தேர்தல் பத்திரத்தில் முதலீடு?

 ஒன்றரை மடங்கு உயரும்!

“இந்த அரசு மோடி அரசு அல்ல, அதானி அரசு. அதானி விரும்பிய சில வாரங்களில் மும்பை விமான நிலையம் அவருக்கு வந்தது” - ராகுல்காந்தி.

"அம்பேத்கர் மீண்டும் வந்தால்கூட இந்திய அரசியல் சட்டத்தை அழிக்கமுடியாது" - மோடி.

திமுக டெபாசிட் இழக்கக்கூடிய முதல் தொகுதி கோவைதான் - அண்ணாமலை.

“பாஜக மோடி ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் ஆரம்பம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்.

மின்னணுவாக்குஎந்திரங்களின்(EVM)நம்பகத்தன்மை, செயல்பாடு பற்றி பதிலளிக்காத தேர்தல் ஆணையம். தலைமை தகவல் ஆணையர் கண்டனம்.

மதுரவாயல் வாக்குச்சாவடி நிலைய அதிகாரி வாட்ஸ்அப்பிலிருந்து பாஜவுக்கு வாக்கு அளிக்க கோரி பூத் சிலிப்: ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புற்றசாட்டு.

பிறகு?

பொண்டாட்டி எழுப்பி விட்டுட்டா!

தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்.

11/2 மடங்கு பெருகும்?

குஜராத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை ஏமாற்றி, ரூ.11 கோடிக்கு தேர்தல் பத்திரத்தை வாங்க வைத்துள்ளது வெல்ஸ்பன் குழுமம் (Welspun Group). 

இந்த தேர்தல் பத்திரத்தில் ரூ. 10 கோடி பா.ஜ.க வுக்கும், ரூ.1 கோடி சிவசேனா கட்சிக்கும் சென்றுள்ளது. இந்த வெல்பன்ஸ் குழுமமானது அதானியுடன் இணைந்து பல நிறுவங்களை நடத்திவரும் நிறுவனமாகும்.

வெல்ஸ்பன் நிறுவனமானது குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் பகுதியில் புதிய தொழில் தொடங்குவதற்காக, விவசாயி ஹரேஷ் சவகராவின் நிலத்தை கடந்த ஆண்டு வாங்கியது. 

மொத்தம் ரூ.16.61 கோடிக்கு ஹரேஷ் சவகராவின் நிலம் விற்பனையானது. இதில், ரூ.2.80 கோடி முன்பணமாக தரப்பட்டிருந்தது. மீதமுள்ள ரூ.13.81 கோடியை ஹரேஷ் சவகரா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பியது வெல்ஸ்பன் குழுமம்.

ஆனால் மீண்டும் ஹரேஷ் சவகராவையும் அவரது மகனையும் விருந்தினர் விடுதிக்கு அழைத்துப் பேசியுள்ளார் வெல்ஸ்பன் குழுமத்தின் அதிகாரி மகேந்திர சிங் சோதா. அப்போது அங்கு நகர பா.ஜ.க தலைவரான ரஜினிகாந்த் ஷாவும் உடனிருந்துள்ளார்.

 ”உங்களுடைய 11 கோடி பணத்தை நீங்கள் வங்கியில் வைத்திருக்காதீர்கள். தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். அப்படி செய்தால்தான் வருமான வரித்துறையிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். 

அது தான் பாதுகாப்பானதும் கூட. மேலும் உங்களுடைய பணமானது 1.5 மடங்காக சில வருடங்களில் அதிகரித்துவிடும்” என்றும் கூறியுள்ளார், வெல்ஸ்பன் குழுமத்தின் அதிகாரியான மகேந்திர சிங் சோதா.

விவசாயி ஹரேஷ் சவக்கரா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வங்கி டெபாசிட் பத்திரத்துக்கும் தேர்தல் பத்திரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாததால், அவர்கள் செலுத்தும் பணம் ஒன்றரை மடங்காக திரும்பி வரும் என்று வெல்ஸ்பன் நிறுவன அதிகாரி சொன்னதை நம்பி தேர்தல்பத்திரத்தைவாங்கசம்மதித்துள்ளனர்.

முன்னதாக, அதானியுடன் தொடர்புடைய இந்த வெல்பன்ஸ் குழுமம், தனது மூன்று துணை நிறுவனங்களின் மூலம் ரூ.55 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

 அதில் ரூ.42 கோடி பா.ஜ.க-வுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயி ஹரேஷ் சவகரா வெல்பன்ஸ் குழுமத்தால் ஏமாற்றப்பட்டது குறித்தான செய்தியை மோடி ஆதரவு ஊடகங்கள் வெளியிடவில்லை. 

இந்த விவசாயி விசயத்தில் மட்டுமல்ல, பலரை தேர்தல் பத்திர மோசடியில் பா.ஜ.க செய்த ஊழலையும் நடுநிலைநக்கி ஊடகங்கள் (Godi media) திட்டமிட்டே மக்கள் பார்வைக்கு தரவு இல்லை.


பிளவுவாத அரசியல் செய்வது யார்?

பிள­வு­வாத அர­சி­ய­லின் பிதா­ம­க­ரான பிர­த­மர் நரேந்­திர மோடி சொல்­கி­றார், ‘தி.மு.க. பிரி­வி­னை­வாத அர­சி­யல் செய்­கி­றது’ என்று!

வாழ்­நாள் முழுக்க வெறுப்­ப­ர­சி­யல் செய்தே தனது பெயரை நிலை­நி­றுத்­திக் கொண்­ட­வர் இப்­ப­டிச் சொல்­வ­து­தான் வேடிக்­கை­யா­னது!

2002ஆம் ஆண்டு குஜ­ராத் மாநி­லத்­தில் நடந்த படு­கொ­லை­களை மறக்க முடி­யுமா? ‘கார் ஓட்­டிச் செல்­லும் போது குறுக்கே நாய் வந்­து­விட்­டது, என்­னால் என்ன செய்ய முடி­யும்?’ என்று அப்­போது விளக்­கம் அளித்­த­வர் யார்? 

இந்த ரத்­தக் கறையை மறைக்­கத்­தான் ‘குஜ­ராத் மாடல்’ என்ற பொய்ப் பிம்­பத்­தைக் கிளப்­பி­னார்­கள்!

‘இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம்­தான் எனது வேதம்’ என்று சொல்லி பிர­த­ம­ரா­கப் பொறுப்­பேற்­றுக் கொண்ட பிர­த­மர் மோடி, மூன்று செயல்­க­ளில்­தான் உறு­தி­யாக இருந்­தார்.

 அந்த மூன்­றைச் செய்­வ­தற்­கா­கத்­தான் பிர­த­ம­ராக வரு­வ­தைப் போலக் காட்­டிக் கொண்­டார். பாபர் மசூ­தியை சங் பரி­வார் இடித்த இடத்­தில் கோவில் கட்­டு­வது, காஷ்­மீ­ருக்­குத் தரப்­பட்ட 370 சிறப்­புத் தகு­தியை விலக்­கு­வது, குடி­யு­ரி­மைச் சட்­டத்தை அமல்­ப­டுத்­து­வது – ஆகிய மூன்­றை­யும் செயல்­ப­டுத்­து­வ­தில் அவர் காட்­டிய உறு­தியை வேறு எதற்­கும் காட்­டி­யது இல்லை. பிறப்­பெ­டுத்து பிர­த­மர் ஆனதே இதற்­கா­கத்­தான் என்று காட்­டிக் கொண்­டார்.

அனை­வ­ருக்­கும் பொது­வா­ன­வ­ராக இருக்க வேண்­டிய இந்­திய நாட்­டின் பிர­த­மர் தனது நோக்­க­மாக எடுத்­துக் கொண்ட மூன்­றுமே உள்­நோக்­கம் கொண்­டது. பிள­வு­வாத உள்­நோக்­கம் கொண்­டது.

கோவில் கட்­டி­யது மட்­டு­மல்ல, அதற்­கான பூசா­ரி­கள் இல்­லா­மல் இவரே தலை­மைப் பூசா­ரி­யாக இருந்து நடத்­திக் காட்­டிய காட்­சியை இந்­தி­யாவே பார்த்­தது. காஷ்­மீர் மாநி­லத்­தின் முன்­னாள் முத­ல­மைச்­சர்­கள் உட்­பட அர­சி­யல் தலை­வர்­கள் அனை­வ­ரை­யும் வீட்­டுக் காவ­லில் வைத்­து­விட்டு 370 பறிக்­கப்­பட்­டது. 

ஒரு மாநி­லம் இரண்டு யூனி­யன் பிர­தே­சங்­க­ளாக ஆக்­கப்­பட்­டது. ஒரு யூனி­யன் பிர­தே­சத்­துக்கு சட்­ட­மன்­றமே கிடை­யாது. சட்­ட­மன்­றம் இருக்­கும் இன்­னொரு யூனி­யன் பிர­தே­சத்­துக்கு ஐந்து ஆண்­டு­ க­ளாக தேர்­தலே நடக்­க­வில்லை. 

இப்­போ­தும் நடக்­க­வில்லை. எப்­போ­தும் நடத்த விருப்­ப­மும் இல்லை. இது­தான் காஷ்­மீர் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஜன­நா­ய­க­மாக இருக்­கு­மா­னால் இது காஷ்­மீர் மக்­கள் மீதான வெறுப்­பல்­லவா? அவர்­கள் மீதான காழ்ப்பு அல்­லவா?

எந்த நாட்­டை­யும் சேர்ந்த மற்ற மதத்­தி­னர் இங்கு வர­லாம் குடி­யு­ரிமை பெற­லாம், ஆனால் இசு­லா­மி­யர் வரக்­கூ­டாது என்­பதை விட மதப்­பி­ள­வு­வா­தம் இருக்­குமா?

எந்த நாட்­டை­யும் சேர்ந்­த­வர்­கள் வர­லாம், இங்கு வந்து குடி­யு­ரிமை பெற­லாம், ஆனால் இலங்­கைத் தமி­ழர்­கள் வரக்­கூ­டாது என்­பதை விட தமி­ழின வெறுப்­பு­வா­தம் இருக்க முடி­யுமா?

-இவை இரண்­டை­யும் அப்­பட்­ட­மா­கச் செய்­த­வர்­தான், தி.மு.க.வை, பிள­வு­வாத அர­சி­யல் செய்­கி­றது என்று குற்­றம் சாட்­டு­கி­றார்.

வெறுப்­புப் பேச்­சு­கள் அதி­கம் பேசப்­ப­டும் மாநி­லங்­க­ளாக பா.ஜ.க. ஆட்­சி­யில் இருக்­கும் மாநி­லங்­கள்­தான் இருக்­கின்­றன. இது தொடர்­பான வழக்­கு­கள் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வரும் போதெல்­லாம் நீதி­ப­தி­கள் மண்­டை­யில் பல­முறை கொட்டி இருக்­கி­றார்­கள்.

‘நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டமே பலி­பீ­டத்­தில் வைக்­கப்­பட்­டுள்­ள­து­போல் உள்­ளது. அதி­க­ரித்து வரும் வெறுப்பு அர­சி­ய­லுக்கு முடிவு கட்­டுங்­கள்’ என்று பிர­த­மர் மோடி அவர்­க­ளுக்கு 108 பேர் கையெ­ழுத்­திட்டு கடந்த 2022 மே மாதம் கடி­தம் அனுப்பி இருந்­தார்­கள்.

 முன்­னாள் நீதி­ய­ர­சர்­கள், முன்­னாள் துணை நிலை ஆளு­நர்­கள், முன்­னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர்­கள், முன்­னாள் வெளி­யு­ற­வுச் செய­லா­ளர்­கள் -– இக்­க­டி­தத்­தில் கையெ­ழுத்­துப் போட்டு இருந்­தார்­கள். 

இது போன்ற கடி­தங்­களை பிர­த­மர் படித்­துள்­ளாரா?

மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் கடந்த ஆண்டு நான்கே மாதங்­க­ளில் மட்­டும் நடந்த 50 பொதுக்­கூட்­டங்­க­ளில் வெறுப்­புப் பேச்சு அதி­கம் பேசப்­பட்­டது குறித்து உச்சநீதி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது. டெல்லி, உ.பி., உத்­த­ர­காண்ட் மாநி­லங்­க­ளில் வெறுப்­புப் பேச்சு குறித்­தும் மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்டு இருந்­தன.

 இந்த வழக்­கு­கள் உச்சநீதி­மன்ற நீதி­ப­தி­கள் கே.எம்.ஜோசப், பி.வி.நாக­ரத்னா ஆகி­யோர் அடங்­கிய அமர்வு முன்பு விசா­ர­ணைக்கு வந்­தது. 

அப்­போது நீதி­ப­தி­கள் சொன்­னது பிர­த­மர் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டதா?

“வெறுப்­புப் பேச்­சு­கள் பேசா­மல் ஒவ்­வொ­ரு­வ­ரும் கட்­டுப்­ப­டுத்­திக் ­கொள்ள வேண்­டும். அர­சி­யல்­வா­தி­கள் அர­சி­யலை மதத்­து­டன் கலக்­கும் போது பெரிய பிரச்சினை எழு­கி­றது. 

அர­சி­ய­லை­யும் மதத்­தை­யும் பிரிக்­கும் தரு­ணத்­தில் இது முடி­வுக்கு வரும். அர­சி­யல்­வா­தி­கள் மதத்­தைப் பயன்­ ப­டுத்­து­வதை நிறுத்­தி­னால் இதெல்­லாம் நின்­று­வி­டும். மதத்­து­டன் அர­சி­ய­லைக் கலப்­பது ஜன­நா­ய­கத்­திற்கு ஆபத்­தா­னது. டிவி மற்­றும் பொது இடங்­களில்­கூட வெறுப்­புப் பேச்­சு­கள் அதி­க­ரித்து விட்­டன. 

பேச்­சுக்­க­ளில் கட்­டுப்­பாடு இல்­லை­யெ­னில் நாம் விரும்­பும் இந்­தி­யா­வாக உரு­வாக்க முடி­யாது. இந்­தப் பேச்­சு­க­ளால் நாம் என்ன வகை­யான இன்­பங்­க­ளைப் பெறு­கி­றோம்” என்று தங்­க­ளது கவ­லை­க­ளைக் கடு­மை­யான வார்த்­தை­க­ளால் நீதி­ப­தி­கள் எச்­ச­ரிக்கை உணர்­வோடு சொல்லி இருந்­தார்­கள்.

“பிற மதத்­த­வரை அவ­ம­தித்து நாட்­டின் சட்­டத்தை மீற உங்­க­ளுக்கு உரிமை இருக்­கி­றதா? நாட்­டின் சட்­டத்தை மீறி­னால், அது செங்­கற்­கள் போல உங்­கள் தலை­யில் விழும்” என்­றும் நீதி­ப­தி­கள் பகி­ரங்க எச்­ச­ரிக்கை விடுத்­தது யாருக்கு? 

பா.ஜ.க.வின­ருக்­கும், பா.ஜ.க.வின் தொங்கு சதை­க­ளுக்­கும் தான். அனைத்­தை­யும் மறைத்து தி.மு.க. மீது பழி­போட்­டுக் கொண்டு இருக்­கி­றார் பிர­த­மர்.

தி.மு.க. தலை­வ­ரும் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ரு­மான மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் வைக்­கும் கேள்­வி­கள் எதற்­கும் பதில் சொல்­லத் தெரி­யா­மல், பதில் சொல்ல ஏது­மில்­லா­த­தால் இப்­படி பழி­போட்­டுத் தப்­பித்­துக் கொள்­ளப் பார்க்­கி­றார் பிர­த­மர்.

 ஆனால் இந்­தத் தேர்­த­லில் அவர் ஓட­வும் முடி­யாது, பதுங்­க­வும் முடி­யாது. பொறுப்­பேற்­கத்­தான் வேண்­டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?