ஒற்றை வீடியோ’ காலி
ஜிஎஸ்டி,மற்றும் பண மதிப்பிழப்புபோன்ற பாஜகவின் நடவடிக்கைகளால் பனியன்,ஜவுளி,நெசவாளர் தொழில் பாதிப்பு."கமல் குற்றச்சாட்டு.
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்6.5அளவில்.
அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்
“எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? காதுகள் பாவமில்லையா!” பாஜகவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் !
உலகின் உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலைகள் இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
"எல்லோருக்கும் ஒரே ஓட்டு மட்டும்தானே... அம்பானிக்கும், அதானிக்கும் கோடி கோடியாய் கொடுக்குறீங்க...ஏழைகளுக்கு ரூ.3000 கொடுத்தா என்னகேடு"? மோடிக்கு எடப்பாடி கேள்வி .
தேர்தலையொட்டி தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேவை 40% அதிகரிப்பு .
“ஒரே நாடு என ஒற்றை மதத்தை பரப்ப பாஜ திட்டம்” .அமர்தியா சென் குற்றச்சாட்டு.
பிரபல கன்னட தயாரிப்பாளர் சௌந்தர்ய ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை.
தமிழகத்திலுள்ள 64 சுங்கச்சாவடிகள் நொறுக்கப்பட்டு நீக்கப்படும் - வேல்முருகன்.
"அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, அதிமுக போட்ட பிச்சை "- எடப்பாடி பழனிச்சாமி.
ஒற்றை வீடியோவால் காலி
ஒன்றியபிரதமர் மோடி 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசார சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை உட்பட 8 மாவட்டங்கள் பெருமழையால் மூழ்கி மக்கள் பரிதவித்தபோதெல்லாம் மோடி எட்டிப் பார்க்காததும், ஒரு பைசா கூட ஒன்றிய பா.ஜ.க. அரசு உதவி செய்யாததும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் பிரதமருடைய சென்னை ‘ரோடு ஷோ’ மக்கள் கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும், கோவை பொதுக்கூட்டத்தில் இணைந்து பிரசாரம் செய்தது மக்கள் கவனத்தை ஈர்த்தது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் பிரசார பொதுக்கூட்டத்தில் இத்தனை லட்சம் மக்கள் இதுவரை வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கும் கூடியதில்லை என்கிறார்கள்.
மோடி கலந்து கொண்ட கூட்டத்தை விட 5 மடங்கு அதிகம்.
இந்த நிலையில் கோவை பயணத்தின் போது ராகுல் காந்தியின் செயலும் அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதிலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெல்லை பிரசாரம் முடிந்து கோவை விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட ராகுல் காந்தி வழியில் சிங்காநல்லூர் பகுதியில் திடீரென காரை நிறுத்தி இறங்கி சென்டர் மீடியனைத் தாண்டிக் குறித்து அருகில் இருந்த இனிப்புக் கடைக்குள் சென்றார்.
உரிமையாளர், ஊழியர்களோடு வெகு சகஜமாக பழகிய ராகுல், கடையில் சில இனிப்புகளை வாங்கி ருசி பார்த்தார். பின்பு அங்கிருந்த ஊழியர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
மைசூர்பாகு வாங்கிய அவர் அதற்கு பணம் கொடுத்தார். பின்னர் பொதுக்கூட்ட மேடைக்குச் சென்ற ராகுல் காந்தி தான் வாங்கிய இனிப்புகளை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து கூறினார்.
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும், ‘எனக்காகவா வாங்கிட்டு வந்தீங்க’ என மகிழ்ச்சியுடன் கூறி பெற்றுக் கொண்டார்.
இந்த வீடியோதான் இன்று இந்தியா முழுவதும் பெரிய அளவில் வைரலாகப் பரவி மக்கள் மனங்களைக்கவர்ந்து வருகிறது.
மோடியின் செல்வாக்கை, ராகுல்காந்தியின் இந்த ஒற்றை வீடியோ காலி செய்து விட்டது என்றே கூறலாம்.
தமிழர்கள் விருந்தினரைச் சந்திக்கும்போது இனிப்பு வழங்குவது வழக்கம். தமிழர்களின் பண்பாட்டை மதிப்பது மட்டுமல்ல, அதைக் கடைபிடிக்கும் தலைவர் ராகுல் காந்தி என்பதை நிரூபித்து விட்டார்.
இதன் மூலம் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற வடநாட்டுத் தலைவர்களின் முயற்சியை ராகுல்காந்தியின்‘ஒற்றை வீடியோ’ காலி செய்துவிட்டது என்ற பேச்சு, அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.