'பாரடைஸ் பேப்பர்ஸ்'


பாரடைஸ் பேப்பர்ஸ்,வெளிநாட்டு முதலீடுகள்,அம்பலம்,714, இந்திய தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள்,மோசடி,Paradise Papers


மத்திய அமெரிக்க நாடான பனாமாவைச் சேர்ந்த, 'மோசக் பென்சேகா' என்ற சட்ட, வர்த்தக ஆலோசனை நிறுவனம், போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்யும் மோசடியில் ஈடுபட்டது குறித்து, சர்வதேச பத்திரிகையாளர்கள் சங்கம், 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் அம்பலப்படுத்தியது. 


பனாமா பேப்பர்ஸ்' மூலம், போலி நிறுவனங்கள் பெயரில், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, மோசடி செய்தது, 

கடந்தாண்டு மே மாதம் அம்பலப்படுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் சங்கம், 'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில், புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. 
இதில், பிரபல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என, 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதில், 500க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.உலகெங்கும் மிகப் பெரிய புயலை, பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், பதவியை இழக்க நேரிட்டது. 
ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சர்வதேச புலனாய்வு நிருபர்கள் சங்கம் நடத்திய விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் இந்த மோசடி அம்பலபடுத்தப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி பத்திரிகைக்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தீவான பெர்முடா மற்றும் ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மூலம், பல்வேறு நாடுகளில் போலியான நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்த மோசடி தொடர்பான தகவல்கள் கிடைத்தன.

இவ்வாறு, 1.34 கோடி தகவல்களின் அடிப்படையில், 96 புலனாய்வு நிருபர்கள், 10 மாதங்களாக ஆய்வு செய்தனர். 

'பாரடைஸ் பேப்பர்ஸ்' என்ற பெயரில், இந்த மோசடி அம்பலபடுத்தப்பட்டுள்ளது. 
மொத்தம், 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக கிடைத்த தகவல்களில், அதிக பெயர்கள் இடம்பெற்றுள்ள நாடு என்ற அடிப்படையில், இந்தியா, 19வது இடத்தில் உள்ளது. 

இந்தப் பட்டியலில், 714 தனிநபர்கள், இந்திய நிறுவனங்களின் பெயர்கள் உள்ளன.
பெர்முடாவைச் சேர்ந்த ஆப்பிள்பே என்ற நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசியாசிட்டி என்ற நிறுவனமும், 19 நாடுகளில், போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடுகள் செய்தது 
தெரியவந்துள்ளது.உலகெங்கும் உள்ள பிரபல தொழிலதிபர்கள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர், தங்கள் கறுப்புப் பணத்தை, இந்த நிறுவனங்கள் மூலம், போலி நிறுவனங்களின் பெயர்களில்முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தொடர்பான ஆய்வை, பிரபல ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த நிருபர்கள் விசாரித்தனர்.இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மோசடிகள் குறித்து, சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்றவை ஏற்கனவே விசாரித்து வருகின்றன.

இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள, நந்த் லால் கெம்காவின் சன் குழுமம், 118 போலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

ஆப்பிள்பே நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளர்களில், இரண்டாவது இடத்தில் இந்த நிறுவனம் உள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையிலும், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், இந்த மோசடி வெளியாகியுள்ளது. 

இது, தேசிய அரசியலில் புதிய புயலை வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில், போலி நிறுவனத்தில் முதலீடு மோசடியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் உள்ள வர்த்தக அமைச்சர், வில்பர் ராஸ் மற்றும் ரஷ்யா இடையேயான தொடர்பு, பிரிட்டன் ராணி எலிசபெத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், சவுகத் அஜீஸ் உட்பட, 120 அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

'பாரடைஸ் பேப்பர்ஸ்' அம்பலப்படுத்தியுள்ள மோசடியில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள், தனிநபர்கள் பெயர் பட்டியல்:-

● நந்த் லால் கெம்காவின் சன் குழுமம், 118 போலி நிறுவனங்கள் பெயரில் கணக்கு துவக்கியுள்ளது.


● ஏர்செல் - மேக்சிஸ் மோசடி தொடர்பான வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்.


● எஸ்ஸார் - லுாப் 2ஜி வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்.
● எஸ்.என்.சி., லாவ்லின் வழக்கில் இடம்பெற்றுள்ள நிறுவனம்; இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

● ராஜஸ்தானில் நடந்த ஆம்புலன்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய, 'ஜிகுஸ்டா ஹெல்த்கேர்' என்று நிறுவனம். இதன் இயக்குனர்களான, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சச்சின் பைலட், முன்னாள் மத்திய நிதியமைச்சர், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது.


● ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்பாக, சி.பி.ஐ., சமீபத்தில் நடத்திய விசாரணையில் தொடர்புடைய நிறுவனங்கள்.


● மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர், ெஜயந்த் சின்ஹா, முன்பு, ஓமிட்யார் நெட்வொர்க் என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். அந்த நிறுவனம் போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. 

அதன் இயக்குனராக, ெஜயந்த் சின்ஹா பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

● பா.ஜ.,வின் ராஜ்யசபா எம்.பி.,யும், எஸ்.ஐ.எஸ்., என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான, ஆர்.கே.சின்ஹா.


● வர்த்தக நிறுவன புரோக்கர், நீரா ராடியா.


● பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தில்னாஷின் என்ற அவருடைய பழைய பெயரில் பட்டியலில் உள்ளார்.


இந்தி  நடிகர் அமிதாப் பச்சன் பெர்முடாவைச் சேர்ந்த நிறுவனத்தில் முன்பு செய்திருந்த முதலீடுகள்.

இவர் உ.பி.மாநில முதியோர் ஓய்வுஊதியம் வாங்கி வருகிறார்.
மேலும் ஏழை விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் இலவச 5ஏக்கர் நிலமும் பெற்ற பரம ஏழை.
முன்னாள் இந்தி திரையுலக மிகவும் ஏழை உச்ச நட்சத்திரம் .
இவரது மகன் அபிஷேக் பச்சன்,மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் ஏழை நடிகர்கள்தான் .

● வங்கிக் கடன் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை வாங்கிய, டியாஜியோ நிறுவனம்.


● ஜி.எம்.ஆர்., குழுமம்.


● இவற்றைத் தவிர, ஜின்டால் ஸ்டீல்ஸ், அப்பல்லோ டயர்ஸ், ஹேவல்ஸ், ஹிந்துஜா, எம்மார் எம்.ஜி.எப்., வீடியோகான், ஹீராநந்தினி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
                                                  "ஆசையே துன்பத்துக்கான வழி."
===========================================================================================
ன்று,
நவம்பர்-07.
  • உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)
  • போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)
  • இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
  • உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)
  • இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)
============================================================================================
  உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்துகள் !
                                                                              வாழ்க நலமுடன்!!
                                                                                                              வளர்க வளமுடன் !!!

புரட்சி வாழ்த்துகள்!


மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு 

(1917-2017) தினம் இன்று தோழர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
புரட்சியையும் புரட்சி நாயகனாம்
லெனினையும் நினைத்து கொண்டாடுவது நமக்கு புது உத்வேகத்தை தரும்.

புரட்சி அனுபவத்தின் சாரத்தை உள்வாங்குவது, மார்க்சையும் லெனினையும் மேலும் கற்று இன்றைய உலகை சரியாகப் புரிந்து கொள்வது, புது யுகம் படைக்க அதை லாவகமாகக் கையாள்வது என்பது அந்தகொண்டாட்டத்திற்கு கூடுதல் அர்த்தம் சேர்க்கும். 

கொண்டாட்டமும் மார்க்சியர்களுக்கு ஒரு கல்வியே.
புரட்சி உணர்வை பிரகாசிக்கச் செய்வதும்,குறிப்பிட்ட நிலைமைகளில் புரட்சி வேலைத்திட்டத்தையும், நடைமுறை அரசியல் உத்திகளையும் உருவாக்கிட வேண்டும்.

இதற்கு, ஒருவர் மார்க்சிஸ்டாகவும், லெனினிஸ்டாகவும் இருக்க வேண்டும். 

இதுவே “நவம்பர் புரட்சி” உணர்த்து முக்கிய பாடம்.
சோசலிசம் உறுதியாக வந்தே தீரும் என்ற கருத்து வரலாற்று நோக்கில் சரியானது.

ஆனால்,நடைமுறைக் கருத்தாக இதனை உச்சரிப்பது வெறும் வேத மந்திரமாகப் போய் முடியும்.
சோசலிசம் உறுதியாக வந்தே தீரும் என்று அமைதி காக்க லெனினியம் அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் இப்படி ஒரு தருனம் வர உழைப்போம்.உழைப்பாளிகள் கையில் ஆட்சி அதிகாரத்தை கொடுப்போம்.
===========================================================================================
பிரதமர் மோடி ஜெயா,பன்னிரு,சசிகலா க்களை சந்தித்தார்..
அதிமுக ஒரு வழி ..........?.
இப்போது திமுகவை  நலம் விசாரிக்கிறார்.
உடன் பிறப்புகள் மகிழாமல் ,எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலக்கட்டம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?