‘‘பெயில் இன்’’

புதிய சொல்......!புதிய அபாயம்...?

வங்கிகளின் வராக்கடன்கள் வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடுகின்றன. 

எவ்வளவோ விதிமுறைகள் இருப்பினும் பெரு நிறுவனங்களுக்கு கொடுத்த கடனில் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரைதான் வசூலிக்க முடிகிறது. 

இப்படிக் கடனைத் திரும்பிச் செலுத்தாத நிறுவனங்களை மீண்டும் கடன் பெற முடியாமல் கறுப்புப் பட்டியலில் வைக்க முடியவில்லை. அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் அந்நிறுவனங்களின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருப்பதையும் இக்கடன் வசூல் முறைமையில் தடுப்பதற்கு வழியில்லை. 

இதற்காக ரிசர்வ் வங்கி உருப்படியாக எந்த வழிகாட்டுதலையும் வங்கிகளுக்கு அளிக்கவும் இயலவில்லை.

 இப்படி இவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாத சூழலில், அரசாங்கம் பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாகவோ, பத்திர வெளியீடுகள் வாயிலாகவோ வங்கிகளைக் கரையேற்றி வருகின்றன. இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கவலைப்பட வேண்டிய விசயம்.


இப்போது வங்கிகளில் வைப்புத் தொகை போட்டிருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய புதிய அபாயம், புதிய சட்டத்தின் உருவில் வந்துள்ளது. 
“நிதி நிலை தீர்ப்பு மற்றும் வைப்புத் தொகை காப்பு சட்டவரைவு-2017” (FINANCIAL RESOLUTION AND DEPOSIT INSURANCE - (FRDI) BILL 2017) என்பதேயாகும் அது.
இதற்கு அமைச்சரவை ஒப்புதல் தந்தது. நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது இரு அவைகளின் கூட்டுத் தெரிவுக் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

இதில் என்ன புதிய அபாயம்? 
இதுவரை கரையேற்றுவதைத் தான் (BAIL OUT) கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தற்போது கரையிறக்குவது (BAIL IN) என்ற கோட்பாடு சொல்லப்படுகிறது. “
பெயில் அவுட்” என்றால் அரசாங்கமோ வேறு வெளி நிதியாதாரங்கள் வாயிலாகவோ தீர்வு தருவது என்பதாகும். “பெயில் இன்” என்பது டெபாசிட்தாரர்கள் தலையிலேயே கைவைப்பது. 

அவர்களுக்கு டெபாசிட் பணத்தைத் திருப்பத் தராமல் பத்திரங்களையோ, முன்னுரிமைப் பங்குகளையோ அளிப்பதாகும். 
அதாவது, நெருக்கடி ஏற்படும்போது வங்கியோ, காப்பீட்டு நிறுவனமோ தன்னுடைய மூலதனத்தைக் காப்பாற்றுவதுதான் முக்கியம். டெபாசிட் தாரர்களின் சேமிப்பைக் காப்பாற்றுவது முக்கியம் அல்ல.

ஒரு நகைச்சுவையை நாம் படித்திருப்போம். ஒரு கிராமத்து விவசாயி வங்கியில் கடன கேட்கிறான். மேலாளர் “உன்னிடம் கடனுக்குப் பிணையாக என்ன இருக்கிறது?” என்று கேட்கிறார். 
விவசாயி “என்னிடம் நிலம், ஆடு, மாடுகள் உள்ளன” என்கிறார். 

சிறிது காலத்திற்குப் பிறகு விவசாயியிடம் பணம் கொஞ்சம் சேர்ந்திருக்கிறது. அதை வங்கியில் சேமிப்பாகப் போடச் செல்கிறார். வங்கி மேலாளரைப் பார்த்து இப்போது விவசாயி கேட்கிறார். “உங்களிடம் எவ்வளவு மாடுகள் இருக்கின்றன?”. நகைச்சுவை இன்று யதார்த்தமாகிவிட்டது. 

ஏனெனில் வங்கியில் போடப்படும் பணத்திற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை என்கிற நிலைமை. 
ஒரு வங்கியில் பணம் போடும்போது ஒரு வங்கி எவ்வளவு வராக்கடன் வைத்திருக்கிறது? 
அது இலாபத்தில் இயங்குகிறதா? 

என்பதையெல்லாம் பார்த்துவிட்டுதான் வங்கியில் பணத்தைப் போட வேண்டும்.இப்போது வங்கிகள் ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் நட்டக் கணக்கைக் காண்பித்து வருகின்றன. ஏற்கெனவே ஆறு பொதுத்துறை வங்கிகளை “திருத்த நடவடிக்கைகள்” தேவைப்படுகிற பட்டியலில் ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. 

ஜூன் 2017 வரையான காலத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவே 1,88,068 கோடிகளை வராக்கடன்களாக வைத்துள்ளது.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் மூன்று நாயகர்கள் வருவார்கள். 
இப்பொழுது நடக்கும் “வங்கி நாடகமும்” அது போன்றதே. அரசாங்கம், கடன்கார பெருநிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் ஆகிய மூன்று நாயகர்கள். முதல் இரு நாயகர்களும் அத்துமீறல்களைச் செய்துவிட்டு அமர்க்களமாக, கௌரவமாக வலம் வருகிறார்கள். 

உண்மையான பலிகடா மூன்றாவது நாயகர்தான். அவர்தான் சோகப்பாட்டு பாடப் போகிறார்.டெபாசிட்தாரர்கள் இல்லாமல் ஒரு வங்கி இயங்க முடியுமா? 
மற்ற நிறுவனங்களுடன் வங்கிகளை ஒப்பிடக்கூடாது. ஒரு நிறுவனம் தான் என்ன என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதை தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். 

ஆனால் வங்கிகள் தங்களுடைய கடன் கொள்கை என்ன என்பதை டெபாசிட்தாரர்களுக்குச் சொல்லுகிறதா? 
ஒன்றுமறியா வாடிக்கையாளர்கள் மீது “பெயில் - இன்” சுமையைத் தூக்கி வைப்பது என்ன நியாயம்! 
தொழில் தர்மம்!

“மகளிர் மட்டும்” திரைப்படத்தில் குடித்துவிட்டு வருகிற கணவன் வீட்டிற்கு வந்தவுடன் மனைவியைப் பார்த்து அழுவான். 

அதுபோல அரசாங்கமும், கடன் செலுத்தாத நிறுவனங்களும் நடிக்கிறார்கள். 
உண்மையில் பாதிக்கப்படப்போகிறவர்கள் வாடிக்கையாளர்களே!

நன்றி:தீக்கதிர்,
=======================================================================================
ன்று,
நவம்பர்-11.

  • வாஷிங்டன், அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
  • போலந்து விடுதலை தினம்(1918)
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்(1930)
  • மாலத்தீவு குடியரசு தினம்(1968)
  • நடிகர் எஸ்.ஏ.அசோகன் இறந்த தினம்.(1982)
  • ========================================================================================
 நடிகர் எஸ்.ஏ.அசோகன்,                                                 திருச்சியில், 1931 மே 20 ல் பிறந்தார். 

சிறுவயது முதலே, மேடை நாடகங்களில் பங்கேற்பதிலும், பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டினார். 

திருச்சி புனித சூசையப்பர் கல்லுாரியில், இளம்கலை பட்டப்படிப்பை முடித்தார். 

இவரை, சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர், இயக்குனர், டி.ஆர்.ராமண்ணா.அவ்வையார் என்ற படத்தில் அறிமுகமானார். 

1961ல் வெளியான, கப்பலோட்டிய தமிழன் படம் மூலம் பிரபலமானார். 
1960 மற்றும், 1970களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். 

குணசித்திர வேடங்களிலும் நடித்தவர்.படங்களில் அவரது குரல் தொனியும், வசனங்களை அவர் உச்சரித்த பாணியும் நல்ல பெயரை பெற்று தந்தது. 

உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, வல்லவனுக்கு வல்லவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர். 
1982 நவ., 11ல் காலமானார். 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?