மூலதனமும் நீயே...!
மூலப்பொருளும் நீயே..!!.
அன்புடன் ஆட்கொள்வாய்
கூட்டணித் தாயே! !!
-வே.மதிமாறன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை அழகு கொஞ்சுகிறதோ ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி மரணம்
அன்புடன் ஆட்கொள்வாய்
கூட்டணித் தாயே! !!
திமுக; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததும், பா.ஜ.க., வோடு கூட்டணி இல்லை என்று அறிவித்ததும் காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்கும் பிரச்சினையானதோ இல்லையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘காங்கிரசு, பா.ஜ.க அணிகள் இல்லாத அணியில்தான் நாங்கள் இருப்போம்’ என்று இதுவரை சொல்லி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்போது திமுகவின் நெருக்கடியின் காரணமாக ‘அதிமுக இல்லாத அணியில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று (17.12.2013) செய்தியாளர்களிடம், ‘எந்தக் காரணம் கொண்டும் திமுகவுடன் தேர்தல் உடன்பாடு கிடையாது.’ என்று திட்டவட்டமாக தீர்த்திருக்கிறார்.
‘காங்கிரசின் எல்லா மோசமான செயல்களுக்கும் திமுகவிற்கு உடன்பாடு இருக்கிறது. வரலாறு காணாத ஊழல்.’ என்று அதற்கு அவர் காரணம் காட்டியிருக்கிறார்.
ஊழல் இல்லாத கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி வைக்க வேண்டுமென்றால், சி.பி.எம்., சி.பி.ஐ உடனோ, சி.பி.ஐ., சி.பி.எம் உடனோ கூட கூட்டணி வைக்க முடியாது. ஆனால் இவர்கள் ஊழலுக்கு எதிராக அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறார்களாம். இவர்களைப் பற்றி மிக கடுமையான விமர்சனத்தை இவர்களின் அரசியல் நிலைப்பாடே அம்பலப்படுத்தும்போது, நாம் அதை விடக் கடுமையாக என்ன சொல்லிவிட முடியும்?
‘அம்மா பெங்களுருக்கு தனி நீதிமன்றத்தில் ஓய்வெடுக்கவா போகிறார்கள்?’ என்று கேட்டால் ‘ஆமாம்’ என்பார்கள் போலும்.
‘தனி நீதிமன்றத்திற்கு வருகைத் தரும் ஊழலை ஒழித்த தாயே.. வருக.. வருக..’ என்று கட்டவுட் வைப்பார்களோ? அப்படியே கட்டவுட் வைத்தாலும் அம்மா இவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ‘சீட்டு’ கிடைக்கிறதுக்கு முன்னால போயஸ் தோட்டத்து ‘கேட்’ டையே தாண்ட முடியாது.
தேர்தல் நாட்கள் நெருங்கியாச்சு என்றால், பாவம் போயஸ் தோட்டத்தில் வாட்ச் மேனுக்கு வேலை போனாலும் போயிடும். அந்த வேலையை கூட்டணிக் கட்சி தலைவர்கள் பார்க்கும் போது, தேவையில்லாமல் எதுக்கு வாட்ச் மேன்?
அவுங்களுக்குத் தெரியாதது எதுவும் நமக்கு தெரியப்போறதில்லை.. அவுங்களுக்குத் தெரிஞ்ச உலக விசயம் நமக்கு புரியப் போறதே இல்லை. அப்படிப்பட்ட திறமைசாலியான இவர்களுக்கு அதிமுகவிடம் மிகவும் பிடித்தது என்னவாக இருக்கும்?
சமச்சீர் கல்வியை தடுத்தாட் கொண்டதா? அதற்கு எதிராக போராடிய தங்களின் SFI., DYFI மாணவர்களை ரவுண்டு கட்டி அடித்ததா? கல்வியைத் தனியார் மயமாக்குவதில் ஆர்வம் காட்டுவதா?
தமிழ்ப் புத்தாண்டை மாற்றி சமஸ்கிருதப் புத்தாண்டை மீட்டெடுத்ததா? ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று துணிந்து மத்திய அரசுக்கு எதிராக நின்றதா? இல்லை சிதம்பரம் உச்சிக்குடுமி தீட்சதர்களுக்கு ஆதரவாகத் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை போட்டதா?
அம்மாவின் எந்த அவதாரம் கம்யூனிஸ்ட்டுகளை ஆட்கொண்டிருக்கும்?
‘சரி அத விடுவோம். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போல் மிக எளிமையானவர்கள் யாரும் கிடையாது. எங்க போனாலும் பஸ்லதான போவார்கள்.’
ஆமாம். ஆனால், பஸ்ல போறது முக்கியமில்லை. எங்க போறாங்க? அதுதான் முக்கியம்.
போயஸ் தோட்டத்துக்கு பஸ்ல போன என்ன? கார்ல போன என்ன? இல்ல அடிதண்டம் போட்டுக்கிட்டு போனதான் என்ன? அந்த எளிமையால் மக்களுக்கு என்ன பயன்?
ஆனாலும் தோழர் ஜி.ராமகிருஷ்ணனோட தைரியத்தை ஒருவகையில் நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். ‘அதிமுக வுடன் கூட்டணி’ என்று அவரே அறிவிக்கிறார். இது வெகுளித்தனமாக இருந்தாலும் இந்தத் துணிச்சல் பாராட்டப்படக் கூடியதுதான்.
ஏன் என்றால் இவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்பதற்கு முன், போயஸ் தோட்டத்திற்கு உள்ளே விடலாமா? என்பதை அம்மா தானே முடிவு செய்வார்.
குறிப்பு : இதில் சொல்லப்பட்டிருக்கிற செய்திகள் அனைத்தும் தோழர். தா. பாண்டியனுக்கும் பொருந்தும். ஜி.ராமகிருஷ்ணன் என்று வருகிற இடங்களில் தா. பாண்டியன் என்று மாற்றி படித்துப் பார்க்கவும். சரியாக இருக்கும்
-வே.மதிமாறன்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
இயற்கை அழகு கொஞ்சுகிறதோ ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி மரணம்
பழம் பெரும் நடிகை அஞ்சலி தேவி மரணமானார்.அவருக்கு தற்போது வயது 86.உடல்நலமின்றி இருந்த அவர் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று பிற்பகல் 2 மணிக்கு மரணம் அடைந்தார். அவருடைய உடல் ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி தேவியின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள். அவருடைய இறுதிச்சடங்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
மரணம் அடைந்த அஞ்சலி தேவிக்கு வயது 87. அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம்.அவருக்கு 5 வயது ஆனபோது, குடும்பம் காக்கிநாடாவில், குடியேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற்ற நாடகங்களில் பங்கு கொண்டார்.
காதல் திருமணம்
காக்கிநாடாவில், இசை அமைப்பாளராகவும், நடன இயக்குனராகவும் இருந்த ஆதிநாராயணராவ் என்ற இளைஞர், நடன நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவியின் அழகும் நடனமும், அவரைக் கவர்ந்தன. தன் நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.அஞ்சலிதேவி நடித்த "தெருப்பாடகன்'', "லோபி'' ஆகிய நாடகங்கள், ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றன. இந்த நிலையில், அஞ்சலிதேவிக்கும், ஆதிநாராயணராவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 1940ல் திருமணம் செய்து கொண்டனர்.இசையமைப்பாளரை திருமணம் செய்து கொண்டன ர். அஞ்சலிதேவி–ஆதிநாராயணராவ் தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்
நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். 1936–ம் ஆண்டில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். 1940–ல் எல்.வி.பிரசாத் டைரக்டு செய்த ‘கஸ்தஜீவி’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை.
1945-ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் சி.புல்லய்யா, "தெருப்பாடகன்'' நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவி சிறப்பாக நடனம் ஆடியதை பார்த்து மகிழ்ந்து, தன்னுடைய "கொல்லபாமா'' என்ற தெலுங்கு படத்தில் மோகினி வேடத்தில் நடிக்க வைத்தார்.
அந்த படம் ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வெளியாகி வெற்றிவாகை சூடியது. அதனால் அஞ்சலிதேவிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.
மாயக்குதிரை
தெலுங்கில், ஏ.நாகேஸ்வரராவுடன் அஞ்சலிதேவி நடித்த "தீலுகுர்ரம்'' என்ற படம், "மாயக்குதிரை'' என்ற பெயரில் தமிழில் "டப்'' செய்யப்பட்டு திரையிடப்பட்டது.
மாயா ஜாலங்கள் நிறைந்த இந்தப் படம், ஓகோ என்று ஓடியது. அஞ்சலிதேவி தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றார். தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்தன.
"மகாத்மா உதங்கர்'' என்ற தமிழ்ப் படத்தில் நடித்தார். 1949-ல் நடிக மன்னன் பி.ï. சின்னப்பாவுடன் "மங்கையர்க்கரசி'' என்ற படத்தில் நடித்தார்.
1949-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மாயாவதி'' என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து நடித்தார்.
1954-ல் ஏவி.எம். தயாரிப்பான பெண் படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா ஆகியோருடன் இணைந்து நடித்தார். தமிழ்ப்படங்களில், அவர் சொந்தக்குரலில் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது.
கணவனே கண்கண்ட தெய்வம்
1955-ல் நாராயணன் கம்பெனி தயாரித்த "கணவனே கண்கண்ட தெய்வம்'' என்ற மெகாஹிட் படத்தில், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில், அஞ்சலிதேவியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது.
இந்தப்படம், அவர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆந்திராவில் ஏற்கவே பிரபலமாகியிருந்தவர், தமிழ்ப்பட உலகிலும் பானுமதி, பத்மினி வரிசையில் இடம் பெற்றார். ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தார்.
சிவாஜியுடன் "முதல் தேதி'', "நான் சொல்லும் ரகசியம்'' படங்களிலும், எம்.ஜி.ஆருடன் "சக்ரவர்த்தி திருமகள்'', "மன்னாதி மன்னன்'' ஆகிய படங்களிலும் நடித்தார்.
ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த "காலம் மாறிப்போச்சு'' சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித்தது. மற்றும் "இல்லறமே நல்லறம்'', "பூலோக ரம்பை'', "வீரக்கனல்'' முதலான
படங்களில் ஜெமினிகணேசனுடன் நடித்தார். தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார்.
சொந்தப் படங்கள்
அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் "மணாளனே மங்கையின் பாக்கியம்'' படத்திலும், நாகேஸ்வரராவுடன் "அனார்கலி''யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ்.
அஞ்சலிதேவி தயாரித்த மற்றொரு படம் "அடுத்த வீட்டுப் பெண்''. இது நகைச்சுவைப் படம். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன்.
என்.டி.ராமராவ்
தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது "லவகுசா''. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. ராமராவ் ராமராகவும், அஞ்சலிதேவி சீதையாகவும் அற்புதமாக நடித்தனர்.
பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் அஞ்சலிதேவி நடித்தார். ஸ்ரீதர் தயாரித்த "உரிமைக்குரல்'' படத்தில், எம்.ஜி.ஆருக்கு அண்ணியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.திரைப்பட நடிகர் சங்கத்தில் தலைவர் பொறுப்பில் இருந்த ஒரே பெண்மணி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. அப்போதுதான் இப்போதைய நடிகர் சங்கத்தின் 'லோகோ'வை வடிவமைத்தார் ..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
நம்மவர்களின் துபாய் வாழ்க்கை.