ஸ்கிப்பிங் விளையாடு......!
முன்பெல்லாம் வீடுகளில் அடைந்து கிடக்கும் இளம் பெண்களுக்கு பல்லாங்குழி,பாண்டி,என்று பல விளையாட்டுகள் இருந்தன.அவற்றில் ஒன்றுதான் ஸ்கிப்பிங் விளையாடுவது.அதில் பல முறைகளில் ஆடி அசத்துவார்கள்.ஆயிரக்கணக்கில் ஸ்கிப்பிங் சுற்ரியவர்களும் உண்டு.அதனால் நமது பெண்களும் கொடியிடை பொன்ற லட்சணங்களுடன் இளமையுடன் இருந்தனர்.பிரசவமும் எளிதாக இருந்தது.ஏழு,எட்டு வரை நடந்ததும் உடல் கட்டுவிடாமல் இருந்தவர் கள் ஏராளம்.
இன்று தொலைக்காட்சியும்,முகனூலும் அந்த இடத்தை பிடித்துக்கொண்டன.இன்று சிசேரியன் இல்லா பிரசவங்களே அரிதாகி விட்டது.ஒரு குழந்தை பெற்றவுடனே குண்டாகி,தொப்பையுடன் வயதான பெண்கள் தோற்றத்தை கொண்டுவிடுகிறார்கள்.
அதற்கு மு க்கிய காரணங்களே நமது பாரம்பரிய ,கலாச்சார உணவு வகைகள்,விளையாட்டுகள்,பண்பாடுகளை ஓரங்கட்டியதுதான்.
பீட்சா,கணினி இன்றைய தகவல் தொழில் நுட்பக் காலத்தில் நம் இல்லத்தில் உள்ளோர்களை முற்றிலுமாக மாற்றியதுதான்.
ஸ்கிப்பிங் விளையாட்டை மறந்ததால் பல விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான்.
ஸ்கிப்பிங் மீண்டும் உடற்பயிற்சி நிலையங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.அதன் பயன்களை பார்ப்போம்.வீடு பரணில் உள்ள ஸ்கிப்பிங் கயிறை எடுத்து சுழற்ற ஆரம்பிப்போம்.
இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சனையும் படிப்படியாக குறையும்.
* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.
* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. இடுப்பு வலி உள்ளவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.
* ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
"பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928-இல் பெரியசாமி
தூரனால் தொடங்கப்பட்டது. திரு.வி.க., கல்கி ஆகியோருக்குப் பனை ஓலையில் பொங்கல் வாழ்த்து அனுப்பினார்.
* திரு.வி.க. தனது நவசக்தி இதழில் பொங்கல் வாழ்த்து அனுப்பிட வேண்டுகோள் விடுத்தார்."
----------------------------------------------------------------------------------------------------------------------
அமேசான்.காம்
இணையத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் டாப் ஹீரோவாக இருக்கும் அமேசான் .காம் நிறுவனத்தை உருவாக்கியவர் ஜெஃப் பெசொஸ் .
அப்பா க்யூபாவில் இருந்து வந்த அகதி .
அம்மாவின் அப்பா வழியில் ஏகப்பட்ட சொத்து இருந்தது ;சின்ன வயதில் இருந்தே எதையாவது துறுதுறு என்று பண்ணிக்கொண்டிருக்கும் குணம் இவரிடம் இருந்தது .
தொல்லைக்கொடுக்கும் சுட்டிகளை பயமுறுத்த எலெக்ட்ரானிக் அலாரம் தயாரித்தார் ; தாத்தாவின் கேரேஜில் எப்பொழுது பார்த்தாலும் ஆய்வுகள் செய்து கொண்டும் எதையாவது உருவாக்கி கொண்டும் இருந்த இவரின் ஆசை விண்வெளி வீரனாக வேண்டும் என்பதுதான் !
ஆனால்,வேறு விஷயங்கள் அவருக்காக காத்திருந்தன .
கல்லூரி போனதும் இயற்பியலில் இருந்து அவர் பார்வை கணினி பக்கம் திரும்பியது ;கணினி மற்றும் மின்னணு அறிவியல் துறையில் பட்டம் பெற்று வெளியே வந்தார் .
மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைபார்த்து லட்சக்கணக்கில் சம்பாதித்தார் . இளவயதில் மிகப்பெரிய நிதி நிறுவனம் ஒன்றின் துணைத்தலைவர் ஆனார் .அதோடு நின்று இருக்கலாம் ;வருடத்திற்கு 2300 சதவிகிதம் இணைய பயன்பாட்டாளர்களின்
எண்ணிக்கை உயர்கிறது என்பதை பார்த்தார் ;
எண்ணிக்கை உயர்கிறது என்பதை பார்த்தார் ;
அந்நேரம் இணையத்தில் வர்த்தகம் செய்பவர்கள் சேவை வரி செலுத்த தேவையில்லை என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் சொல்ல வேலையை தூக்கி கிடாசிவிட்டு கிளம்பினார் மனிதர் .
இணையத்தில் புத்தகங்களை ஆர்டர் செய்தால் போதும் ,வீட்டுக்கே கொண்டுவந்து டெலிவரி என்பது தான் கான்செப்ட் ;அதுவும் விலை குறைவாக தருவது தான் போனஸ் .ஆரம்பிக்கிற பொழுது மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் ஆட்கள் இருந்தார்கள் .
அமோக வரவேற்ப்பு உண்டானது ;சில வாடிக்கையாளர்கள் ஏன் நீங்கள் எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்க கூடாது என கேட்க அதையும் ஆரம்பித்தார் ,
டிவிடிகளும் சேர்ந்துகொண்டன .புத்தகங்களை விட எலெக்ட்ரானிக் சாதனங்கள் சக்கை போடு போட்டன .
இப்பொழுது ஷு ,நகைகள் கூட ஆன்லைனில் விற்கிறது அமேசான்
அதோடு நின்று விடவில்லை ,சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் விண்வெளி பயணத்திட்டத்தை ஆரம்பித்தார் ;
அவரின் இப்போதைய சொத்து மதிப்பு 23 பில்லியன் டாலர் !
,"பெரிதாக கனவுகள் எனக்கு ;என் கனவுகளை துரத்திக்கொண்டே இருந்தேன் ;இருப்பேன் .மற்றவர்கள் புரிந்துகொள்ளாவிட்டலும் பரவாயில்லை .கனவுகளோடு ஓடி சாதிப்பது சுகமானது !"
இதுதான் தனது வெற்றிக்கு காரணமாக ஜெப் சொல்லுவது.
இதைப்போல் உங்களுக்கும் கனவுகள் இருக்கிறதா?
அதுமட்டுமல்ல .
"சாத்தியம் என்பது வார்த்தை அல்ல.செயல் "என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.