வெற்றி பெறுவது எளிது

 

  • எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவது, அதன் காரணமாக ஆளும் கட்சிக்கு மாற்று இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வருவது இரண்டு இணைந்து பாஜகவின் தொடர் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.
  • இந்தத் தேர்தலில் பாஜக தனது இந்துத்துவக் கொள்கையை இரண்டாம் பட்சமாகவே பரப்புரையில் பயன்படுத்தியது. மாறாக மக்களுக்கு தான் வழங்கிய பொருட்கள், சேவைகளை முதன்மைப்படுத்திப் பிரச்சாரம் செய்தது.
  • இதன் பிறகாவது பாஜகவிற்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணி இந்திய அளவில் உருவாகவில்லை என்றால் பாஜக அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறவே செய்யும்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பஞ்சாப் தவிர ஏனைய நான்கு மாநிலங்களில் - உத்தரப் பிரதேசம், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் - பாஜக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

இதில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெற்ற வெற்றி மிக முக்கியமானது. 2024 பாராளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதற்கு இந்த வெற்றி ஒரு அறிகுறி என்று பாஜக எதிர்ப்பாளர்களே கவலைப்படுகிறார்கள்.
இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கடந்த இரு வருடங்களாக பல பிரச்சினைகள் இருந்தன. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை, விவசாயிகள் போராட்டம், பொருளாதார வீழ்ச்சி ஆகியவை அவற்றில் சில. இவற்றையும் மீறி பாஜக வெற்றி பெற்றிருப்பதை எப்படி விளங்கிக்கொள்வது?
ஆளும் கட்சிக்கு எதிரான வாக்களிக்கும் மனநிலை என்பது இந்திய அரசியலில் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் இருந்த ஒன்று. ஆனால் கூட்டணி வைத்துப் போட்டியிடும் போக்கு இந்திய அளவில் மறைந்த அதே நேரத்தில் மோடியின் யுகம் ஆரம்பித்தது. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அரசியல் மறையத் துவங்கியது பாஜகவிற்குச் சாதகமாகியிருக்கிறது. அதன் பிறகு ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை என்னும் காரணி வலுவிழக்கத் துவங்கிவிட்டது. அதாவது எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவது, அதன் காரணமாக ஆளும் கட்சிக்கு மாற்று இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வருவது இரண்டு இணைந்து பாஜகவின் தொடர் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது.

ஆதித்யநாத்தின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது, தனிநபர் வருமானம் குறைந்திருப்பது, வேலையின்மை அதிகரித்திருப்பது, கோவிட் மரணங்கள் - பிரச்சினைகள் இருந்தாலும் பாஜக வெற்றி பெற என்ன காரணம்?

பாஜக இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஒரு வலதுசாரிக் கட்சிதான். இந்துத்துவக் கொள்கையைத்தான் உ.பி. தேர்தலிலும் முதன்மையாக பேசிவந்தது. ஆனால் அதுமட்டுமே வெற்றியைத் தந்துவிடவில்லை.
பொருளாதார வீழ்ச்சி உட்படப் பல பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் நலன் என்ற பெயரில் பாஜக அரசு மக்களுக்கு நேரடியாக பொருட்களையும் சேவைகளையும் வழங்கியது. இலவச கேஸ் சிலிண்டர்கள், வங்கிக் கணக்குகள், கழிப்பறை கட்டிக் கொடுப்பது, குடிநீர் இணைப்பு, மக்களுக்கு நேரடியாகப் பணம் மற்றும் ரேஷன் பொருட்களைக் கொடுப்பது போன்றவற்றைத் திட்டமிட்டுச் செய்தது. அதைப் பிரச்சாரமும் செய்தது.

பள்ளிகள், சாலைகள் போன்றவை கட்டப்படும்போது அது மக்களின் நேரடி பலன் என்பதாக வாக்காளர்கள் புரிந்து கொள்வதில்லை. மாறாக தொட்டறியத்தக்க பொருட்கள், சேவைகள் கிடைப்பதை முக்கியமாகக் கருதுகிறார்கள். இந்த உளவியலை பாஜக வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டது.

கோவிட் பொது முடக்கத்தின்போது ஒன்றிய அரசு தந்த ரேஷன் பொருட்களோடு கூடுதலாக ஒரு கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ உப்பு, மற்றும் ஒரு கிலோ பருப்பை யோகி அரசு வழங்கியது. ஆகவே வேலையின்மை பிரச்சினை பெரிதாக இருந்தாலும் மக்கள் இந்தப் பொருட்களை பெரிய நிவாரணமாக பார்த்தார்கள்.

அடுத்து சட்டம் ஒழுங்கில் பாஜக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்ற பிரச்சாரம் மக்களிடையே நடத்தப்பட்டது. குற்றப் புள்ளிவிவரங்கள் இதற்கு எதிராக இருந்தாலும் பாஜக தனது பிரச்சாரத்தில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் ரவுடி ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறந்தது என்ற பாஜகவின் பிரச்சாரத்தை மக்கள் கணிசமாக நம்பினார்கள். உண்மையில் பாஜக ஆட்சியில்தால் சாதி மற்றும் மத ரீதியான வன்முறைகள் அதிகம் நடந்திருக்கின்றன.

இந்தியாவில் எங்கே தேர்தல் நடந்தாலும் அங்கே பாஜகவின் துருப்புச் சீட்டு மோடிதான். மோடியின் பிம்பம்தான். தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்டசித் தேர்தலில்கூட மோடிதான் சுவரொட்டிகளில் ஆக்கிரமித்தவாறே பாஜகவிற்கு வாக்கு கேட்டார். பெரும்பான்மை மாநிலங்களில் உள்ளூர் தலைவர்கள் யாரும் மாநில அளவில் மோடி போன்று ஒரு ஆளுமை கொண்டவர் அல்ல. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் ஆதித்யநாத் மோடிக்கு சவால் விடும் அளவுக்கு தனது பிம்பத்தை கட்டியமைத்துக்கொண்டார். சிலர் அவர்தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று கணிக்கின்றனர். இது அவசரமான கணிப்பு என்றாலும் உ.பி தேர்தலில் மோடி போன்று ஒரு உள்ளூர் மோடி அதாவது யோகி ஆதித்யநாத் மாற்றப்பட்டுவிட்டார்.

மோடியின் பிம்பம் என்பது அவர் ‘இந்துக்களின் காவலன்’ என்பதோடு இணைந்தது. அதே பிம்பத்தை இன்று யோகி ஆதித்யநாத் வரித்துக் கொண்டார். தேர்தல் பிரச்சாரங்களில் அவர் இந்துத்துவத்தை முன்னிறுத்தி வெறுப்புப் பிரச்சாரங்களை நேரடியாகச் செய்தார். எனினும் இந்தத் தேர்தலில் பாஜக தனது இந்துத்துவக் கொள்கையை இரண்டாம் பட்சமாகவே பரப்புரையில் பயன்படுத்தியது. மாறாக மக்களுக்கு தான் வழங்கிய பொருட்கள், சேவைகளை முதன்மைப்படுத்திப் பிரச்சாரம் செய்தது.

அடுத்து சாதி அரசியல். மண்டல் கமிஷனுக்குப் பின்பு எழுந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் அடிப்படையைக் கணிசமாக பாஜக பறித்துவிட்டது. வரலாற்று ரீதியாக இருந்த உயர் சாதி வாக்குகளோடு யாதவ் - முஸ்லிம் தவிர்த்த பிற்படுத்தப்பட்ட, பட்டியிலினச் சாதி வாக்குகளையும் அது திரட்டியிருக்கிறது. சாதி அரசியல் என்பது நேர்மறை அரசியல் அல்ல. அது ஒரு சாதியனருக்கு எதிரான ஒரு சாதி அல்லது மதப்பிரிவினரை முன்னிறுத்தி மக்களைத் திரட்டுகின்ற எதிர்மறை அரசியலாகும். இதில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் பகுஜன் போன்ற கட்சிகள் துடைத்தெறியப்பட்டுவிட்டன. அதே போன்று காங்கிரசும்.

சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் யாதவ ஆதிக்கம் இருக்கும் என்ற பிரச்சாரத்தை பாஜக மறைமுகமாகச் செய்தது. மக்களுக்கும் அப்படியான பயம் இருந்தது. இந்த பிம்பத்தை போக்குவதில் சமாஜ்வாதி கட்சி ஓரளவு வெற்றி பெற்றாலும் அது பாஜகவின் பெரு வெற்றிக்கு ஈடாகவில்லை.

சமாஜ்வாதி கட்சி என்றால் யாதவர்கள் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி என்றால் ஜாதவர்கள் என்றும் அர்த்தம். மற்ற சாதியினரை அணிதிரட்ட சமாஜ்வாதி கட்சி பெரு முயற்சி பெற்றாலும், அதன் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகள் முஸ்லிம்களிடமிருந்து வந்திருந்தாலும் மொத்தத்தில் பாஜகவின் பாணியிலான சாதி அரசியலோடு போட்டி போட முடியவில்லை.

அடுத்தது இந்தியாவிலேயே மிக அதிக பணத்தை கட்சி நிதியாக வைத்திருக்கும் பாஜக, தனது பரப்புரையை பிரம்மாண்டமாக நடத்தியது. உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கட்சியின் முக்கியத் தலைவர்களும் எவ்வளவு பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் ஈடுபட்டார்கள் என ஆங்கில நாளிதழ்களில் வெளியான தகவலைப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேசத்தில் இந்த 7 கட்டத் தேர்தல் காலத்தில் சார்பில், யோகி ஆதித்யநாத் - 203, பிரதமர் நரேந்திர மோடி - 28, அமித்ஷா - 54, ராஜ்நாத் சிங் - 43, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா - 41, என்னும் எண்ணிக்கையிலான பொதுக்கூட்டம்/ பேரணிகள் / மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டிருக்கின்றனர். பாஜகவிற்கு எதிராக கடுமையாக போட்டியளித்த அகிலேஷ் யாதவ் 131 பொதுக்கூட்டங்கள்/ பேரணிகள்/ மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டிருக்கிறார்.

காங்கிரஸ் பிரியங்கா காந்தியை முன்னிறுத்திப் பிரச்சாரத்தை மேற்கொண்டாலும் ராகுல் காந்தி குறைந்த அளவிலேயே பிரச்சாரத்தில் கலந்துகொண்டார். எனவே பாஜக தனது கொள்கைகளை வேறு எந்தக் கட்சிகளையும் விட மக்களிடையே கருத்துருவாக்கம் செய்வதில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி தனது வாக்கி வங்கியையும் தொகுதிகளையும் உயர்த்தியிருந்தாலும் ஆளும் கட்சி அளவுக்கு வெற்றியை ஈட்ட முடியவில்லை. ஆனால் பாஜக பெற்ற வாக்கு விகிதத்தைவிட எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த வாக்கு விகிதம் அதிகம்.

இறுதியாகச் சொல்வதென்றால் கூட்டணித் துணையின்றி போட்டியிட்ட சமாஜ்வாதிக் கட்சியை பாஜக வென்றிருக்கிறது. இதன் பிறகாவது பாஜகவிற்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணி இந்திய அளவில் உருவாகவில்லை என்றால் பாஜக அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறவே செய்யும்.

இந்த வெற்றியின் மூலம் பாஜக தனது இந்துத்துவக் கொள்கையை மேலும் தீவிரப்படுத்துவதோடு அதற்கு ஈடாக மக்களைக் கவரும் பொருளாதாரத் திட்டங்களையும் உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் முன்னெடுக்கும். இன்னொரு புறம் கார்ப்பரேட் நலனுக்கான பிரம்மாண்டமான திட்டங்களும் மக்களின் பார்வைக்கு வராமல் நடக்கும். ஊடக ஆதரவும் பாஜகவிற்குத்தான் அதிகம். இந்நிலையில் தனது பிரச்சாரத் திட்டத்தினைத் தேர்தலுக்கு தேர்தல் மேம்படுத்திவரும் பாஜகவின் சக்தியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் நிறையவே போராட வேண்டியிருக்கும்.

பாஜக வெல்ல முடியாத கட்சி இல்லை என்பதை ஓரளவுக்கு சமாஜ்வாதியின் வெற்றியும், பஞ்சாபில் ஆம் ஆத்மியின் பெரு வெற்றியும் உணர்த்தியிருக்கின்றன. எல்லா எதிர்க்கட்சிகளும் அப்படி உணரும்போது பாஜகவின் போர் வியுகத்தைப் பிளப்ப


சாத்தியமாகலாம்.
ஆம் ஆத்மி,ஓவைசி,மாயாவதி  ஆகியோர் பா.ஜ.க பினாமிகள்,ஆதரவான ஐந்தாம் படைகள்தான்.ய
பிளந்து கிடக்கும் எதிர்கட்சிகள் தங்கள ஒன்றிணைந்து இயங்க வேண்டும்.
-----------------------------------------------------------------------
புல்லிபாய்.
டந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி காலையில் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை எதிர்நோக்கி தொலைபேசியை எடுத்த முசுலீம் பெண்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவர்களை ‘புல்லி பாய்’ என்ற செயலியின் மூலம் ஏலம் விடும் செய்தி வந்தடைந்தது.
“இன்றைய நாளுக்கான ஏலம்” என்ற பெயரில், நூற்றுக்கும் மேற்பட்ட முசுலீம் பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் சமூக வலைதளங்களில் இருந்தே எடுத்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது.
 முசுலீம் மக்களை உளவியல் ரீதியில் தாக்கித் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்ட இதில், 16 வயது குழந்தை முதல் JNU பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் போன தன் மகன் நஜீப் அகமதுக்காக நீதி கேட்டு போராடிவரும் 65 வயதான தாய் வரை அனைவரின் புகைப்படங்களும் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. இவற்றில், அவர்களின் தனிப்பட்ட விவரங்களும் இணைக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற பதிவுகள், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் “இராமர் கோயில் கட்டுவதை எதிர்க்கும் பெண்கள்” என்ற தலைப்பில் விளம்பரமாக்கப்பட்டன.
 இந்த இணைய துன்புறுத்தலில், முக்கியமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிஸ்டுகளின் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் முசுலீம் வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களே குறிவைத்து தாக்கப்பட்டிருந்தனர்.
மண்டை முழுவதும் காவி வெறி தலைக்கேறிய சில கேடுகெட்ட கும்பல்கள், சமூக வலைதளங்களை முசுலீம் வெறுப்பு ஆயுதமாக பயன்படுத்தும் – இதுபோன்ற ஏலம் விடும் முறைக்கு புல்லிபாய் செயலி புதிதல்ல. இது மூன்றாவது முறை.
முதலாவதாக, கடந்த ஆண்டு மே 13-ம் தேதி, இஸ்லாமியர்களின் ஈகை திருநாளன்று ‘லிபரல் டாகே’ என்ற யூடியூப் சேனலில் ஒரு காணொளி பரப்பப்பட்டது.
 “ஈத் சிறப்பு” என்ற பெயரில் அச்சேனலின் நேரடி ஒளிபரப்பில், பாகிஸ்தான் மற்றும் நம் நாட்டு முசுலீம் பெண்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி, பாலியல்ரீதியாக துன்புறுத்தும் வகையில் பேசி ஏலம் விட்ட சகிக்கமுடியாத கொடூரம் அரங்கேறியது. அக்காணொலி நீக்கப்படுவதற்கே பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் கொடுக்கப்பட வேண்டியிருந்தது.
இரண்டாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தற்போது பேசப்படும் “புல்லி பாய்” என்ற செயலியைப் போல “சுல்லி டீல்ஸ்” என்ற செயலி வெளிவந்து பெரும் சர்ச்சையாகியது. 

இதில் எண்பதுக்கும் மேற்பட்ட முசுலீம் பெண்களின் புகைப்படங்கள் ஏலம் விடப்பட்டிருந்தது..
இந்த ‘சுல்லி’ மற்றும் ‘புல்லி’ என்ற பெயர்கள் சங்க பரிவாரத்தினர், முசுலீம் பெண்களை இழிவாக பேச பயன்படுத்தும் ‘முல்லி’ என்ற சொல்லின் மாறுபாடாகும்.
 “சுல்லி டீல்ஸ்“ செயலி வெளிவந்தபோதே பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக யாரும் கைதுசெய்யப்படவில்லை; வழக்கு விசாரணையே ஊற்றி மூடப்பட்டது.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதிகள் 2021-ஐ கொண்டுவருவதற்காக, “இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், காணொளிகளை பகிர்வது அதிகரித்துவிட்டது. 
அவர்களை ஒடுக்க வேண்டும்” – என்றெல்லாம் மோடி அரசு கூறிய காரணங்கள் எத்தகைய அண்டப் புளுகு என்பதை இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
000
தற்போதைய புல்லி பாய் விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த புல்லி பாய் செயலியைக் கண்டித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என நாடு முழுவதிலிருந்து கிட்டத்தட்ட 4,500 பேர் கையெழுத்திட்டு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்கள்.
இவ்வாறு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்களும் புகார்களும் வந்ததையடுத்து வேறு வழியின்றி காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. 
இதுதொடர்பாக, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் பிஷ்னோய், பெங்களூருவை சேர்ந்த விஷால் குமார், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மயங்க் ராவல், ஸ்வேதா சிங் மற்றும் இந்தூரை சேர்ந்த உம்கரேஷ்வர் தாக்கூர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த “புல்லி பாய்” என்ற செயலி கிட்ஹப் (GitHub) என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்தில் வெளியிடப்பட்டது. 
கிட்ஹப் என்பது உலகின் மிகப்பெரிய திறந்தவெளி பயன்பாடுகளை உருவாக்கும் தளமாகும். யார் வேண்டுமானாலும் இந்த தளத்தில் எந்த மென்பொருள் குறியீட்டையும் பதிவேற்ற முடியும். 
இதற்குமுன் வெளிவந்த சுல்லி டீல்ஸ் என்ற செயலியும் இந்த தளத்தில் வடிவமைக்கப்பட்டதுதான்.
இதில் சுல்லி டீல்ஸ் செயலியை உருவாக்கிய உம்கரேஷ்வர் தாக்கூரும் புல்லி பாய் பயன்பாட்டை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்பவனும் “ட்ரேட்ஸ்”(TRADS) என்ற குழுவைச் சார்ந்தவர்கள் என்றும் அங்கிருந்துதான் முசுலீம் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஏலம் நடத்தும் யோசனை வந்தது எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்.
 மேலும் கைதான நீரஜ் பிஷ்னோய் என்பவன் தாம் செய்ததில் தவறொன்றும் இல்லை, நான் செய்தது சரியே என்று கூறியுள்ளான்.
000
புல்லி பாய் மற்றும் சுல்லி டீல்ஸ் சம்பவங்களைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இளைஞர்களிடையே “ட்ரேட்ஸ்” என்ற பெயரில் ஒரு குழு செயல்படுவது தெரிய வந்துள்ளது. 
ட்ரேட்ஸ் (Trads) என்பது “Traditionalists – பழமைவாதிகள்” என்பதன் சுருக்கமாகும். இவர்கள் பெரும்பாலும் இணைய வழியில், தன்னிச்சையாக செயல்படுபவர்களாக உள்ளனர்.
இவர்கள் நவ நாஜிக்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் மாற்று வலது (alternate right) என்று அழைக்கப்படும் வெள்ளை இனவெறி இயக்கங்களை முன்மாதிரியாக கொண்டு செயல்படுகிறார்கள். 
ஹிட்லர் யூதர்களை செய்தது போல, இஸ்லாமியர்களை வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் உயர்வானவர்கள், மற்றவர்கள் கீழானவர்கள் என்ற வர்ணாசிரம கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்; 
ஆண்கள் சுகிப்பதற்கான சதைப் பிண்டமாகவும் அடிமைகளாகவுமே பெண்களை பார்க்கச் சொல்லும் மனு நீதியை இந்திய அரசியலமைப்புச் சாசனமாக மாற்றவேண்டும் – என்று இவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிரக் கனவை கொண்டிருந்தாலும் அவர்களின் சில சாத்வீக (மென்மையான) வழிமுறையை கடுமையாக விமர்சிக்கிறார்கள். 
இவர்களை பொறுத்தவரை முஸ்லிம்கள், தலித்துகள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையை மேலும் பகிரங்கமாக செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். 
இந்த செயலியை கூட சீக்கியர்களை இழிவுபடுத்த அவர்களின் பெயர்களை பயன்படுத்திதான் உருவாக்கியுள்ளார்கள்.
சிறுபான்மையினர் மீதான ட்ரேட்ஸ் குழுவினரின் வக்கிரங்களை அவர்கள் வடிவமைத்து பரப்பிய மீம்ஸ்-களில் தெளிவாக காணமுடியும். 
பாலியல் வல்லுறவினால் இறந்த சிறுபான்மையின பெண் மீது சிறுநீர் கழிப்பது, தலித்துகளை கரப்பான்பூச்சிகளாக சித்தரித்து விஷவாயு மூலம் கொல்வது, முசுலீம் பெண்களை வல்லுறவு கொள்வது போன்று குரூரமான வடிவங்களில் மீம்ஸ்-களை பதிவிடுகிறார்கள். 
இதையெல்லாம் நகைச்சுவையாக்கி மகிழும் அளவிற்கு இவர்களுக்கு வெறி தலைக்கு ஏற்றப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறுப்பை பிரச்சாரம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகள் உண்மையில் ட்ரேட்ஸ்-ஆல் நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறை கண்டறிந்துள்ளது. 
இந்த புல்லி பாய் விவகாரத்தில் கைதானவர்கள் எல்லாரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பார்க்கும்போது இவர்களைப் போன்றவர்கள் நாடுமுழுவதும் பரவலாக இருப்பதை உணரமுடிகிறது.
----------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?