தப்பிக்கும் வழி.

Wannacry என்கின்ற ransomware வைரஸ் உலகம் முழுக்க இருக்கிற பெரும்பான்மையான கணினிகளில் பரவி வருகிறது. இது Malware என்று சொல்லப்படும் வைரஸ். 
இது ஒரு கணினியை தாக்கிய பின், அந்த கணினியிலிருந்து எந்தவொரு இணையதளத்தையும் பார்க்கும்போது, அந்த இணையதளம் சரியான முறையில் பார்க்க முடியாது. 
அமைதியாக இருக்கும். அந்த வைரஸ் பாதித்த கணினியில் இருக்கிற எல்லா முக்கியமான கோப்புகளு
ம், Spread Sheet ஆக இருந்தாலும், வேர்டு கோப்புகளாக இருந்தாலும், தரவுகளாக இருந்தாலும், இல்லை உங்களுடைய முக்கியமான தகவல்களாக இருந்தாலும் சரி, அது encrypt பண்ணி உங்களை உபயோகப்படுத்த அனுமதிக்காது.
அதை மீண்டும் உபயோகப்படுத்த அந்த தரவுகளை decrypt செய்தாக வேண்டும். Decrypt செய்ய ஒரு வங்கி கணக்கு எண்ணில் தொகை அனுப்ப வேண்டும். 
அது 19,000 – 36,000 ரூபாய் என்று சொல்கிறார்கள். அவ்வளவு தொகையை கொடுத்தால் அந்த வைரசின் decrypt code தருவார்களாம். 
அதை வைத்து நாம் திரும்ப கணினியை பயன்படுத்தலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் இதுதான் அந்த wannacryயின் வேலை.
இதனால் இந்தியாவில் ஆந்திர காவல்துறை, கேரளா அரசு, NHS என்ற ஒரு மருத்துவ நிறுவனம், மேற்குவங்கம், நிசான் கார் தொழிற்சாலை, ரஷியன் ரயில்வேய்ஸ் ஆகிய சில இடஙகளில் பாதிப்பு உருவாகியிருக்கிறது. 
இந்தியாவில் ATMகள்  சில நாட்களில் மூடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இவ்வளவு பாதிப்புகளை உருவாக்கியிருக்கும் malwareன் தோற்றம் அமெரிக்காவின் NSA.
இதை முதன் முதலில் எட்வர்ட் ஸ்னோடன் என்ற NSA அதிகாரி வெளிச்சம்போட்டு காட்டினார். இது மக்களை உளவு பார்க்க NSA & CIA பயன்படுத்துகிறார்கள் என்று மக்களுக்கு தெரியப்படுத்திய ஸ்னோடன் அவர்களை அமெரிக்கா, நாடு கடத்தி, போலியான குற்ற வழக்குகளில் சிக்க வைத்திருக்கிறது. 
அவர் இப்போது வேறொரு நாட்டில் தலைமறைவாக இருக்கிறார். ஸ்னோடன் இதை வெளியே கூறிய காரணத்திற்காக அவரை செயல்படவிடாமல் வைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறது அமெரிக்கா அரசு.
அமெரிக்கா எப்படி உலகிலுள்ள மக்களை உளவு பார்க்கிறது என்று சொன்ன தகவல்களில் மிக முக்கியமான ஒரு விஷயம்தான் இந்த ரேன்சம்வேர். 
ஸ்னோடன் வெளியிட்ட தகவல்கள் மற்றும் உளவு பார்ப்பதற்கு அமெரிக்க அரசு பயன்படுத்திய சில தொழில்நுட்பங்களையும் வைத்து, தொழில்நுட்பம் தெரிந்த சில விஷமிகள் தவறாகப் பயன்படுத்தி உருவாக்கியதுதான் இந்த wannacry ரேன்சம்வேர். 
இதை யார் செய்தார்கள் என்று இன்னமும் யாருக்கும் தெரியாது.
இது விண்டோஸ் கணினிகளை மட்டும்தான் பதித்துள்ளது, அதுவும் முக்கியமாக, அதிகமாக பாதிக்கப்பட்டது win XP, win7, விண்டோஸ் 8 கணினிகள்தான். 
மைக்ரோசாப்ட் கடந்த 14-ம் தேதி ஒரு பத்திரிகைச் செய்தி கொடுத்திருக்கிறார்கள். அதில் அவர்கள் மார்ச் மாதமே இந்த ரேன்சம்வேர் பிரச்சனைக்கு ஒரு அப்டேட் ரிலீஸ் பண்ணியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறது. 

அந்த அப்டேட் எண் MS -17-010. இதை நாம் பயன்படுத்தி இந்த malware பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். இது தற்போது தொழில்நுட்ப ரீதியாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கையாகும்.
மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் (Operating System) இருந்த ஒரு ஓட்டையைப் பயன்படுத்தித்தான் அமெரிக்கா  உலக மக்களை உளவு பார்த்திருக்கிறது. இதை மைக்ரோசாப்ட் முன்னரே அறிந்திருந்தபோதும் CIA, NSA ஆகியவற்றால் உளவு பார்க்க முடியாது என்று சரி செய்யாமல் இருந்தது. ஆனால் இதை சில NSA உளவாளிகள், இதை மக்களுக்கு வெளிப்படுத்தினர். 
இதை நீண்ட காலமாக தெரிந்திருந்த NSA/CIA மைக்ரோசாஃப்ட்டிடம் கூறி இந்தப் பிரச்னைக்கு patch வெளியிட வைத்திருந்தால் இன்று இந்த பிரச்சனை வந்திருக்காது.
தொழில்நுட்பங்களையும், தொழில்நுட்பங்களிலுள்ள கோளாறுகளைப் பயன்படுத்தியும் அமெரிக்க அரசாங்கம் உலக மக்களை உளவு பார்க்க நினைத்தது தவறு. 
இதைத் தடுத்து நிறுத்த, எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். இல்லையேல் நம்மால் தீர்வு காண முடியாது.
மைக்ரோசாப்ட் மாதிரியான ஒரு லாப நோக்கோடு செயல்படும் கம்பெனிகளை இனியும் நம்பாமல் கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் (Free and Open Source) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.
========================================================================================

ன்று,
நவம்பர்-02.
  • நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)
  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரிகள் இறந்த தினம்(1903)
  • பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது(1936)
  • பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)
  • பெங்களூர் நகரம் பெங்களூரு என பெயர் மாற்றப்பட்டது(2006)
========================================================================================
என்னுடைய ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றி படித்துக்கொள்ளும் வசதி செய்து தரப்பட வேண்டும்.”    
ஸ்டீபன் ஹாக்கிங்
உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் வார்த்தைகள் இவை.

இளம் வயதில் மோட்டார் நியூரான் நோய் தாக்கி தன் உடலின் செயல்பாட்டை இழந்தார். இருந்தபோதும், அறிவியல் மேல் அவருக்கிருந்த காதல் கொஞ்சமும் குறையவில்லை.
தன் 24ம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு பயின்று வந்தபோது 134 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார்.

 “விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்” (Properties of expanding universes) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது நம் அண்டத்தின் மீது நமக்கு அப்போதிருந்த இருந்த அறிவை மேலும் அகலப்படுத்தியது.

எண்ணற்ற பல விடையில்லா கேள்விகளுக்கு விடைகள் தானாகப் புலப்பட்டது. முனைவர் பட்டம் பெற இதையே தன் ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தார்.
இது நடந்த வருடம் 1965.
சென்ற வாரம் வரை, இந்த ஆய்வறிக்கையைப் படிக்க, நகல் எடுக்க ஒரு மாணவன் 65 பவுண்டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்திற்குக் கட்டணமாக செலுத்த வேண்டும். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இதை இலவசமாகப் படித்துக்கொள்ள, தரவிறக்கம் செய்ய அனுமதியளித்துள்ளது.

தன்னுடைய இணையத்தளத்திலேயே இந்த ஆய்வுக் கட்டுரையின் ஸ்கேன் செய்த நகலை வெளியிட்டுள்ளது.
வெளியான ஒரு வாரத்திலேயே, 20 லட்சம் வியூஸ்களைத் தாண்டியுள்ளது இந்தக் கட்டுரை. இதுவரை, சுமார் 5 லட்சம் பேர் இதைத் தரவிறக்கம் செய்துள்ளார்கள்.

அப்படி என்ன இருக்கிறது அந்தக் கட்டுரையில்?    

ஆராய்ச்சிக் கட்டுரை
Photo Courtesy: Cambridge University/Stephen Hawking
விரிவடைந்து கொண்டே இருக்கும் நமது பேரண்டத்தின் பல்வேறு பண்புகளை குறித்து அலசி ஆராய்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை.

அண்டம் விரிவடைவதால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் விளைவுகள் என்னென்ன என்பதைச் சுற்றி பல்வேறு கோட்பாடுகள் மற்றும் விளக்கங்களை முன்வைக்கும் இது, இயற்பியல் உலகில் ஓர் அசாத்திய மைல்கல்.
 இதன் ஒவ்வொரு பகுதியும் எதைக் குறித்துப் பேசுகிறது என்று காண்போம்.
முதல் பகுதி, நம் அண்டம் விரிவடையும் நிகழ்வு எவ்வாறு ஹோயல்-நர்லிகர் அவர்களின் ஈர்ப்புவிசை கோட்பாட்டை (Hoyle-Narlikar theory of gravitation) பாதிக்கிறது என்று விளக்குகிறார்.
இரண்டாம் பகுதியில், ஒரே இயல்புடைய சமநிலையற்ற பிரபஞ்சம் விரிவடைவதால் இயல்பான அதன் பண்புகளில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து விவரிக்கிறார். இதே பகுதியில், சமீபத்தில் உணரப்பட்ட ஈர்ப்புவிசை அலைகள் குறித்தும் அப்போதே பேசியுள்ளார்.

மூன்றாம் பகுதியில் ஈர்ப்புவிசை அலைகள் அணுகுகோட்டுவிரிவின் அடிப்படையில் (asymptotic expansion) நம் அண்டத்தில் எவ்வாறு பரவுகிறது என்று விளக்குகிறார்.
இறுதிப் பகுதியில் விரிவடையும் அண்டங்கள் ஒரு மையப்பகுதியில் குவிந்து (Singularity) நிலைகுலையும் தன்மையைப் பற்றி விளக்குகிறார்.
ஸ்டீபன் ஹாக்கிங்
Photo Courtesy: Hawking.org
இந்த ஆராய்ச்சி முழுவதும் இலவசமாக இணைய உலகத்தில் பகிரப்பட்டதை குறித்துக்கருத்துத் தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங், “இதன் மூலம் இளைய சமுதாயத்தை என் ஆராய்ச்சிகள் ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன்.

நான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் போது, என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது ஐசக் நியூட்டன், ஜேம்ஸ் கிளெர்க் மேக்ஸ்வெல் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றோரின் ஆராய்ச்சிகள்தான்.

இப்பேரண்டத்தில் நாம் எந்தப் புள்ளியில் இருக்கிறோம், எவ்வாறு இருக்கிறோம், மாபெரும் அண்டத்தின் தன்மையை உணர்வது போன்ற புரிதல்களை இந்த ஆராய்ச்சியின் மூலம் பெற்றுவிட முடியும்” என்று தெரிவித்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் மேலும் ஒரு சிறப்பு அம்சம், இது முழுக்க முழுக்க தட்டச்சு செய்யப்பட்ட ஒரு புத்தகம்.

1966ம் ஆண்டில் எழுதப்பட்டதால், அப்போது தட்டச்சில் பல கணிதக் குறியீடுகள் கிடையாது. 
எனவே, அவை மட்டும், தேவையான இடத்தில் கைகளால் எழுதப்பட்டுள்ளன.  
=====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?