புராணம் முதலே தீவிரவாதம்?

என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தலைப்பில் நடிகர் கமல்ஹாசன், விகடன் ஏட்டில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். 
அதனொரு பகுதியாக அவரிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

இந்த வாரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுப்பிய கேள்விக்கு கமல் பதில் அளித்திருந்தார்.

“நீங்கள் பல முனைகளில் பயனுள்ள தலையீடுகள் செய்வதில் மகிழ்ச்சி. சீர்திருத்தத்திலும் மாற்றங்களிலும் தமிழ்நாட்டின் பல இயக்கங்களின் சரித்திரத்தை நீங்களும் உணர்ந்தவரே. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டையும் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல சமூகங்கள் ஊக்கத்திற்கும் உத்வேகத்திற்கும் தமிழகத்தை எதிர்பார்த்திருக்கின்றன. 
எனினும், சமீபகாலமாக இனவாத பேதமும் பிற்போக்குத்தனமும் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி செய்வதைப்பார்க்க முடிகிறது. இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவதன்மூலம் திராவிடப் பண்பாட்டை பலவீனப்படுத்துகின்றன. ஒரு சமூக ஆர்வலராக இது பற்றிய உங்கள் கருத்து என்ன?” என்றுமுதல்வர் பினராயி விஜயன் கேட்டிருந்தார்.

அதற்கு கமல் நீண்ட பதிலை அளித்திருந்தார்.

அதில் ஓரிடத்தில், “முன்பெல்லாம் இத்தகைய இந்து வலது சாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். ‘எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. 
இந்தத் தீவிரவாதம், இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் வெற்றியோ முன்னேற்றமோ அல்ல. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நம்பிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கிவிடும். 
மாறாது நடப்பது மாற்றம் மட்டுமே. 

எத்தனை பேர் முயன்று அதைப் பின்னோக்கித் தள்ளினாலும். சுழலும் இவ்வுலகின் ஈர்ப்பு அதை முன்னோக்கித் தள்ளிவிடும்.
மீண்டும் தமிழகம் சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாகும் நாள் வெகுதொலைவிலில்லை. இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய்க் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துகள்.” 
என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்து தீவிரவாதிகளும் உருவாகி விட்டார்கள் என்ற கமலின் இந்த கருத்துக்கு, பாஜக, சிவசேனை கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

“கமல்ஹாசன் இதற்காக மன்னிப்பு கேட்பதோடு தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும்” என்று பாஜக-வினர் கூறியுள்ளனர். 
“கமல் ஹாசன் மனநிலை நிலையற்று உள்ளது; அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்” என்று பாஜக தலைவர்களில் ஒருவரான வினய் கத்தியார் விமர்சித்துள்ளார்.

“இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அரசியலுக்கு உதவாது. 
இந்து தீவிரவாதம் என்று பேசியதால்தான் காங்கிரஸ் இன்று அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது” என்று சிவசேனை செய்தித்தொடர்பாளர் மனிஷா கயண்டே கூறியுள்ளார்.

“முன்பெல்லாம் இந்து வலது சாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலம் எதிராளியைத்தான் வன்முறையில் ஈடுபட வைத்தனர்” என்று கமல் கூறியிருப்பதே அரைகுறையான புரிதல் என்று எதிர் புறத்திலும்  விமர்சனம் எழுந்துள்ளது.

இந்து மதம் உருவாக்கிய சாதி என்ற அமைப்பானது, ஒவ்வொரு நிமிடமும் அடுத்தவர் மீது வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது; 
அதற்கு எதிராக போராடியவர்களை எல்லாக் காலத்திலும் ஈவிரக்கமின்றி வேட்டையாடி ரத்தம் குடித்துள்ளது; 
ஏகலைவன், சம்புகன், நந்தன் என்று புராணத்திலும், நடப்புக் காலத்திலும்கூட ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் என்று இந்தியாவின் வரலாறே அதுவாகத்தான் இருக்கிறது. 

அப்படியிருக்க இப்போதுதான், புதிதாக  இந்து சமயத்தின் பெயரால் நேரடியாக வன்முறை நடக்கிறது கூறுவது சரியாக இருக்குமா என்பதே எதிர்வாதம் .
ஆனால் மத்தியில் காவி கட்சியினர் ஆட்சிக்கு வந்தபின்னர் இதுவரை அடக்கமாக பல்வேறு காரணங்களை கூறி செயல்பட்ட இந்து தீவிரவாதம் அதிகாரவர்க்க துணையுடன்,துணிவாக தங்கள் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதையே கமல்ஹாசன் அவ்வாறு "இனி இந்து தீவிரவாதம் இல்லை என்று சொல்லமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார் . 
====================================================================================
யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ள உத்தரப்பிரதேசத்தில் பொதுத்துறையும் காவிமயமாக்கப்படுகிறது. - காவியில் மூழ்கடிக்கப்படுகிறது. 

முதலமைச்சர் அலுவலகம் காவிநிறம் பூசப்பட்டது. அரசுத் தலைமைச் செயலகத்தோடு இணைந்த லால்பகதூர் சாஸ்திரி பவன் கட்டடம் பாரம்பரியமாக இருந்துவந்த நீலநிறத்தையும் வெள்ளையையும் மறைத்து இப்போது காவிநிறம் பூசப்பட்டுவிட்டது. 

வெளிப்புறச் சுவர் முதல் மேல்தளம் வரை எல்லாமே காவி பூசப்பட்டுவிட்டது.

மகாராஜ் ஜீ என்று அழைக்கப்படும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காவி உடை அணிவதால் அவரது அலுவலகத்தில் உள்ள தொங்கும் திரை, டவல், ஷீட் கவர்கள் உள்ளிட்டவை காவிக்கு மாற்றப்பட்டுள்ளன. 

ஒருவேளை காவிநிறம் கிடைக்காவிட்டால் அதைச் சார்ந்த வேறு நிறத்தைச் சரியாகத் தேர்வுசெய்வதில் அதிகாரிகள் சிரமப்படுகிறார்கள். அண்மையில் யோகி ஆதித்யநாத் 50 காவிநிற பஸ்களைத் துவக்கிவைத்தார். அப்போது துவக்கவிழா மேடை முழுவதும் நிறம் காவிமயமாகத்தான் இருந்தது.ஆதித்யநாத் ஆட்சியில் கல்வித்துறையும் காவிமயம்தான். 

அரசாங்கத்தின் நூறு நாட்களை முன்னிட்டு பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட புத்தகப் பைகளும் காவிநிறம்தான். 

பாடப்புத்தகங்களில்கூடக் காவிமயமா என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு காவிநிறம் பூசுவது சரியல்ல என்று சமாஜ்வாதி தலைவர் ராஜேந்திர சௌத்ரி குற்றம்சாட்டியுள்ளார். 

ஒரு அரசியல் கட்சியுடன் சம்பந்தப்பட்ட பிரத்தியேக நிறத்தை பொதுஸ்தாபனத்திற்குப் பூசுவது சரியல்ல என்று காங்கிரஸ் பிரமுகர் துவிஜேந் திரிபாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கறுப்புத் தார்ச் சாலையையும் இனி காவிக்கு மாற்றிவிடுவார்களோ என்று மாநில மக்கள் கண்டன தொனியில் நையாண்டியாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்,
=======================================================================================
ன்று,
நவம்பர் -03.
  • "பாம்பே டைம்ஸ்" முதன் முதலில் வெளியிடப்பட்டது (1838)
  • பாம்பே டைம்ஸ் பெயர் " டைம்ஸ் ஆஃப் இந்தியா" என மாற்றப்பட்டது(1861)
  • பனாமா விடுதலையானது (1903)
  • அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)
  • போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)
  • பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பிறந்த தினம் (1930)

அமர்த்தியா சென், மே.வங்க மாநிலம், சாந்திநிகேதன் என்ற இடத்தில், அஷுதோஷ் சென் - அமிதா தம்பதிக்கு, 1933 நவ., 3ல் பிறந்தார். 

கோல்கட்டா பிரசிடென்சி கல்லுாரியில், பொருளாதாரம் - மேஜர் மற்றும் கணிதத்தில் - மைனர், பி.ஏ., பட்டம் பெற்றார். 
கேம்பிரிட்ஜிலுள்ள டிரினிட்டி கல்லுாரியில், துாய பொருளாதாரத்தில் மற்றொரு, பி.ஏ., பட்டத்தைப் பெற்றார்.

டில்லி பல்கலையிலும், டில்லி பொருளாதார பள்ளியிலும் பேராசிரியராக பணி புரிந்தார். 

1970ல், அவரது முதல் புத்தகமான, 'கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோஷியல் வெல்பேர்' என்ற படைப்பை வெளியிட்டார். 

1972ல், லண்டன் பொருளாதார பள்ளியில், பேராசிரியராக சேர்ந்து, 1977 வரை பணிபுரிந்தார்.

பின், ஆக்ஸ்போர்டு பல்கலையிலும், ஹார்வர்டு பல்கலையிலும் பணி புரிந்தார். 
நோபல் பரிசு பாரத ரத்னா விருது உள்ளிட்டவற்றைப் பெற்றவர். 
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?