"2101ம் ஆண்டு சென்னை இருக்குமா?"

  காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்று எச்சரித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் மேற்பரப்பில் பரந்துவிரிந்துகிடக்கும் பனிப்பாறைகள் நிறைந்த இமயமலையில் பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன.
அதனால் கொல்கத்தா, சூரத், மும்பை மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து நகரம் மூழ்கும் சூழல் உருவாகும் என சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் உலக நாடுகளின் காலநிலையை மாற்றி எதிரான பருவச் சூழல்களை உருவாக்குகிறது. குறிப்பாக அதன் தாக்கத்தை ஐரோப்பிய நாடுகளும், ஆசிய நாடுகளுமே சந்திக்கின்றன.
இந்த நாடுகளில் அதிகரிக்கும் வெப்ப நிலையையும், மழைப்பொழிவும் பருவச்சூழல்களை மாற்றியுள்ளது.

இதில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்ச வெப்ப நிலையை பிரான்ஸ் நாடு சந்தித்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் அச்சம் தெரிவித்துள்ளது.

அதனைக் கொண்டே இந்தியாவில் ஏற்பட்டும் வெப்பநிலை உயர்வு காரணமாக இமயமலையின் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து 2100-ம் ஆண்டுக்குள் கொல்கத்தா, சூரத், மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்கள் கடலுக்குள் மூழ்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடு சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான குழு, ''பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் முன்பு இல்லாத அளவைவிட தற்போது உயர்ந்து வருகிறது.
 குறிப்பாக இந்தியாவில் இமயமலை உருகி வருவதால் கடல்மட்டம் உயர்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் நான்கு இந்திய நகரங்கள் இந்த நூற்றாண்டுக்குள் மூழ்கும் நிலை உருவாகலாம்.
அதனால் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி பேருக்கும் அதிகமானனோர் பாதிக்கப்படுவார்கள்.
இதை பல முறை உலகநாடுகளிடம் எடுத்துக்கூறினாலும்.அதை தடுக்க யாரும் முயற்சிக்கவில்லை.
இதில் வளரும் நாடுகளும்,ஆசிய,ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளும்  மரங்கள் காடுகளை தொடர்ந்து அதி வேகத்தில் அழித்து வருகிறது. ” என்று கூறியுள்ளது.

மேலும், இத்தகைய பாதிப்புகளை தடுக்க என்ன நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கோமியம் குடித்தாலே....,

டெங்கு காய்ச்சலுக்கு, உட்கொள்ளும் மாத்திரையின் டோசேஜை அதிகரித் தால் போதும், மற்றபடி ஒன்றும் செய்யாது என்று உத்தர்கண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் அலட்சியமாக கூறியுள்ளார்.

"உத்தர்கண்ட் மாநிலத் தில் சுமார் 4800 பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பதுகண்டறியப்பட்டு உள்ளது.
டேராடூனில் இதுவரை 3ஆயிரம் பேரும், ஹல்த்வானியில் 1,100 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப் பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இவர்களில் டேராடூனில் 4 பேர், ஹல்த்வானியில் 2 பேர்என இறந்தும் போயிருக்கின்றனர்.
மாநில சுகாதாரத்துறை அறிக்கையிலேயே, செப்டம்பர் 17 வரை, 8 பேர் இறந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

 "உத்தர்கண்ட் மாநிலத்தில் கொசுக்களால் பரவும் தொற்றுநோய் அதிகரித்துள்ளதே...?
என இது தொடர்பாக முதல்வர் திரிவேந்திர சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முதல்வர்தந்த பதில்தான் அனைவரையும் அதிர்சிக்குளாகியது.

 “டெங்கு நோயினால் பாதிக் கப்பட்ட நோயாளிகள், பாராசிட்டமால் மாத்திரை 500மில்லி கிராம் க்குப்பதிலாக, 650 மில்லி கிராம் அளவில் உட்கொண்டு, சிறிது ஓய்வெடுத் தால் நோய் உடனே குணமாகி விடப் போகிறது.”

என்று அலட்சியமாக  திரிவேந்திரா சிங் பதில் கூறினார்.

உண்மையிலேயே இது அதிர்ச்சிதான்.
 "கோமியம் குடித்துவிட்டு வீட்டில் இருந்தாலே டெங்கு பறந்துவிடும் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தார்களோ என்னவோ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நினைவில் கொள்ளுங்கள்.

 சுரன் 260919
 செப்டம்பர் .
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு

அக்டோபர் 
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு

டிசம்பர் 
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org.
 --------------------------------------------------------------------------------

 ரிசர்வ் வங்கிப் பனி.








ஆன்லைன் முறை விண்ணப்பம் தொடங்கும் நாள் – செப்டம்பர் 21, 2019










ஆபிசர்ஸ் கிரேடு பி (டிஆர்)- டிஎஸ்ஐஎம் பதவிக்கு புள்ளியியல்/ கணித புள்ளியியல்/ கணித பொருளாதாரம்/ எகானாமெட்ரிக்ஸ்/ புள்ளியியல் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.













ரிசர்வ் வங்கியின் கிரேடு பி அதிகாரிக்கு அடிப்படைச் சம்பளம் 35,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே 35150-1750 (9)-50900-இபி-1750 (2)-54400-2000 (4)-62400 என்ற முறையில் வழங்கப்படும்.

*--------------------------------------------*---------------------------------------*--------------------* 

ஆயுள் காப்பீட்டு கழகம் ( Life Insurance Corportaion LIC) நிறுவனத்தில், காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 




இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமே போதும் என்பதால், பட்டதாரிகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தக் காலிப்பணியிடங்கள் : 7,871 பணியிடங்கள்

மண்டல வாரியாக பணியிடங்கள்
வடக்கு மண்டலம் – 1544
மத்திய வடக்கு மண்டலம் – 1242
மத்திய கிழக்கு மண்டலம் – 1497
கிழக்கு மண்டலம் – 980
மத்திய மண்டலம் – 472
மத்திய தெற்கு மண்டலம் – 632
தெற்கு மண்டலம் – 400
மேற்கு மண்டலம் – 1104

சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.14,435
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

தேர்வு முறை : முதனிலை தேர்வு,
 முதன்மை தேர்வு மற்றும்
நேர்முகக்காணல்  மூலம் தகுதியுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள் :
பணியிட அறிவிக்கை வெளியான நாள் : செப்டம்பர் 17, 2019
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான இறுதிநாள் : அக்டோபர் 01, 2019
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் : அக்டோபர் 22, 2019

விண்ணப்ப கட்டணம் :
எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.85 + ஜிஎஸ்டி
மற்ற பிரிவினருக்கு ரூ.510 + ஜிஎஸ்டி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான நேரடி லிங்க் : //ibpsonline.ibps.in/licastaug19/
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவை விட்டு வெளியேறும் ஃபோர்டு.

இந்தியாவில், தாராளமையத்திற்கு இந்திய சந்தை திறந்து விடப்பட்ட பின், உலகின் கார் வர்த்தகத்தில் ஜம்பவனாக இருக்கும் நிறுவனம் அமெரிக்காவின் ஃபோர்டு இந்தியாவில் 1995-ம் ஆண்டு கார் வர்த்தகத்தை துவக்கியது.
இந்தியாவில் சென்னை, குஜராத் மாநிலத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்நாட்டு தேவை மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இப்படி நீண்டகாலம் கார் வரத்தகத்தில் இருந்து வருகிறது.
ஆனாலும் அதன் வர்த்தகத்தில் எதிர்பார்த்தபடி பெரிய அளவிளான லாபத்தை ஈடுட்டமுடியாமல் போனது. அதற்கு கடந்த மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார சரிவும் மிக முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

இந்த பொருளாதார நெருக்கடியால் வர்த்தகத்தில் இருந்து விலகிக் கொள்ள ஃபோர்டு இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சந்தையில் நேரடியாக போட்டியிடுவதற்கு பதிலாக, மஹிந்திரா நிறுவனத்துடன் ஒரு புதிய கூட்டு நிறுவமனாக தனது வர்த்தகத்தை இந்திய சந்தைகளில் தொடர முன்வந்துள்ளது.
அடுத்தவாரத்தில் இந்த புதிய நிறுவனம் குறித்த அறிவுப்புகள் வெளியாக உள்ளது.

அதன்படி, மஹிந்திரா போர்டு என்ற பெயரில் அந்த புதிய நிறுவனம் செயல்பட உள்ளதாகவும், அதில் ஃபோர்டு நிறுவனம் 49 சதவீத பங்குகளையும், மஹிந்திரா 51 சதவீத பங்குகளையும் பிரித்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டு நிறுவனத்தின் சில முக்கிய முடிவுகளை ஃபோர்டு கைவசம் வைத்திருக்கும் என்று தெரிகிறது.
அதுமட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள இரண்டு கார் ஆலைகள் உள்ளிட்ட ஃபோர்டு நிறுவனத்தின் சொத்துக்கள் மஹிந்திரா ஃபோர்டு கூட்டு நிறுவனம் வசம் பொதுவாக்கப்படுகிறது.
எனினும், எஞ்சின் உற்பத்தி ஆலை போன்ற சில சொத்துக்களை மட்டும் தானே வைத்துக் கொள்ள ஃபோர்டு முடிவு செய்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

 உண்மை வென்றே தீரும்.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பல குழந்தைகள் உயிரிழந்ததற்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உருளைகள் மருத்துவமனையில் போதிய அளவு இல்லாத்துதான் காரணம்.

அப்போது மருத்துவர் கபீல் கான் குழந்தைகளைக் காப்பாற்ற தனக்கு தேய்ந்த நண்பர்கள் மருத்துவமனைகளில் இருந்தும்,தமது சொந்த பணத்தைக்கொடுத்தும் ஆக்சிஜன் உருளைகளை வாங்கி பல குழந்தைகளைக்காப்பாற்றினார்.
ஆனால் பாஜக யோகியின் அரசு தான் ஆக்சிஜன் உருளைகளை வழங்கத்தை மறைக்க மருத்துவர் கபீல் கான்தான் உருளைகளை வாங்காமல் விட்டு விட்டார் என குற்றம் சாட்டி கைதும் செய்தது.
மருத்துவமனை முதல்வர் இருக்கையில் மருத்துவர் கபீல் கானை குற்றம்  சாட்டிட அவர் மருத்துவமனையில் ஆக்சிஜன் உருளைகள் இல்லாததுதான் குழந்தைகள் மரணத்துக்கு காரணம் என்று பேட்டியளித்ததும்,
ஊடகங்கள்-மக்கள் ஆகியோர் அவர் குழந்தைகள் உயிர்காப்பாற்றியதை புகழ்ந்ததும் மட்டும் அல்ல.
அவைகள்  முதல்வர் யோகிக்கு எரிச்சலை உண்டாக்கினாலும்,அதிக  கோபத்தை உண்டாக்கியது மருத்துவர் கபீல்கான் ஒரு முஸ்லீம் என்பதும்தான்.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர் கபீல் கான் கைது செய்யப்பட்டு, 9 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.


மேலும் மருத்துவர் கபீல் கான் மீதான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு துறைரீதியான ஒரு குழு அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 2, 2017 அன்று கபீல் கான் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு எதிர்கட்சிகளாலும்,சமூக ஆர்வலர்களால் எடுத்து செல்லப்பட்டது.

மக்கள்,மற்ற மருத்துவர்கள் என எல்லோரையும் தீர  விசாரித்த நீதிமன்றம்.
மருத்துவமனை நிர்வாகம்,முதல்வரை விட்டுவிட்டு ம்ருத்துவர் ஒருவரை,அதுவும் தனது காசில் குழந்தைகள் உயிரைக் காப்பாற்றியவரை இந்த கொடூர நிகழ்வுக்கு பலிகடா ஆக்கியதை வன்மையாகக் கண்டித்து கபிலகானை விடுவிக்க ஆணையிட்டது.

இந்நிலையில், மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் கபீல் கானை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து அறிவித்துள்ளது.


இதைத்தொடர்ந்து, நேற்று கபீல் கானிடம் ஒப்படைக்கப்பட்ட 15 பக்க விசாரணை அறிக்கையில், உயர்நீதமன்றம் கூறியதை ஏற்றுக்கொண்டு ,ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

கபீல் கான் குறித்து விசாரணை செய்து வந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹிமான்ஷூகுமார் இந்த அறிக்கையை ஏப்ரல் மாதத்தில் மாநில அரசிடம் சமர்பித்துள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவர் கபீல் கான் கூறும்போது, உண்மையான குற்றவாளியை அரசாங்கத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், நான் பலிகடாவாக ஆக்கப்பட்டேன்.
இத்தனை மாதங்களாக இந்த அறிக்கை எனக்கு அனுப்பப்படவில்லை என்றார்.
மேலும் அவர் கூறும்போது, இது தொடர்பாக அரசு மன்னிப்பு கோர வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?