ஒரு முன்கதை!
மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தி, மாநில சுயாட்சியை உறுதி செய்ய தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த உயர்மட்ட குழுவில் இடம் பெற்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி யாரென்று தெரியுமா தோழர்களே?
2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மீது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் புகார் கொடுக்க அழுத்தம் கொடுத்தபோது, நேர்மையான அதிகாரியான அசோக் வர்தன் ஷெட்டி, “இது பொய் வழக்கு; இப்படிப்பட்ட முட்டாள்தனமான செயலில் ஈடுபட முடியாது” என்று துணிச்சலாக எதிர்த்து, நின்று புகார் கொடுக்க முடியாது என்று மறுத்தவர் தான் அசோக் வரதன் ஷெட்டி. இந்த நேர்மை அவருக்கு விலையாக அமைந்தது.
அதற்காக கோபமுற்ற ஜெயலலிதாவால் வேட்டையாடப்பட்ட ஒரு நேர்மையான IAS அதிகாரி. அவரை குறிவைத்தது பல பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டது ஜெயலலிதா அரசு.
இதன் தொடர்சியாக 2011 செப்டம்பரில் தனது விருப்ப ஓய்வை அறிவித்து, டிசம்பர் 9, 2011-ல் ஓய்வு பெற விரும்பினார். ஆனால், ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்பு, ஜெயலலிதா அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஊழல் தடுப்பு மற்றும் புலனாய்வு இயக்கத்தின் (DVAC) விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என்று அப்போது பலராலும் பார்க்கப்பட்டது.
அசோக் வர்தன் ஷெட்டியிம் இதற்கு அஞ்சவில்லை. இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் பழிவாங்கல் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
"அவர் மீது இதுவரை எந்தவொரு தண்டனையோ, இடைநீக்கமோ இல்லை. அதேபோல இந்த ஊழல் புகாருக்கும் முகாந்திரமில்லை,
அவரது ஓய்வு விண்ணப்பத்தை ஏற்க அரசு தவறியிருப்பதாகத் தீர்மானித்து, டிசம்பர் 9, 2011-ஆம் தேதியை அவரது ஓய்வு நாளாகக் கருதி, ஓய்வூதிய நலன்களை வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டு ஜெயலலிதா முகத்தில் கரியை பூசியது சென்னை உயர்நீதிமன்றம்
ஓய்வு பெற்ற பிறகு, அசோக் வர்தன் ஷெட்டி கனடாவுக்கு குடியேறி, அங்கு வசித்து வந்தார். இப்போது, மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
இந்த நேர்மையான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உயர்மட்டக் குழுவில் இடம்பெற்று, தனது அனுபவத்தையும் நேர்மையையும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்த உள்ளார்.
அசோக் வர்தன் ஷெட்டியின் பயணம், அரசியல் அழுத்தங்களுக்கு அஞ்சாமல் நேர்மையுடன் நிற்பதற்கு ஒரு உதாரணம். அவரது திரும்புதல், தமிழ்நாட்டுக்கு ஒரு முக்கியமான தருணம்.
நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
- மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தேசியக் கல்வி கொள்கையை ஏற்காததால் ரூ.2,500 கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை.
* கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது.
* ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மருத்துவ கல்வி கொள்கையை நீர்த்துப் போக செய்துவிட்டது.
* நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைந்துள்ளது.
* நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது தமிழக அரசுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
* மாநில அரசுகளின் தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளது.
* மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயற்சி நடைபெறுகிறது.
* கல்விக் கொள்கையில் தமிழக மாணவர்களின் நலனை மட்டுமே முதன்மையாக கொள்கிறது திராவிட மாடல் அரசு
* நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது கவர்னர் காலம் தாழ்த்திய விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
* மாநில உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனான உறவுகளை மேம்படுத்திட ஆய்வு செய்து உயர்மட்டக்குழு அறிக்கை அளிக்கும்.
* உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும்.
என இன்று சட்டமன்றக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.