கேடு கெட்ட தர்பார்.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த 2019 செப்., 1ல் நடந்தது. தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்த இந்த தேர்வை 16 லட்சத்து 865 பேர் எழுதினர். சில நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பின்னர் தரவரிசை பட்டியல் வெளியானது. இதில், சில தேர்வர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த தர வரிசைப்பட்டியலை ஆய்வு செய்த போது, முதல் 100 இடங்களை பிடித்தவர்கள், ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிவர்களில் பெரும்பாலானோர் இடம் பெற்றனர்.

அதிலும், இந்த மையங்களில் தேர்வெழுதிய 19 பேர் முதலிடமும் பெற்றுள்ளனர். இதனால், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மற்ற தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், 2017-18 ம் ஆண்டில் நடந்த குரூப் 2ஏ தேர்விலும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 30க்கும் மேற்பட்டோர் 50 இடங்களுக்குள் வந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. 
இது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாகவும், தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்து வருகிறோம் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஜக வெறியாட்டம்.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., வளாகத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், பல்கலை., மாணவர் பேரவை தலைவர் அய்ஷி கோஷ் மீது சராமரி தாக்குதல் நடத்தினர். முகமூடி அணிந்த மர்மநபர்கள் கண்மூடிதனமாக சரமாரியாக தாக்கியதாக கோஷ் குற்றம் சாட்டி உள்ளார். இரும்பு தடிகளை கொண்டு கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் மர்மநபர்கள் தாக்கியதில் பலர் பலத்த காயமடைந்தனர். இத்தாக்குதலில் பேராசிரியர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த தாக்குதலை அடுத்து பல்கலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மர்மநபர்களால் தாக்கப்பட்டதையடுத்து, பல்கலை.,யை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.JNU,students,attacked,violence,masked_people,ஜேஎன்யூ,பல்கலை,வன்முறை,மாணவர்கள்,தாக்குதல்,dinamalar

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், 'பல்கலை வளாகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வன்முறையை தடுத்து நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேணடும். பல்கலைக்குள்ளேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் நாடு எப்படி முன்னேறும்?' என கூறியுள்ளார். 

இந்நிலையில் மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 18 மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தாக்குதல் நடத்தியது யார்? பல்கலையில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என மாணவர்கள் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. முகமூடி அணிந்த சமூக விரோத கும்பலால் மாணவர்கள் தாக்கப்படும் போது, டெல்லி போலீஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. பல்கலை நிர்வாகமும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். 
ஜாமியா, அலிகர் பல்கலைக்கழகங்களில் எதுவுமே செய்யாத மாணவர்களை அடித்து நொறுக்கிய போலீசு, ஜேஎன்யூவில் நடந்த தாக்குதலை கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளது.
காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, வெளி சமூகம் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்திய பிறகு போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.
உலக அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழக வளாகத்துக்குள் பயங்கரவாதிகளைப்போல நுழைந்து கொடூரமாக தாக்கும் துணிச்சல் ஆட்சி அதிகாரத்தின் ஆசிபெற்ற கும்பலாலேயே முடியும்.  மக்கள் போராட்டங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத பாசிஸ்டுகள் இப்போது தங்களது காவி குண்டர்களை களமிறக்கி இருக்கிறார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் 

கேடு கெட்ட தர்பார்.

ஈரான் ராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் ஏழு ராணுவ உயரதிகாரி கள், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளியன்று அதிகாலை, ஆளில்லா விமானம் மூலம் செலுத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம், ஒட்டுமொத்த உலகினையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
 இது அமெரிக்க ஏகாதிபத்தியம் வெறித்தனமாக அரங்கேற்றியுள்ள, ரத்தத்தை உறையச் செய்கிற கொடிய சம்பவமாகும்.  ஈரான் அரசின் ஜனாதிபதிக்கு அடுத்த இரண்டாவது சக்தி வாய்ந்த நபர் ஒருவரை குறி வைத்து படுகொலை செய்திருப்பது என்பது,  ஈரான் மீதான நேரடியான யுத்தமே ஆகும். இதன்மூலம், ஈரான் மீது மட்டுமல்ல; ஒட்டு மொத்த மத்திய ஆசிய பிராந்தியத்தின் மீதும் அமெரிக்கா தாக்குதலைத் துவக்கியுள்ளது எனக் கூறலாம். 
 இப்பிரச்சனை குறித்து மாஸ்கோவுடனும் பெய்ஜிங்குடனும் டெஹ்ரான் ஆலோசிக்கத் துவங்கியுள்ளது. பதிலடி என்ற நிலை வந்தால் அப்பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதி லும் ஒரு பதற்றச்சூழல் ஏற்படும்.  
ஜெனரல் சுலைமானியின் படுகொலை என்பது, ஈவிரக்கமற்ற கொடிய குற்றங்களை நிகழ்த்துவது; அதன்மூலம் நாடுகளையும் வளங்களையும் கைப்பற்றுவது என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் உச்சக் கட்டமே ஆகும். 
இதற்கு முன்பு, பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி ஒசாமா பின்லேடனை அழிப்பதாகக் கூறி, அமெரிக்க ஏகாதிபத்தியம் துவக்கிய தாக்குதல்கள், அடுத்தடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒழிப்பதற்காக தீவிரப்படுத்தப் பட்டன. 
சதாம் உசேன், தூக்கிலிட்டு படுகொலை செய்யப்பட்டார். மும்மர் கடாபி கொடூரமாக கொல்லப்பட்டு சாக்கடையில் தூக்கிவீசப்பட் டார். 
ஜனாதிபதி சாவேஸ், மெல்லக்கொல்லும் புற்றுநோயின் பிடியில் சிக்கவைக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார். 
அவருக்கு முன்பு  யாசர் அராபத்துக்கும் இதே கதிநேர்ந்தது.

 உல கெங்கிலும் ஜனநாயகத்தை பரப்புவதாகக் கூறி பயங்கரவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் ஏற்றுமதி செய்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.  
சிஐஏ, எப்பிஐ போன்ற அமெரிக்காவின் நாசகர உளவு ஸ்தாபனங்களின் கொலைப்பட்டி யல் நீள்கிறது. ஜனாதிபதி பசார் அல் அசாத், ஜனாதிபதி கிம் ஜோங் உன், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, ஜனாதிபதி ஈவோ  மொரேல்ஸ் என எல்லோரும் குறிவைக்கப்பட்டி ருக்கிறார்கள். 
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிராட்டங்களைக் கவனித்தால் அது புரியும்.  தனிப்பட்ட தலைவர்களை மட்டுமல்ல, அவர்கள் சார்ந்துள்ள தேசங்களின் லட்சக்கணக் கான மக்களை கடந்த 20 ஆண்டுக்காலத்தில் கொன்று குவித்துள்ள அமெரிக்கா, 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் நிறைவு ஆண்டையும் கொடூரமாக துவக்கி வைத்திருக்கிறது. 
ஆனால் இந்த நாடு களின் மக்களெல்லாம் - குறிப்பாக உழைக்கும் வர்க்க மக்கள் கோடிக்கால் பூதமென எழு கிறார்கள். 
அமெரிக்கா உள்பட உலகெங்கிலும் போராட்ட அலை தீயாகப் பற்றிப் பரவுகிறது. இது நிச்சயம் ஏகாதிபத்திய பயங்கரத்திற்கு ஒரு நாள் முடிவு கட்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?