கல்லூரியில் ராமருக்கு என்ன வேலை?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிக்குப் பின்னழ்,அது நலையில் கட்டிய காட்டில் தான் என்ன செய்கிறோம் என்ற நிலை மறந்து திரிகிறார் ஆர்.யன்.ரவி மதுரையில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஒன்றில் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்க தலைமை விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டார். அதன்படி நேற்று (ஏப்.12) அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது ஆளுநர் ரவி உரையாற்றும்போது, அங்கிருந்த மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் போட வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் விழிப்பிதுங்கிய மாணவர்கள், பின்னர் ஆளுநர் மூன்று முறை கோஷம் எழுப்பியதையடுத்து வேறு வழியின்றி மாணவர்களும் திரும்ப கோஷம் எழுப்பினர். இந்த நிலையில், மதச்சார்பின்மையை கற்றுக்கொடுக்கும் கல்லூரியில், மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் போட வற்புறுத்திய ஆளுநர் ரவிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் பேசி முடித்ததும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மூன்று முறை கூச்சலிட்டதுடன், மாணவர்களையும் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்திய...