" பாஜகவுக்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை
அரசியல்ல இதெலாமாம் சாதாரணமப்பா!
காங்கிரசு ஆட்சியில் தங்கள் எதிர்ப்பாளர்களை அடக்கி வைக்க எப்போதாவது வருமானவரி,அமுலாக்கத்துறை சோதனைகள் நடைபெறுவது உண்டுதான்.
ஆனால் பாஜக மோடி ஆட்சியில் சாதாரண பெட்டிக்கடைக்காரன் பாஜகவை,மோடியை எதிர்த்துப்பேசினால் கூட வருமானவரி,அமுலாக்கத்துறை எதாவது அடுத்த நாளே அவர் வீட்டில் ஆய்வு செய்கிறது.
அதையே அவர்களை ஆதரித்தால் சேகர் ரெட்டி,விஜய் மல்லையாவின் இருந்து அதிமுக அமைச்சர்கள் வரை ஏற்கனவே வழக்கில் சிக்கியிருந்தாலும் கூட மத்திய அரசின் பாதுகாப்பு உண்டு.
தினகரன் தேவை முடிந்ததாலோ,அல்லது அளவுக்கு அதிகமாக துள்ளுவதாலோ அவரை அடக்கி வைக்க இன்று வருமானவரித்துறை 187 இடங்களில் சோதனை நடத்துகிறது.
இவற்றில் பல தினகரன்,சசிகலா மாபியா கும்பலுக்கு நேரியடையாகவும் ,சில மறைமுகமாகவும் தொடர்புடைய நிறுவனங்கள்.என்பதுதான் இன்றைய பரபர.
இப்போது சோதனை நடைபெறுகிற இடங்கள் விபரம்.
சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை
புதுச்சேரி ஆரோவில் உள்ள தினகரனின் பண்ணை வீட்டிலும் சோதனை
கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் தற்போது சோதனை நடந்து வருகிறது.
சென்னை தி.நகரில் சசிகலா முதலீடு செய்துள்ள நகைக்கடையில் தற்போது சோதனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
இது தவிர ஹைதரபாத், பெங்களூரு டெல்லியில் 82 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
கோவையில் மணல் குத்தகைதாரர் ஆறுமுகசாமி வீட்டில், அலுவலக்த்தில், கோவை ராம் நகரில் உள்ள செந்தில் குரூப் நிறுவனங்களில் சோதனை
சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள சுரானா கார்ப்பரேசன் லிமிட்டெட் என்ற நிறுவனத்திலும், ஜெயா டிவியின் பொதுமேலாளர் உள்ளிட்ட அலுவலகத்தின் நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை.
தினகரன் அணி புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயனின் அறந்தாங்கி அருகே உள்ள தெற்குப்பபை இல்லத்தில் தற்போது சோதனை.
தற்போது கோடநாடு பங்களாவில் மரவேலை பார்த்துவந்த சஜிவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சசிகலா தொடர்பான 10 குழுமங்களுக்கு சொந்தமான போலி நிறுவனங்களை குறிவைத்து சோதனை நடந்து வருகிறது.
சுரானா, சுனில், புதுச்சேர் ஸ்ரீ லட்சுமி, விண்ட் சுப்பிரமணியன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் உள்ளனர்.
தற்போது போயஸ் கார்டன் வீட்டில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சசிகலாவின் வழக்கறிஞராக நாமக்கல்லில் இருந்துவரும் செந்தில் வீட்டிலும், அறந்தாங்கி அருகே தினகரன் அணியின் மாவட்ட செயலாளர் வீட்டிலும், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடமும் அதிகரிகள் சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், வேளச்சேரி ஜாஸ் சினிமாஸ் வளாகத்தில், பெங்களூருவில் உள்ள தினகரன் ஆதரவாளர் மற்றும் கர்நாடகா அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டில், திருச்சியில் உள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் என நாடெங்கும் உள்ள சசிகலா தொடர்பான அனைத்து இடங்களிலும் சோதனை அதிரடியாக நடத்தப்பட்டு வருகிறது.
சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 160 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்து வருகிறது.
திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரி, அந்தக் கல்லூரியில் பணியாற்றும் அன்பு என்பவரது வீட்டில் என சோதனை நடந்து வருகிறது.
அதேபோல, சென்னை அடையாறு தினகரன் வீட்டில், தினகரன் வீட்டுக்குள் இருந்த நிலையில் திடீரென நுழைந்த அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். தினகரன் அணி மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், திவாகரன் உதவியாளர்கள் ராசுப்பிள்ளை, சுஜய் ஆகியோர் வீடுகளிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடந்துவருகிறது. 12 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், கொடநாடு எஸ்டேட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தஞ்சை அருளானந்தா நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில், மன்னார்குடியில் மன்னை நகரில் உள்ள தினகரனில் வீட்டில், சசிகலாவின் அண்ணன் மகன் மறைந்த மகாதேவன் வீட்டில், இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆக மோடி திமுகத்தலைவர் கலைஞரை சந்தித்ததும் ,அதைத் தொடர்ந்து சசிகலா மாபியா கும்பல் இடங்களில் சோதனை என்பதும் தமிழக அரசியலில் தனது பிடியை அழுத்த பாஜக எடுக்கும் நடவடிக்கைகள்தாம்.
இதன் மூலம் எடப்பாடி,பன்னிர் செல்வம் உட்பட்ட ஆளும் அதிமுகவுக்கு விடப்படும் எச்சரிக்கை "எங்களை எதிர்க்க நினைத்தால் நாங்கள் ஆட்சி அதிகாரம் மூலம் எந்த அளவுக்கும் செல்வோம்'என்பதுதான்.
வாயை திறக்க பிடி கிடைக்காமல் அலையும் டமிழிசை சவுந்தரராஜன் உடனே திருவாய் மலர்ந்தாகி விட்டது.
"இந்த சோதனைகளுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது" என்பதுதான் தற்போதைய வாக்குமூலம்.
அதுதான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பாமரனுக்கும் தெரியுமே.
இனி" பாஜகவுக்கும் ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று வேண்டுமானால் சொல்லிப்பாருங்கள்.
ஒருவேளை எடுபடலாம் .
=======================================================================================நவம்பர்-09.
- அமெரிக்கா, ஹவாய் தீவின் பியர்ல் துறைமுக உரிமையைப் பெற்றது(1887)
- கம்போடியா விடுதலை தினம்(1953)
- நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது(1990)
- டார்ம்ஸ்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1994)
- உத்தராஞ்சல், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(2000)
* பாஜக ஆபிஸ்க்கு எப்படி போகனும்...*👇🏻
எங்கள தாண்டி அம்புட்டு ஈசியா பார்த்துட முடியுமா, குந்து சொல்றேன் அட்ரஸ்...
★நேரா போனன்னுவை, க்ளீன் இந்தியா திட்டம் போர்ட் இருக்கும்.. கீழ குப்பையா இருக்கும்.. அந்த ஏரியா நாறும் மூக்க பொத்திட்டு நேரா போனன்னுவை..
★ மேக் இன் இந்தியா திட்டம் போர்ட் இருக்கும், அதுக்கு கீழ சைனால தயாரிச்ச பொருள் எல்லா விக்கிற கடை இருக்கும், அதையும் விட்டுறு.
★ அப்படியே சோத்தாங்கை பக்கம் திரும்பின வை, அனைவருக்கும் வங்கி கணக்கு போர்ட் இருக்கும்... எவன் கிட்டயும் பணம் இருக்காது.. கை மாத்தா கேட்டா, வாய்ல குத்துவானுங்க... எல்லா காலி அக்கவுண்ட்.
★ அப்படியே கொஞ்ச தூரம் போனா, கேரளா பார்டர்... கொலகார பயல்வ, அங்க போய் எவன் கிட்டயும் பி ஜே பி பேர சொல்லிடாத, செருப்பால அடிப்பானுவ.
★ நா அதிமுககாரன்.. பொருமையா பி ஜே பி அட்ரஸ் சொல்றேன்.. இதே மற்ற கட்சிகாரன்னுவை, சாணில முக்கி அடிப்பான்வ.
அப்புறம் அந்த அட்ரஸ் மறந்துட்டேன் பாத்தியா...
★ அப்படியே பீச்சாங்கை பக்கம் திரும்பினன்னுவை, ராஜான்னு ஒருத்தன் இருப்பான்.. வாய திறந்தா உண்மையே சொல்ல மாட்டான்.. அவன் கிட்ட கேட்டுறாத.. டவுசர் மாட்டி கைல ஒரு கம்ப கொடுத்துறுவான்.
★ அந்த ஆள் பக்கத்துலயே சேகர்ன்னு ஒருத்த இர்ப்பான்.. நோட்ல சிப் இருக்குன்னு சொன்ன பேமானி.. காமெடி பண்றேன்னு சாகடிப்பான்.
★ அப்புறம் பொரி உருண்ட மாதிரி ஒரு ஆள் நிப்பார்.. நல்ல மனுசன்.. அந்த ஆள் கிட்ட எதுவும் கேட்டுறாத, ஒன்னும் தெரியாது, மறுபடியும் என்கிட்டயே அனுப்பிடுவார்.
★ அப்படியே ரெண்டு தெரு தள்ளி போனா, கும்பலா நின்னு இன்னிககு பணமதிப்பிழப்பு நாளுக்கு பச்ச பச்சயா திட்டிட்டு இருப்பாங்க.. நடுல ஒரு அக்கா தலய விரிச்சி போட்டு ஈர்குச்சி கைல வச்சிட்டு நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் அப்படின்னு விளக்கம் கொடுத்துட்டு நிக்கும்... அந்த அக்கா கிட்ட போய் கேட்டன்னுவை, அதுக்கே அட்ரஸ் தெரியாது.. குத்து மதிப்பா கொண்டு போய் உன்ன சேர்த்துடும்...
சின்னம்மா நாமம் வாழ்கன்னு சொல்லிட்டு கிளம்பு..
WhatsApp
"இந்தியாவில் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழாக்க பண மதிப்பிழப்புதான் காரணம்" என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
#De‘MoDi’saster
2016- நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ‘பண மதிப்பு நீக்கம்’ என்ற தாக்குதல், நாட்டு மக்களுக்கு மாறாத ரணமாக, ஆறாத வடுவாக இன்றும் அவர்களை துயரத்திலேயே வைத்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ஏற்படுத்திய துயரத்தின் ஓராண்டு, நாடு முழுவதும் புதன்கிழமையன்று கறுப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட 18 எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை நடத்தினர்.
இந்நிலையில், பொதுமக்களும் தாங்கள் சுமக்கும் துயரத்தின் ஓராண்டை, ட்விட்டரில் #De‘MoDi’saster(மோடி எனும் பேரிடர்) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி,தங்களின் வடுக்களை தடவிப்பார்த்துக் கொண்டனர்.
இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்ட அடுத்த சில மணிநேரத்திலேயே நாடு முழுவதும் டிரெண்டானது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு, திடீரென தொலைக்காட்சியில் தோன்றி, புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தபோது, ஏறக்குறைய அது ஒரு அறிவிக்கப்படாத `அவசரநிலைப் பிரகடனமாகவே’ இருந்தது.
கையிலிருக்கும் ஓரிரு பணத்தாள்களும் செல்லாது என்ற அறிவிப்பைக் கேட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
100 ரூபாய் நோட்டுக்களை பெறலாம் என்று ஏடிஎம் மையங்களை நோக்கி ஓடினால், 100 ரூபாய்வரவில்லை. அடுத்த 2 நாட்களுக்கு வங்கிகளும் செயல்படவில்லை.
ஏடிஎம்-களும் இயங்கவில்லை. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல், மக்கள் தவித்து போயினர். அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஏழை மக்கள் கிட்டத்தட்ட பிச்சைக்காரர்கள் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அடுத்த சில நாட்கள் கழித்து வங்கிகள் திறந்தாலும் நீண்ட வரிசை. பல மணிநேரம், நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய துயரம். அப்படியும் ரேசன் விநியோகம் போல குறிப்பிட்ட தொகைதான் கிடைத்தது.
இரண்டாவது முறையாக யாரும் வந்துவிடக் கூடாது என்று, திருடனை கண்டுபிடிப்பது போல, மக்களின் கையில் வங்கி அதிகாரிகள் ‘மை’ வைத்தனர். பெரும் பணக்காரர்கள் வங்கிகளின் பின்வாசல் வழியாக சென்று, அதிகாரம் படைத்தவர்களின் துணையுடன் வேண்டிய அளவு பணத்தை மாற்றிச் சென்றனர்.
ஏழைகளோ, வங்கிகளின் முன்னால் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் காத்திருந்தனர். வரிசையில் காத்திருந்தே 165 பேர் பலியாகினர்.
இப்படி உயிரைக் கொடுத்து வங்கிகளில் புதிதாக பெற்ற 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களுக்கு வெளியில் சில்லரை கிடைக்காததால், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மறுபடியும் பட்டினி.
100 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்கும் ஏடிஎம் இயந்திரங்களைத் தேடி- திறந்திருக்கும் ஏடிஎம்களைத் தேடி- செயல்படும் இயந்திரங்களைத் தேடி... இரவு முழுவதும் ஒடியே பல கோடிப் பேர் களைத்துப் போயினர்.
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் நீண்ட வரிசை. ஸ்வைப் மிஷின் மூலம் அங்கு பணம் செலுத்தலாம் என்றால், நெட்வொர்க் நெருக்கடியால் மிஷினே குழப்பமடைந்து, பல லட்சம் பேரின் பணத்தை ஸ்வாகா செய்தது.
அலறியடித்த பலர் வாகனங்களை உருட்டிக் கொண்டே சென்றனர்.நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்துவதில் கூட சிக்கல். திருமண மண்டபத்திற்கு வாடகை தர முடியவில்லை.திருமணத்திற்கு புதிய துணிமணிகள்.. ஏன், தாலி வாங்குவதற்குக் கூடத் தடை. அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை.
சிறு வியாபாரிகள், சிறு-குறு தொழில் முனைவோர் தங்களின் கைமுதலை வங்கியில் போட்டுவிட்டு, கடைகளை இழுத்து மூடி, புதிய ரூபாய் நோட்டுக்காக மாதக்கணக்கில் காத்திருந்தனர். போதாக்குறைக்கு, வங்கியில் செலுத்திய பணத்திற்கு கணக்கு காட்டச் சொல்லியும் சித்ரவதை.கொள்முதல் நடக்கவில்லை;
உற்பத்திக்கு தேவையில்லா மல் போனது. கோடிக்கணக்கானோர் வேலையிழந்தனர். பலலட்சம் பேர் வறுமையின் கோரப்பிடியால் தெருவில் நிறுத்தப்பட்டனர்.
அவர்களில் பலர் மாண்டனர். நாட்டின் பொருளாதாரமே 5.7 என்றும் 3.7 என்றும்கடுமையாக சரிந்து, சதையற்றஎலும்புக் கூடாக மாறி விட்டது.
மக்களும் இப்போதுவரை துயரத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையிலேயே, பிரதமர் மோடி ஏற்படுத்திய பேரிடரின் ஓராண்டை நினைவுகூரும் வகையில், #De‘MoDi’saster என்று பேரிடருக்கு மோடியின் பெயரையே சூட்டி, படித்த இளைஞர்கள், மாணவர்கள் அதை நாடு தழுவிய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------