காட்டுத் தர்பார் அரசு..

கடந்த ஜனவரி மாதத்தில் காட்டுப்பள்ளி துறைமுகம் பற்றி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது என்ற செய்தி எனக்குக் கிடைத்திருந்தது. அந்த செய்தி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திடீரென்று கருத்துக் கேட்புக் கூட்டத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதன்பின் அதானி துறைமுகம் பற்றிய பெரிய விவரங்கள் எதுவும் வெளியாகாமலிருந்தது. தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தல் பற்றிய செய்திகளே நம்மால் பெருமளவில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், அதானி துறைமுகம் பற்றி அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்களுக்கு, ஆவணங்கள் தொடர்பாக உதவி செய்துவரும் கே. சரவணன் தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் RTI (தகவல் அறியும் உரிமை) தாக்கல் செய்துள்ளார். அதற்கான பதில், மார்ச் 9-ம் தேதி கடிதம் மூலம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “அதானி தனது காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றியுள்ள கடல்பகுதிகளை 'மீன்பிடிப்பு தடைசெய்யப்பட்ட பகுதி' என்று அறிவிக்கக் கோரி இந்திய அரசின் தேசிய நீர்ப்பரப்புகள் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்” என்ற பதில் கிடைத்துள்ளது. இந்த விவரம் குறித்து சரவணனிடம் தொடர்பு கொண்டு, கேட்டபோது, “EIA அறிவிப்பின்படி, கருத்துக் கேட்புக் கூட்டம், ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக அதானி துறைமுகத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. எனவே கொவிட்-19-யை காரணம் காட்டி கருத்துக்கேட்பை நிறுத்தி வைத்தனர். அதானி நிர்வாகத்தால் அரசுக்குக் கொடுக்கப்பட்ட கடிதம் அதானி நிர்வாகத்தால் அரசுக்குக் கொடுக்கப்பட்ட கடிதம் திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தின் போது, அதானி துறைமுக விரிவாக்கத்தைச் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சி தரப்பில் அதானி துறைமுகத்தை எதிர்த்தே சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய இந்த கடிதத்தை வைத்து எண்ணூர் முதல், பழவேற்காடு வரையிலான மீனவர்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.” என்று குறிப்பிட்டார். அதேபோல் மக்கள், எழுதிய கடிதம் எனக்குக் கிடைத்தது. அதில், “2008ல் அரசு எங்களின் நிலத்தை, கடற்கரையை எங்களிடம் இருந்து பறித்தது. இவை இரண்டும் தான் எங்களின் வாழ்வாதாரம். பிடுங்கியவற்றை L&T கம்பெனியிடம் கொடுத்து. அவர்கள் அதில் காட்டுப்பள்ளி துறைமுகத்தைக் கட்டினர். அதன்பின், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டும் என்றால் வெகுதூரம் நடக்கவேண்டும். பிடித்த மீனை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது கஷ்டமான வேலையானது. கடற்கரையோரத்தில் கிளிஞ்சல்களை பொறுக்கி சுண்ணாம்பு சூளையில் விற்றுப் பிழைத்து வந்த பெண்கள் தங்கள் வருமானத்தை இழந்தனர். இருந்தாலும் எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் சோறு போடுவதற்கு இன்னமும் கூட கடல் மிச்சம் இருந்தது. ஆனால், அதானி வெற்றிபெற்றுவிடுவார் என்றால், இந்த கடலும் எங்களை விட்டுப் போய்விடும். 'மீன் பிடிக்கத் தடை செய்யப்பட்ட பகுதி' என்று அறிவிக்க அதானி அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். L&T கட்டிய 331 ஏக்கர் துறைமுகத்தை, ஜுலை 2018ல் அதானி வாங்கிய ஒரு வருடத்தில் அந்த கடிதம் எழுதப்பட்டது. தற்போது அதானி கட்டத் திட்டமிட்டு வரும் ராட்ச துறைமுகத்தைக் கட்டப்பட்டுவிட்டால், 'மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி' என்று எத்தனை பெரிய கடல் பரப்பை அதானி கேட்பார் என்பதை யோசிக்கவே எங்களுக்குப் பயமாக இருக்கிறது. அதானியின் மனம் கோணாமல், கேட்பதையெல்லாம் அள்ளிக்கொடுக்க அரசுகள் தயாராக இருக்கின்றன. வெறும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த பகுதியில் மீன் பிடிக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். திருவெற்றியூர், எண்ணூர், பழவேற்காடு போன்ற பகுதிகளிலிருந்தும் இங்கே மீன்பிடிக்கப் படகுகளில் வருகின்றனர். ஏனென்றால் இந்த கடல் 'மீன் தங்கம்' விளையும் பூமி!
இந்த அரசு எங்களைப் பற்றி கவலைப்பட்டிருக்கும் என்றால், எங்களின் படகுகளின், வலைகளின், எங்கள் உயிர்களின் பாதுகாப்பு பற்றிக் கவலைப்பட்டிருக்கும். ஒரு சிறிய தீவில் மூன்று துறைமுகங்களை அனுமதித்திருக்காது.” என்று விரிவான திறந்த கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பியுள்ளனர். கடிதம் குறித்தும், மீனவர்களின் பிரச்சனை குறித்தும், துறைமுகத்தால் பாதிக்கப்பட்ட மீனவர் கண்ணனிடம் கேட்டபோது, “12 வருடங்களுக்கு முன், மீன்பிடிப்பதற்காகத் துறைமுகத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இடம் கொடுத்தனர். எங்களுக்குத் துறைமுகத்தில் வேலையும் கொடுத்தனர். அந்த வேலையை நிரந்தரம் செய்ய L&T ஒப்பந்தம் போட்டது. ஆனால், அதைச் செய்யாமல் எங்களை ஏமாற்றிவிட்டனர். எனவே திரும்பவும், கடல் தொழிலில் ஈடுபடத் துவங்கினோம். இரண்டு வருடங்களுக்கு முன் அதானியிடம் துறைமுகம் கைமாறப்பட்டது. அப்படி இருந்தும் எங்கள் வேலை நிரந்தம் செய்யப்படவில்லை. தற்போது அதானியின் கப்பல் வருவதற்காக மீன்பிடிப்பதைத் தடைசெய்யக் கோருகின்றனர். அந்த பகுதியில் தான் மீன், நண்டு, இறால் போன்றவை அதிகமாகக் கிடைக்கும். நாங்கள் அந்த பகுதியில் வலை வீசினால், அவர்களின் கப்பலில் சிக்கிப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று, எங்களை தடுக்க பார்க்கின்றனர். நாங்கள் அனைத்து அரசியல் கட்சிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. 2019லிருந்தே, மீனவர்களை அந்த பகுதியில் வரவேண்டாம் என்று அதானி துறைமுக நிர்வாகம் கூறி வருகிறது. எங்களுக்கு எதுவும் தரவேண்டாம். கடலில் மீன்பிடிக்க அனுமதித்தலே போதும். இந்த தேர்தல் நேரத்தில் கோரிக்கை வைத்தால் ஏதேனும் மாற்றம் கிடைக்கும் என்று நம்புகிறோம். அதானிக்கு அரசே பாதி உடந்தையாக செயல்படுகிறது. அவர்கள் ஒருபக்கம் ஆதரவளித்துக் கொண்டே இருக்கின்றனர். நாங்கள் மறுபுறம் போராடி வருகிறோம்.” என்றார். அதானி துறைமுகத்தைச் சுற்றிக் கிட்டத்தட்ட 80 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் ணமொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அனைவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில், இந்த துறைமுகம் கட்டப்படுவது, சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கை அதிகப்படுத்தும் என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 
-----------------0------------------- 
மோடி அரசின் பேருந்து ஊழல். 
 உலக அளவில் கனரக லாரிகள் மற்றும் சொகுசுப் பேருந்துகளை ஸ்கேனியா (Scania) நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்வீடன், பிரான்ஸ், நெதர்லாந்து, தாய்லாந்து, சீனா, இந்தியா, அர்ஜெண்டினா, பிரேசில், போலந்து, ரஷ்யா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் தங்களின் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஸ்வீடன் நாட்டின் செய்தி ஊடகமான எஸ்.வி.டி மற்றும் ஜெர்மனி நாட்டு ஊடகமான ஜி.டி.எப் ஆகியவை வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில், “ஸ்கேனியா நிறுவனம் இந்தியாவின் 7 மாநிலங்களில் தங்களது பேருந்துகளை விற்பனை செய்வதற்காக மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு 65 ஆயிரம் யூரோ லஞ்சம் வழங்கியுள்ளது” என தெரிவித்துள்ளது. மேலும், ஸ்வீடன் நாட்டின் எஸ்.வி.டி செய்தி நிறுவனம், இந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்காரியின் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளது. 

அதில், நிதின் கட்காரியின் மகள் திருமணத்துக்கு ‘ஸ்கேனியா நிறுவனம்’ சொகுசுப் பேருந்து ஒன்றைப் பரிசாக அளித்து உள்ளதாகவும், ஆனால், இந்த பேருந்தின் உரிமையாளர் விவரம் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து தகவல் சரிவர இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா :அரசியல் ஜனநாயகத்தை அரித்தெடுக்கும் ‘பா.ஜ.க எனும் புற்றுநோய்’ : ஆள்பிடிப்பது எப்படி?கொரோனா காலத்தில் உயிர்வாழவே போராடியபோது, அதானியின் சொத்து 50% அதிகரித்தது எப்படி? : ராகுல் காந்தி கேள்வி!”வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்வரை கிளம்ப போவதில்லை” - டெல்லி எல்லையில் வீடுகளைக் கட்டி வரும் விவசாயிகள்!"மம்தா மீது பா.ஜ.க நடத்திய தாக்குதலே என்னை திரிணாமுல் காங்கிரஸில் இணையவைத்தது" : யஷ்வந்த் சின்ஹா பேச்சு!"நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு?- அதிகாரத்திமிரில் செயல்படும் பா.ஜ.க அரசு” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!"மோடி ஆட்சியில் ஜனநாயக அந்தஸ்தை இழக்கிறது இந்தியா" : சுவீடன் நாட்டின் வி-டெம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! மோடி அரசு மீதான இந்த குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘ஸ்கேனியா’ நிறுவன அதிகாரிகள், தாங்கள் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். குறிப்பாக, ஸ்கேனியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹென்ரிச் ஹென்ரிட்சென் லஞ்ச முறைகேடுகள் அரங்கேறியது உண்மைதான் என்று தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகள் மற்றும் டிரக்குகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு லஞ்சம் கொடு்க்க வேண்டி இருந்தது. இதேபோல இந்தியாவின் 7 முக்கிய மாநிலங்களில் எங்கள் பேருந்துகளை விற்பதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது” எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், “பேருந்து ஒப்பந்த ஊழல் விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது. இதில், மத்திய அரசு மீதும், சில மாநிலஅரசுகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் தீவிர நீதி விசாரணை வேண்டும்’’ என்று காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் வலியுறுத்தியுள்ளார். தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் பரப்புரைக்குச் செல்லும் பா.ஜ.க தேசிய தலைவர்கள், நாங்கள் புனிதர்கள், கைபடியாத கரங்கள் என பேசி வருகின்றனர். ஆனால், அவர்களின் கைகள் ஊழலும், ரத்தக்கரையும் படிந்தவை என்பதை ஆங்கில செய்தி நிறுவனங்கள் இந்திய மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

காரைக்குடி தொகுதியில் பா.ஜ.க வேட்பு எச்ச.ராஜா தீவிர பரப்புரை
----------------------------0---------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?