இனி இலவச மின் விசிறி ஓடுமா?

தமிழகத்தில், அ.தி.மு.க., இலவசமாக மின் விசிறி,மிக்சி,கிரைண்டர் ,வழங்குவதாக வாக்குகள் கொடுத்து வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.
அரசு பொறுப்பேற்றது முதல், பொதுமக்களுக்கு இலவசமாக, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி,வழங்கி வருகிறது.
suran
இவற்றை கொள்முதல் செய்யும் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொண்டு வருகிறது.நடப்பாண்டில், 1,500 கோடி ரூபாய் செலவில், 35 லட்சம் மிக்சி, கிரைண்டர்; 34 லட்சம் மின் விசிறி; 56 ஆயிரம் மின் அடுப்பு கொள்முதல் செய்ய திட்டமிட்டுஉள்ளது.
இலவச பொருட்கள் கொள்முதலுக்கான அரசாணை வெளியீடு தாமதம், 'டெண்டர்' ரத்து செய்யப்பட்டு, மறு, 'டெண்டர்' நடத்தியது போன்ற காரணங்களால், குறித்த காலத்திற்குள் பொருட்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை.
இதையடுத்து, கொள்முதல் காலம், 210 நாட்களில் இருந்து, 150 நாட்களாக குறைக்கப்பட்டது. 'டெண்டர்' மூலம் தேர்வுசெய்யப்பட்ட நிறுவனங்கள், அக்., 15 முதல், பிப்., 13ம் தேதிக்குள், 100 சதவீத பொருட்களையும், படிப்படியாக சப்ளை செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

தற்போதையநிலவரப்படி, 12 நிறுவனங்கள், 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 ல ட்சம் கிரைண்டர்களை  வழங்கி உள்ளன.
இதற்கு, அரசு , 100 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியு ள்ளது;
நிலுவை இன்னும், 300 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதேபோல், 175 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 லட்சம் மிக்சிகளை சப்ளை செய்த, ஆறு நிறுவனங்களுக்கு, 120 கோடி ரூபாய்; 10 லட்சம் மின் விசிறிகளை சப்ளை செய்த, 8 நிறுவனங்களுக்கு, 30 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இதன்படி, 675 கோடி ரூபாய் மதிப்பிற்கு, இலவச பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, பாக்கி தொகையான, 450 கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளதால், பல தயாரிப்புநிறுவனங்கள்,  அரசு மீது, கடும் அதிருப்தியில் உள்ளன.
suran
மின்சாரக் கட்டணம் செலுத்தியதற்கு கூட அரசு தந்த பணம் பத்தாது.இன்னமும் தொழிற்சாலை நடத்த ,தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்பதால்  மேற்கொண்டு பொருட்களை ஒப்பந்தப்படி வழங்க முடியாமல்  திணறுகின்றன,
மூலப் பொருட்கள் வாங்க வங்கிகளில் கடனை வாங்கி விட்டு திரும்ப செலுத்த இயலாமல் முழிக்கின்றன்வாம்.
இதனால், இலவச பொருட்கள்  செய்யும் பணிபாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த ஆண்டு இலவசங்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மக்களவை  தேர்தலுக்கு முன், பொதுமக்களுக்கு, இலவச பொருட்கள் வினியோகம்செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால் ஜெயலலிதாவும்,அதிமுகவினரும் தேர்தல் வரை வழங்கினால்தான் வாக்குகளை அள்ள முடியும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.
 
நுகர் பொருள் வாணிபக் கழகமோ நிதித்துறை மூலம் பணம் ஒதுக்காமல் -வழங்கப்படாமல் எப்படி பொருட்கள தயாரிப்பவர்களுக்கு பணம் கொடுத்து பொருட்களை வாங்குவது என்று திணறுகிறது.முதல்வர் கோப்பில் கையெழுத்திட்டால் மட்டுமே பணம் என்று நிதித் துறை கூறிவிட்டது.
சென்ற ஆட்சி காலத்தில் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க தேவையான நிதியாதாரம் கண்டு அதை ஒதுக்கி பின்னரே ஏலம் விடப்பட்டு இலவச தொலைக் காட்சிகள் வழங்கப்பட்டன.

ஆனால் இப்போது இலவச பொருட்கள் வழங்க நிதி ஒதுக்குவதில் தான் சிக்கலே.
இலவச மிக்சி, கிரைண்டர்,மின் விசிறி சப்ளை செய்தநிறுவனங்களுக்கு, தமிழக அரசு , பாக்கி தொகையான, 470 கோடி ரூபாயை வழங்காமல்,இழுத்தடித்து வருவதால்  பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் உள்ளது. 
அதனால் இந்த ஆண்டு இலவச பொருட்கள் பொருட்கள் மக்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஆனால் மக்களவை தேர்தல் நெருங்குவதால் ஜெயலலிதா ஏதாவது செய்வார் என்று அரசு அலுவலர்கள் காத்திருக்கின்றனர்.இலவசங்களைப் பெறும் பயனாளிகளும்தான்.

வீடுகளுக்கு பயன்படுத் தப்படும் மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.220 உயர்த்தியதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வடசென்னை, தென்சென்னை மாவட்டக் குழுகள் சார்பில் வெள்ளியன்று (ஜன3) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ரத்த அழுத்தத்தைக் குறைக்க

ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்பதினையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்புகளுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.

இந்த அளவானது ஒருவருக்கு 140/90 என்ற அளவு வரை இருக்கலாம். அதனைவிட அதிகரிக்கும்போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்றவை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் இத்தகைய நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் அற்புத வழிகள்ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. எனவே, குடிப்பழக்கம் உள்ளவர்கள் மதுவைத் தவிர்ப்பதே சிறந்ததாகும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் புகை பிடிக்கும் பழக்கமும் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் குறிப்பிடும் மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தை விரைவில் கைவிடுவதே நல்லது என்றும் கருதுகின்றனர்.

ஒருவர் சாப்பிடும் உணவில் உப்பின் உபயோகமும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவின் சுவையை அதிகரிக்க உப்பு உதவக்கூடும். ஆனால் இதன் அளவு அதிகரிக்கும்போது கொழுப்புப் படிவங்களை தமனிகளில் ஏற்படுத்தி ரத்த அழுத்த அளவை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், உடலில் உள்ள நீர் இருப்பை சமன்படுத்தவும், அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தவும் உதவும் பொட்டாசியம் சத்து தமனிகளில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவுகின்றது. வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெள்ளரி, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், தக்காளி, காலிபிளவர், கீரை மற்றும் பிரக்கோலி போன்ற உணவுகள் உடலில் பொட்டாசியம் சத்தை அதிகரிக்கக் உதவும்.

இதுதவிர ஊட்டச்சத்துகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களும், காய்கறிகளும் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Photo: Petra in Jordan is one of the Official New7Wonders of the World. This ancient city of the Nabataeans is famous for its rock-cut structures. Learn more about the world of New7Wonders: http://www.n7w.com/

-----------------------------------------------------------------------------------------------------------------------------------


பிரபஞ்சம் அழிவு ஆரம்பம்?


suranஇந்த பூமி உட்பட சூரியன், சந்திரன் என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும் என தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர்.

இப்படி உருமாறுவதால் அதன் வெப்பசக்தி பல கோடி மடங்கு அதிகரிக்கும். அப்படி ஆகும் போது, இந்த பிரபஞ்சமே ஒரு ராட்சத தீப்பந்து போலாகி விடும். மிகவும் கோரமான இந்த உருமாற்றங்கள் தான் பிரபஞ்சத்தின் அடுத்த கட்டம் என்று மதிப்பிடப்படுகிறது.
 
அச்சப்படுத்தும் அந்த ஆய்வு பல முடிவுகளை தந்துள்ளது. 
 
உலகம் உட்பட இந்த பிரபஞ்சம் அழியப்போகிறது என்று முன்னதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், நாங்கள் கண்டுபிடித்த ஆய்வு முடிவுகளின் படி, பிரபஞ்சம் எப்படி அழியப்போகிறது, அதன் பின் அதன் நிலை என்ன என்று தெரியவந்துள்ளது. 
 
பல கிரகங்களும் ஒன்றோடு ஒன்று மோதி நொருங்கி, உருத்தெரியாமல் ஆகி விடும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்று கிரகங்களும், நட்சத்திர கூட்டங்களும் கூட  எல்லாம் ஒன்று சேர்ந்து விடும்.
அதுபோல், இந்த பூமியில் மண், கற்கள் என்று கனிமங்கள் முதல் எல்லாம் உருத்தெரியாமல் ஆகிவிடும். பூமியே வேறு உருவத்துக்கு போய்விடும். மொத்தத்தில் எல்லா சக்திகளும், தன்மைகளும் மாறி ஒரு முழு தீப்பந்து போல ஒரே கிரகமாக மாறி விடும் இந்த பிரபஞ்சம்.
 
அது எப்படியிருக்கும். பூமி போலவே வேறு கிரகம் இயங்கும். அங்கு மனிதர்கள் போல உயிரினங்கள் உருவாகும். இந்த பிரபஞ்சம் சிறு துகள் பல கோடி அணுத்துகளாக வெடித்து சிதறி அணுவை பிளந்து அணு உருவானது போல உருவானது தான். இப்படி சொன்ன  ஹிக்ஸ் ஆய்வு போல, துகள்கள் எல்லாம் வெளிப்பட ஆரம்பிக்கும். 
 
பிரபஞ்சம் அழிவது எங்கே? அது பூமியாகவும் இருக்கலாம், வேறு கிரகமாகவும் இருக்கலாம், அங்கு அழிவு ஆரம்பமாகி விட்டது. ஒரு நீர்க்குமிழி போல ஆரம்பமாகி விட்டது என்பதே உண்மை என ஆய்வில் தெரியவந்துள்ளது.  
 
எப்போது பிரபஞ்சம் முழுமையாக அழிந்து தீப்பந்தாகும் என்று தெரியுமா? 100 கோடி ஆண்டுகளுக்கு பின்னர்தான் அப்படி இடம்பெறும் சாத்தியமிருக்கிறதாம்.
                                                                                                                                          -தினகரன்
Photo: Photo: After an airstrike Tuesday on the Maadi neighborhood in Aleppo, Syria, a man helped one of the injured. Two children were among at least 13 people killed in airstrikes on a rebel-held district of Aleppo, the Syrian Observatory for Human Rights said.

More Pictures of the Day on Lens: http://nyti.ms/1hihwXU

Photo by Mohammed Al-Khatieb/Agence France-Presse — Getty Images

Photo: Photo: A Christian man chased a suspected officer in a Muslim militia, Seleka, with a knife near the airport in Bangui, the capital of the Central African Republic. Christian and Muslim mobs clashed as French forces deployed there on Dec. 9.

While the world was watching the funeral of Nelson Mandela, Jerome Delay made it his mission to remain in the violence-wracked Central African Republic, hoping to shed light on the crisis there.

More on Lens: http://nyti.ms/1fjcvNA

Photo by Jerome Delay/Associated Press

Photo: Photo: Maori with moko tattoo. Milford Sound, New Zealand.

Chris Rainier, who has photographed far-flung indigenous communities for years, wants to empower and encouarge them to tell their own stories: “What would happen if you gave a camera to the Afghan girl in Steve McCurry’s iconic photo?” he asked. “How different would those photographs be? Not to replace the Steve McCurrys, but rather to create another chair at the table of the dialogue of what it means to be human. It’s not an either/or. It’s not a good or a bad. It just simply is. There are voices out there that have incredible vision, and we aren’t accessing them enough.”

More on Lens: http://nyti.ms/16J7XvI

Photo by Chris Rainier/National Geographic

 
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?