சோதனை மேல் சோதனை
சசிகலா உறவினர் வீடுகளில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் பல ஆயிரம் கோடி வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதும், சொகுசு கார்கள் இறக்குமதியில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது. நாடு முழுவதும் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்தாண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து பலர் போலி நிறுவனங்கள் மூலம் கருப்பு பணத்தை மாற்றியிருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதில், சசிகலா, இளவரசி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட போலி நிறுவனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு மூடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இந்த நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மொத்தம் 10 கம்பெனிகள் சசிகலா, இளவரசி மற்றும் அவரது உறவினர்களால் தொடங்கப்பட்டு, பின்னர் மூடப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தினகரன், நடராஜன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா, அண்ணாநகர் பாஸ்கர், கலியபெருமாள் மற்றும் ஆடிட்டர் செல்வம், வக்கீல் செந்தில் மற்றும் ஏராளமான பினாமிகளின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக 147 இடங்களிலும், 3வது நாளாக நேற்று 49 இடங்களில் சோதனை நடந்தது.
இந்த நிலையில், நான்காவது நாளாக இன்றும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயாடிவி அலுவலகம், மகாலிங்கபுரத்ததில் உள்ள விவேக் இல்லம், தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா அலுவலகம், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு கர்சன் எஸ்டேட், புதுச்சேரி லட்சுமி நகைக்கடை உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 10 கம்பெனிகள் மூலம் 1012 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்தது. மேலும், விவேக் கிருஷ்ண பிரியா, மற்றும் உறவினர்களின் வீடுகளில் ரூ.1200 கோடிக்கு முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதை தவிர 15 கிலோ தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், பல ஆயிரம் கோடி வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பது குறித்த ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளையே மலைக்க வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடு மூலம், சசிகலா உறவினர்களுக்கு வரும் வருவாய் குறித்து ஆராய்ந்தால் பல ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடாக வருமானம் மறைமுகமாக ஈட்டி வந்திருப்பது தெரிய வரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார் இறக்குமதியில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்களும் வருமானத்துறையிடம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விவேக் நிர்வகித்து வந்த 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் 20க்கும் மேற்பட்டவை போலியானது என்றும் வருமானவரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த சோதனை முடிந்த பிறகு சிபிஐ, அமலாக்கப்பிரிவுக்கு அறிக்கை அளிக்க வருமான வரித்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும் போது, சசிகலா உறவினர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். மேலும், திவாகரன் மகள் ராஜமாதங்கி வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்துள்ளார். இதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். மேலும், இந்த காரை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதால் அவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார். மேலும் இதுவரை 355 பேரை இந்த சோதனை வளையத்திற்குள் கொண்டுவந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் 190க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. ஈக்காட்டுதாங்கலில் இருக்கும் ஜெயா டிவி அலுவலகத்திலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
ஜெயா டிவி சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
சசிகலா உறவினர் இளவரசியின் மகன் விவேக் தான் இதை நிர்வகித்து வருகிறார்.
மேலும் விவேக் நிர்வகித்து வரும் நமது எம்ஜிஆர் பத்திரிகை, அவருக்கு சொந்தமான ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜெயா டிவி சிஇஓ விவேக்கின் வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை நிர்வகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அனைத்து கணக்குகளும் முறைகேடாக ஆரம்பித்தது இருப்பது தெரிய வந்து இருக்கிறது. தற்போது இந்த கணக்குகள் அனைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் விவேக்,கிருஷ்ணபிரியா வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆவணங்கள் ஆய்வுப் பணி நடக்கிறது. 20 ஆடிட்டர்கள் தலைமையில் 50 பேர் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜெயா டிவியின் சிஇஓவும் இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனை வருமான வரித்துறை விசாரணை நடத்தினர். கடந்த 2015ம் ஆண்டு வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் 11 தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் என்ற பெயரில் விவேக் வாங்கியுள்ளார்.
இதேபோல் விவேக்கிற்கு சொந்தமாக 136 தியேட்டர்கள் உள்ளனன.
ஆனால் தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 3 தினங்களாக நடந்து வரும் வருமான வரித் துறை விசாரணையில் அந்த தியேட்டர்களை குத்தகைக்கு வாங்க கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தினர்.
========================================================================================
இன்று,
நவம்பர்-12.

- ஆஸ்திரியா குடியரசானது(1918)
- சூடான், துனீசியா ஆகிய நாடுகள் ஐ.நா.,வில் இணைந்தன(1956)
- ஜெனீவா, ஐ.நா.,வில் இணைந்தது(1968)
- இணைய வலை ஆலோசனையை ரிம் பேர்னேர்ஸ் லீ அறிவித்தார்(1990)