60,000 பணியிடம்.48 லட்சம் தேர்வாளர்கள்
"கிழக்கிந்திய கம்பனி போய் மேற்கிந்திய குஜராத் கம்பனி வந்திருக்கிறது.. அந்த கம்பனி செய்யும் அராஜகங்களை பாருங்கள்
🔹உலகமெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறையும் போது நம்நாட்டு மக்களுக்கு அதை லாபத்திற்கு விற்கிறார்கள். இது அரசா அல்லது கம்பெனியா?
🔹மொழி பிரச்னையை கிளப்பி மோத விடுவது
🔹கவர்னரை அனுப்பி இடைஞ்சல் செய்வது
🔹ED ரெயிட் விடுவது
🔹முதல்வர்களை கைது செய்வது
🔹ஓட்டு பெட்டியை தூக்கி கொண்டு ஓடுவது
இந்த அக்கிரமங்களை செய்யும் செய்யும் அரசு வேண்டுமா??
இல்லை..
சாப்பாடு கொடுத்து படிக்க வைக்கும் அரசு வேண்டுமா??
முடிவு செய்யுங்கள்."
-கமல்.
---------------------------------------------------------------
"நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே...
தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?
5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே...
நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா?
NDRF-லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப் பணம் இருக்க, உங்களுக்கு மனம் வராதது ஏன்?
ஆணவம் வேண்டாம்; தப்புக்கணக்கு போடுகிறீர்கள். நாள் கணக்குதான் இனி..."
-மு.க.ஸ்டாலின்.
கர்நாடகாவில் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை - மீட்பு பணிகள் தீவிரம்.
காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, இன்று டெல்லியில் 29வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது!
மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகையைவழங்காமல் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஒரு ரூபாய் கூட மழை வெள்ள நிவாரண நிதியாக தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு உரிய வெள்ள நிவாரணத் தொகையான 37 ஆயிரத்து 907 கோடி ரூபாயை உடனடியாக வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றுக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், தமிழ்நாட்டுக்கு உடனடி நிவாரணமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் பலமுறை ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியும் எந்த பலனும் இல்லை என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்காமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒன்றிய அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிக்க
என்ன செய்ய வேண்டும்?
n அரசு பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஆதரவை வழங்க வேண்டும்.
n விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை (MSP) உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
n தொழில்துறை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலைகள் மற்றும் சிறந்த ஊதியங்கள் வழங்க வேண்டும்.
n விவசாயத் தொழிலாளர்களுக்கு உத்திரவாதப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய ஊரக வேலை திட்டத்தின் வேலைநாட்கள் மற்றும் ஊதியங்கள் அதிகரிக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும்.
n தொழில்துறையில் 65 சதவீத வேலைவாய்ப்பை வழங்குவதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறையை ஆதரிக்க வேண்டும். முக்கியமாக நாட்டின் பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும்.
n வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவன ஏகபோகங்களின் பங்கைக் குறைக்க வேண்டும்.
n தனியார்மயக் கொள்கையை அரசு கைவிட வேண்டும். தனியார் துறையால் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.
60,000 பணியிடங்களுக்கு 48 லட்சம் தேர்வாளர்கள்
பிப்ரவரி மாத நடுப்பகுதியில் 60,000 காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக பாஜக ஆளும் உத்தரப்பிர தேச அரசாங்கம் அறிவித்தபோது, 48 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்வு மையங்களில் குவிந்ததால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக மோசமான நெரிசலுடன் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டும், ரயில் நடைமேடைகளில் உறங்கியும் ஒரு வழியாக எப்படியோ கடும் போராட்டத்துடன் தேர்வறைக்குச் சென்று, தேர்வு எழுதினர்.
சமீபத்தில் வேலையில்லாதவர்களின் விரக்தியாலும், இந்திய அரசாங்கத்தின் அலட்சியத்தாலும் பிப்ரவரி மாத மத்தியில் இஸ்ரேலின் போர் மண்டலத்தில் பணி புரிவதற்காக 10,000 கட்டுமானத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது. இஸ்ரேலின் போர் மண்டலதிற்கான ஆட்சேர்ப்பு பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.