தீக்குளித்து விடுங்கள்
சோம்நாத் பார்தி |
சோம்நாத் மற்றும் அவரது கட்சியினர் மீதான ஊழல் வழக்கு ஒன்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்தது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் ஆதாரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, அவதூறானதும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை சோம்நாத் மறுத்துள்ளார். சோம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானது என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, ''வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை, ஆதாரங்களை திருத்தியதாக கூறுகின்றனர். சோம்நாத் எந்த ஆதாரங்களையும் திருத்தவில்லை'' என்றார்.
பக்கா அரசியல் வாதியாகி விட்டார் ரிவால்.இப்படித்தானே 2ஜி ,நிலக்கரி சுரங்கம்,கேஜி ஊழல்களில் காங்கிரசு சொல்லி வருகிறது.
அதையே நீங்களும் சொன்னால் எப்படி ஏற்றுக்கொண்டு விசாரணையை எதிர் கொண்டு குற்றம் செய்யாதவர் என்பதை நிருபியுங்கள்.
அதைத்தானே நீங்கள் கொண்டுவர போராடிய லோக்பால் சொல்லுகிறது.முதல்நாள் மெட்ரோ ரெயிலில் வந்தால் மட்டும் வித்தியாசமானவர் ,புரட்சி செய்யப்போகிறவர் என்றாகி விடுமா என்ன?
சீதையையே ராமன் தீக்குளிக்க சொன்னதான கதைகள் இந்தியாவில் அதுவும் வட இந்தியாவில் அதிகம் என்பதை தெரியாதவரா நீங்கள்.
.
உங்கள் மீது ஏற்பட்டுள்ள கரையை போக்குங்கள்.கரை நல்லது என்று காங்கிரசு மாதிரி பேசாதீர்கள்.நீங்கள் போராடி பெற்ற லோக்பால் விசாரணைக்கு உங்கள் கட்சிக்காரரே முதல் களப்பலியாக இருப்பது உங்களுக்கு பெருமைதானே.?
----------------------------------------------------------------------------------------------------------------------------
'ஜெயலலிதா பல மொழிகள் தெரிந்தவர்.அத்துடன் அறிவாளியும் கூட அவர் பிரதமராக வேண்டும் ."
இது ஜெயலலிதாவின் அமைச்சர் கள் முழக்கமல்ல.
மத்தியில் மூன்றாவது அணியை அமைத்து ஆட்சியை பிடிக்க முயலும் இந்திய கம்யூனிஸ் ட் கட்சியின் தமிழகத் தல தா.பாண்டியன் அருள்வாக்கு.
இதன் மூலம் நாம் காணும் பொருள் .
தா.பாண்டியன் கட்சியின் தலைவர்கள் பரதன்,தி.ராஜா,மற்றும் தோழர்கள் பிரகாஷ் காரத்,சீதாராம் எச்சூரி இவர்களுக்கு எல்லாம் கொஞ்சம் அறிவு பத்தாது என்பதுதான்.
தமிழகத்தில் ஓட ,ஓட விரட்டினாலும் போயஸ் தோட்டத்தை சுற்றிவரும் கம்யுனிஸ்ட் கட்சிகளையே அதிமுக வின் கிளை அமைப்புகள் போல் நடத்தும் தா.பா.பேச்சை கேட்டு இன்னமும் இங்கு கட்சித் தலைமைப்பொருப்பில் அவரை விட்டு வைத்திருப்பதில் இருந்து அது உண்மைதானோ என்று தோன்றுகிறது .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
மார்டின் லூதர் கிங்
மார்டின் லூதர் கிங் என்கிற இணையற்ற போராளி பிறந்த தினம் ஜனவரி பதினைந்து. . வெள்ளையர்கள் அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க மக்களை கொண்டுவந்தனர் ,அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர் . ஆடு மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில் இருந்தது ;கொல்லப்பட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த அவர்களுக்கு அடிமை முறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன் கொடுத்த அறிவிப்பில் நாடேஇரண்டுபட்டது .
பின் உள்நாட்டுப்போருக்கு பின் ஒன்று சேர்ந்தது . சட்டரீதியாக அவ்வாறு சொல்லப்பட்டாலும் கொடுமைகள் தொடர்ந்தன . இளம் வயதில் கருப்பு கேவலம் என்கிற எண்ணம் பலூன் கடைக்காரர் ,"நிறத்தில் எதுவுமில்லை ! உள்ளே இருக்கும் சரக்கில் இருக்கிறது சங்கதி !" என்கிற வரியில் மறைந்தது.
நம்பிக்கையோடு மார்டின் லூதர் கிங் எழுந்தார் ; ஆயுதம் ஏந்தி போராடிய தன்னின மக்களை அன்பாயுதம் ஏந்த சொன்னார் ; நன்னெறியை கேடயமாக கொள்ள சொன்னார் பாதிரியாராக மாறிய இவர் இயேசுவின் போதனைகளை அமெரிக்காவின் மனசாட்சியை எழுப்ப பயன்படுத்திக்கொண்டார். அன்பால் யாவும் சாத்தியம் என முழங்கினார்.அவரின் "எனக்கொரு கனவிருக்கிறது"என்ற பேச்சு இன்றளவும் மக்களை மனதில் எழுச்சியை ஊட்டும் உயிரோட்டமானது. .
தன் வீட்டில் குண்டுவீசப்பட்ட பொழுது கூட அன்பையே போதித்தவர்.ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில் போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை மீட்டெடுத்தவர் .
எங்கேயும் எப்பொழுதும் கொல்லபடலாம் என தெரிந்தும் தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்றவர் .
குண்டுகள் ,தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய பொழுதும் "என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன -ஒன்று அன்பு ;இன்னொன்று அராஜகம் -இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா ?எதற்கு நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது!அன்பே போதும் எனக்கு !"என்றார் முப்பத்தைந்து வயதில் நோபல் பரிசை பெற்றவர் அவர்.
அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு செலவு செய்தார்.இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார் ;அவரின் கனவை அத்தேசம் நிறைவேற்றியது .
இ தைவிட அவருக்கு மக்கள் செலு த்திட பெரிய மரியாதை வேறென்ன இருக்க முடியும் ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------