இந்து என்ற வகையில் அங்கே வந்துவிட்டதாகவும் பேசியிருக்கிறார்கள்.
“வெளியிலிருந்து வந்து இதுபோல கலவரங்கள் மூலம் வன்முறையை தூண்டுவது கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவருகிறது” என்கிறது போலீசு.
டிசம்பர் 21-ம் தேதி நடந்த போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் பேரணியாக சங்கத் மொகல்லா பகுதியில் சென்றபோது ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங் தள் காவி குண்டர்களால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரத்தை போலீசு தடுக்க முயற்சிக்கவில்லை என நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
போலீசு ஏன் தடுக்கவில்லை என டெலிகிராப் நாளிதழ் நிருபர் கேட்டபோது, “எங்கள் பெயரை இழுக்க வேண்டாம். அங்கே நடந்த கலவரத்துக்கு யார் காரணம் என அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளனர் போலீசு அதிகாரிகள்.
காவி குண்டர்களின் திட்டமிட்ட வன்முறைக்கு பலியாகியிருக்கிறது ஒரு அப்பாவி உயிர். அவர்களுக்கு மூவர்ண கொடி மீதெல்லாம் எந்த மரியாதையும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரத்தம். அதுவும் முசுலீம்களின் இரத்தம். இன்னமும் இக்கொடுமையான சட்டம் முசுலீம்களுக்கு எதிரானது இல்லை என நம்பிக்கொண்டிருந்தால் நாமும் இந்தப் படுகொலைகளின் கூட்டாளிகள்தாம்.
நன்றி:வினவு.
---------------------------------------------------------------------------------------------------