வெங்காயத்தைப்பார்ப்போம்.

கார்ப்பரேட்களை வளர்த்தது போதும்.

விவசாயத்தை வளர்ப்போம்.

வெங்காயம் உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும்.
இப்போது வெங்காயத்தின் விலை யைக் கேட்டாலே இல்லத்தரசிகளுக்கு கண்ணீர் வரும்.
அந்த அளவுக்கு, வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் தில்லி உள்ளிட்ட நகரங்களில் சராசரியாக ரூ.40 முதல் 50 வரை இருந்த வெங்காயத்தின் விலை தற்போது ரூ.70 முதல் 80ஆக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
 சுரன் 260919
   2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பருவ மழை காரணமாக வெங்காயத்தின் விலை அதி கரித்தது. அதன்பின்னர் மீண்டும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில தினங்களில், முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை ரூ.100ஐ  தொடும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.
நாட்டில் அதிகமாக  வெங்காயம்  பயிரிப் படும் இடம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக். இதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் இதர மாநிலங்க ளில் விளைச்சல் செய்யப்படும் வெங்காயம், நாசிக்கின் மிகப்பெரிய வெங்காயச் சந்தைக்கு வரும்.

 அங்கிருந்து தான் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது வெங்காயத்தின் விலை வெகுவாக உயரக் காரணம் பருவமழை என்று மத்திய அரசு கூறுகிறது.
ஆண்டுதோறும்  ஜூன் முதல் செப்டம் பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். அதனால் வெங்காய விளைச்சல் பாதிக் கப்பட்டு விட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது.
அப்படியே இருந்தாலும் விளைச்சல் அதிக மான காலத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தையிடல் சம்மேளனம் (நாபெட்) முன்கூட்டியே போதுமான அளவு வாங்கி இருப்பு வைத்திருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது.

கட்டுப்படியான விலை கிடைக்காததாலும் வெங்காய விதைகள் அழுகியதாலும் கடந்த ஆண்டு நாசிக்கில் விவசாயிகள் வெங்காய விதைகளை பயிரிட முடியாமல் சாலையில் வீசி எறிந்தனர்.
வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது குறித்து அரசுக்கும் வலியுறுத்தினர்.
 ஆனால், அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.
விளைவு வெங்காய விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் வெங்காய திருட்டு அதிகரித்துள்ளது.
மதிப்புமிக்க பொருளாக வெங்கா யம் மாறிவிட்டது என்பதையே அது காட்டுகிறது.

விலை உயர்வை அடுத்து, உள்நாட்டு சந்தை களில் வரத்தை அதிகரிக்கவும், வெங்காயத்தின் விலை மேலும் உயர்வதை கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
 கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்த போது ஊழல் நடந்தது.

எனவே அதுபோன்று இனி யும் நடைபெறாமல் இருக்க நாபெட் நேரடியாக கொள்முதல் செய்து மாநில அரசுகள்   மூலமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலஅரசும் வெங்காயத்தை வெளி மாநிலங் களில் இருந்து கொள்முதல் செய்து கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலமாக குறைந்த விலைக்கு விற்க முன்வரவேண்டும்.

வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் போது அதனை கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டு நிதியை இதற்கு பயன் படுத்தவேண்டும்.
 சுரன் 260919
----------------------------------------------------------------------------------------------------------------------------------

 ரெயில்வேயை அடுத்து காப்பீட்டுத்துறை தனியார் மயம்?

சமூக பாதுகாப்புத் துறைகளான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி காப்பீட்டு நிறுவனம் (ESI)ஆகியவை தொழிலாளர் நலனுக்காக செயல்படும் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகும்.


நாடாளுமன்ற விதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு துறைகளையும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் நிர்வகித்து வருகிறது.
 சுரன் 260919

 தொழிலாளர் நலத்துறை அமைச்சர், இத்துறைகளின் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறைச் செயலர், துணைத் தலைவராகவும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விரு துறைகளையும் கார்ப்பரேட் மயமாக்கும் வகையில், மத்திய அரசு விதிமுறைகளை மாற்றியமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான வரைவுச் சட்ட மசோதா, தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வெளியிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய வரைவுச் சட்ட மசோதாவின்படி, இனி இந்த இரு துறைகளுக்கும் தனித்தனியே தலைமைச் செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பார்கள்.
குறிப்பாக, இபிஎப், இஎஸ்ஐ ஆகிய இரண்டு நிறுவனங்களும் இனிமேல் கார்ப்பரேட் நிறுவனங்களாக செயல்படும் என்று கூறப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 குற்றம்சாட்டியவரே கைது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சின்மயானந்தா  தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக, ஷாஜகான்பூர் எஸ்.எஸ். சட்டக் கல்லூரி மாணவி (23) ஒருவர் அண்மையில் பரபரப்புக் குற்றச்சாட்டு எழுப்பினார்.
இதுதொடர்பாக சுமார் 11 மணி நேரம், சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்த மாணவி, 43 வீடியோ ஆதாரங்களையும் ஒப்படைத்தார்.
 இவ்வளவு ஆதாரங்களை அளித்த பிறகும், உ.பி. பாஜக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், சின்மயானந்தாவைக் கைது செய்யவில்லை.
இதனால் விரக்தியடைந்த மாணவி, ஒருகட் டத்தில் தீக்குளிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
 சுரன் 260919

இதையடுத்து சின்மயானந்தாவை செப்டம்பர் 20-ஆம் தேதி கைது செய்த உ.பி. பாஜக அரசு, தற்போது புகார் கொடுத்த மாணவியையும், அவரது நண்பர்களையும் கைது செய்து, அதிர்ச்சி அளித்துள்ளது.
அதாவது, சின்மயானந்தாவிடம் மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக இரண்டு நாட்களுக்கே முன்பே, மாணவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டை மாணவி உறுதிபட மறுத்தார். “நான் 5 கோடி ரூபாய் கேட்டேன் என்று சின்மயானந்தாவின் வழக்கறிஞர் கூறுகிறார்; அது சுத்தப் பொய்; அவரிடம் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
எனினும், முன்னெச்சரிக்கை அடிப்படையில், ஷாஜகான்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவும் தாக்கல்செய்தார். இந்த மனு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், அதற்கு முன்னதாகவே செவ்வாய்க்கிழமையன்று இரவு, மாணவியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சிறப்புப் புலனாய்வுக்குழுவினர், புதன்கிழமையன்று காலை அவரைக் கைது செய்து, நீதிமன்ற ஆஜர்படுத்துதலுக்குப் பிறகு, சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்வழக்கில், முக்கியக் குற்றவாளியான சாமியார் சின்மயானந்தா, 2 நாள் மட்டுமே சிறையில் இருந்தார். தற்போது நெஞ்சுவலி என்ற பெயரில் லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சின்மயானந்தாவை காப்பாற்றும் விதமாக, அவர்மீது பாலியல் வல்லுறவு வழக்கு பதிவுசெய்யப்படாமல், அதிகாரம் செலுத்தி உறவு வைத்துக்கொண்டார் (IPC 376C) என்று மட்டுமே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
 மேலும், இந்தியத் தண்டனைச் சட்டம் 354 னு (பின்தொடருதல்), 342 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்) 506 (கிரிமினல் மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சின்மயானந்தாவால் பாதிக்கப்பட்ட மாணவி, அவசர அவசரமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 மாணவியின் நண்பர்களான சஞ்சய், சச்சின், விக்ரம் ஆகிய 3 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதான் காவிமய சட்டம் &ஒழுங்கு லட்சணம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இனி, ஒரு எண் கூட
நாளுக்கு நாள் அலைபேசியை  பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகத்திவருவதனால் 11 இலக்கமாக மாற்றலாம என டிராய் ஆலோசனைகள் நடத்தி வருகிறது.
 சுரன் 260919

------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால்
உலக கடல்சார் தினம்

கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்(1932)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நினைவு தினம்(1954)
ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)
 சுரன் 260919

 பண்பாட்டுக்கு கட்டிடங்கள்.


1687 - மிகப்புகழ்பெற்ற பண்டைய கிரேக்கக் கட்டிடமான பார்த்தினன், மோரியப் போரில் சேதமுற்றது. வெனிஸ் குடியரசுக்கும், ஒட்டோமான் பேரரசுக்குமிடையிலான இப்போரில், மோரியாவை வெனிஸ் குடியரசு கைப்பற்றியதால் இது மோரியப்போர் என்று குறிப்பிடப்படுகிறது.
மோரியா என்பது தற்போதைய கிரீசின் தென்பகுதியிலுள்ள பெலப்பனீஸ் தீபகற்பத்தின் அக்காலத்திய பெயர். புனித ரோமப் பேரரசின் ஹாப்ஸ்பர்க் அரசர்கள், போலந்து-லிதுவேனியா, வெனிஸ், ரஷ்யா ஆகியவை அடங்கிய புனிதக்கூட்டணிக்கும், ஒட்டோமான் பேரரசுக்குமிடையே 1683-99 காலத்தில் நடைபெற்ற பெரும் துருக்கியப்போரின் ஒருபகுதியாக இப்போர் நடைபெற்றது.

பார்த்தினன் என்பது அறிவு, கைவினைத்திறன், போர் ஆகியவற்றின் கிரேக்கக் கடவுளான ஏதெனா-வின் ஆலயமாகும். பழைய கிரேக்கக் கட்டிடக்கலையின் எஞ்சியுள்ள அடையாளங்களில் மிகமுக்கியமானதாகக் குறிப்பிடப்படும் பார்த்தினன், கி.மு.447இல் தொடங்கப்பட்டு, 438இல் கட்டி முடிக்கப்பட்டாலும், அழகுபடுத்தும் பணிகள் 432வரை தொடர்ந்தன.
பார்த்தினன் கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே ஏதனாவுக்கு ஓர் ஆலயம் இருந்து, கி.மு.480இல் பாரசீகப் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.
 சுரன் 260919

 கிரேக்கக் கட்டிடக்கலையின் டோரிக் முறைப்படி கட்டப்பட்ட  பார்த்தினன், கிரேக்கச் சிற்பக்கலையின் மிகச்சிறந்த சிற்பங்களைக்கொண்டிருந்தது.
 கிரேக்கத்தின் நடு, மேற்குப்பகுதிகளிலிருந்து  டோரிக், கிழக்குப்பகுதி யிலிருந்து அயானிக், பின்னாளில் உருவானதும், மூன்றிலும் அதிக அழகாக அலங்கரிக்கப்பட்டதுமான கோரிந்தியன் ஆகிய முறைகள் கிரேக்க கட்டிடக்கலையில் காணப்படுகின்றன.

பெரும்பாலான கிரேக்க ஆலயங்களைப் போலவே, நகரின் கருவூலமாகவே பயன்படுத்தப்பட்டுவந்த பார்த்தினன், கி.பி.6ஆம் நூற்றாண்டுகாலத்தில் கன்னி மேரிக்கான கிறித்தவ தேவாலயமாக மாற்றப்பட்டது. 1400களின் இடைப்பகுதி யில், ஏதென்சை ஒட்டோமான் துருக்கியர்கள் கைப்பற்றி யதையடுத்து, இது ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.
பார்த்தினன் அமைந்திருந்த கோட்டை நகரான ஏதெனியன் அக்ரோபொலிஸ் என்பதன் வெடி மருந்துக் கிடங்காக இதனை துருக்கியர்கள் பயன்படுத்தி வந்த நிலையில், 1687 செப்டம்பர் 26 அன்று, ஃபிலோபாப்பஸ்  மலையிலிருந்து வெனிஸ் படையினர் சுட்ட குண்டு விழுந்ததில், இதன் ஒரு பகுதி சேதமுற்றது.

 உயரமான என்ற பொருளுடைய அக்ரோன், நகரம் என்ற பொருளு டைய பொலிஸ் ஆகிய கிரேக்கச் சொற்களிலிருந்து உருவான அக்ரோபொலிஸ் என்பது,  கிரேக்கத்தின் கோட்டை நகரங்களின் பொதுவான பெயர் என்றாலும், பார்த்தினன் அமைந்துள்ள ஏதென்சின் அக்ரோபொலிசைக் குறிக்கவே அச்சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது.

1975இல் தொடங்கிய  பார்த்தினன் உள்ளிட்ட கிரேக்கக் கட்டிடக்கலைச் சின்னங்களை மறுசீரமைக்கும் பணி 2020இல் முடிவுறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நினைவில் கொள்ளுங்கள்.

 சுரன் 260919
 செப்டம்பர் .
 23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு

அக்டோபர் 
.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு

டிசம்பர் 
.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
நபார்ட் வங்கியில் வேலை.


 மத்திய அரசின் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி நபார்டு. இங்கு 'டெவலப்மென்ட்' உதவியாளர் (82), 'டெவலப்மென்ட்' உதவியாளர்/இந்தி (9) என 91 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 18 - 35. வயது வரம்பு தளர்ச்சி உண்டு.

தகுதி: * ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, 69 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
* இந்தி பிரிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இந்தி அல்லது ஆங்கில பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.32,000

கடைசி நாள்: 2.10.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன் லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (ஆன் லைன்), நேர்முகத் தேர்வு

விபரங்களுக்கு: https://www.nabard.org.
 --------------------------------------------------------------------------------


 ரிசர்வ் வங்கிப் பனி.





 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜக்கி வாசுதேவ் நம்பத் தக்கவரல்ல.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?