குஜராத் தேர்தல்: பூதம்?

குஜராத் மாநிலத் தேர்தல்கள் டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. 
குஜராத் மாநிலத்தில் தேர்தல் பயம் பாஜகவைத் தொற்றியுள்ளது. 

ஆகையால் தான் மோடியும், அமித்ஷாவும் குஜராத்திற்கு பல முறை பயணம் செய்தனர். 


பல நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மைக்ரோ பாசனம் செய்பவர்களுக்கு, அக்கருவிகளின் மீதான ஜிஎஸ்டி நீக்கம்.விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு 0 சதவீத வட்டி. 

பருத்தி ஒரு குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.500/-இப்படி விவசாயிகளுக்கான நலத்திட்ட அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தன. இவை மோடியின் தேர்தல் கால தந்திரங்கள்.

ஆனால் யதார்த்த நிலை என்னவென்றால் மோடியின் எந்த வித்தையும் குஜராத்தில் எடுபடப் போவதில்லை என்பதுதான்.குஜராத்தில் விவசாயம் - ஜிடிபி வளர்ச்சியானது 2002-2003லிருந்து 2013-14 வரை 8 சதவீதமாக இருந்தது. 

ஆனால் 2014-15ல் இவ் வளர்ச்சியானது குறைந்துள்ளது.
மத்திய அரசின் விவசாய புள்ளிவிபர அறிக்கை 2016ன்படி குஜராத்தில் விவசாயிகளின் வருமானம் ரூ.7926/-. 
இதுவே பஞ்சாபில் ரூ.18,059/- ஆகவும், 
ஹரியானாவில் ரூ.14,434/- ஆகவும், 
கேரளாவில் ரூ.11,888/- ஆகவும் உள்ளது. 
இதுவே குஜராத்தில் விவசாயிகளின் நிலையினை விளக்குவதாக உள்ளது. 

ஜனவரி 5, 2017ன்படி, குஜராத்தில் நான்கில் ஒரு பங்கு விவசாயிகளே ‘‘பிரதம மந்திரி பாசல் பிம யோஜனா திட்டத்தின்’’ கீழ் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். 
பயிர்க்காப்பீடு செய்துள்ள 11.9 லட்சம் விவசாயிகளில் 11.89 லட்சம் பேர் வங்கிக் கடனுடன் உள்ளனர்.2014-15, 2015-16 ஆண்டுகளில் மழை பொய்த்தது பிரச்சனைகளை அதிகரித்தது. கடன்களுக்கான வட்டி தள்ளுபடி என்பது ஒரு இடைக்கால நிவாரணம்தான்.


60 சதவீதத்திற்கும் மேலான விவசாயிகள் லேவாதேவிக்காரர்களிடமே கடன் வாங்குபவர்களாக உள்ளனர். ரிசர்வ் வங்கியானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 8 சதவீதம் வங்கிக் கடன் என இலக்கு நிர்ணயித்தபோதிலும் செப்டம்பர் 2016 நிலவரப்படி 5.44 சதவீத வங்கிக் கடனே விவசாயிகளை சென்றடைந்துள்ளது. 

தனியார் லேவாதேவிக் காரர்களிடம் கடன் வாங்கியுள்ள பெரும்பான்மையான விவசாயிகளுக்கு அரசு அறிவிக்கும் தள்ளுபடியின் பயன்கள் கிடைக்காது.பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் மேலே மத்திய அரசு ஒரு போனஸ் தொகையை அறிவித்துள்ளபோதிலும் பெரும்பான்மையான பருத்தி விவசாயிகளுக்கு அதன் பலன் கிடைக்கப்போவதில்லை.

அரசு நிறுவனமான இந்திய பருத்திக் கழகம் பருத்தி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யுமா என்கின்ற சந்தேகம் விவசாயிகளுக்கு உள்ளது.

காரணம் இன்றுவரை அந்நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. ஆகையால் விவசாயிகள், தனியார் ஏஜெண்ட்டுகள் மூலம் விற்றே ஆக வேண்டிய நிலைமை. அவ்வாறு ஏஜெண்ட்டுகள் மூலம் விற்பதில் அரசு நிறுவனத்தில் உள்ளதுபோல் சம்பிரதாயங்கள் அதிகம் இல்லை என நினைக்கின்றனர். 

ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பயிர்களை இழந்த மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கும் அரசின் சலுகை பலன்கள் கிடைக்கப் போவதில்லை.

அரசு என்ன விலையில் கொள்முதல் செய்ய உள்ளது என்கின்ற விபரமே விவசாயிகளில் பலருக்கு தெரியவில்லை. மேலும் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு குறைந்தபட்சம் 10 கிலோமீட்டர் தூரமாவது செல்ல வேண்டியுள்ளது.

அதற்கான போக்குவரத்துச் செலவினையும் விவ சாயிகளே செய்ய வேண்டியுள்ளது.விவசாயிகளின் துயரம் தொடர்கதையாகவே உள்ளது.கடந்த 22 வருடங்களில் 20 வருடங்கள் குஜராத் மாநிலத்தில் பாஜகவே ஆட்சியில் இருந்துள்ளது. 

மோடியின் தலைமையில் 10 வருடங்கள் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. 
பாஜகவினரால் குஜராத் மாநிலமானது ஒரு மாடல் மாநிலமாக சித்தரிக்கப்பட்டது. 

மாடல் மாநிலமான குஜராத்திலேயே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முடியாத மோடி, விவசாயிகளின் வரு மானத்தை 2022ல் இரட்டிப்பாக்குவேன் எனச் சொல்வது மோசடிதானே? 

குஜராத் சட்டமன்றத்தேர்தல் பூதம் மோடியையும், அவரது பரிவாரத்தை யும் துரத்தோ துரத்தென்று துரத்துவதைக் காண முடிகிறது.
நன்றி:தீக்கதிர்,
======================================================================================
ன்று,
நவம்பர்-21.


  • இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் இறந்த தினம்(1970)

  •  ஹலோ தினம்

  •  மீனவர்கள் தினம்

  •  தொலைக்காட்சி தினம்

=======================================================================================


இயற்பியலாளர் சி.வி.ராமன்
சந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார். 
சந்திரசேகர் ஐயர் மற்றும் பார்வதி அம்மா அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.
சந்திரசேகர வேங்கட ராமன் அவர்களின் தந்தை கணிதம் மற்றும் இயற்பியலில் ஒரு பேராசிரியராக இருந்தால், அவர் வீட்டில் ஒரு கல்வி சூழலைக் கொண்டிருந்தார். அவர் 1902 ஆம் ஆண்டு, சென்னையிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். 
1904ஆம் ஆண்டு, பி.ஏ பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்று முதல் மாணவனாக திகழ்ந்த இவர், இயற்பியலுக்கான தங்கப்பதக்கதையும் பெற்றார். நிறைய மதிப்பெண்கள் வித்தியாசத்தில் 1907 ஆம் ஆண்டு எம்.ஏ பட்டம் பெற்றார்.
இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. அதனால், 1907 ஆம் ஆண்டு, ராமன் அவர்கள் இந்திய நிதித் துறையில் சேர்ந்தார். 

அவரது அலுவலக நேரம் முடிந்த பிறகு, அவர் கல்கத்தாவில் அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய சங்கத்தின் ஆய்வகத்தில் அவரது பரிசோதனை ஆய்வை மேற்கொண்டார். 
அதே ஆய்வகத்தில் அவர் ஒலியியல் மற்றும் ஒளியியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.
1917 ல், கல்கத்தா பல்கலைக்கழகம் சி.வி.ராமன் அவர்களுக்கு இயற்பியலில் ‘சார் தரக்நாத் பாலித் பேராசிரியர்’ என்ற பதவியை வழங்கியது. அடுத்த பதினைந்து ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்தார். அங்கு அவர் இருந்த காலத்தில், அவரது ஒளியியல் மற்றும் ஒளி சிதறலுக்கான ஆராய்ச்சிப் பணி உலக அளவிலான அங்கீகாரத்தை பெற்றது. 
லண்டன் ராயல் சொசைட்டியால் அவர் 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால்  இவருக்கு “நைட் ஹீட்” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது. 1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு  ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. 
பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.
1930ல் பெங்களூரில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகத்தில், சி.வி. ராமன் அவர்கள் இயக்குனராக சேர்ந்தார். 
பின்னர், இயற்பியல் பேராசிரியராக அங்கு இரண்டு வருடங்கள் பணியில் தொடர்ந்தார். 1947 ஆம் ஆண்டில், அவர் சுதந்திர இந்தியாவின் புதிய அரசாங்கத்தில் முதல் தேசிய பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 
1948 ஆம் ஆண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட்டில் இருந்து  ஓய்வு பெற்றார். பின்னர், ஒரு வருடம் கழித்து,  பெங்களூரில் ‘ராமன் ஆராய்ச்சி நிலையம்’ நிறுவி, அங்கு அவர் தனது மரணம் வரை பணிபுரிந்தார்.
வம்பர் 21, 1970 அன்று இறந்தார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?