உண்மை முகம்

இனி DTH நிறுவனத்தை மாற்றலாம்.

அலைபேசி நிறுவனங்களில் நீங்கள் பயன்படுத்தி கொண்டு இருக்கும் நெட்வர்க் அல்லது ஆபர்  சரியாக இல்லை என்றால் மொபைல்  நெட்வர்க் போர்ட்டபிலிட்டி ( MNP ) மூலம் நீங்கள் எளிதாக உங்களுக்கு பிடித்த சிம் ஆப்பரேட்டர் மூலம் எளிதாக பெறலாம், அதற்க்காக  நீங்கள் ஒவ்வொருமுறையும் புதிய  மொபைல் வாங்குவதில்லை அதே போல DTH  ஆப்ரேட்டர்களிலும்   நீங்கள் அதிக பணம் செலவழிக்காமல்  மாற்ற புதிய முயற்சியை  கொண்டு வருகிறது. 
மேலும் TRAI வருகிற 2020 ஆண்டு ஏப்ரல் மாதத்திற்க்குள்  இந்த புதிய  அம்சத்தை கொண்டு வரும்.
டெலிகாம் டாக்  அறிக்கையின் படி பார்த்தால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இயங்கக்கூடிய செட்-டாப் பாக்ஸ்களை சிறிது காலமாக சோதித்து வருகிறது, முதல் கட்ட சோதனை முடிந்துவிட்டது, அதாவது இந்த பாக்ஸ்ளை விரைவில் பார்ப்போம். 
தெரிந்தவர்களுக்கு, interoperable செட்-டாப் பாக்ஸ்கள் மொபைல் போன்களைப் போலவே இருக்கின்றன, அங்கு பயனர்கள் எந்த DTH  ஆபரேட்டருக்கும் சப்ஸ்க்ரைப் செய்ய அனுமதிக்கின்றனர். எனவே, சேவையை மாற்றும்போது, ​​ஒருவர் புதிய செட்-டாப் பாக்ஸை வாங்க வேண்டியதில்லை.
எனவே, பயனர்கள் தங்கள் டிவியில் தங்களுக்கு விருப்பமான செட்-டாப் பாக்ஸை வாங்க முடியும் மற்றும் அவர்கள் விரும்பும் எந்த ஆபரேட்டரையும் தேர்வு செய்யலாம். அவர்கள் தங்கள்DTH  ஆபரேட்டரை மாற்ற விரும்பும்போது கூட, பாக்ஸை மாற்றாமல் அவர்கள் அதைச் செய்ய முடியும்.
interoperable செட்-டாப் பாக்ஸ்களுடனான உடனடி நன்மை வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய செட்-டாப் பாக்ஸ் மற்றும் அதன் இன்ஸ்டால் கட்டணத்திற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுக்கு பெரும் சேமிப்பு ஆகும். 
ஆபரேட்டர்களைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் சேவைகளையும் இந்தத் துறைக்கு கொண்டு வர அனுமதிக்கும். இந்த புதிய பாக்ஸ்கள் இந்தத் துறைக்கு ஒரு உணர்வு பாக்ஸை கொண்டுவரும்,
 இது இறுதியில் DTH  துறையில் முன்னெப்போதையும் விட வேகமாக மற்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைக் காணும்.
தற்போது, ​​DTH  செக்டர் ஆண்ட்ராய்டு டிவி OS யில் இயங்கும் கலப்பின செட்-டாப் பாக்ஸ்களைக் காண்கிறது மற்றும் நவீன OTT இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்குகிறது, அதே நேரத்தில் மாநாட்டு (convention) டிவி சேனல்களுக்கும் அவர்களின் சேவை மூலம் அணுக உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஏர்டெல் அதன் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை 4 கே ஸ்ட்ரீமிங் மற்றும் HD சேனல்களுக்கான அணுகலுடன் வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ ஒரு படி மேலே சென்று ஹோம் நெட்வொர்க் ஸ்டோரேஜ் மற்றும் கிளவுட் கேமிங் சேவைகளுக்கான அணுகல் போன்ற சேவைகளை அதன் ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ் யிலிருந்து வழங்கியது.
-------------------------------------------------------------------------------------------------------
மூட்டு வலி.
'ருமட்டாய்டு ஆர்த்தரடீஸ்' எனப்படும், முழங்கால் மூட்டு அழற்சியால், முழங்காலில் மட்டும் வலி ஏற்பட்டால், அது மூட்டு தேய்மானத்தால் ஏற்பட்டதாக இருக்கலாம்.


பொதுவாக இது, 60 வயதிற்கு மேல் வரும்.ஆனால், அதே வலி, முழங்காலில் மட்டுமல்லாமல், கழுத்து, கைகள், கணுக்கால் என்று, உடம்பின் அனைத்து மூட்டுப் பகுதிகளிலும் இருந்தால், 'கனெக்டிவ் டிஷ்யூ டிசாடர்' எனப்படும், இணைப்பு திசுக்களில் பிரச்னையின், அறிகுறியாக இருக்கலாம். இது, எந்த வயதினரையும் தாக்கலாம். 
உடலில் உள்ள நோய் எதிர்ப்பணுக்கள், செல்களையே அழிப்பதால் ஏற்படும் பிரச்னை இது.


என்ன காரணம் என்பது, உறுதியாக தெரியவில்லை.
வீடு கட்டும் போது, ஒவ்வொரு செங்கல்லையும் இணைக்கும் சிமென்டைப் போல், உடம்பில் உள்ள ஒவ்வொரு திசுவையும் இணைக்கக் கூடியது, 'கனெக்டிவ் டிஷ்யூஸ்' எனப்படும், இணைப்பு திசுக்கள். இந்த இணைப்பு திசுக்கள், சிறுநீரகங்கள், நுரையீரல், மூளை, மூட்டுக்கள் என்று, உடலின் எல்லாப் பாகத்திலும் உள்ளன.சர்க்கரை கோளாறு போன்று, மூட்டு அழற்சியும், எல்லா வகையான உறுப்புகளையும் தாக்கக் கூடியது.


அதனுடைய முதல் வெளிப்பாடு, மூட்டு வலியாக இருக்கலாம். மூட்டு வலி என்பது, ஏதோ ஒரு நோயின் வெளிப்பாடு தானே தவிர, மூட்டுகளில் ஏற்பட்ட தேய்மானத்தால் வரும் நோய் அல்ல. முழங்காலில் வலி என்று, பொது மருத்துவரிடம் சென்றால், 'மூட்டு வலி வந்து விட்டது; அதை சரி செய்ய முடியாது.

 வலி நிவாரணிகள் மட்டுமே தீர்வு. முடியாத பட்சத்தில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' எனக் கூறுவர்.


இணைப்பு திசுக்களில் ஏற்பட்ட பிரச்னையால், மூட்டுக்களில் வலி ஏற்பட்டு,
 சரியான சிகிச்சை தராவிட்டால், 
உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.

இதற்கென்றே உள்ள சிறப்பு டாக்டரிடம் சென்றால், பிரச்னை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, 
அதற்கேற்ப சிகிச்சை தர முடியும்.

மரு, தமிழ்ச்செல்வன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உண்மை  (கோர)முகம்.

புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்த குண்டர்கள் ஆயுதங்களுடன் புகுந்து மூன்று மணி நேரம்  வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கின்றனர். 
அதில் மாணவர்கள், மாணவிகள், பேராசிரியர்கள் பலரும் படுகாயமடைந்திருக்கிறார்கள். 
பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமின்றி, விடுதிகளுக்குள்ளும் நுழைந்து அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அந்த ரத்தவெறிக் கும்பல் வெளியேறிய பின்னரே துணைவேந்தரால் காவல்துறை அழைக்கப்பட்டு கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.  
இப்போது துணைவேந்தர், மாணவர்கள் மோதலை கைவிட்டு செமஸ்டர் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்; அமைதி காக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 
ஆனால் மாணவர்களின் கோரிக்கையான தேர்வுக் கட்டணத்தை குறைப்பதற்கும், நீண்ட நாள் போராட்டம் நடத்தியதால் தேர்வை தள்ளி வைப்பதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் மேற்கண்ட அறிக்கையை விடுத்தி ருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிர்வா கத்தின் கீழ் செயல்படும் காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. 
ஆனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகமூடி அணிந்த வன்முறை கும்பல் நுழைந்தது எப்படி?
 அந்த நேரத்தில் காவல்துறையை உடனே அழைக்காமல் துணைவேந்தர் என்ன செய்து கொண்டிருந்தார்? 
 இத்தகைய கேள்விகள் நடைபெற்ற கொடூ ரத் தாக்குதல் சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி என்ப தையே உணர்த்துகிறது. அத்துடன் வாட்ஸ்அப், வீடியோ பதிவுகள் ஆகியவற்றில் இடதுசாரிக ளுக்கு எதிராக ஒன்றுபடு என்று கூறும் காட்சிக ளும் பரப்பப்பட்டிருப்பது இதனை தெளிவுபடுத்து கிறது. 
எனவே இந்தத்தாக்குதலில் ஈடுபட்ட குண் டர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அத்துடன் உரிய வகையில் ஒரு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 இத்தகைய சம்பவங்களை தடுக் காமல் இருந்த துணைவேந்தரை நீக்கிட வேண்டும். 
ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாக போராட்டம் நடத்தினால், அதை தவிர்ப்பதற்கு அந்த நிர்வாகம் எத்தகைய முயற்சியும் எடுக்காத நிலையில், இத்தகைய முகமூடி அணிந்த குண்டர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்துவது என்பது மத்திய பாஜக அரசின் மறைமுக அச்சுறுத்தல் நடவடிக்கையன்றி வேறென்ன? 
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தியதைப் போல ஜேஎன்யுவிலும் தொடர விடக்கூடாது என்பதற்கான மிரட்டல் நடவடிக்கையாகவே இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது.  இது நாஜிக்கள் நடத்திய தாக்கு தலை நினைவுபடுத்துவது போல் உள்ளது. இத்தகைய ரத்தவெறி முகமூடித் தாக்குத லுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. 
அரசுக்கு எதிரான குரலை ஒடுக்குவதற்காக முகமூடிகளின் பின்னால்ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்துவது பாசிஸ்ட்டு களின் உண்மை முகத்தையே வெளிப்படுத்துகிறது. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ன்னாளில்
முன்னால்
  • முதலாவது வர்த்தக வங்கி அமெரிக்காவில் திறக்கப்பட்டது(1782)
  • வில்லியம் கென்னடி டிக்சன், அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்(1894)
  • புரூணை, ஆசியான் அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தது(1984)
1904 - அபாயத்திலிருக்கும் கப்பல்களின் உதவிகோரும் சமிக்ஞையாக ‘சி.க்யூ.டி.’ என்பதை மார்க்கோனி பன்னாட்டு கடல்சார் தொலைத்தொடர்பு நிறுவனம் (சுற்றறிக்கை எண்.57) அறிவித்தது. 
கடலில் ஆபத்துக்குள்ளாகும் கப்பல்கள், (தேசிய)கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடுவதே, உதவிகோரும் சமிக்ஞையாகப் பல நூறாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகளின் கொடிகள் தலைகீழாக இருப்பதைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது.
 ஜப்பான் உள்ளிட்ட சில நாடு களின் கொடிகளில் தலைகீழ் என்பதே இல்லை! 
சில நாடுகளின் கொடியைத் தலை கீழாக்கினால் மற்றொரு நாட்டின் கொடியாகிவிடும்(போலந்து-மொனாக்கோ)! இவற்றால், கொடியில் முடிச்சிட்டு, மேலிருந்துகீழாகத் தொங்கவிடுவது போன்ற முறை களும், மணிகள், சங்குகளை ஒலித்தல், சமிக்ஞைப் பிழம்புகளைக் கொளுத்துதல் உள்ளிட்ட முறைகளும் பின்பற்றப்பட்டாலும், இவை அதிகத் தொலைவிற்குச் சென்றடையவில்லை. 
1890களில் கம்பியில்லாத் தந்தி நடைமுறைக்கு வந்தவுடனேயே கப்பல்களின் முக்கியத் தொடர்புமுறையாக மாறினாலும், ஒரு பொதுவான அபாய சமிக்ஞையை ஏற்பதில், நாடுகளுக்கிடையேயிருந்த முன்விரோதங்கள் தடையாக இருந்தன.
இந்நிலையில்தான், நிலத் தந்தியில் பயன்படுத்தப்பட்டுவந்த, ‘காப்பாற்றுங் கள்’ என்பதற்காக பிரெஞ்சுச் சொல்லான ‘செக்யூயரைட்’ என்பதிலிருந்து உருவான சி.க்யூ.(செக்யூ) என்பதுடன், ‘டிஸ்ட்ரஸ்’ என்பதற்கு டி-யைச் சேர்த்து, மார்க்கோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதையும் ஏற்காமல், 1905 ஏப்ரலில், ‘மூன்று புள்ளிகள்-மூன்று கோடுகள்-மூன்று புள்ளிகள்’ என்ற தந்தி(மோர்ஸ்) குறியீட்டை அபாய சமிக்ஞையாக ஜெர்மனி பயன்படுத்தத் தொடங்கியது.
 எழுத்துகளாக மாற்றினால், எஸ்ஓஎஸ் என்பதாக இருந்த இந்தக் குறியீட்டை, 1906இல் பெர்லினில் கூடிய, முதல் பன்னாட்டு கம்பியில்லாத் தந்தி மாநாடு, உலகளாவியதாக ஏற்றுக் கொண்டது. அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மோர்ஸ் குறியீட்டில் மூன்று கோடுகள் ஐந்தைக் குறித்ததால், அங்கு எஸ்5எஸ் என்றும் இது குறிப்பிடப் பட்டது. 
கம்பியில்லா ‘ஒலி’பரப்புகள் வந்தபின், லண்டன் க்ராய்டன் விமானநிலை யத்தின் மாக்ஃபோர்ட் என்ற அலுவலர், ‘எனக்கு உதவுங்கள்’ என்ற பொருளுடைய பிரெஞ்சுச் சொல்லான ‘மேய்டர்’ என்பதிலிருந்து, ‘மேடே’(மேதினத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை!) என்ற அபாய சமிக்ஞையை 1921இல் உருவாக்க, அது 1927இல் பன்னாட்டு கம்பியில்லாத்தந்தி மாநாட்டில் ஏற்கப்பட்டது.
- அறிவுக்கடல்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாட்டிக்கொன்ட ஜக்கி.
காவிரி காலிங் புராஜக்ட்’ (காவிரி கூக்குரல் -Cauvery Calling campaign) மூலம் ஜக்கி வாசுதேவின் இஷா பவுண்டேஷன் ரூ.10,626 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்றம் ஜக்கி வாசுதேவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி சாட்டையை சுழற்றி உள்ளது.
மேலும், இஷா பவுண்டேஷன் ஆன்மீக அமைப்பு என்பதால் சட்டத்திற்கு கடுப்பட மாட்டோம் என்ற மெத்தனம் வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி நீர் பிரச்சினையால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், இரு மாநில விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றப்படுவதாக கூறி, ஜக்கி வாசுதேவின் ஆன்மிக நிறுவனமான இஷா பவுண்டேஷன் சார்பில் கடந்த ஆண்டு (2019) ஜுலை 20ஆம் தேதி, ‘காவேரி கூக்குரல்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இதில், ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர். அரிஜித் பஷயத், இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் ஏ.எஸ்.கிரண்குமார், கே.ராதாகிருஷ்ணன், ‘பயோகான்’நிறுவனத்தின் தலைவர் கிரண் மசூம்தார் ஷா, உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்கங்களின் தந்தை என அழைக்கப்படும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் ப்ரவேஷ் ஷர்மா, உலக வன உயிரின நிதியத்தின் (WWF) இந்திய தலைமை செயல் அதிகாரி .ரவி சிங், கர்நாடகாவின் முன்னாள் முதன்மை செயலர் நரசிம்ம ராஜூ மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஜக்கி வாசுதேவ், காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தின் மூலம் 12 ஆண்டுகளில் காவிரி பாயும் பகுதிகளில் 253 கோடி மரங்கள் நடப்படும் என்றும், இதற்காக 2017-ம் ஆண்டு கர்நாடக அரசுடன் ஈஷா அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதன் முதல்கட்டமாக, 73 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்முலம் கர்நாடகம் மற்றும் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பலன்பெறுவர் என்றும் தெரிவித்தார். இதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, மாநில கவர்னர்கள், முதல்வர்கள், திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்பினரையும் சந்தித்து, காவிரி கூக்குரல் திட்டத்தை பிரபலப்படுத்தி வந்தார். மரங்கள் நடுவதற்கு பணம் தேவை என கூறி, வசூல் வேட்டையும் நடத்தினார்.
ஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு, நாடு முழுவதும் உள்ள 95 க்கும் மேற்பட்ட சுற்று சூழல் அமைப்புகள் தங்களது ஆதரவையும் தெரிவித்திருந்தன. மேலும், ஹாலிவுட் முன்னணி திரைநட்சத்திரம் லியானார்டோ டிகேப்ரியோவும் தனது ஆதரவைப் பதிவு செய்திருந்தார்.
ஆனால், என்விரான்மென்ட் சப்போர்ட் குரூப்(ESG) என்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஜக்கியின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து,லியானார்டோ டிகேப்ரியோ தனது ஆதரவை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர், காவிரி கூக்குரல் திட்டத்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக இஷா பவுண்டேசன் மீது வழக்கறிஞர் ஏ வி அமர்நாதன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், இஷா பவுண்டேசன் காவிரி கூக்குரல் திட்டப்படி கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடி செய்துள்ளது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமைநீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுதர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையைத் தொடர்ந்து நீதிபதிகள் இஷா பவுண்டேசனுக்கு பல்வேறு கேள்விக்கணைகளை வீசினர். அப்போது, இதுபோன்ற புத்துணர்ச்சி நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை யாராவது உருவாக்கினால், அது மிகவும் வரவேற்கத்தக்கது, ஆனால், அதற்காக பலவந்தமாக நிதி சேகரிப்பது சரியல்ல என்றனர்.
மேலும், பலவந்தமாக நிதி வசூலித்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து மாநில அரசு ஏன் இதுவரை இஷா பவுண்டேசன் விசாரணை நடத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பியது.
“ஒரு குடிமகன் உங்களிடம் (மாநிலத்தில்) மாநிலத்தின் பெயரில் நிதி சேகரிக்கப்படுவதாக புகார் கூறும்போது, ​​விசாரிப்பது அரசின் பொறுப்பல்லவா?” என்று தலைமை நீதிபதி கர்நாடக மாநில பாஜக அரசை கடுமையாக சாடினார்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பாக அரசு எந்தவொரு புகாரும் அரசுக்கு வரவில்லை என்றும், அரசு நிலத்தில் எந்தவொரு வேலையும் செய்ய இஷா அறக்கட்டளையை அரசு அனுமதிக்கவில்லை என்றுவாதிட்டார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிமன்றம், புகார் பெறவில்லை என்பதால், அது பணம் வசூலிக்கப்படுவதற் கான அங்கீகாரம் இல்லை என்றும் இஷா பவுண்டேஷனுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், மனுதாரர் கொடுத்துள்ள புகாரின்படி, காவிரி பிறந்த இடமான தலக்காவேரி முதல் திருவாரூர் வரை காவேரி ஆற்றங்கரையின் 639 கிலோமீட்டர் பரப்பளவில் 253 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதறக்க இஷா பவுண்டேஷன் மரம் ஒன்றுக்கு ரூ.42 வசூல் செய்துள்ளது என்பதை சுட்டிக்காட்டியதுடன், இதன் காரணமாக மொத்தம் ரூ .103,626 கோடி (ரூ.42 x 253கோடி= 10,626 கோடி) வசூல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது… மனுதாரர் கூற்றுப்படி இரு ஒரு மாபெரும் மோசடி என்று கூறினார்.
மேலும், “காவிரி கூக்குரல் தொடர்பாக ஆய்வுகள் நடத்தியதாக அறக்கட்டளை கூறுகிறது, ஆனால்., அந்த நிறுவனம் அது தொடர்பாக அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்திருக்க வேண்டும், ஆனால், இவரை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய நீதிபதிகள்,
இஷா பவுண்டேஷனின் ஆய்வறிக்கையை ஆய்வு செய்த பின்னரே, இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு எந்தவொரு நடவடிக்கையையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை என்றும் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநிலத்தின் அரசு நிலத்தில் எந்தவொரு தனியார் அமைப்புக்கும், முறையான ஒப்புதல் இல்லாமல், எந்த வேலையும் செய்ய அனுமதிக்க முடியாது. “ என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,
‘காவிரி கூக்குரல் திட்டத்திற்காக’ வசூலித்த தொகையை வெளிப்படுத்தும் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சத்குரு ஜக்கி வாசுதேவின் இஷா அறக்கட்டளைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், “நீங்கள் ஒரு ஆன்மீக அமைப்பு என்பதால் சட்டத்திற்கு கட்டுப்படவில்லை என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம்” என்று எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.
கர்நாடக உயர்நீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு இஷா பவுண்டேஷசனுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற இலவசமாக மரம் நடுவதாக கூறி வந்த ஜக்கி வாசுதேவ், அதற்காக 10,626 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள தகவல் தற்போது நீதிமன்றத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது…

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?