ஆர்.யன்.ரவிக்கு குட்டு!

 

ஆளுநரின் (ஆர்.யன்.ரவி)அதிகாரத்தை பறித்து தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது!


 தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்து தமக்கான சிறப்பு அதிகாரம் மூலமாக தமிழ்நாடு அரசின் நிறுத்திவைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்தது.


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.யின். ரவியின் நடவடிக்கைகள் நேர்மையாக இல்லை;

அரசியல் அமைப்புக்கு விரோதமாக இருக்கிறது.


தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.


அத்துடன், ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், 

தெக்கன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள 10 மசோதாக்கள் முழு விவரங்கள்!

1. சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா,

2.  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா

3. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா

4. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

5.  தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக திருத்த மசோதா

6.  தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

7.  தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

8.  தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மசோதா

9.  அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா

10.  அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய