மீண்டும் வேலுமணி!
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனைகளில் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்நிலையில் மீண்டும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியனர்.
மேலும் கணக்கில் வராத ரூ. 13 லட்சம், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக இன்று காலையிலிருந்தே எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பாகச் சென்னையில் மட்டும் 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த காலத்தில் ரூ.58.23 கோடிக்கு அதிகமாகச் சொத்துக்களை சேர்த்திருப்பதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் தற்போது வரை சிக்கியுள்ள ஆவணங்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், 27.04.2016 முதல் 15.03.2021 வரையுள்ள காலக்கட்டத்தில் மட்டும் வருமானத்தை விட அதிகமாக ரூ.58,23,97,052 சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக பதவிவகித்த காலத்தில், சுமார் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்திருப்பதாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.
இதனிடையே, எஸ்.பி வேலுமணி வீட்டில் குவிந்த தொண்டர்களுக்கு காலை இட்லி, வெண் பொங்கல், கிச்சடி, கேசரி, உப்புமா வடை, பிஸ்கட், டீ மற்றும் காபி அதிமுகவினர் வழங்கியிருக்கிறார்கள்.
இதுபோக எனர்ஜியாக இருப்பதற்காக அவ்வப்போது ரோஸ் மில்க்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே , அங்கு கூடியவர்களுக்கு காலாவதியான குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதை வாங்கிய பலரும் அதிருப்தியடைந்து குரல் எழுப்பியால் அங்குஅதிர்ச்சியடைந்த்தாகதகவல் வெளியாகியுள்ளது.
இது சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கிரிப்டோகரன்சியில் 34 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி 2016 முதல் 2021 காலகட்டத்தில் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரொக்கப் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் இன்று அதிகாலை முதல் மீண்டும் சோதனை நடத்தினர்.
கோவையில் 41 இடங்கள் சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள் என எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் சோதனை நடந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று நடத்திய சோதனையில், 11.153 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள், கணக்கில் வராத பணம் ரூ.84,00,000 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ரூ.34,00,000 அளவுக்கு எஸ்.பி.வேலுமணி பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
----------------------------------------------------------------------------;;
-----------------------------------------------------------------------------------
35 லட்சம் லஞ்சப் பணம் பிடிபட்டது.
சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
தகவலின்பேரில், துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்புத் துறை திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
------------------------------------------------------------------------------
உளவுத்துறை.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினரை நிறுத்தி வெற்றி பெறவைத்தது, தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெறச் செய்தது என பல்வேறு நெருடல்களை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் தான் திமுகவுக்கு உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
அரசியல் கட்சிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. 2016ஆம் ஆண்டு திமுக உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது.அதன் பிறகு 2021ஆம் ஆண்டு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல், கனமழை, வெள்ளம் என பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தவில்லை.
இது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு டி.ஆர்.பாலு அவகாசம் வாங்கினார். இந்நிலையில் ஏப்ரல் மாதத்துக்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தவேண்டும் என்ற நெருக்கடி திமுகவுக்கு உருவாகியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் உட்கட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, கிளைக் கழக நிர்வாகிகள் என அனைத்து தரப்புக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என தலைமைக் கழக முக்கிய பதவிகள் போட்டியிருக்காது.
திமுகவில் 77 மாவட்ட அமைப்புகள் உள்ளன. மாவட்டச் செயலாளர் பதவிகளை தங்களது ஆதரவாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வேலையில் தலைமைக்கு நெருக்கமானவர்கள், அமைச்சர்கள் ஈடுபடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டவர்கள், அவர்களை தூண்டிவிட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் விவரங்களை ரிப்போர்ட்டாக கொடுக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது சீக்ரெட்டாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டதாம்.
-----------------------------------------------------------------------------
ஹிஜாப்பும், கத்தியும்.
ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் மீதான தடையை ரத்து செய்யக் கோரி ஐந்து முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று(மார்ச் 15) ஹிஜாப் மீதான தடை செல்லும் என்றுக் கூறி மாணவிகள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சிறிது நேரத்திலேயே, இந்த தீர்ப்பை எதிர்த்து உடுப்பி மாணவர்கள் உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இந்த மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கான உரிமையை பெறுவதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டே தங்கள் கல்வியையும் தொடர்வார்கள்.
இவர்கள் நீதிமன்றம் மற்றும அரசியலமைப்பு மீதான நம்பிக்கையை இழக்கவில்லை.
சீக்கியர்கள் தலைப்பாகை, உரிமை இருந்த்து்.
தற்போது விமானத்திலேயே கத்தி கொண்டு செல்லலாம் என நேற்று தீர்ப்பு வந்துள்ளது.ஆனால் ஹிஜாப்புக்கு மட்டும் தடை என்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.தனஞ்சய், “உயர் நீதிமன்றத்தின் முழு உத்தரவு வெளியான பிறகு உச்சநீதிமன்றத்தை நாடுவோம்'” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த பிரச்சனையை தேசியளவில் பெரிய பிரச்சனையாக்க வேண்டாம்.
தேவையான நேரத்தில் இந்த வழக்கு மீது விசாரணை நடத்துவோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------