மோடி அரசின் சாதனை?

1000 ரூபாய் லஞ்சத்தை 2000 ரூபாய் லஞ்சமாக மாற்றியதே!

கரண் தாப்பர்: 
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை பாராட்டி மத்திய நிதி அமைச்சர், அது நாட்டின் பொருளாதாரத்தில் இருந்த ஊழலை வீழ்த்திவிட்டது என்று சொல்லியிருக்கிறாரே, என்ன கூறுகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி
பணமதிப்பு நீக்கம், நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. கடந்த பத்து ஆண்டுகளாக லேசாக உயர்ந்து வந்த நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, திடீரென்று கடந்த ஓராண்டில் மிகவும் சரிந்துவிட்டது. 
குறிப்பாக விவசாயத்தை அடுத்து, நாட்டின் பொருளாதாரத்தில் சரிபாதி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளித்துவந்த முறைசாராத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதில் ஈடுபட்டு வந்த 80 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்து அவர்களை நிர்க்கதிக்கு ஆளாக்கிவிட்டது.

ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் நாட்டில் புழங்கிவந்த கள்ளநோட்டுகளை தடுத்துவிட்டோம் என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறாரே!

இதுவும் சரியல்ல. 
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கள்ள நோட்டுகளை ஒழித்திட முடியாது. உண்மையில் இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் வெறும் 0.028 சதவீதம்தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 
இதனை ஒழித்துக்கட்டுவதற்காக, மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பதுபோல இந்த அரசாங்கம் நாட்டின் புழக்கத்திலிருந்த 85 சதவீத நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. 
உண்மையில் இவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட ஒருசில நாட்களிலேயே 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பெங்களூருவில் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்ததை நாம் பார்த்தோம்.


அரசுத்தரப்பில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் இடதுசாரி அதிதீவிரவாதம் கட்டுக்குள் வந்ததென்றும், அதேபோல் காஷ்மீரில் செயல்பட்டுவந்த பயங்கரவாதிகளுக்குப் பணம் செல்வது தடுக்கப்பட்டுவிட்டது, 
அதனால் அவர்களின் தாக்குதல்களும் குறைந்துவிட்டன என்றும் சொல்லப்படுகிறதே!

இதுவும் சரி என்று சொல்வதற்கில்லை. 
இடதுசாரி அதிதீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடைமுறை. அதனை அரசியலாகத்தான் எதிர்கொள்ள முடியும். அடுத்து, பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வது தடுக்கப்பட்டுவிட்டது என்று கூறுவதும் தவறான ஒன்றேயாகும். 
பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை நேரடி ரொக்கப்பரிவர்த்தனைமூலம் செய்வதில்லை. இன்றைய தினம் இணைய வழியாகவும், அதிநவீன ஆயுதங்கள் மூலமாகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் சர்வதேச அளவில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் ரொக்கப் பரிவர்த்தனை தேவையே இல்லை. 
இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இந்த அரசு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் இரட்டிப்பாகி இருக்கின்றன. இதுதான் உள்துறை அமைச்சகம் தந்துள்ள விவரங்கள்.

பின் என்னதான் உண்மையான காரணம்?

இவர்கள் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் உண்மையில் கறுப்புப் பணம் முழுமையாக வெள்ளைப் பணமாக மாறிவிட்டது. 
கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள், நாட்கூலிக்கு ஆட்களை அமர்த்தி, மிக எளிதாக வங்கிகளில் தங்களிடமிருந்த கறுப்புப்பணம் முழுவதையும் வெள்ளையாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள். வங்கிகளுக்கு நாட்டில் உள்ள பணத்தில் 99 சதவீதத்திற்கும் மேலாக வந்துவிட்டது என்று ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. இதன் பொருள் என்ன? 
கறுப்புப்பணமே நாட்டில் இல்லை என்று அர்த்தமாகிவிட்டதே! 
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்த சமயத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் நாட்டில் உள்ள சுமார் 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப்பணம் அரசின் கஜானாவிற்கு வரும் என்று சொன்னார்.
ஆனால் நடந்தது என்ன? 
இவர்களின் நடவடிக்கையின் மூலம் நாட்டிலிருந்த கறுப்புப்பணத்தை சட்டபூர்வமானதாக மாற்றிவிட்டார்கள். கறுப்புப் பணம் என்பதற்கு நிறம் எதுவும் கிடையாது. 
அது தனியே ஓர் இருப்பாக (ஸ்டாக்-ஆக) இருக்காது. 

அது புழக்கத்தில் இருந்துகொண்டே இருக்கும். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதனைப் பலமடங்கு அதிகரித்திடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.இந்த சமயத்தில் அரசாங்கம் வேறு ஒரு வேலையும் செய்தது. 
மக்களிடம் தங்கம் வாங்குவதற்கு இருந்த கட்டுப்பாட்டை அதிகரித்தது. 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் தங்கம் வாங்கலாம் என்று இருந்த கட்டுப்பாட்டை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. அவ்வாறு வாங்குவதற்கு அவர்கள் ஆதார் அட்டையைக் காட்ட வேண்டும் என்ற நிபந்தனையும்கூட கிடையாது. இதனால் கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள் வங்கிகளுக்குக்கூட வராமல் தங்கமாக மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

அருண்ஜெட்லியும், பிரதமர் மோடியும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியதன் மூலமாக நாட்டிலிருந்த கறுப்புப் பணம் முழுவதும் வங்கிகளுக்கு வந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே!

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் என்ன கூறினார்? கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இதிலிருந்து மீள்வதற்கு வழி கண்டுபிடித்துவிடுவார்கள் என்றார். 
அதுதானே நடந்தது. வங்கிகளில் பணம் மாற்றுவதற்கு ஆட்களை நியமித்தார்கள். 
அவர்கள் செல்லாத நோட்டுகளைக் கொடுத்துவிட்டு, புதிய நோட்டுகளை கறுப்புப்பண பேர்வழிகளிடம் கொண்டுசென்று கொடுத்துவிட்டு அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொண்டார்கள். அரசாங்கத்தால் என்ன செய்ய முடிந்தது?

அரசாங்கத்திற்கு வரி வருவாய் அதிகமாக வந்துவிட்டது என்றும், முன்பை விட வருமானவரி செலுத்தியவர்கள் இப்போது அதிகம் என்றும் அருண் ஜெட்லி சொல்லிக்கொண்டிருக்கிறாரே!

ஏழை மக்களிடமிருந்தும், ஊதியம் பெறும் மத்தியதர வர்க்கத்தினரிடமிருந்தும் வரி வசூலைக் கறாராக செய்துவிட்டார்கள். 
ஆனால், கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து வரி வசூல் செய்திட மறுக்கிறார்கள். ஓர் அரசு பொருளாதார ரீதியாக செம்மையாகச் செயல்பட வேண்டுமானால், திட்டமிடும்போது அது நிர்ணயித்திடும் வரியை முழுமையாக வசூலித்திட வேண்டும். அப்போதுதான், திட்டச் செலவினங்களைச் செய்திட முடியும். 
அரசுத்தரப்பில் இதுவரை வசூலித்துள்ள வரிவருவாய், நிதியாண்டு முடிய இருக்கிற இத்தருணத்தில், மொத்த வரிவருவாயில் 40 சதவீதம்கூடக் கிடையாது. பின் எப்படி இந்த அரசு தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்? 
அரசுத்தரப்பில் கணக்கில் இல்லாத பணம் எல்லாம் வங்கிக்கு வந்துவிட்டது என்று மார்தட்டிக்கொண்டாலும், எதார்த்த நிலைமை என்ன என்று பாருங்கள். 
மக்களுக்கு இதனால் என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது? 


இவ்வாறு கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டிடவில்லை.
கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள், தங்கள் பணத்தை எல்ஐசி பிரிமியத்திலும், மியூசுவல் பண்டுகளிலும் முதலீடு செய்திருக்கிறார்கள் என்றும் அருண்ஜெட்லி கூறியிருக்கிறாரே!

நீங்கள் மக்களை கட்டாயப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் சேமிப்பை நோக்கித்தள்ளமுடியும். பொருளாதார நடவடிக்கைகள் இல்லாதபட்சத்தில், மக்கள் தங்களிடமுள்ள பணத்தை முதலீடு செய்வதற்குப் பதிலாக, சேமிப்பில் போடத்தான் விரும்புவார்கள். 
நாட்டில் சரியான முறையில் பொருளாதார நடவடிக்கைகள் இல்லை என்பதன் பிரதிபலிப்புதான் இது. மேலும் மக்கள் முதலீடு செய்திட அஞ்சியதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், 
மக்கள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு வருமானம் இல்லாதிருப்பதுதான். மக்களிடம் வருமானம் இல்லாதிருக்கையில் எப்படி முதலீடு செய்து, உற்பத்தியைப் பெருக்க முயற்சிப்பார்கள்?

அப்படியென்றால் இது பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்கிறீர்களா?

ஆம்.

பணமதிப்பு நீக்கம் எனும் நடவடிக்கை முழுத்தோல்வி என்கிறீர்களா?

நிச்சயமாக. 
உண்மையில் இம்முடிவின் விளைவாக மக்கள் செய்த தியாகங்கள் மிக மிக அதிகமாகும். நூற்றுக்கணக்கானவர்கள் வங்கிகளில் வரிசைகளில் நின்றபோது மரித்துப்போனார்கள், 
மிகப்பெரிய அளவில் வேலையிழப்புகள். பல லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து வீதியில் நிற்கிறார்கள். 
சிறிய மற்றும் நடுத்தரத்தொழில்கள் மிகக் கடுமையான முறையில் நசிந்துவிட்டன.
 ஊழல் குறைந்திடவில்லை. மாறாக 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியவர்கள் இவர்கள் 2000 ரூபாய் நோட்டு வந்தபின், அதனை 2000 ரூபாயாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள். 
விவசாயம் முழுமையாக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

இந்நடவடிக்கையின் மூலம் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் மக்களின் வாங்கும் சக்தி அனைத்தும் குறைந்துவிட்டது என்கிறீர்கள், இல்லையா? இதுவெல்லாம் தற்காலிகமானதுதான், குறுகிய காலத்திற்குத்தான், பின்னர் நாட்டின் பொருளாதாரம் பிரகாசமாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்களே!

பொருளாதார நடவடிக்கைகள் பழைய நிலைக்குத் திரும்புவது என்பது அநேகமாக மிகமிகக் கடினம். அதற்கான பொருளாதாரச் சூழல் இருப்பதாக என்னால் பார்க்க முடியவில்லை.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு படுதோல்வி அடைந்துவிட்டது என்று சொல்கிறீர்கள். 

இதனால் எவருக்குமே எந்த நன்மையுமே கிடையாதா?

இம்முடிவு படுதோல்வி அடைந்துவிட்டது என்பது உண்மை. எவருக்குமே பயனளிக்கவில்லையா என்று கேட்டால் நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள், என்பதைப் பொறுத்தது அது. 
உதாரணமாக முன்பு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதனை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். 
அவர்களைப் போன்றவர்களுக்கு இது இலாபம்தான்.
பணமதிப்பு நீக்கம் குறித்த பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பரின் கேள்விகளும் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பதில்களும்...
நன்றி: தி வயர்
தமிழில்: ச.வீரமணி
========================================================================================
ன்று,
நவம்பர்-17.
  • உலக  மாணவர் தினம்
  • எக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)
  • எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)
  • புடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)
  • டக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி சுட்டி (மவுஸ்)க்கான காப்புரிமம் பெற்றார்(1970)
========================================================================================
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு கமல்ஹாசன் ரூபாய் இருபதுலட்சம்வழங்கினார்.

கோமாளி ஆட்சி 

கறுப்புப் பணத்தை கைப்பற்றப் போவதாக கூறி, பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்திய மோடி - அருண் ஜெட்லி கூட்டணியால் நாட்டுக்கு ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்புதான் ஏற்பட்டுள்ளது . இதைப் பார்த்தால், 700 ஆண்டுகளுக்கு முன்பு, பழைய நாணயத்தை தடை செய்து, சுல்தான் முகமது- பின்- துக்ளக் ஆட்சியில் அரங்கேறிய கோமாளித்தனம்தான் நினைவுக்கு வருகிறது .

;பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி நேரடி செலவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது; 
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதம் குறைந்துள் ளதாக கூறப்பட்டு இருந்தாலும், உண்மையில் இதைவிட பாதிப்பு அதிகம் என்பதே எனது கணிப்பு; 
இந்திய பொருளாதாரத்தில் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பை இந்தநடவடிக்கை ஏற்படுத்தி யிருக்கும் என்று மதிப் பிடுகிறேன்.
வரலாற்றில் முடியாட்சிகளிலும் ஆட்சி கள் மாறும்போது, மன்னர்கள் பணமதிப்பு நீக்கநடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள்; 
முன்பிருந்த நாண யங்களைத் தடை செய்து விட்டுபுதிய நாணயத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்;
இந்தியாவை எடுத்துக் கொண்டால், 700 ஆண்டுகளுக்கு முன்பாக பண மதிப்புநீக்கம் நடந்துள்ளது; இதனை மேற்கொண்ட சுல்தான் முகமதுபின் துக்ளக், தலைநகரை தில்லி யிலிருந்து தௌலதாபாத்துக்கு மாற்றியதன் மூலம் வரலாற்றில் பின்னாளில் எதிர்மறையாக புகழடைந்தார்.


பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதிமுக்கியமானது என்று எதனடிப்படையில் மோடி கருதினார் என்று தெரியவில்லை; ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதியமைச்சருக்குப் பதிலாக பிரதமரே அதனை அறிவிக்கிறார் எனும்போது, அதை மிகமுக்கியமானதாக அவர் கருதி யிருக்கிறார்; 
2016 நவம்பர் 8-ஆம்தேதி இரவில், மோடியின் அந்தஒருமணி நேர உரையில் கறுப்புப் பணம் என்ற வார்த்தைமட்டும் 74-75 முறை கூறப் பட்டது. 
கள்ள நோட்டு, பயங்கரவாதம் என்ற வார்த்தைகளையும் பயன்படுத்தினார்; ஆனால்,ஒருமுறை கூட ரொக்க மற்ற பரிவர்த்தனை, டிஜிட்டல் பொருளாதாரம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், நாட்டில் ஒருவரிடமும் பணம் இல்லாமல் போய்விட்டது.
நாடு ரொக்கமற்றதாகி விட்டது. 
அதன்பிறகுதான் மோடி ரொக்க மற்ற பொருளாதாரம் பற்றி பேசினார்.சுமார் 18 லட்சம் டெபாசிட்கள் மீதுவிசாரணை நடக்கிறது என்று மோடியே கூறினார். 
இதன் மூலம் உலகம் முழுவதும் இந்தியா திருடர்களின் நாடு என்ற செய்தியே பரவியது. இந்தியர்கள் அனைவரும் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் போலும்; ஒருவருமே நேர்மையானவர்கள் இல்லை போலும்; என்று கருத வைத்தார்கள்.அந்த நாட்களில் ஒரு புதிய வழக்கத்தையும் ஏற்படுத்தி னார்கள். அனைத்தையும் ஊடகநிகழ்வுகளாக்கினார்கள். 
எங்க ளுக்கு முன்பாக எதுவுமே இந்த நாட்டில்நடைபெறவில்லை என்ற துணிந்துசகஜமாக பேசினார்கள். வாஜ்பாய் 6 ஆண்டுகள் நாட்டை ஆண்டதையும் மறந்து விட்டார்கள். 
தற்போது நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நம் நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருக் கிறது என்கிறார்; பணவீக்கம் கட்டுப் பாட்டில் இருக்கிறது என்கிறார்;
 பங்குச்சந்தை எழுச்சி பெற்று இருக்கிறது என்கிறார்; அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சான்றிதழையும் எடுத்துக் காட்டுகிறார்;
யஷ்வந்த் சின்ஹா

ஆனால் இவையெல்லாம் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைசரிவினால் கிடைத்த லாபங்கள் என்பதை வசதியாக மறைக்கிறார்.
 குஜ ராத் சிங்கம் (மோடி) கர் ஜித்ததால் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் பயந்து போய் விலைகளைக் குறைக்க முடிவெடுக்கவில்லை.
உள்நாட்டு தேவை, உள் நாட்டு சேமிப்புகளே நம் பொருளா தாரத்தை செலுத்தும் சக்திகள். 
மாறாக அயல்நாட்டுத் தேவையோ அயல்நாட்டு முதலீடுகளோ அல்ல. இவற்றை ஆட்சியாளர்கள் கவ னத்தில் கொள்ளவில்லை. 
தற்போது நமது நாட்டின் பொருளாதாரம் ஒற்றைக்காலில் நிற்கிறது.ஜி.எஸ்.டி. சிறப்பானதாக, எளிமையாக இருக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வரி விகிதம் மட்டுமே அதில் இருக்க வேண்டும்; இப்போது 177 பொருட்களுக்கு வரிவிகிதத்தை திரும்ப பெற்று இருக் கிறார்கள். 
இது, நிச்சயமாக மோடி ஆட்சியின்  தோல்வியைத்தான்  காட்டுகிறது. 
                                                                                                                               -  யஷ்வந்த் சின்ஹா
லியானார்டோ டா வின்சியின் கடைசி படைப்பு எனக் கருதப்படும், இயேசுநாதர் ஓவியம் ரூ.2,940 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

லியானார்டோ டாவின்சி 1505–ம் ஆண்டுக்கு பின்னர் வரைந்ததாக கருதப்படும் ஓவியம், 
‘உலக ரட்சகர்’. ஏசுநாதர் தனது வலது கரத்தை உயர்த்தி ஆசி வழங்குவதுபோல் இந்த ஓவியம் அமைந்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள பிரபல ஏல விற்பனை நிலையமான கிறிஸ்டீஸ் நிறுவனத்தில் இந்த ஓவியம், ஏலம் விடப்பட்டது. இந்த ஓவியத்தின் ஏலம் 100 மில்லியன் டாலரில் தொடங்கியது. இறுதியில் 400 மில்லியன் டாலர் ஏலம் போனது. ஆனால் எல்லா கட்டணங்களையும் சேர்த்து இதன் விலை 450 மில்லியன் டாலர் ஆகும்.

வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன இந்த ஓவியத்தின் இந்திய மதிப்பு ரூ.2,940 கோடி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?