உள்ளாட்சி முடிவு

ஏன் இப்படி?

ஊள்ளாட்சித்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆளும்கட்சி,மாநிலத்தேர்தல் ஆணையம் கூட்டணி செயல்பாடு முறைகேடுகளையும் தாண்டி திமுக வெற்றிபெற்று வருகிறது.
மாநிலத்தேர்தல் ஆணையம் ஆள்வோர் ஆட்டத்துக்கு தாளம் போடுவது வழமைதான்.
ஆனால் இப்போதோ  வாக்குப்பதிவன்று வாக்காளர் திருத்தப்பட்டியலை வெளியிட்டு வாக்களிக்க வரிசையில் நிற்போர் பெயர்களையே நீக்கியுள்ளது.
அதிலும் கொடுமை புதிய வாக்காளர் பட்டியல் ஆதாரத்துடன் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் பலரது பெயர்களும் நீக்கப் பட்டுளதுதான்.
தேர்தல் நாளன்று வாக்காளர்பட்டியலை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்.வாழ்த்துகள்.
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே தனிமனித செல்வாக்கு,சாதி,மதம்,இவற்றுக்குப் பின்னர்தான் கட்சி வரும்.
ஆனால் இந்தத தேர்தல் சற்று மாறுதலாக உள்ளது.
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி பரவலாக வெளிப்பட்டுள்ளது.முடிவுகளில் இருந்து தெரிகிறது.
துணை முதல்வர்.ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊரில் அவர் சொந்தங்கள் உள்ள ஊரிலேயே அதிமுக தோற்றுள்ளது.தினகரன் கட்சி வென்றுள்ளது.
90%முஸ்லீம் வாக்காளர்கள் உள்ள அதிமுக எம்.பி.அன்வர்ராஜா ஊரில் அவரது மகளை சிறிய அளவே உள்ள இந்துவான தி.மு.க,வேட்பாளர் சுப்புலட்சுமி தோற்றடித்துள்ளார்.
மணப்பாறை தொகுதியில் சீமான் வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று சாதனைபடைத்துள்ளார்.
இத்தனைக்கும் பெரிய குடும்பம்,சொந்தபந்தங்கள் உள்ள ஊர் அது.அவர் வீட்டில் உள்ளவர்பள் கூட வாக்களிக்கவில்லை.
மேலும் திமுக ஆரம்பம் முதற் கொண்டே தேர்தல்நடத்தும்  முறை தவறு என்று சொல்லிக் கொண்டே இருந்தது .நீதிமன்றக்கதவுகளைத்தட்டிக்கொண்டே இருந்தது.
ஆனாலும் அதிமுக ஆதரவு தேர்தல் ஆணைய முறைகேடுகள் தொடர்ந்தது.
 வேண்டா வெறுப்பாகவே தேர்தல் திருவிழாவில் திமுக கலந்து கொண்டது.

ஒரு கட்டத்தில் திமுக தலைவர்  ஸ்டாலின்  நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தற்போது நடந்த தேர்தலை நீக்கி ஆணையிட்டு புதிதாக முறைப்படி நடத்துவோம் என்றார்.
அதன் படியே அவர் மட்டுமல்ல திமுக தலைவர்கள் குறிப்பிடும்படி தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் அப்போதுதான்"குடியுரிமை சட்டம் "எதிப்பு ஆர்ப்பாட்டங்கள்,பேரணி என திமுக மும்முரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு இருந்தும் ஆளுங்கடசி பண,அதிகார பலம்,தேர்தல் ஆணைய அதிமுக பக்கசார்பு அனைத்தையும் தீறி அதிமுகவுக்கு பலத்த போட்டியை தந்து விஞ்சிய அளவுக்கு இடங்களையும் கைப்பற்றியது முக்கியமான நிகழ்வுதான்.
ஆளும் அதிமுக மீது மக்கள் கொண்டுள்ள கோபம்தான் குறிப்பிடும்படி வேலை செய்யாத திமுக வுக்கு ஆதரவான வாக்குகளாக மாறியுள்ளது.சட்டமன்றத்தேர்தல் போல் திமுக இறங்கி வேலை செய்திருந்தால் அதிமுக நிலை?தான்
பேசாமல் திமுக கேட்டுக்கொண்டபடி மொத்தமாக உள்ளாட்சிகள் தேர்தல் முடிந்தபின் வாக்கு எண்ணியிருக்கலாமோ என அதிமுக தேர்தல் ஆணையம் தற்போது எண்ணலாம்.
-------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?