புல்வாமாவில் பா.ஜ.க.பயங்கரவாதம்.

 பிப்ரவரி 14, 2019 அன்று நடைபெற்ற கொடூரமான புல்வாமாதாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கடந்த ஓராண்டாக பிரண்ட்லைன் பத்திரிகை மேற்கொண்ட புலன் விசாரணையில் பலதிடுக்கிடும் தகவல்கள் கண்டறியப்பட்டன. அவையெல்லாம், அந்தசம்பவம் நடைபெற்ற போது அரசியல் விமர்சகர்கள் எழுப்பிய கேள்விகள் சரியானவை என்றும், பாதுகாப்பு அமைப்பினருக்கு இந்த பயங்கரவாத தாக்குதல் நடக்க இருப்பது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதையும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வலைப்பின்னலாகவும், மிகவும் ஊடுருவியிருக்கும் கண்காணிப்பின் பல அடுக்குகளின்கண்களில் மண்ணை தூவிவிட்டு, பதுங்கியிருந்து தாக்குதலை நடத்தவும்,  இவ்வளவு அதிகமான அளவு வெடிபொருட்களை வாங்கி,சேமித்து, ஓரிடம் விட்டு ஓரிடம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதையும் ஏற்க முடியவில்லை என்பவை சரியானவையே என்று தெரிகிறது.

பிரண்ட்லைன் விசாரணைகள், வெளிப்படுத்தும் உண்மைகள்என்னவெனில், 2019ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல் பிப்ரவரி 13 வரைகொடூரமான “கியூசாஸ் மிஷன் (Qisas mission)” எனப்படும் பழிவாங்கும் நோக்கத்துடன் குழுக்கள் அமைக்கப்பட்டதை பதினோரு முறை(11) உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன, அந்த அறிக்கைகளில் குறிப்பிட்டதைப் போல இறுதியில், புல்வாமா பகுதியில் உள்ள லெத்பூரா என்னும் பகுதியில் பாதுகாப்புப் படையினர்பயணம் செய்த வாகன வரிசை மீது தாக்குதல் நடந்தது. ஆனால், அரசுஇந்த எச்சரிக்கை எல்லாவற்றிற்கும் காது கேளாதவர் போல இருந்துள்ளது.துல்லியமாகச் சொன்னால் பாதுகாப்பு அமைப்புகளும், சந்தேகமேயில்லாமல் அரசாங்கமும், பாதுகாப்புப் படைகள் செல்லும் வழியில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் என்பதை அறிந்திருந்தனர். பாதுகாப்பு அமைப்புகளுக்கு, ஜெய்ஷ் இ  முகம்மது (ஜேஇஎம்)பயங்கரவாத கமாண்டர் முதாசிர் அகமது கான், அவனே பின்னாளில்புல்வாமா தாக்குதலின் மையப்புள்ளி என கண்டுபிடிக்கப்பட்டது, நான்கு வெளிநாட்டு கூலிப்படையினருடன் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறான் என்றும், ஒரு பெரிய தற்கொலைத் தாக்குதல் சில நாட்களில் நடைபெறும் என்றும் தெரிந்திருந்தது. மேலும் அவர்களுக்கு, முதாசிர் கான், 2019  ஜனவரி  கடைசி வாரங்களில் மிதூரா, லாம் டரால்ஆகிய கிராமங்களில் சுற்றிக் கொண்டிருந்தான் என்ற தகவலும் தெரியும்.லெத்பூராவில் 2017ஆம் ஆண்டு சிஆர்பிஎப் முகாம் மீது நடத்தப்பட்டதாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்ட வழக்கில், முதாசிர் கான் ஒருதேடப்பட்ட தலைமறைவாக இருந்த குற்றவாளி. பாதுகாப்பு அமைப்புகள் விழிப்புடன் இல்லாமல் இருந்தது,  இந்த குற்றவாளி குறித்துமறுக்க முடியாத ஆதாரங்களை உளவுத் துறைகள் அளித்தும் பாதுகாப்பு அமைப்புகள் அவரை தேடி பிடிப்பது அல்லது அவரை சுட்டுக்கொல்லாமல் விட்டது மிக மிக அசாதாரணமாக வழக்கத்திற்கு மாறானது-அல்லது அவ்வாறு தோற்றமளிக்கிறது.

பயங்கரவாத தாக்குதலை  பாஜக முதலீடாக்கியது2019 பொதுத் தேர்தலுக்கு 8 வாரங்களுக்கு முன் நடந்த இந்ததாக்குதலின் பின்னணியில் அப்போது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியும்(பாஜக), அதன் தத்துவார்த்த மூத்த அமைப்பான ராஷ்ட்ரீய சுயம் சேவாக்கும் (ஆர்.எஸ்.எஸ்) இடைவிடாமல், இந்த தாக்குதலுக்கு பழிவாங்க வேண்டும் என்றும் நாட்டின் நலன்களை பாதுகாக்கும் ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும் சித்தரித்துஉணர்ச்சிகளைத் தூண்டி அதனடிப்படையில் மக்களை திரட்டியது.தொலைக்காட்சிகளின் பிரைம் டைம் நிகழ்ச்சிகள் தேசப் பாதுகாப்பு பிரச்சனைகளை அரசியலாக்கின, அது பிப்.26 இந்திய விமானப்படை விமானங்கள் பாலகோட் பகுதியில்  வான்வெளி தாக்குதலுக்குப் பின், ஒன்றன் பின் ஒன்றாக அனைத்துச் செய்திகளும்,எவ்வித ஆதாரமும் இன்றி அந்த குண்டு வீச்சில் 300 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிவித்தன. தேர்தல் முடிவுகள், நிரூபித்தது என்னவெனில், பாஜகவின் முரட்டு தேசியவாத பிரச்சாரம் மிகவும் பிரதானமாக இருந்தாலும், ஒரு வேளை அது ஒரு காரணி மட்டுமே; மோடியின் பிரம்மாண்ட வெற்றிக்கான காரணமல்ல என்றுவேண்டுமானால் சொல்லலாம்.

இந்த காலத்தில், அரசாங்கம், சமூக வலைத்தளங்களில் உள்ளஅதன் காலாட்படை வீரர்கள்  மற்றும் அரசுக்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஊடகக் குழுமங்கள் ஆகியன, இந்த தாக்குதலுக்கு முன்பு உளவுத் துறை தகவல்களை கவனிக்கத் தவறிவிட்டார்களா என கேள்விஎழுப்பியவர்களை இழிவுபடுத்தி அவர்களை மௌனமாக்கின. காங்கிரஸ் தலைவர் திக்விஜயசிங், உளவுத்துறை எச்சரிக்கைக் குறிப்பு ஒன்றுபிப்.8,2019 தேதியிட்டதை பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையுடன் செயல்படத் தவறிவிட்டன என்று பகிர்ந்த போது, அந்த டுவிட்டையாரும் மறுடுவீட் செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டது.பிப்.14 தாக்குதலுக்கு முதல் வாரத்தில் தகவமைக்கப்பட்ட வெடிபொருட்களைக் கொண்டு(ஐஇடி) பாதுகாப்புப் படைகள் மீதோ அல்லது நிர்வாகத்தின் மீதோ தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக குறைந்த பட்சம் இரண்டு எச்சரிக்கைகள்  விடப்பட்டதாக செய்திகளில் வந்ததைக் கூட, அரசாங்கம், உளவுத்துறை குறைபாடுகள் இல்லை என்று நிராகரித்துவிட்டது. ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவையில் புல்வாமா தாக்குதல் உளவுத்துறை தோல்வியால் ஏற்பட்டதாஎன்ற கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த  உள்துறை இணைஅமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, “இல்லை ஐயா” என்றார். மேலும்,“அனைத்து அமைப்புகளும் தங்களுக்குள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, மேலும் உளவுத் துறை தகவல்கள் உடனுக்குடன் பல்வேறு (பாதுகாப்பு) அமைப்புகளுக்கிடையே பகிரப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

ஒரு வருடம் கழித்து இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுமுதலாம் ஆண்டு நிறைவில் ராகுல் காந்தி: “இந்த தாக்குதலில் யார் மிகுந்த ஆதாயம் அடைந்தார்?” என்ற கேள்வியை எழுப்பினார். அதுஉடனடியாக பாஜக தலைவர்களின் கோபக் கனலை கிளறியது, அவர்கள் ராகுல் “தியாகிகளை அவமரியாதை” செய்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து அரசின் பிரதானமான எதிர்வினையாக இதுவே இருந்து வந்துள்ளது. புல்வாமா குறித்து கேள்வியெழுப்பும் எவரொருவரும், இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் பொய்களை பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டனர்.எனினும், பிரண்ட்லைன் தற்போது வெளியிட்டுள்ள இந்த தகவல்கள், மிக நீண்ட காலமாக விடாமல் ஒரு பகுதி மக்களின் கருத்தான,உளவுத் துறை தகவல்கள் அந்த தாக்குதலுக்கு முன் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்கின்றன. இது வந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில்தான் அரசு ஆதரவு செய்தித் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்சாப் உரையாடல்கள் வெளியாகியுள்ளன, அதில் கோஸ்வாமி இந்த தாக்குதல் செய்தியை கொண்டாடி,மகிழ்ச்சியில் திளைத்து, “பைத்தியம் பிடித்தும் விடும் போல அவ்வுளவு பெரிய வெற்றி பெற இருக்கிறோம்”என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பிரண்ட்லைன் புலனாய்வு, புல்வாமா தாக்குதல் ஜெஇஎம்அமைப்பின் “கியூசாஸ் (பழிவாங்கல்) இயக்கத்தின்” ஒரு பகுதிஎன்பதை கண்டறிந்துள்ளது, அதற்கான எச்சரிக்கை மணிகள் மிகவும் முன்கூட்டியே  ஜனவரி 2, 2019லேயே அடிக்கத் துவங்கிவிட்டன. இருப்பினும் இது ஏன் பாதுகாப்பு அமைப்புகளின் காதுகளில் ஒலித்துஅவர்களை நடவடிக்கை எடுக்கத் தூண்டவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை, அதனை நாங்கள் வாசகர்களின் முடிவுக்குவிட்டுவிடுகிறோம்.
(படைகள் செல்லும்) வழியில்  ‘பதுங்கியிருந்து தாக்கலாம்‘ என்ற பிப்.13 தகவல்பிரண்ட்லைன் வசமுள்ள ஆவணம் புலப்படுத்துவது, அந்த கொலைகாரத் தாக்குதல் நடத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்புஒரு உளவுத்துறை தகவல் 2019 பிப்.13, தேதியிட்ட தகவல் ஜம்மு -காஷ்மீர் டிஜிபியுடனும், காஷ்மீர் பகுதி ஐ.ஜியுடனும் பகிரப்பட்டுள்ளது;இந்தத் தகவல் ஜெஇஎம் அமைப்பு ஒரு தகவமைக்கப்பட்ட வெடிகுண்டு கொண்டு, “பாதுகாப்புப் படையினர் செல்லும் வழியில்” அவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது குறித்து எச்சரிக்கிறது.பிரண்ட்லைன் வசம் கிட்டத்தட்ட 6 உளவுத்துறை தகவல்கள் உள்ளன.இவை பிப்.13 முன்பாக பகிரப்பட்டவை. அவை புல்வாமா/அவந்திப்புராபகுதியை மிக அதிக ஆபத்து நிறைந்த பகுதியாக அடையாளம் காட்டுகின்றன. ஜெஇஎம் தனது பழிவாங்கல் தாக்குதலுக்கு இந்த பகுதியைகொலைக்களமாக பயன்படுத்தலாம் என்கிறது.

2019 பிப்.13, உளவுத்தகவல் படைகளை எச்சரிக்கையுடன் இருக்கஅறிவுறுத்துகிறது. இருப்பினும் பிப்.14ஆம் தேதி தாக்குதல் நடைபெற்ற தினத்தன்று வழக்கத்திற்கு மாறாக, மிக நீண்ட 78 வாகனங்களின்தொகுப்பு(கான்வாய்) 2547 வீரர்களை அழைத்துக் கொண்டு ஜம்முவிலிருந்து மதியம் 3.30 மணிக்கு சாலை வழியாக பயணிக்கிறது, பதுங்கித் தாக்க வாய்ப்புண்டு என்ற எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல். ஏற்கனவே பல நாட்கள் சீரற்ற வானிலை இருந்ததால் ஜம்முவின் தற்காலிக முகாமில் அதிகமான நபர்கள் இருந்தனர் என்பதும்வெளிப்படை. அந்த வாகனங்கள் ஸ்ரீநகரை வந்தடைந்தன. அங்கிருந்து மதியம் 3.30 மணிக்கு வாகனங்கள் லதூரா கிராசிங் வழியாகபுல்வாமா மாவட்டத்தின் அவந்திப்புரா பகுதிக்கு வந்தன.

ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாட்டின் உயரதிகாரிகள் இந்தச்செய்தியாளரிடம் தங்கள் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டு தெரிவித்த தகவல் என்னவென்றால், அவர்களின் கருத்துப்படி, 2019 ஜனவரி கடைசி வாரத்தில் பெறப்பட்ட/பகிரப்பட்ட இரண்டு உளவுத் தகவல்கள் நடவடிக்கைக்குஉகந்தவைகள், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், “இந்த தாக்குதல் தடுக்கப்பட்டிருக்கலாம்”  என்றனர். அவர்கள்ஜனவரி 24 மற்றும் 25 தேதிகளில் , இடைமறித்து பெறப்பட்ட தகவல்களான, ஒரு பயங்கரவாத திட்டத்தின்படி, ஜெஇஎம் செல் முதாசிர் அகமது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதையே குறிப்பிடுகின்றனர்.2019 பிப்ரவரி 14க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இந்தத் தாக்குதலின் முக்கிய சதிகாரன் முதாசிர் அகமது கான் என்பதை அடையாளம் காட்டுகின்றன. அவன் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளுக்கு எதிராக டிரால் பிங்கிலிஷ் பகுதியில் நடத்திய தாக்குதலில் மார்ச் 11 ஆம் தேதி கொல்லப்பட்டான்.

புல்வாமா சதிகாரன் அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்தான்ஜனவரி 24 தகவல் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது: அறிக்கைகள் புலப்படுத்துவது, “ஜெஇஎம் அமைப்பின் பயங்கரவாதிகள், பயங்கரவாத காமாண்டர் அவந்திப்புராவின் முதாசிர் கான் என்கிற முகம்மது பாய் தலைமையில் ஒரு சிறப்புப் பணிக்காக, அதாவது வரும் நாட்களில் ஒரு தற்கொலைப்படைத் தாக்குதலுக்காக  திரண்டுள்ளனர். இந்த குழுவானது புல்வாமாவின் ராஜ்புரா பகுதியைச் சேர்ந்த ஜெஇஎம் குழுவான  சாஹித் பாபா குழுவுடன் தொடர்பில்இருந்தன.”முக்கியமாக  ஜனவரி 25 தகவல் ஒரு ரகசியக் குறிப்பைக் கொண்டிருந்தது, அது  முதாசிர் அகமது கான் எங்கிருக்கிறான் என்ற தகவல்தான் அது. அது கொட்டை எழுத்துகளில் தெரிவித்த தகவல், முதாசிர் கான் நான்கு வெளிநாட்டுகூலிப்படையினருடன், “மிதுரா மற்றும்லாம்டிரால் கிராமங்களில் தென்பட்டான்” என்பதாகும். இந்த தகவல்கள்அடிக்கோடிடுவது, இந்தக் குழு வரும் நாட்களில் ஒரு தாக்குதலுக்கு தயாராகிறது என்றும், அந்தத் திட்டம் நிறைவேறும் இடம் அவந்திப்புராவாகவோ அல்லது பாம்பரோவாகவோ இருக்கலாம் என்றும் இடத்தையும் துல்லியமாகச் சுட்டிகாட்டியுள்ளது. இன்ஸ்டிட்யுட் ஆஃப் கான்பிளிக்ட் மேனேஜ்மெண்ட் என்ற அமைப்பின் செயல் இயக்குநர் அஜெய் சஹானியின் கருத்துப்படி, ஒரு உளவுத்துறை தகவல் பிரத்யேகமானது(ஸ்பெசிபிக்) என்றால்,அந்த தகவல் பயங்கரவாதி குறித்த தகவல்களில், அந்த பயங்கரவாதிஇருக்குமிடம், அவனது அடையாளம், அல்லது இதைப்போன்ற பிரத்யேக தகவல்கள் இருந்தால் அந்தத் தகவல்கள் “நடவடிக்கைக்குஉகந்த தகவல்” என வகைப்படுத்தப்படும் என்கிறார்.

“பழிவாங்கும்” தாக்குதல் குறித்த தகவல் உதாசீனப்படுத்தப்பட்டது?

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் ஜனவரி 24மற்றும் 25 தேதிகளில் வரப்பெற்ற தகவல்கள் மட்டுமே பழிவாங்கும் தாக்குதல் பற்றிய விவரங்களைக் கொண்ட தகவல்கள் அல்ல. அதற்குமுன்பு ஜனவரி 2, 2019லேயே ஒரு உளவுத்துறை தகவல் ஜெஇஎம்அமைப்பு புல்வாமா பகுதியின் ராஜ்போரா பகுதியில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க தெற்கு காஷ்மீரில் நடத்தஉத்தேசித்த “பழிவாங்கல் திட்டம்” பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தது,இந்தத் தகவல் ஜம்மு - காஷ்மீர் டிஜிபிக்கும் காஷ்மீர் பகுதி ஐஜிக்கும்பகிரப்பட்டு இந்த பழிவாங்கல் தாக்குதல் தகவலின் உண்மைத் தன்மை வலியுறுத்தப்பட்டது. சமீர் அகமது மீர் என்ற சிறப்பு காவல் அதிகாரி புல்வாமாவின் ஹஜின் பாயின் பகுதியில் ஜனவரி 1, 2019ல்அந்த பழிவாங்கல் தாக்குதலின் ஒரு பகுதியாக கொல்லப்பட்டார்.2019 ஜனவரி 3, ஒரு விரிவான அச்சுறுத்தல் அறிக்கை பகிரப்பட்டது.இந்த அறிக்கை வரவிருக்கும் அபாயத்தை பற்றி தூக்கிப் பிடித்துமேலும் வலுச்சேர்த்தது. அந்த அறிக்கை “பழிவாங்கல் நடவடிக்கை”குறித்த 2018ல் உளவுத் துறையின் தகவல்கள் யதார்த்தத்தில் உயிரிழப்புகளில் முடிந்ததை சுட்டிக் காட்டியது. இந்த இடத்தில் பொருத்தமாகச் சொல்ல வேண்டிய விஷயம், இதைப் போன்ற ஒத்த அறிக்கை“பழிவாங்கல் மிஷன் 2018” என்பது சிஆர்பிஎஃப் 183ஆவது பட்டாலியன்நேவா, புல்வாமா பகுதியில் முகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத்தொடர்ந்ததையும், அதே மாதத்தில் சோபூரில், இராணுவ தகவல் தருபவர் என்று கருதப்பட்ட முஷ்டாக் அகமது மிர், த/பெ ஜிஎச் ரசூல்மிர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதையும் ஜெஇஎம் அமைப்பு மேற்கொண்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் உள்ளூர்வாசிகளுக்கு  ஐஇடி தயாரிக்க பயிற்சி2019 ஜனவரி 7 ஆம் தேதி பெறப்பட்ட ஒரு தகவல், வெளிநாட்டுக்கூலிப்படையினர், தெற்கு காஷ்மீரில் உள்ளூர் இளைஞர்களுக்கு தகவமைக்கப்பட்ட வெடிகுண்டு (ஐஇடி) தயாரிக்க பயிற்சிஅளிப்பதைஅம்பலப்படுத்தியது. “அதில் 3 பேர் கொண்ட ஒரு போராளிக்குழு, அவர்களில் ஒருவர் வெளிநாட்டுக்காரர் என நம்பப்படுகிறது, இவர்கள்சோபியான் மாவட்டத்தில் செயல்படுவதாகவும், அவர்கள் உள்ளூர் இளைஞர்களுக்கு ஐஇடி குண்டுகள் தயாரிப்பில் பயிற்சி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.இளைஞர்களுக்கு குண்டு தயாரிக்கப் பயிற்சியும், பாதுகாப்புப் படைகள் மீது எரிகுண்டுகளை எறியவும் பயிற்சி அளிக்கப்பட்டது.”2019ஆம் ஆண்டு ஜனவரி 18 தேதியன்று வெளியிடப்பட்ட அறிக்கைபுல்வாமாவின் அவந்திப்புரா பகுதியில், உள்ளூர் இளைஞர்கள் (அரசுக்கு) எதிராக அணிதிரட்டப்பட்டதையும், அவ்வாறு திரட்டியவர்கள் வெளிநாட்டுக் கூலிப்படையினருடன் ஒருங்கிணைப்பில் இருந்ததையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்த அறிக்கை.“புல்வாமாவின் அவந்திப்புரா பகுதியில் கிட்டத்தட்ட 20 பயங்கரவாதிகள், அவர்களைத் தவிர சில அன்னியக் கூலிப்படையினரும் சுற்றித் திரிவதாகவும், இவர்கள் அனைவரும் பரபரப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாகவும் அறிக்கைகள் உள்ளன……” என அறிக்கை தெரிவிக்கிறது.

மசூத் அசாரின் நெருங்கிய உறவினரின் என்கவுண்ட்டருக்கு பழிவாங்க
அதே நாளின் மற்றொரு உளவுத்துறை அறிக்கை, இந்த “பழிவாங்கும் தாக்குதல்” எந்தளவிற்கு சக்தியுடன் இருக்கும் என்பதைப்பற்றி ஒரு அனுமானத்திற்கு வழி வகுக்கிறது. இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டுவது, இந்த பயங்கரவாதத் திட்டங்கள் வகுக்கப்பட காரணம்,ஜெஇஎம் தலைவர் மசூத் அசாரின் நெருங்கிய உறவினர், தல்கா ரஷீது கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவே என்று தெரிவிக்கிறது. தல்காரஷீது, மற்றொரு பாகிஸ்தான் பயங்கரவாதி மெஹ்மூத் மற்றும் வாசிம்அகமத் (இவர் புல்வாமாவின் டிரப்காம் பகுதியைச் சேர்ந்தவர்) ஆகியமூவரும் பாதுகாப்புப் படையினரால் ஒரு என்கவுண்ட்டரில் புல்வாமாவின் ராஜ்புராவில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கொல்லப்பட்டனர்.

இந்த நிருபரிடம், ஜம்மு - காஷ்மீரின் பாதுகாப்பு அமைப்பின் விஷயமறிந்த சிலர் தெரிவித்தது, 2018ஆம் ஆண்டு கோடையில் நடந்த சிலபோக்குகளும், ஜனவரி 2019ல், ஜெஇஎம் அமைப்பின் “பழிவாங்கும் நடவடிக்கை”குறித்த தகவல்களை உயர்த்திப் பிடித்தன என்பதாகும். பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு உயரதிகாரி இவ்வாறு விளக்கமளித்தார்: மசூத் அசாரின் நெருங்கிய உறவினர் தல்கா ரஷீது 2017நவம்பரில் கொல்லப்பட்டதற்கும், மற்றொரு உறவினர் ஜனவரி 2018ல்கொல்லப்பட்டதற்கும், பழிதீர்க்கப்படும் என்ற சுவரொட்டிகள் புல்வாமா மற்றும் சோபியான் பகுதிகளில் 2018 கோடையில் ஒட்டப் பட்டன. இந்தச் சுவரொட்டிகள், பயங்கரவாத கமாண்டர்களான காசிஅப்துல் ரஷீது பற்றியும், “பழிவாங்கல்” நடவடிக்கைக்கான உறுதிப்பாட்டையும் பிரகடனப்படுத்தின. காசி அப்துல் ரஷீது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன்,

பிப்ரவரி 14தாக்குதலுக்கு (முதாசிருடன்) இணை-தலைமையாக இருந்து செயல்பட்டவன். அவன் புல்வாமாவில் பாதுகாப்புப் படைகளுடன் 2019 பிப் 18ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்டான்.
மிகவும் உயர்மட்டத்தில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது கிடைத்த தகவல், “கியூசாஸ் மிஷன் (பழிவாங்கும் நடவடிக்கை)” என்ற பதமே, முதன் முதலில், அப்சல் குரு அணியால் பிரயோகிக்கப்பட்டது, இவை நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு பிப்ரவரி 2013ல் தூக்கில் போடப்பட்டவுடன் ஜெஇஎம் ஆதரவுடன் கிளம்பிய அணிகள். 2018ன் மத்தியில்காஷ்மீர் முழுவதும்,“ ஆபரேஷன் ஆல் அவுட்” என்ற பெயரில் பயங்கரவாத வலைப் பின்னல்களுக்கு மோசமான அடி கொடுக்கப்பட்ட போது,ஜெஇஎம், அதிக சக்தி வாய்ந்த “கியூசாஸ்”தாக்குதல்களை தொடுப்பதுஎன முடிவு செய்தது.21ஜனவரி 2019ல் பெறப்பட்ட ஒரு தகவல், பயங்கரவாதிகள் நீடித்த மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதாகும். இது நிகழவிருக்கும் ஒரு “கியூசாஸ்” தாக்குதலுக்கு மேலும் வலுவூட்டுவதாக உள்ளது. 2019 ஜனவரி 21 ஆம் தேதி பெறப்பட்ட தகவல் கொட்டை எழுத்துகளில் ஜெஇஎம், மசூத் அசாரின் நெருங்கிய உறவினர் தல்கா ரஷீது கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது என்றது.

முதாசிர் கான் “அதில்”லை வழி நடத்தியவன்எது குழப்பமாக உள்ளது என்றால், தொடர்ந்து நீடிக்கும் ஆபத்துபற்றி ஜனவரி 24, 25 தேதி தகவல்களில் முதாசிர் பற்றி  இருந்த போதிலும், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது குறைந்தபட்சம் ஏன்வெற்றிகரமாக அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே.அனுராதா பாஷின் காஷ்மீரின் மிகவும் பழைமை வாய்ந்த ஆங்கில நாளிதழ் காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின்   செயல் ஆசிரியர், “வேண்டுமென்றே கண்டும் காணாமல் விடுவது நம்பத்தகுந்தது” என்கிறார். அந்த பெண்மணி மேலும், “(உங்களின் கண்டுபிடிப்புகள்) கடந்த 30 வருடங்களாக காஷ்மீரில் நடக்கும் பல சம்பவங்களோடு ஒத்துப் போவதுபோல் உள்ளது. பல தாக்குதல்கள் குறித்து கேள்விகள் உண்டு.காவல்துறையின் பதில்கள் மழுப்பலாக இருக்கும்” என்றார். அரசு, (அது) தவற விட்டது பற்றிய கேள்விகளை உதாசீனப்படுத்திவிட்டு, தேசிய அளவில்  பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பற்றியுள்ள மோசமானஉருவகத்தின் வாயிலாக அது ஒரு கதையாடலையும், வெறிக்கூச்சலையும்  கட்டியமைப்பதால்,  தாக்குதல் குறித்த கேள்விகளை பலப்படுத்தவேண்டியுள்ளது.

இந்த இடத்தில் பொருத்தமாகச் சொல்ல வேண்டிய விஷயம், இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்ற காலத்தில் முதாசிர் கான் தெற்குகாஷ்மீரில் நன்கு அறியப்பட்ட பயங்கரவாதி. அவன் 2017ல் லெத்பூராவில் இருந்த சிஆர்பிஎஃப் முகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்தேடப்பட்ட குற்றவாளி. அவன் அந்தப் பகுதியில் முக்கிய ஜெஇஎம்குழுவை மட்டும் தலைமை தாங்கி நடத்தவில்லை, மாறாக, ஜெய்சியின்ஒரு துணைக் குழுவையும், அந்த குழுவிற்கு அதற்கு முன்வரை தலைமை தாங்கியது பயங்கரவாதி சாஹி பாபா. பிப் 1 ஆம் தேதிசாஹித் பாபா கொல்லப்பட்டபின் முதாசிர் கான் இந்த துணைக்குழுவிற்கும் தலைமை ஏற்றார். அதில் அகமது தர் என்ற 19 வயது உள்ளூர் தற்கொலை படையைச் சேர்ந்தவன் பிப்.14 தாக்குதலை நடத்தியவன், சாஹி பாபா குழுவை சேர்ந்தவன், சாஹி பாபா கொல்லப்பட்டபின் அவன் முதாசிர் கான் உத்தரவுகளை மேற்கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புக் கட்டமைப்பில் நன்கு விஷயமறிந்தவட்டாரங்கள் பிரண்ட்லைன் பத்திரிகைக்கு விளக்கியது. ஜனவரி 24, 25தேதி உளவு அறிக்கை தயாரிப்பில் உள்ள முயற்சிகளை விளக்கி; “முதாசிர் கானும், சாஹி பாபாவும் உள்ளூர்வாசிகள், அவர்களுக்கு வெளிப்படையாக வேலை செய்யும் ஒரு வலைப்பின்னல் உண்டு. அந்தவெளிப்படையாக வேலை செய்பவர்களுக்கு ஆண் மற்றும் பெண்நண்பர்கள் உண்டு, அவர்களில் சிலரை நாங்கள் கண்டுபிடித்து அவர்களை  உளவுக்குப் பயன்படுத்துவோம்”.

“புல்வாமாவில் இருந்த எங்களின் உள்ளூர்த் தகவல் கொடுப்பவர்கள், அவர்கள் முதாசிர் கானுக்கும், சாஹி பாபாவுக்கும் நெருக்கமானவர்கள், ஜனவரி 22 ஆம் தேதி எங்களிடம் தெரிவித்தது, இந்த இரண்டு பேரும் ஒரு பெரிய விஷயத்திற்கு திட்டமிடுகின்றனர் என்றும்,அதே சமயம் அவர்கள் இரண்டு பேரும் கடைசியாக எந்த இடத்தில் பார்க்கப்பட்டனர் என்பது குறித்த தகவல்களையும் அளித்தனர்.”

புல்வாமா தாக்குதலின் மூளையாக இருந்து செயல்பட்டவரை பிடித்திருக்கலாம்
தகவல்கள் தெரிவிப்பது என்னவெனில், ஜன 24, ஜன 25 தேதிகளில் கிடைத்த தகவல்கள் “நடவடிக்கைக்கு உகந்த தகவல்கள்”. ஏனெனில் முதாசிர் கான் உள்ளூர்க்காரர், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதோ அவர்கள் இடங்களை ரெய்டு செய்வதோ, அவர்கள் மூலம்அவன் ஒளிந்திருக்கும் இடத்தைகண்டுபிடிப்பதோ மிகவும் சவாலான ஒன்றாக இருந்திருக்காது. “முதாசிர் கான் உள்ளூர்க்காரன். அவனது தொடர்புகளை கண்டறிந்து அவற்றை ரெய்டு செய்வது சாத்தியமே. வழக்கமானகாவல்துறை நடைமுறைகளுக்கு மேலே போய், அவனின் குடும்ப உறுப்பினர்களை நெருக்கடி கொடுத்து அந்த நெருக்கடியின் மூலம் அவனி ருக்கும் இடத்தை அறிந்திருக்கலாம்”.திரு.எஸ்.பி. பானி, அன்றைய தினம் காஷ்மீரின் காவல்துறை ஐ.ஜியாக இருந்தவருக்கு இந்த நிருபர்  தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர் கருத்தை அறிய முயன்றார், அந்த போன்கால்களுக்குபதிலளிக்கவில்லை, பிறகு அவராகவும் அழைக்கவில்லை.பிப்ரவரி 2019ல் மேலும் அதிகமான உளவுத் தகவல்கள் வரவிருக்கும் “கியூசாஸ்” தாக்குதல் குறித்து தகவல்களை கொட்டத்துவங்கின. ஊடகங்களில் உடனே பகிர்ந்ததைப் போல், 2019 பிப். 9 தேதிஒரு முக்கிய உளவுத் தகவல் ஜெஇஎம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்க ஒரு தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. இந்த தகவல் இதர முக்கிய அதிகாரிகளோடு ஜம்மு - காஷ்மீர்ஜோன் சிஆர்.பி.எஃப் கூடுதல் டைரக்டர் ஜெனரலுக்கு பகிரப்பட்டுள்ளது.

ஒர டுவிட்டர் ஹாண்டிலில் ஐஇடி பற்றி சூசகம்பப்.12 ஆம் தேதி, “டாப் சீக்ரட், மேட்டர் மோஸ்ட் அர்ஜெண்ட் (மிகுந்தஇரகசியமானது, விஷயம் மிகுந்த அவசரமானது)  என்ற  உளவுத்தகவல் ஒரு டுவிட்டர் ஹாண்டில்(@ என்ற சிம்பலுக்குப் பின் இருக்கும்பெயர்-மொர்) பற்றியது, Shah GET 313 @ 313_get, இந்த ஹாண்டில்ஜனவரி 2019 முதல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த டுவிட்டர் ஹாண்டில் ஜெஇம் கையாள்பவர்களால் பாகிஸ்தானிலிருந்து கையாளப்படுவதாகவும், அது ஒரு கியூசாஸ் தாக்குதல் குறித்து எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்தது.அந்த உளவுத் தகவல் மேலும் தெரிவிக்கையில்,  அந்த ஹாண்டில்தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது, 12.02.2019 அன்றுஅந்த ஹாண்டில் ஐஇடி மூலம், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தும் பாதையில் வெடிப்புகள் ஏற்படுத்துவதைப் பற்றிய குறிப்புகளையும், அவர்கள் ஐஇடி வெடிப்பது குறித்து ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தனர். இது குறித்த தகவல்களை MAC/SMAC பிளாட்பார்ம்களில் இன்புட் ஐடி எண் 334808 தேதி 12.02.2019 நேரம் 19:27:41க்கு பகிரப்பட்டது. MAC என்றால், மல்டிஏஜென்சி சென்டர்( பல அமைப்பு மையம்) இது ஐ.பி. எனப்படும்இன்டலிஜென்ஸ் பிரோவின் தகவல் மேடை. இதுவே உளவுத்துறை

யின் உச்சகட்ட அமைப்பு, 24 மணிநேரமும், 7 நாட்களும் செயல்படும்அமைப்பு. அதன் பணி கிடைக்கும் உளவுத் தகவல்களை பகிர்வதும்,பல்வேறு பட்ட பாதுகாப்பு அமைப்புகளுக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தவும் உள்ள வசதி.2019 பிப்ரவரி 13 ஆம் தேதி கடைசி எச்சரிக்கை வெளியிடப்பட்டது,“தகவமைக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் செல்லும் வழியில் நடக்க இருக்கிறது” என்கிறது.

பதிலில்லாத கேள்விகள்
2019ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல், பிப்.13 வரை அளிக்கப் பட்டுள்ள உளவுத் தகவல்களை ஆழமாகப் பரிசீலித்தால் அது பல கேள்விகளை தட்டி எழுப்புகிறது.பிப். 14 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட முதாசிர் கான் ஏன் முதலிலேயே அகற்றப்படவில்லை. ஆனால் அந்த தாக்குதல் நடந்த பின்பு, அவன் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவன் 3 வாரங்களுக்குள் சுட்டு வீழ்த்தப்படுகிறான். அவனுடைய கூட்டாளியாக இருந்த அப்துல் ரஷீது காசி அந்த தாக்குதல் நடந்த 100 மணி நேரத்திற்குள் சுட்டுக் கொல்லப்படுகிறான்? ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்புக் கட்டமைப்பு நடக்கவிருந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி மெத்தனமாக இருந்ததா?அதன் விளைவாக இரண்டு அணு ஆயுத நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் கிட்டத்தட்ட ஒரு யுத்தம் நடத்தும் அளவிற்கு சென்றதா?அதற்கு அப்பால் அன்றைய தினம் ஆட்சியில்இருந்த கட்சிக்கு தேர்தலில் சாதகமான சூழலை ஏற்படுத்த உதவியதா? அந்த “கியூசாஸ்” தாக்குதல் குறித்து இன்டலிஜென்ஸ் பீரோ தலைமை தாங்கும் எம்ஏசி மேடையில்பகிரப்பட்டுள்ளதால், ஜெஇஎம் சதியை முறியடிக்க  ஐ.பி. எடுத்த எதிர் நடவடிக்கை திட்டம்என்ன?

இவ்வுளவு உளவுத் தகவல்கள் பற்றிஅரசு அறியாமல் இருந்ததா? புல்வாமாதாக்குதலுக்கு முதல்நாள் அதாவது 2019 பிப்.13 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர்காவல்துறையில் மாறுதல்கள் செய்யப்பட்டன. அதில் அவந்திப்புரா காவல் கண்காணிப்பாளர் முகம்மதுசையத் மாற்றப்பட்டார். ஒரு பயங்கரவாததாக்குதல் நடத்தப்படலாம் என்ற நிலையில்இத்தகைய மாற்றங்கள் விவேகமான செயல்தானா? மிகவும் ரகசியமான மற்றும் திட்டவட்டமான பல்வேறு வகையான உளவுத்துறை தகவல்கள் இருந்தும் இவையனைத்தையும் கண்டும் காணாமல் விட்டது யார் பொறுப்பு?

சமீபத்தில் ஸ்ரீநகரிலிருந்து ஆனந்த் பக்தோ 

தமிழாக்கம் : தூத்துக்குடி க. ஆனந்தன்

பிரண்ட்லைன், மார்ச் 12, 2021
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?