எதிர்ப்பிற்கு என்ன காரணம்?
சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள, 'பத்மாவதி' படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
உயிரோடு எரிப்போம், தலையை வெட்டுவோம் என்றெல்லாம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.
ஆனால், 111 ஆண்டுகளாக, சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு, நாடகமாக, புத்தகமாக, சினிமாவாக வெளி வந்துள்ளது.
அப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு இப்போது தலை எடுத்தால் கோடி என்று எழுகிறது?
பட விளம்பரத்துக்காக இருக்கலாமோ?
பத்மாவதி படம் இன்னும் தணிக்கைக்கு கூட போகவில்லை.
அதற்குள் ஆட் சேபனைக்குரிய காட்சிகளை கண்டறிந்தது எப்படி ?
இதில் நமது விஸ்வரூபம் வாடை அடிக்கிறது அல்லவா?
தணிக்கையாகும் முன்பே எதிர்ப்பைக் கிளப்ப ஆட்சியாளர்காளால் மட்டும்தான் முடியும்.சித்தூர் கோட்டையை மூடி சுற்றுலாப் பயணிகளை போராட்டக் காரர்கள் விரட்டி அடிக்கும் நிலை அங்குள்ள ஆள்வோர் துணையின்றி நடக்குமா என்ன?
இதற்கு முன்னர் எத்தனையோ ராணி பத்மனி கதைகள் புத்தகம், நாடகம்,திரைப்படம் ,தொலைக்காட்சி தொடராக பலவடிவங்களில் வந்துள்ளது.நமது தமிழில் கூட 'சித்தூர் ராணி பத்மினி' என்று வந்துபோயுள்ளது.
அதற்கில்லா எதிர்ப்பு இப்போது தலை விரித்து ஆடி தலைவாங்குமளவு போவது பின்னணி இல்லாமலா இருக்கும்.?
கடந்த, 1906ம் ஆண்டு பெங்காலி மொழி கவிஞரும், நாடக ஆசிரியருமான கிஷிரோத் பிரசாத் வித்யாவினோத் என்பவர், பத்மினி வாழ்க்கை வரலாற்றை நாடகமாக வெளியிட்டார்.
தற்போது எதிர்ப்பு கூறப்படும் அலாவுதீன்கில்ஜி, சித்தூர் ராணா, ராணி பத்மினி ஆகியோரை சுற்றியே இந்த நாடகத்தின் கதை களம் இருந்தது.
1909ம் ஆண்டு அபனிந்திரநாத் தாகூர் என்பவர், ' ராஜ் கஹானி' என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
இதுவும், ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தான் கூறியது.
கடந்த, 1963ம் ஆண்டு, 'சித்தூர் ராணி பத்மினி' என்ற பெயரில் தமிழ் திரைப்படம் வெளியானது.
இதில், பத்மினியாக, நடிகை வைஜெயந்தி மாலா, பத்மினியின் கணவர் ராணா ரத்தன் சிங்காக, நடிகர் சிவாஜி, அலாவுதீன் கில்ஜியாக, எம்.என்.நம்பியார் ஆகியோர் நடித்தனர்.
இந்த படத்திற்கு அப்போது எந்த எதிர்ப்பும் இல்லை.
இந்த திரைப்படம் வெற்றியம் பெறவில்லை.
அதற்கு ஒரு ஆண்டுக்கு பிறகு, 'மகாராணி பத்மினி' என்ற பெயரில் இந்தி திரைப்படம் வெளியானது. இதில், பத்மினியாக அனிதா குஹா, அவரது கணவராக ஜெய்ராஜ், கில்ஜியாக சாஜன் ஆகியோர் நடித்தனர்.
இந்த படமும் வெற்றி படமாக அமையவில்லை.
இருப்பினும், முகமது ரபி, ஆஷா பேஸ்லே, சுமன்கல்யாண்புர், உஷா மங்கேஷ்கர் ஆகியோரின் பாடல்கள் பிரபலமாகின.
இந்த படத்திற்கும் எந்த எதிர்ப்பும் இல்லை.
இதன் பிறகு, 2009ம் ஆண்டு சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் என்ற நிறுவனம் சார்பில், ' சித்துத் கி ராணி பத்மினி கா ஜோஹுர்' என்ற பெயரில் ஒரு 'டிவி' தொடரை துவக்கியது.
ஆனால், படபிடிப்பு செலவுக்கு ஏற்றவாறு, டி.ஆர்.பி., ஆதரவு இல்லாததால், இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த தொடர்களுக்கும் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
ஷியாம் பெனகல், சித்தூர் ராணி பத்மினி கதையை 'டிவி' தொடராக வெளியிட்டார்.
'பாரத் ஏக் கோஜி' என்ற பெயரில் வெளியான அந்த தொடரில் அலாவுதீன் கில்ஜியாக நடிகர் ஓம்பூரி, பத்மினியாக சீமா கேல்கர், ரணா ரத்தன் சிங்காக, ராஜேந்திர குப்தா ஆகியோர் நடித்து இருந்தனர்.
பத்மாவதி படத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:
"இந்தப்படம் இதுவரை மத்திய தணிக்கை குழுவின் சான்றிதழை பெறவில்லை. அந்நிலையில் இதுபற்றி முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர இயலாது. எனவே தடை செய்ய கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறோம் "
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:
"இந்தப்படம் இதுவரை மத்திய தணிக்கை குழுவின் சான்றிதழை பெறவில்லை. அந்நிலையில் இதுபற்றி முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர இயலாது. எனவே தடை செய்ய கோரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறோம் "
என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் |
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பத்மாவதி எனும் ராணி வரலாறு என்ன தெரியுமா?
- மாலிக் முகமது ஜெயசி எனும் இஸ்லாமிய சூஃபி கவிஞர் மத்திய இந்தியாவில் பேசப்படும், தற்போது இந்தியின் ஒரு அங்கமாகக் கருதப்படும் 'அவதி' மொழியில், 16-ஆம் நூற்றாண்டில் எழுதிய 'பத்மாவத்' எனும் கவிதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய ராஜஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் மேவார் சாம்ராஜ்யத்தின் ராணி பத்மாவதி, ராஜபுத்திர மன்னர் ரத்ன சிம்மாவின் மனைவி என்று ராஜபுத்திரர்கள் கூறுகின்றனர். வாய் வழி வரலாற்றில் அவர் ரத்தன் சிங் என்று அறியப்படுகிறார்.
- ரத்தன் சிங் போரில் கொல்லப்பட்டபின், ராணி பத்மாவதியை அடைவதற்காக டெல்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜி மேவார் சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய சித்தோர்கார் மீது படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து தப்பிக்க பத்மாவதி தனது கணவனின் சிதையில் உடன் கட்டை ஏறியதாக ராஜபுத்திரர்கள் நம்புகின்றனர்.
- அவருடன் பல ராஜபுத்திர பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு கொளுத்திக்கொண்டு இறந்ததாக ராஜஸ்தானில் ஒரு வாய்வழி வரலாறு சொல்லப்படுகிறது.
- அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மாவதிக்கு இடையே உறவு இருந்ததாக தவறான செய்தி இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதாகவும், ராணி பத்மாவதியை தெய்வமாக வணங்கும் ராஜபுத்திரர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
- பத்மாவதி கற்பனை பாத்திரம்தான், அவர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- கடந்த ஜனவரி மாதம் பத்மாவதி படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கிய கர்னி சேனா அமைப்பினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் தாக்கி அவரின் சட்டையைக் கிழித்தனர்.
- கர்னி சேனா அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா, சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று வியாழன்று கூறியிருந்தார்.
- சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.
- யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அம்மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், சட்டம் - ஒழுங்கு நிலையை கருத்தில்கொண்டு அத்திரைப்படம் அந்த நாளில் வெளியிடப்படக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளது.
- இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் "எனக்கு தீபிகாவின் தலையை (உயிரை) பாதுகாக்க வேண்டும். அவரின் உடலைவிட உயிருக்கு மதிப்பளிக்கிறேன்.அதைவிட அவரது சுதந்திரத்தை. அதை அவருக்கு கிடைப்பதற்கு மறுக்காதீர்கள்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
======================================================================================
இன்று,
நவம்பர்-22.
- சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன(1574)
- அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
- இந்திய அரசியல்வாதி முலாயம்சிங் பிறந்த தினம்(1939)
- லெபனான் விடுதலை தினம்(1943)
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)
=======================================================================================
தொலைபேசி எண் டைரக்டரி
டெலிபோன் டைரக்டரியில் வாடிக்கையாளர்களின் பெயர் முகவரி, தொலைபேசி எண்களின் பட்டியல் இருக்கும்.
தொலைபேசி கண்டு பிடிக்கப்பட்ட 2 ஆண்டுகளில் அதாவது 1878ம் ஆண்டு முதல் டெலிபோன் டைரக்டரி அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தின் நியூஹவேன் நகரில் வெளியிடப்பட்டது.
அதில் 50 வாடிக்கையாளர்களின் விவரங்கள் இருந்தன.
அதேபோல் இங்கிலாந்தில் 1880ல் வெளியிடப்பட்ட முதல் டைரக்டரியில் 248 பெயர்கள் இருந்தன.
* இந்தியாவில் டைரக்டரி வெளியிடப்பட்ட ஆண்டு விவரம் இல்லை.
ஆனால் சில தாள்களாக இருந்த டைரக்டரி 1933ம் ஆண்டுகளில் புத்தகமாக வெளியானது. ஒருக்கட்டத்தில் சென்னை மாநகருக்கு மட்டும் தலையணை அளவில் 3 புத்தகங்கள் தரப்பட்டன. பின்னர் சிடிகளாகவும் வழங்கப்பட்டன.
2007ம் ஆண்டுக்கு பிறகு முதல் டைரக்டரி வழங்குவது நிறுத்தப்பட்டது.
திருக்குறள எழுதுனது பாரதியார்தான்-பாஜக