கொள்ளும்,பப்பாளியும்
கொழுத்தவனுக்கு
கொள்ளு....................!
கொள்ளு என்றும், காணம் என்றும் அழைக்கப்படும் பயறு .
ஒரு காலத்தில் நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமங்களில் கூட ஒதுக்கப்பட்ட பயறாகும்.
குதிரை தின்பதை மனிதன் தின்பதா என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் ஏராளம். ஆனால் இன்று ஊட்டச்சத்து நுண்ணுயிர்ச்சத்து ஆகியவை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், நகர்களில் உள்ள பெரும் அங்காடிகளில் (மால்கள்) கூட இவை கட்டம் கட்டி விற்கப்படுகின்றன.
சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கொழுப்பைக் கரைப்பதில் இதற்கு ஈடிணையான பயிறு எதுவும் இல்லை. இளைத்தவன் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் அவன் உடல் பெருக்கும் என்றும், ஊளைச்சத்து உடையவர்கள் கொள்ளைச் சேர்த்துக் கொண்டால் ஊளைச் சத்துக்கு காரணமான கொழுப்பு கரைந்து விடும் என்பது அன்றைய நம்பிக்கையாகும்.
அந்த அடிப்படையில் உருவான சொலவடைதான் இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு . புரதம் நிறைந்த தானியம் கொள்ளு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரிபார்க்கவும் புரதம் மிகவும் அவசியமாகும்.
புரதத்தில் மேம்பாடான புரதம், தாழ்வான புரதம் என்று இரண்டு வகை உண்டு மேம்பாடான புரதம் இறைச்சி உணவுகளில் இருந்து கிடைப்பது. இந்த நன்மையை அவற்றில் கிடைக்கும் கொலஸ்ட்ரால் பாதித்து விடுகிறது. காய்கறிகளில் இருந்து கிடைக்கும் புரதம் தாழ்வான புரதமாகும்..
ஆனால் கொள்ளு, சோயா ஆகியவற்றில் கிடைக்கும் புரதம் மேம்பாடான புரதமாகும். சைவ உணவுக்காரர்களுக்கு தேவையான மேம்பாடான புரதத்தை கொள்ளு அள்ளித்தருகிறது.
கொள்ளு சூட்டைக் கிளப்பி விடும் என்று ஒரு வாதமும் வைக்கப்படுகிறது. கொள்ளு ஒரு வெப்பமான உணவுதான்.
ஆனால் கொள்ளு வளர்சிதை மாற்றத்தைவேகமாக நடத்துவதால் இந்த வெப்பம் உருவாகிறது. எனவே கொழுப்பை குறைக்க கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. \
குதிரைக்கு கொள்ளு கொடுப்பதின் பின்னணியும் இதுதான். குதிரையின் உடம்பில் அநாவசியமாக சதை இருந்தால் அதன் எடை கூடிவிடும், அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு உண்ணும் குதிரைகள் சிக்கென்று திடமாக இருப்பதால் அவை விரைந்து ஓடமுடியும்.
என்வேதான் அன்று படைகளில் இருந்த குதிரைகளுக்கும், பந்தய குதிரைகளுக்கும் கொள்ளு ஒரு கட்டாய உணவாக இருந்து வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கொள்ளு ஒரு சகலரோக நிவாரணியாக கருதப்படுகிறது.
மூல நோய்க்கும், மூட்டு நோய்களுக்கும், இருமல், சளி தொந்தரவுகளை களையவும், காய்ச்சலை விரட்டவும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது.
அல்சர் என்கிற குடல் புண்ணை குணப்படுத்தவும் சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், பெண்களுக்கு மாதவிடாயின் போது அதீத ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் கொள்ளு பயன்படுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குன்யா காய்ச்சல் கண்டவர்களுக்கு கொள்ளு வேகவைத்த தண்ணீரில் சூப் வைத்து கொடுத்தால் நோய் கட்டுப்படுத்தப்படுவதுடன் விரைவில் குணமடைய வாய்ப்பும் உண்டு.
உடலில் உள்ள தேவையற்ற தண்ணீரை வெளியேற்ற கொள்ளு பயன்படும். கொள்ளு வேகவைத்த நீர் உடலில் உள்ள நீரை சுத்திகரிப்பதுடன், அவற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மையையும் அது களைந்து விடும்.
எலும்புக்கும், நரம்புக்கும் நல்ல உரமளிக்கும் உணவு கொள்ளு.
இதில் இரும்பு, கால்சியம், மாலிப்டினம் மற்றும் பல பீனால்களை உள்ளடக்கியது. இவை தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களை தடுத்து நமது உடல் உடலுறுப்புகளுக்கு மற்றும் உயிரணுக்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. முளை கட்டிய கொள்ளு வைட்டமின் என்று அழைக்கப்படும் உயிர்ச்சத்து பொருட்களாகிய ஏ, பி, மற்றும் சி ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. கொள்ளை வேக வைத்த நீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து சூப்பாக குடிக்கலாம்.
வேகவைத்த கொள்ளை சாலட் போல் சாப்பிடலாம்.
கொள்ளை வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்த்து உண்ணலாம். கோழி, மீன் தவிர்த்த இறைச்சி சாப்பிடுவோர் அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம்.. கொழுப்பை உடலில் தங்கவிடாமல் கொள்ளு பாதுகாக்கும்.
நல்ல இறைச்சி விருந்து உண்ணவிருப்போர் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால். அடுத்த வேளைகளில் சாப்பிடப்போகும் கொழுப்பு நிறைந்த உணவில் உள்ள கொழுப்பினால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
நன்றி:தீக்கதிர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
பப்பாளி
-யின் மருத்துவ குணங்கள்
ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்….
யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.
யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு ...தவிர்க்கவும்.
பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
1.பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2.பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3.பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4.நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5.பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6.பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7.பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8.பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9.பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10.பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11.பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும
12.பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

வட கொரியா
வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார்.
இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார்.

அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர்ணித்திருந்தன. முன்னதாக அவர் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், அவரது தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் மிகவும் அதிர்ச்சிகரமான தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.
சீன ஊடகத்தின் தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
120 நாய்களை மூன்று நாட்களுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்திருந்ததாகவும், அதன் பின் ஜாங் சாங் தேக் மற்றும் அவரது உதவியாளர்களின் ஆடைகளை களைந்து அந்நாய்களிடம் விடப்பட்டதாகவும், அந்த 120 நாய்களும் 6 பேரையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடித்து குதறி கொன்றதை வட கொரிய அதிபர் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளது.
நினைத்து பார்கக முடியாத அளவிற்கு கோரமான முறையில் ஜாங் சாங் தேக் மற்றும் ஐந்து உதவியாளர்களுக்கும் நிறைவேற்றப்பட்ட தண்டனை அந்நாட்டு அதிபரின் மிக கோரமான முகத்தை காட்டுவதாக அச்செய்தி நிறுவனம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது."
இச்செய்தி பொய்யானது என சில நாட்களின் பின்னர் வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களே ஒப்புக்கொள்ள ஆரம்பித்தன.
உண்மையில் நடைபெற்றது என்ன?
ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட Wen Wei Po என்ற ஊடகம் முதலில் இச் செய்தியை வெளியிட்டது. ஹொங்கொங்கில் வெளியாகும் 21 ஊடகங்களில் நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை 19 வது இடத்தையே வகிக்கின்றது. தகவலை எங்கிருந்து பெற்றோம் என்ற எந்த ஆதாரமும் இன்றி வெற்றுச் செய்தியாக இந்த ஊடகம் செய்தியை வெளியிட்டது.
செய்தி வெளியான பின்னரும் எந்த சீன ஊடகமும் இச் செய்தி குறித்து மூச்சுக்கூட விடவில்லை. அதே வேளை ஐரோப்பிய ஊடகங்கள் இச்செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டன. இப்போது சில தென்னிந்திய ஊடகங்களிலும் இச் செய்தி தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றது.
ஹொங்கொங் ஊடகத்தில் செய்தி வெளியாகி ஒரு மாதத்தின் பின்னரேயே ஏனைய ஊடகங்கள் செய்திகளை எந்த ஆதராமும் இன்றி வெளியிட ஆரம்பித்தன. இன்று வரைக்கும் அதற்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை.
இவ்வாறான போலிப் பிரச்சரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசப் பீதியால் அதிகாரவர்க்கம் மீண்டும் அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளைமையையே இவ்வாறான திட்டமிட்ட அவதூறுகள் தெரிவிக்கின்றன.