குடியரசு தலைவருக்கும்

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய 414 பக்க தீர்ப்பின் நகல்!ய.

இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

உச்சநீதிமன்ற உத்திரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப் பட்டது

உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு.

வேலைவாய்ப்புடன் ஊக்கத்தொகை மற்றொரு பொய் வாக்குறுதி: ராகுல்காந்தி .
அன்புமணி பதவி  நீக்கத்தில் பரபரப்பு பின்னணி பாமகவை பிளவுபடுத்தும் பாஜ திட்டத்தால்  அதிகாரத்தை கையில் எடுத்த ராமதாஸ்: அமித்ஷாவின் கூட்டணி மிரட்டலுக்கு செக்.



ஒரு கிலோ மாம்பழம் மூன்று லட்சம் ரூபாய்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை காலம் வந்தாலே மாம்பழ சீசன் தொடங்கி விடும். மாம்பழங்களின் வரத்து தொடங்கிவிட்டது. இது கோடையில் 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மாம்பழத்தின் சுவை கண்டிப்பாக இருக்கும். 

மாம்பழத்தில் பாதாம், கிளிமூக்கு மாம்பழம் முதல் அல்போன்சா வரை பல வகைகள் உள்ளன. இவை மிகவும் விரும்பப்படும் மாம்பழங்களில் ஒன்றாகும். மாம்பழங்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை கிடைக்கின்றன. சில பழங்கள் தரத்தை பொறுத்து விலை அதிகமாக இருக்கும். 

ஆனால் இன்று நான் உங்களுக்கு ஒரு மாம்பழத்தைப் பற்றி சொல்லப் போகிறேன். அதை வாங்க உங்கள் தங்க நகையை கூட அடகு வைக்க வேண்டியிருக்கும். உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் என்ற பட்டத்தைப் பெற்ற மியாசாகி மாம்பழம் ஒரு அரிய ஜப்பானிய வகை மாம்பழமாகும். இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கும். இந்த மாம்பழத்தை பயிரிடுவது மிகவும் கடினம்.

 ஏனெனில் இது ஜப்பானில் மட்டுமே பயிரிட முடியும். முக்கியமாக இது ஜப்பானின் கியூஷு மாகாணத்தில் அமைந்துள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படுகிறது. 

இந்த மாம்பழம் காடுகளில் பசுமை இல்லங்கள் அமைத்து பயிரிடப்படுகிறது. இங்குள்ள காலநிலை மாம்பழம் பயிரிடுவதற்கு ஏற்றது. அதனால் இந்த மாம்பழத்தை இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ பயிரிட முடியாது. இதுவே இந்த அரிய மாம்பழத்தின் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம்.

ஜப்பானில் மியாசாகி மாம்பழத்தை 'தையோ நோ தமாகோ' என்று அழைக்கிறார்கள். இதன் பொருள் சூரியனின் முட்டை. இந்த மாம்பழம் 'தையோ நோ தமாகோ' என்ற பெயரைப் பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

 அதன்படி மாம்பழத்தின் எடை 350 கிராமுக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதன் தோலின் மூன்றில் இரண்டு பங்கு சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அதில் சர்க்கரையின் அளவு 15% அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். 

10% மியாசாகி மாம்பழத்திற்கு மட்டுமே 'தையோ நோ தமாகோ' என்ற தரம் வழங்கப்படுகிறது.

மியாசாகி மாம்பழம் அதன் அழகான அமைப்பு மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது. இது மஞ்சள் நிறத்தில் இல்லாமல் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது சாதாரண மாம்பழத்தை விட இனிப்பாகவும், ஜூஸியாகவும் இருக்கும்.

 சுவையுடன் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதை ரெட் சன் அல்லது ரெட் எக் என்றும் அழைக்கிறார்கள்.

"குடியரசு தலைவரு"க்கும் காலக்கெடு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டைப் போடுவதாக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 08/04/2025 அன்று பரபரப்பு தீர்ப்பு அளித்திருந்தது.


அதில், 'தமிழக அரசின் பத்து மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.


இது சரியா?

ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். பத்து மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது.

அந்த பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக்  கொள்ளப்படும்' என தெரிவித்திருந்தது.


இந்நிலையில் முதன்முறையாக குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த எட்டாம் தேதி கொடுக்கப்பட்ட அந்த தீர்ப்பின் முழு விவரம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.


அதில் ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.


குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம். மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும், ஆளுநர்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவருக்கும் முதன்முறையாக காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது வரலாற்று தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய