நவம்பர் 7புரட்சிகள்

நவம்பர் 7
மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகைக்கு முன்னால் ஒரு பெரிய மைதானம் உண்டு. 
அதன் பெயர் ‘சிவப்பு மைதானம்’. அந்தப் பெயரை அர்த்தப்படுத்தும் விதத்தில் மே 1 அன்றும், நவம்பர் 7 அன்றும் அது ஒரு சிவப்புக் கடலாக மாறும்.
 இராணுவ வீரர்களும் மக்களும் சின்னக் குழந்தைகளும் முதியவர்களும் என  எல்லோரும் அங்கே நடந்து செல்லுகிற காட்சி மிக எழுச்சிமயமாக இருக்கும்.
இந்த நவம்பர் 7 (1991) அது ஒரு சிவப்பு மைதானம் ஆகாமலிருந்தது.
கோர்பச்சேவின் ‘சீர்திருத்தங்கள்’ அமலுக்கு வர ஆரம்பித்தபோது, ‘நவம்பர் புரட்சி ஆண்டு விழா கொண்டாட வேண்டியதில்லை’ என்று  முடிவு செய்யப்பட்டது. என்றாலும் மாஸ்கோ மக்களில் ஒரு பகுதியினர் அன்று முடிந்த வரைக் கொண்டாடினர். அதற்கு எதிராக ஒரு  பிரிவினரின் ஊர்வலமும் அன்று நடை பெற்றது.
இந்தச் செய்தியைப் பத்திரிகைகளில்  நான் வாசித்தபோது இரண்டு நவம்பர் தினக் கொண்டாட்டங்கள் என் நினைவுக்கு வந்தன.
 1960-ஆம் ஆண்டும், 1987-ஆம் ஆண்டும் நடைபெற்ற நவம்பர் தினக் கொண்டாட்டங்கள் அவை.

1960 நவம்பர் 7-க்குப் பிறகு மூன்று வாரங்களுக்கு மேல் நீண்ட உலக கம்யூனிஸ்ட் மாநாடு நடைபெற்றது. சீன-சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சிகளுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்ட மாநாடாக அது இருந்தது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவு பூர்த்தி யாவதன் முன்னோடியாக அது இருந்தது.
 1987ஆம் ஆண்டிலோ,  நவம்பர் புரட்சியின் 70-ஆம் ஆண்டைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப்பட்ட உலக மாநாட்டுக்குப் பிறகு புரட்சித் தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்களும் புரட்சி தின ஊர்வலம் நடைபெறுகிற ஆறேழு மணிநேரம் வரை நான் நின்றவாறு ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நவம்பர் முதல் வாரம் மாஸ்கோ எவ்வாறு இருக்குமென்பதை இந்தியர்களாகிய நமக்கு  – ஊகிக்கக்கூட முடியாது. “மரம் கோச்சுன்ன மஞ்சு”(மரம்போல் உடலை விறைக்கச் செய்யும் பனி) என்கிற மலையாளப் பழமொழி முற்றிலும் அதற்குப் பொருந்தும் விதத்தில் கொடும் பனி. அந்தப் பனியில் ஆறேழு மணி நேரம் நான் திறந்தவெளி மைதானத்தில் நின்றாக வேண்டியிருந்தது.
 உள்ளாடைகள் உள்பட ஐந்தோ ஆறோ கோட்டுகளும் கால் உறைகளும் அணிந்து (இவை அத்தனையும் ரோமத்தால் நெய்யப்பட்டவை.) அந்தக் கொடும் பனியில் பயன்படுத்த வேண்டிய பூட்ஸ் மற்றும் ரோமத்தாலான கையுறை ஆகிய வற்றை மாட்டிக்கொண்டுதான் நான் நின்றி ருந்தேன்.

இரண்டாம் முறை நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டத்தில் அவ்வாறு நான் நின்ற போது எனக்கு வயது 78 ஆகியிருந்தது. இனி  ஒருபோதும் நவம்பர் புரட்சி தின கொண்டாட்டத் தில் என்னால் பங்கேற்க இயலாது என்று தோழர் களிடம் சொன்னேன்.
அது நான் உத்தேசித்த அர்த்தத்தில் அல்ல.
அது எனது கடைசி நவம்பர் தின கொண்டாட்டமாக முடிந்தது என்று இப்போது நினைக்கிறேன்.
“வரலாற்றுக்கு ஏற்பட்ட ஒரு பிழை” என்று நவம்பர் புரட்சியைப் பற்றி கம்யூனிஸ்ட்டின் எதிரிகள் கூறுகிறார்கள்.  நடக்கக் கூடாத ஒரு சம்பவம் 1917 நவம்பர் 7 அன்று மாஸ்கோவிலும் லெனின் கிராடிலும் நடந்தது என்பது அவர்களின் கருத்து.
அந்தப் ‘பிழையை’ வரலாறு இப்போது திருத்திவிட்டது என்று, நவம்பர் புரட்சிக்கு எதிராக  அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.
அந்தப் பல்லவியை ஏற்றுப் பாடுவதற்குச் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செய லாளராக இருந்த கோர்ப்பச்சேவும் முன் வந்தார் என்பதைத்தான் 1991 நவம்பர் 7 சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், கோர்பச்சேவும் அவரது கூட்டாளி களும் எவ்வளவுதான் நிராகரித்தாலும் நவம்பர் புரட்சி என்பது உலகெங்கும் உள்ள - முற்போக்கை விரும்புகிறவர்களின் இதயத்தில் மறையாமல் நிற்கும். எவ்வா றென்றால், அன்று தான் ஒரு புதிய மனித நாகரிகம் துளிர்த்து வளர ஆரம்பித்தது.

வேலையின்மை, அன்றாடப் பொருள்களின் விலை உயர்வு முதலான - முதலாளித்துவச் சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நிலவும் சாபங்கள் எதுவும் இல்லாததும், கல்வி,  மருத்துவ உதவி, குடியிருப்பு ஆகியவற்றுக் கான வசதி  முதலானவற்றை மக்கள் அனை வருக்கும் வழங்குவதுமான ஒரு புதிய நாகரிகமாக அது இருக்கும். ரஷ்யப் புரட்சிக்கு அடுத்து கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் மற்ற சில நாடுகளிலும் புரட்சி தொடர்ந்தது. மனிதனை மனிதன் சுரண்டாத ஒரு சுதந்திர சமுதாயம் உருவானது.

ரஷ்யாவில் நவம்பர் புரட்சி நடைபெறும்போது எனக்கு எட்டு வயது. புரட்சியின் கதைகளைக் கூடக் கேட்க முடியவில்லை.
 நான்கைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒரு தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிப்பதற்காகச் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்துதான் ‘ரஷ்யா’வைப் பற்றி நான் முதன்முறையாகக் கேள்விப் பட்டேன்.
மலபார் பிரதேசத்தில் ஜமீன்தார்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கிற மசோதாவை தயாரித்தவரை தோல்வியுறச் செய்து ஜமீன்தாரின் நலனைப் பாதுகாக்க வேண்டு மென்று அவர்கள் கருதியிருந்தனர். அதற்கிடையேதான் ரஷ்யாவைப் பற்றிய அவர்களின் பேச்சு இருந்தது.
ஜமீன்தார்கள் மீது கட்டுப்பாடு விதிப்பதன் மூலமும், விவசாயி களுக்கு அதிகார வாய்ப்புகள் வழங்குவதன் மூலமும் நமது நாட்டை “ஒரு ரஷ்யாவாக மாற்று வதற்கு” எதிர்  வேட்பாளர் முயற்சிக்கிறார் என்பதாக அவர்களின் பேச்சு இருந்தது.
அது முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு எழுதிய “சோவியத் ரஷ்யா” என்ற சிறு நூல் ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 இந்த சிறிய நூல்தான் என்னைச் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இட்டுச்சென்றது. இந்தியா சுதந்திரம் பெற்றால் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்கிற விசயத்தில் மட்டுமல்ல, சுதந்திரம் பெறுவதற்கான வழி என்னவென்பதிலும் அன்று ஓர் இளைய காங்கிரஸ்காரனாக இருந்த எனக்கு வழிகாட்டியது சோவியத் ரஷ்யாவின் உதாரணம்தான்.
 நாளடைவில் நான் 1936-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக ஆனேன்.

அன்றுமுதல் இன்றுவரையும் நான் ஒரு கம்யூனிஸ்ட்டாகத் தொடர்கிறேன். நான் கட்சி உறுப்பினராகி 23 ஆண்டுகளுக்குப் பிறகு  (1959) முதன்முறையாக  சோவியத் யூனிய னுக்குச் சென்றேன். அதற்குப் பிறகு பலமுறை அங்குச் சென்றிருக்கிறேன்.
 ஒவ்வொரு முறையும் அந்தச் “சிவப்பு மைதானம்” வழியே காரில் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு பயணத்தின்போதும், லெனின் உடலைப் பதப் படுத்திப் பாதுகாத்து வைத்துள்ள இடத்திற்குச் சென்றிருக்கிறேன்.
ஒருமுறை மனைவியுடன் நான் இரண்டு மாதங்கள்வரை சோவியத் யூனியனில் இருந்துள்ளேன்.
அருங்காட்சி யகம், நாடக அரங்கம் முதலான காட்சிக் கூடங்களுக்குப் பலநேரங்களைச் செலவழித் திருக்கிறேன்.
சோவியத் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உள்படப் பல தோழர்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தி யிருக்கிறேன்.
 சோவியத் யூனியனுடன் அவ்வாறு உணர்ச்சிப்பூர்வமான உறவு எனக்கு  ஏற்பட்டிருந்தது.
இந்த நீண்டகால உறவுக்குப் பிறகு சோவியத் யூனியன் என்ற தேசமோ, அதன் புரட்சி தினக் கொண்டாட்டங்களோ இல்லாத ஒரு வருடம் கடந்துபோய்விட்டது.

அதற்காக நான் அவநம்பிக்கை அடையவில்லை. ஏனென்றால், 74 ஆண்டுகள் சோவியத் யூனியன் நிலைப்பெற்றிருந்தது என்பதே முற்றிலும் மகத்தான ஓர் அனுபவமாகும்.

இந்த எழுபது ஆண்டுகளுக்கு மேல் சோவியத் மக்கள் காட்டிய அழிக்க முடியாத முன்மாதிரியாகும் அது. இன்றில்லை யென்றால் நாளை, அதுவும் இல்லையென் றால் அது முடிந்து, உலகம் முழுவதும் பின்பற்ற விருக்கும் ஒரு முன்மாதிரி அனுபவமாக சோவியத் ஒன்றியம் உள்ளது.
சீனாவிலும் மற்ற சில நாடுகளிலும் அந்த முன்மாதிரி இன்றும் தொடர்கிறது.
இந்தியா உள்ளிட்ட இதர பல நாடுகளில் அந்த முன்மாதிரியின் மீது நம்பிக்கையை அர்ப்பணித்துள்ள பல லட்சக்கணக்கான தோழர்கள் உள்ளனர்.
 அவர்களில் நானும் ஓர் ஆள் என்று உரத்தக் குரலில் அறிவிக்கிறேன்: “கோர்பச்சேவ் கைவிட்டாலும் நான் சோவியத் யூனியனைக் கைவிடவிடமாட்டேன்!
என் தேசம் உள்பட உலகம் முழுவதும் எதிர்காலத்தில் உருவாகவிருக்கிற சமுதாயம்தான் 74 ஆண்டுகள் சோவியத் யூனியனில் நிலை பெற்றிருந்தது.”
சோவியத் யூனியன் சோசலிச சமூக நிர்மாணத்தில் யாதொரு தவறுகளும் ஏற்படவில்லையென்று இதற்கு அர்த்தமல்ல. பல தவறும் ஏற்பட்டுள்ளன.

 அதன் விளை வாக அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களிட மிருந்து தனிமைப்பட்டனர்.
அந்தத் தவறு களைத் திருத்துவதற்குக் குருஷ்சேவ் முதல்  கோர்பச்சேவ் வரை சோவியத் கட்சித் தலைவர்கள் முயன்றார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
ஆனால், சோசலிச சமுதாய நிர்மாணத்தில் ஏற்பட்ட தவறும் இல்லாமற் செய்வது என்கிற பேரில்  கோர்பச்சேவ் ஆரம்பித்துவைத்த ‘சீர்திருத்தங் கள்’ சோசலிசத்தையே நிராகரிப்பதில் போய் முடிந்தது.

சோவியத் யூனியனில் நடந்தது போலவே  சீனாவிலும் சோசலிச சமுதாய நிர்மாணத் தில் தவறுகள் ஏற்பட்டன. அவற்றைத் திருத்து வதற்கு அந்நாட்டின் கட்சித் தலைவர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அதே சமயம், சோசலிசத்தின் சாதனைகளை உறுதி யுடன் நிலைநாட்டிக் கொண்டே, ஏற்பட்ட தவறுகளை இல்லாமற் செய்வதற்கு அவர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.
 அதனால்தான் அங்கு எதிர்ப்புரட்சி முயற்சி தோல்வியுற்றது. சோசலிசப் பாதையிலிருந்து கடுகளவுகூட விலகமாட்டோம் என்று சீனத் தலைவர்கள் உறுதிபடக் கூறினர்.

 கொரியா, வியட்நாம், கியூபா ஆகிய சோசலிச நாடுகளின் தலைவர்களும் அதையே உறுதி செய்கிறார்கள். சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் மற்றும் எல்லா நாடுகளிலும் நடைபெற்ற சோசலிச சமுதாய நிர்மாணத்தின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு இந்தியாவில் அதன்  பிரத்யேகத் தன்மைகளுக்கு ஏற்ப சோசலிச சமுதாய நிர்மாணத்தை நாங்கள் வடிவமைப்போம்.
தோழர் இ.எம்.எஸ்.அவர்கள் மலையாளத்தில் எழுதிய “காலத்தின்றெ நேர்க்குப் பிடிச்ச கண்ணாடி” என்ற கட்டுரைகள் தொகுப்பு நூலிலிருந்து.
தமிழில்: தி.வரதராசன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வேலை வாய்ப்புகள் 

 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி 
இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------

  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். ------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவம்பர் 7
 தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசன் குறித்த 65 சுவையான  தகவல்கள் இங்கே.
1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன்.
2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்தான் கடைக்குட்டி.

3. கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.

4. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.
முதல் படத்திற்கே விருது.

5. கமல் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க காரணமாக இருந்தவர் அவரது குடும்ப மருத்துவர். அவர்தான் துறுதுறு என்று இருந்த கமலை ஏவி. மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகபடுத்தியவர்.

6. அதன் பின் குழந்தை நட்சத்திரமாக கமல் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வாணம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்தார்.
7. குழந்தை நட்சத்திரமாக அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷனுடன் கமல் நடித்துள்ளார்.

8. கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான்.
9. நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான்.

10. கமல் கதாநாயகனாக உருவெடுத்தது ஒரு மலையாள படம் மூலம் தான். அந்த திரைப்படத்தின் பெயர் கன்னியாகுமரி. அந்த படம் வெளியான ஆண்டு 1974.

11. 1970 களில் கமல் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அவை நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது.
இவை அனைத்தும் வெற்றி படங்கள்.
12. நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

13. கமல் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியது அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாகதான். கே. பாலசந்தர் இந்த திரைப்படத்தை இயக்கினார். 
இப்படத்திற்காக, கமலுக்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. 

14. ராஜபார்வை திரைப்படம் வெற்றிபடமாக அமையாவிட்டாலும், கமலுக்கு பரவலான பாராட்டையும், விருதுகளையும் பெற்றுதந்தது இந்த திரைப்படம்.
15. எண்பதுகளில் கமல் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார்.

இவை வெற்றிபடங்களாகவும் அமைந்தன.

16. நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர் கமல். அதற்கு ஓர் உதாரணம், கமலின் தந்தை சீனிவாசனின் உடல் தகனத்திற்காக வைக்கப்பட்டு இருக்க, உடலை சுற்றி சந்திரஹாசன், சாருஹாசன், கமல் ஆகியோர் நிற்கிறார்கள்.
 சிதையின் அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் கமல், `அண்ணா... நீங்களும் வாங்க` என்று கொள்ளி வைக்க அழைக்கிறார்.
 இருவரும் நெகிழ்ந்து விட்டார்கள்.

17. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமலஹாசன்.
18. கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா.

19. ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமலஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள் புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.

20. ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமல்ஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. 
அந்த படங்கள்
 வாழ்வே மாயம்; 
மூன்றாம் பிறை;
 சனம் தேரி கஸம்; 
சகலகலா வல்லவன்; 
ஹே தோ கமல் ஹோகயா 

21. எண்பதுகளின் மத்தியில் `மய்யம்` என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்.
22. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் கமல்.
23. தொடக்கத்தில் சிவாலயா என்ற நடனக் குழுவை நடத்தினார் கமல்.

24. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல். அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா.
 எம்.ஜி.ஆருக்கு `நான் ஏன் பிறந்தேன்`, சிவாஜிக்கு `சவாலே சமாளி`, ஜெயலலிதாவுக்கு `அன்புத்தங்கை`.
25. தன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல். தமிழ் திரை உலகத்தில் இதில் முன்மாதிரி இவர்தான்.

26. கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் தரப்பட்டுள்ளது.
27. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் விருதையும் பெற்று இருக்கிறார்.

28. கமல் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
29. கமலின் ஆத்மார்த்தமான நண்பராக இருந்தவர் மறைந்த அனந்து.

30. கமல் இப்போது அரசியல் பேசவில்லை எண்பதுகளிலேயே பேசி இருக்கிறார்.
 இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, தமிழகத்தில் பேரணி நடத்தியவர் கமல்.
31. கமல் குடும்பத்தில் இருந்து மட்டும் மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கமல், சாருஹாசன் மற்றும் சுஹாசினி.
32. கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து 2005-ம் ஆண்டு கெளரவித்தது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்.
33. கமலின் அற்புதமான நடிப்புதிறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

34. கமல் முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது மலையாளப் படமான கன்னியாகுமரி திரைப்படத்திற்காக.
35. தமிழில் முதல் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கித் தந்தப் படம் அபூர்வராகங்கள். 

36. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்.
37. தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்னைகளை சந்தித்தவர் கமல். இதில் நகைமுரன் என்னவென்றால், பிரச்னையை சந்தித்த இவருடைய படங்கள் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் அனைத்தும் மெகா ஹிட்.

38. உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? என்று கேட்டால்,
 நான் நடிக்கப் போகும் அடுத்த படம் என்பார் கமல்.

39. பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா ஆகிய இரண்டு திரை ஆளுமைகளின் முதல் பட நாயகன் கமலஹாசன்தான்.
பாலுமகேந்திராவின் முதல் படம் கன்னடத்தில் வெளிவந்த கோகிலா.
 பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.

40. கமல் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் `தேடி தீர்ப்போம் வா`.

41.  `முள்ளும் மலரும்` ரஜினி படம்  வெளியாவதற்கு காரணமாக இருந்தவர் கமல்.
அந்த படத்திற்கு பொருளாதார உதவிகளை செய்திருக்கிறார்.

  42. இதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார்.
இந்த தொடர்கதைதான் பின்பு ஆளவந்தான் திரைப்படமாக உருமாறியது.
43. மெட்ராஸ் பாஷையை சரளமாக பேச கூடியவர் கமலஹாசன்.
மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்.

44. சினிமா சென்டிமென்ட்களில் சிறிதும் நம்பிக்கையற்றவர் கமல். ஹே ராம் படத்தின் முதல் வசனமே, "சாகேத்ராம்... திஸ் இஸ் பேக் அப் டைம்". `பேக் அப்` என்ற வார்த்தையை முதல் வசனமாக வைப்பது சினிமாவில் கெட்ட சகுனமாக பார்க்கப்படும்.
45. கமலின் நற்பணி இயக்கத்தினர், இதுவரை 10,000-க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.

46. முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்கு பிடித்தமான உணவு. கமல், பிளாக் டீ பிரியரும் கூட.
47. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
48. உள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்.

49. கமல் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.
50. கமல் உற்சாகமான மூடில் இருந்தால், தான் எழுதிய கவிதை லயத்தோடு நண்பர்களுக்கு பாடிகாட்டுவார்.
51. கமலுக்கு பிடித்தமான தலைவர் பெரியார்,காந்தி  .

52. கமல் கோலிவுட் என்ற வார்த்தையை உச்சரிக்கமாட்டார். எப்போதும் `தமிழ் திரையுலகம்' என்று அழுத்தி உச்சரிப்பதே கமலின் வழக்கம்.
53. கமல் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார்.
 பின் அந்த நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.
54. தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கமல்.
55. ஆனந்த விகடனில் கமல் எழுதிய `என்னுள் மையம் கொண்ட புயல்` என்ற தொடர் பல சர்ச்சைகளை கிளப்பியது

56. கமல் திரைப்படங்கள் பார்ப்பதைவிட அதிக நேரம் புத்தகம் படிப்பதில்தான் செலவிடுவார். அதுபோல, திரைப்பட தொழிற்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் கமல்.
57. இப்போது உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் ஆரம்பகால அடைமொழி காதல் இளவரசன்.
58. டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் நாயகன் திரைப்படமும் ஒன்று.
59. பாலசந்தர் கமலுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், "மை டியர் ராஸ்கல்" என்று தொடங்கும்.

60. ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் திரைப்படமாக மாற்றும் விருப்பம் கமலுக்கு உள்ளது.
61. பாலச்சந்தரை அப்பா என்றும், பாரதிராஜவை அண்ணன் என்றும் கமல் அழைப்பார்.
62. சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் கமல்.63. ட்விட்டரில் 5.7 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் கமல்.
64. தனது 63-வது வயதில் மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் அரசியல் கட்சியை துவங்கினார்.

65. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கமல் அறிவித்தார். காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் தாமதமாக வந்ததால் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே கமலின் கட்சி 38 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.
நன்றி;பிபிசி
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாள் ,
முன்னால்
சி.வி.ராமன்

 உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)


 போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)


உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)1492 - பிரான்சின் (அப்போது ஆஸ்திரியாவின்) என்சிஷெய்ம் என்ற இடத்தில் 127 கிலோ எடையுள்ள ஒரு விண்கல் விழுந்து, மூன்றடி விட்டமுடைய ஆழமான பள்ளமும் ஏற்பட்டது.
இந்த நிகழ்வே தேதி பதிவு செய்யப்பட்ட முதல் விண்கல் வீழ்ச்சியாகும். விண்கல் என்பது புவிக்கு வெளியிலிருந்து புவியில் விழும் பொருட்களைக் குறிப்பதாகும்.
கற்கள் என்று குறிப்பிடப்பட்டாலும், உலோகங்கள் உள்ளிட்டவற்றின் கலவையாகவும் இவை உள்ளன.

 உயரத்தில் என்ற பொருள்கொண்ட மீட்டடியராஸ் என்ற கிரேக்கச்சொல்லிலிருந்து உருவான மீட்டியராலஜி என்பது வளிமண்டல நிகழ்வுகளை(காலநிலை) குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், மீட்டியோர் என்பது புவிக்கு வெளியிலுள்ள பொருட்களைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில் விண்கல் மீட்டியோரைட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

சிறுகோள்கள், வால்நட்சத்திரம் போன்றவற்றின் சிதறல்கள் ஏராளமாக விண்ணில் உலவிக்கொண்டிருக்கின்றன.
இவை புவியீர்ப்புவிசையால் ஈர்க்கப்படுமளவுக்கு புவிக்கு நெருக்கமாக வரும்போது புவியில் விழுகின்றன. வளிமண்டலத்திற்குள் நுழைந்தவுடன் உராய்வால் இவை தீப்பற்றி எரிந்துகொண்டே விழுவதால் எரிநட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

 விழுபவற்றில் பெரும்பாலானவை, முழுமையாக எரிந்து காற்றில் கலந்துவிட்டாலும், பெரிய கற்கள் புவியில் விழுந்து பள்ளங்கள் மட்டுமின்றி, பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

210 கோடி ஆண்டுகளுக்குமுன் விழுந்த ஒரு மிகப்பெரிய விண்கல் ஏற்படுத்திய 600 கி.மீ. விட்டமுள்ள பள்ளம் கனடாவின் கியூபெக் பகுதியில் உள்ளது.

மெக்சிகோ வளைகுடாவில் காணப்படும் 2,000 கி.மீ. விட்டமுள்ள பள்ளம் 30 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு விண்கல்லால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ஆதாரங்கள் இல்லை.
 இத்தகைய மிகப்பெரிய விண்கற்களின் வீழ்ச்சியினால், டைனோசர் உள்ளிட்ட பல உயிரினங்கள் அழிந்த சில இன அழிவுகளும் நிகழ்ந்திருக்கின்றன.
விண்கல் விழும்போது பார்க்கப்பட்ட நிகழ்வுகள் விண்கல் வீழ்ச்சி என்றும், எப்போது விழுந்தது என்று தெரியாமல் புவியில் விண்கற்கள் கண்டுபிடிக்கப்படுவது விண்கல் காணல் என்றும் அழைக்கப்படுகின்றன.

இதுவரை ஏறத்தாழ 1,180 விண்கல் வீழ்ச்சிகளும், 59,200 விண்கள் காணல்களும் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 விழுந்த இடத்தையொட்டி விண்கற்களுக்குப் பெயரிடுவது வழக்கமாக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள்(சிதறல்கள்) ஒரே இடத்தில் கிடைக்கும்போது, அவற்றின் பெயருடன் எண்களும் சேர்க்கப்படுகின்றன.

அறிவியலாளர்கள், சேகரிப்பாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மீட்டியோரிட்டிக்கல் சொசைட்டி என்ற அமைப்பு இந்தப் பெயரிடும் பணியைச் செய்கிறது.

- அறிவுக்கடல்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு