ஊழலை ஒழிக்கும் முறை?

“பாஜக ஆட்சியில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இது வெறும் ட்ரெய்லர் மட்டுமே. இன்னும் மிகப்பெரிய திட்டங்கள் வர உள்ளன” - பிரதமர் மோடி.

ட்ரெய்லரே இவ்வளவு கொடூரமா இருக்கே?

59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ள பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது  - உயர் நீதிமன்றம்.

குற்ற வரலாறு வெங்கடேசுடன்,அ.மல.


ஊழலை ஒழிக்கும் முறை?

'நிலக்கரி'ஜிண்டாலும்

 'சுரங்கம்' ஜனார்த்தனனும்

ஊழலை ஒழிக்­கப் போகி­றேன், ஊழலை ஒழிக்­கப் போகி­றேன் என்று பிதற்­றிக் கொண்­டி­ருக்­கும் பிர­த­மர் மோடி அவர்­கள், இரண்டு பேருக்கு பா.ஜ.க.வில் தொகுதி ஒதுக்கி இருக்­கி­றார். 

அவ­ரது ஊழல் ஒழிப்பு என்­பது பா.ஜ.க.வுக்­குள் அவர்­க­ளைச் சேர்த்­து­விட்­டால் முடி­வுக்கு வந்­து­வி­டும் என்­ப­தற்­கான உதா­ர­ணம் ஆகும்.

“ஒரு பானைச் சோற்­றுக்கு ஒரு சோறு பதம்” என்­பார்­கள். பா.ஜ.க. பெரிய பானை என்­ப­தால் இரண்டு சோறு பதம். 

மிகப்­பெ­ரிய மலை முழுங்­கி­கள் என்ற அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உள்­ளாகி விசா­ரணை அமைப்­பு­க­ளால் வழக்­குத் தொடுத்­தும் - – கைது செய்­யப்­பட்­டும் இருந்­த­வர்­களை கூச்­ச­மில்­லா­மல் பா.ஜ.க.வில் இணைத்­துக் கொண்­டு­தான் ஊழலை ஒழிக்­கப் போகி­றார் மோடி. இதை இந்த நாட்டு மக்­கள் நம்­பத்­தான் வேண்­டும்.

இப்­போது விசா­ரணை அமைப்­பு­களை வைத்­துக் கொண்டு தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட்­ட­தும், முத­ல­மைச்­சர் என்­று­கூட பார்க்­கா­மல் அர­விந்த் கெஜ்­ரி­வாலை வேட்­டை­யாடு கிறார்­களே, இவர்­க­ளால் இதற்கு முன்­னால் வேட்­டை­யா­டப் பட்­ட­வர்­களை வெட்­க­மில்­லா­மல் சேர்த்­துக் கொண்டு தொகு­தி­யும் ஒதுக்­கு­கி­றார்­களே, இவர்­கள்­தான் ஊழலை ஒழிக்­கப் போகி­றார்­களா?

ஜிண்­டால் பற்றி அறி­மு­கம் தேவை­யில்லை. இந்­தி­யா­வின் புகழ்­பெற்ற தொழில் நிறு­வ­னங்­க­ளில் ஒன்று ஜிண்­டால். 

அதன் அதி­பர்­தான் நவீன் ஜிண்­டால். 

இவர் காங்­கி­ரஸ் கட்­சி­யில் தான் இருந்­தார். அவரை பா.ஜ.க.வுக்கு இழுத்­துக் கொண்டு அவ­ருக்கு தொகு­தி­யும் ஒதுக்கி இருக்­கி­றார்­கள்.

 2004 ஆம் ஆண்டு அரி­யானா மாநி­லம் குரு­ஷேத்ரா தொகு­தி­யில் இருந்து காங்­கி­ரஸ் கட்சி எம்.பி.யாக வென்­ற­வர் நவீன் ஜிண்­டால். 

2009 தேர்­த­லி­லும் அவர் வென்­றார். 2014 தேர்­த­லில் தோல்வி அடைந்­தார். 

இவர் திடீ­ரென்று இந்த மாதம் பா.ஜ.க.வில் சேர்ந்­து­விட்­டார். ‘பா.ஜ.க.வுக்கு பெரிய வாஷிங் மிஷின் தேவைப்­பட்­ட­தால் நவீன் தேவைப்­ப­ட­லாம்’ என்று கிண்­ட­ல­டித்­துள்­ளார் ஜெய­ராம் ரமேஷ். நவீன் ஜிண்­டாலை மீண்­டும் அவ­ரது வழக்­க­மான தொகு­தி­யான குரு­ஷேத்­ரா­வில் நிறுத்தி உள்­ளது பா.ஜ.க.

ஜார்க்­கண்ட் நிலக்­க­ரிச் சுரங்க ஒதுக்­கீட்­டில் நடந்த முறை­கே­டு­கள் தொடர்­பான வழக்­கில், ஜிண்­டால் மத்­திய புல­னாய்­வுப் பிரி­வால் விசா­ரிக்­கப்­பட்டு வந்­தார். 

2019 ஆம் ஆண்டு நிலக்­க­ரிச் சுரங்க ஒதுக்­கீடு முறை­கேடு வழக்­கில் நவீன் ஜிண்­டால் மற்­றும் நான்கு பேர் மீது ஜூலை 25-ஆம் தேதி புது தில்லி நீதி­மன்­றம் குற்­றப்­பத்­தி­ரிக்கை தாக்­கல் செய்­தது. 

ஐ.பி.சி. பிரி­வு­கள் 120-–பி (குற்­றச் சதி) மற்­றும் 420 (ஏமாற்­று­தல்) ஆகி­ய­வற்­றின் கீழ் சிறப்பு நீதி­பதி பாரத் பரா­ஷர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தார். நிலக்­க­ரி­யின் இறு­திப் பயன்­பாடு தொடர்­பான உண்­மை­களை ஸ்க்ரீனிங் கமிட்­டி­யி­டம் தவ­றா­கக் காட்டி, குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­கள் அந்த ஒப்­பந்­தத்தை கைய­கப்­ப­டுத்­தி­ய­தாக சி.பி.ஐ. குற்­றம் சாட்­டி­யது. 

குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் நிலக்­கரி அமைச்­ச­கத்தை ஏமாற்­றி­விட்­டார் என்று குற்­றம் சாட்­டப்­பட்­டார்.

எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களை பா.ஜனதா தனது கட்­சி­யில் இணைத்­துக் கொள்­ளும்­போது அவர்­கள் மீதான குற்­றச்­சாட்டு குறித்து வாய் திறப்­ப­தில்லை அல்­லவா?

 அப்­ப­டித்­தான் இவ­ரும் சுத்­த­மாகி விட்­டார்.

‘இரும்­புத் தாது’ மாஃபியா என்று அழைக்­கப்­பட்­ட­வர் ஜனார்த்­தன ரெட்டி. பா.ஜ.க.வின் முக்­கி­யத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ராக இருந்த -– மறைந்த சுஷ்மா சுவ­ராஜ்­தான் ரெட்டி சகோ­த­ரர்­க­ளுக்கு காப்­பா­ளர். 

சுஷ்மா, பெல்­லாரி தொகு­தி­யில் போட்­டி­யிட்­ட­போது முழு­மை­யாக தேர்­தல் பணி­யாற்­றி­ய­வர்­கள் இவர்­கள். கர்­நா­ட­கா­வில் பா.ஜ.க. காலூன்ற அடித்­த­ளம் இட்­ட­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர்­கள் ஜனார்த்­த­னன். 

2006 ஆம் ஆண்டு பி.ஜே.பி. – ஜே.டி.எஸ். கூட்­டணி ஆட்சி அமைந்­த­போது தனது ஆத­ர­வா­ள­ரான பி.ஶ்ரீரா­மு­லுவை அமைச்­சர் ஆக்­கும் அள­வுக்கு இவர்­க­ளுக்கு செல்­வாக்கு வளர்ந்­தது. ஜனார்த்­த­னன் ரெட்­டிக்கு மேலவை உறுப்­பி­னர் பத­வியை வழங்­கி­யது பா.ஜ.க.

பின்­னர் கூட்­டணி இல்­லா­மல், தனித்து பா.ஜ.க. ஆட்சி அமைக்­க­வும் ரெட்டி சகோ­த­ரர்­களே பெரும் பங்கு ஆற்­றி­னார்­கள். 

இதற்­கான பரி­சாக எடி­யூ­ரப்பா அமைச்­ச­ர­வை­யில் சுற்­றுலா மற்­றும் உள்­ளாட்சி அமைச்­சராக ஆனார் ஜனார்த்­த­னன் ரெட்டி. பெல்­லாரி மாவட்­டத்­தின் பொறுப்­பா­ள­ரா­க­வும் ஆக்­கி­னார்­கள்.

 2022 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து வெளி­யேறி ‘கல்­யாண ராஜ்ய பிர­கதி பஷா’ என்ற புதிய அர­சி­யல் கட்­சியை ரெட்டி தொடங்­கி­னார். கடந்த ஆண்டு நடந்த சட்­ட­ச­பைத் தேர்­த­லில் கங்­கா­வதி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வென்­றார். 

இப்­போது அந்­தக் கட்­சி­யைக் கலைத்­து­விட்டு பா.ஜ.க.வில் இணைந்­து­ விட்­டார்.

கர்­நா­ட­கா­வில் பா.ஜ.க. ஆட்­சி­யில் இருந்த 2008–-2013 காலக்­கட்­டத்­தில் சட்­ட­வி­ரோ­தச் சுரங்­கம் தொடர்­பாக சி.பி.ஐ. தொடுத்த வழக்­கு­க­ளில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் தான் ஜனார்த்­தன் ரெட்டி. 

தன்னை அமித்­ஷா­தான் கட்­சி­யில் இணை­யச் சொன்­ன­தாக ரெட்டி சொல்லி இருக்­கி­றார்.

‘2006 முதல் 2011 வரை கர்­நா­ட­கா­வில் இருந்து 12,228 கோடி ரூபாய்க்கு இரும்­புத் தாதுவை சட்­ட­வி­ரோ­த­மாக ஏற்­று­மதி செய்­தார்­கள்’ என்ற குற்­றச்­சாட்டு வைக்­கப்­பட்­டது. 2011-–ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் சி.பி.ஐ-.யால் கைது செய்­யப்­பட்­டார். 

கிட்­டத்­தட்ட ஓராண்டு காலம் சிறை­யில் இருந்த ரெட்டி, உச்ச நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வின் பேரில் பல்­லாரி பகு­திக்­குள் செல்ல தடை­யும் விதிக்­கப்­பட்­டது. 



2023 கர்­நா­டக சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­காக ரெட்டி தாக்­கல் செய்த தேர்­தல் பிர­மாண பத்­தி­ரத்­தின் படி, அவர் மீது 20 கிரி­மி­னல் வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன. 

20 வழக்­கு­க­ளில், ஒன்­பது வழக்­கு­கள் சட்­ட­வி­ரோத சுரங்க ஊழல் தொடர்­பாக சி.பி.ஐ.–-யால் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. 

கடந்த ஆண்டு கூட இவர் மீதான வழக்­கில் வெளி­நா­டு­க­ளுக்­குத் தக­வல்­கள் கேட்டு கடி­தம் அனுப்­பி­யது சி.பி.ஐ. இப்­ப­டிப்­பட்­ட­வர் பா.ஜ.க.வில் இணைய முழுத் தகுதி படைத்­த­வர்­தான்.

‘பா.ஜ.க.வில் நான் இணைந்­தது, தாயு­டன் வந்து சேர்ந்­த­தைப் போல’ என்று சொல்லி இருக்­கி­றார் ஜனார்த்­த­னன் ரெட்டி. ஊழல், ஊழ­லோ­டு­தானே சேரும்!




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?