நீரோவின் பிடில்
நம்புங்கள்!
ஊழலுக்கு எதிரானது பாஜக.
தி வயர்' இணையதளம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஊழலுக்கு எதிரானது பாஜக.
தி வயர்' இணையதளம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்திவரும் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அமித்ஷா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது மற்றொரு பூதம் வெளிவந்துள்ளது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் மகன் ஷவுர்யா தோவால் நடத்திவரும் இந்தியா ஃபவுண்டடேஷன் அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இயக்குநராக இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து 'தி வயர்' இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ''இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து ஸ்பான்ஸர் பெறுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர் பெற்று நடத்தப்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சரே இயக்குநராக இருப்பது, விதிமீறல் இல்லையா?.
நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல மேலும் மூன்று அமைச்சர்கள் இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர்.
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஆகியோரும் இந்நிறுவனத்தின் பிற இயக்குநர்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ராம் மாதவ் வாரணாசியும் இயக்குநராக உள்ளார்'' எனக் கூறப்பட்டுள்ளது.
ஷவுர்யா தோவால் நிறுவனத்துடன் மத்திய அமைச்சர்கள் கொண்டுள்ள வியாபாரத் தொடர்புகுறித்து, தி வயர் விளக்கம் கேட்டதாகவும், அமைச்சர்களிடம் இருந்து செய்தி வெளியிடும் வரை எந்தப் பதிலும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன், இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளைத் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளதோடு, பணப் பரிவர்த்தனையும் கொண்டுள்ள அறக்கட்டளை இது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன், புதுடெல்லி ஹேலே சாலையில் உள்ள டோனி அடுக்குமாடிக் குடியிருப்பில் நிர்மலா சீதாராமன் வசித்துவந்தார்.
2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரானதால், அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.
தற்போது அமைச்சரான நிர்மலா சீதாராமன் அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தியா ஃபவுண்டேஷன் அலுவலகம் செயல்பட்டுவருகிறது.
பிரதமரின் தேசிய பாதுகாப்புச் செயலர் மகன் நடத்திவரும் அறக்கட்டளையில் மத்திய அமைச்சர்களே இயக்குநர்களாக இருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின்போது, இந்தியர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
நியூயார்க் பயணத்தின்போது, மேடிசன் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சி, சான்பிரான்ஸிஸ்கோவில் சிலிக்கான்வேலி நிறுவனங்களின் இந்தியத் தலைவர்களுடன் மோடி பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி, பிரான்ஸ் சுற்றுப்பயணம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை இந்நிறுவனம்தான் ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அரசிடமும் பிரதமரிடமும் அஜித் தோவாலுக்குள்ளச் செல்வாக்கை தனக்கு சாதகமாக ஷவுர்யா தோவால் பயன்படுத்தியுள்ளார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.
===============================================================================
நீரோவின் பிடில்
அரசின் அலட்சியம்
அரசின் அலட்சியம்
மக்கள் துயரம்
"சென்னை மீண்டும் 2015 வெள்ளம் காலத்துக்கு போய் விடுமோ என்று பயத்தில் தவிக்கையில் முதல்வரும் ,அமைசசர்களும் எம்ஜிஆர் நூற்ராண்டு விழாக் கொண்டாத்தில் தலைநகரை விட்டு விலகியே இருந்து பிடில் வாசிக்கிறார்கள்."
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதல் 3 நாள் மழைக்கேசென்னையும் புறநகர் பகுதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாவெள்ளத்தின்போது 1கோடிக்கும் அதிகமானமக்கள் பாதிக்கப்பட்டனர்.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாவெள்ளத்தின்போது 1கோடிக்கும் அதிகமானமக்கள் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 4லட்சம்குடிசைகள் சேதமடைந்தன. 27 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அதன்பின்னரும்தமிழக அதிமுக அரசு விழித்துக்கொள்ளவில்லை.
பருவமழைக்கு முன் எடுக்கவேண்டியமுன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாதகாரணத்தால் கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் பலியாகியுள்ளனர்.
பருவமழைக்கு முன் எடுக்கவேண்டியமுன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாதகாரணத்தால் கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் பலியாகியுள்ளனர்.
பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதாலும் வரும் நாட்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், 2015இல் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் போல் மீண்டும் ஏற்படாமல் தடுக்க நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டது.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாநில அரசுக்கு பரிந்துரைத்தது.
பேரிடர் மேலாண்மை மாநில பட்டியலில் வருவதால் மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய மத்திய உள்துறை செயலாளரின் கருத்துக்களை ஏற்க நிலைக்குழு மறுத்துவிட்டது.
மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தை சீர்திருத்தவும், முக்கியநகரங்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

நிலைக்குழு பரிந்துரைத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தால், வெள்ள பாதிப்பிலிருந்து ஓரளவிற்கு மீண்டிருக்க முடியும். சென்னை நகரில் உள்ள வடிகால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. தூர்வாரியதாக கணக்கு காட்டப்பட்ட இடங்களில் தண்ணீர் தடைபட்டுள்ளது. சென்னை நகரம் விரிவடைந்திருப்பதால் 5000 கி.மீ. தூரத்திற்கு மழைநீர் வடிகால்தேவை. ஆனால் தற்பொழுது 1660 கி.மீ. மட்டுமே இருக்கிறது. சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்ட
சிஏஜி அறிக்கையில்,எந்தவிதஅடிப்படை அறிவியல் ஆய்வும் இல்லாமல்மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது என்றும்வடிகால்களை கடைசியாக ஆறுகளில் சேர்க்கமுடியாத அளவுக்கு மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. அதனால் மாநில அரசுக்கு 55 கோடி ரூபாய் இழப்புஏற்பட்டுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியிருந்தது.

மத்திய அரசும் இதுமாநிலத்தின் பணி என்று ஒதுங்கியிருக்காமல் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட நிதியை வழங்கவேண்டும. வர்தா புயலின் போது மாநில அரசு கோரிய நிதி முழுமையாக வழங்கப்படவில்லை.
பொதுவாகவே மழை காலங்களில்தொற்று நோய்கள் அதிகமாக காணப்படும். இந்தமுறை மழைக்காலம் துவங்கும் முன்பே தமிழகத்தை டெங்கு தாக்கியது. 100க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துவிட்டனர்.
இந்த நிலையில் டெங்குவை தவிர மழைக்கால நோய்களான லேப்டோ ஸ்பைரோசிஸ், காலரா, மலேரியா வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதால் அரசு போர்க்கால வேகத்தில் செயல்படவேண்டியது மிகமிக அவசியமாகும்.
ஆனால் அதிமுக அமைச்சர்களோ முன்னேற்பாடுகள் அமெரிக்காவை விட சிறப்பாக செய்திருக்கிறது என்று ஊடகங்களுக்கு செய்தியை கொடுத்து விட்டு,மழை வெள்ளம் வர ஆரம்பித்தப்பின்னரே பேரிடர் ஆலோசனைக்கு அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
ஜெயலலிதா வழியில் ஆட்சி என்பதை ஒவ்வொரு நொடியும் உண்மையாக்கி மக்களை வெள்ளத்தில் அலையவும்,மழையில் நீரில் புலம்பவும் வைத்து விட்டனர்.
இப்போதேஜெயலலிதா உண்டாக்கிய செம்பரம்பாக்கம் அழிவில் பாதியை சென்னை சந்தித்துவிட்டது.
நீரோவின் பிடில் 2015இல் ஜெயலலிதாவிடம் இருந்தது.தற்போது அது எடப்பாடி வாசிக்கிறார்.

============================================= =========================================
நவம்பர்-04.
- பனாமா கொடி நாள்
- இத்தாலி ராணுவ தினம்
- வாஷிங்டன்யேல் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1861)
- அறிவியல் இதழான"இயற்கை" (நேச்சர்) முதல் முறையாக வெளியானது (1869)
- ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)
=======================================================================================
"இந்து பயங்கரவாதம் இருக்கு" கமல்ஹாசன் மீது உ.பி.யில் வழக்கு பதிவு.
இறைச்சிவைத்திருந்ததற்கு கொலை செய்த தீவிரவாதம் அங்கேதான் .
ஆதாரம் இருக்கு.🧐