பொய். பொய் மட்டுமே!
இந்து அரசர்களை பேசும் ராகுல் முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன்? - மோடி (நீங்கள் உங்க சாதனைகளச் சொல்லாமல் நேருவையே விமர்சிக்கிறாய்)
இதுவரை எந்த பிரச்சார கூட்டத்திலும் பாஜக 10 ஆண்டு சாதனையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை...
இந்தியாவில் யார் பிரதமராக இருந்தாலும் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறுவது உறுதி: ப.சிதம்பரம் .
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய தூய்மை பணியாளர் இடைநீக்கம்.
ஏழைகளிடம் இருந்து மோடி பறித்த பணத்தைதிரும்பஅளிப்போம்:-ராகுல்காந்தி
பாஜகவிற்கு ஆப்பாக மாறிய வாட்ஸ் ஆப். உ.பி, பீகாரில் வாட்ஸ் அப்பில் தீயாக பரவும் ரேவண்ணா ஆபாச வீடியோ.
பொய்.
பொய் மட்டுமே!
மக்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி பொய்களைப் பரப்பி வருவதாக இணைய இதழ் ஒன்று குற்றம்சாட்டி உள்ளது.
Scroll.in என்ற இணைய இதழ் பிரதமர் மோடி மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பொய்களை பட்டியலிட்டு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை கூறி வருவதாகவும், இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள், அதிக குழந்தைகளைப் பெறுபவர்கள் என்றும், தனியார் சொத்துக்களை கைப்பற்றி அவர்களுக்கு மறுபங்கீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ள தாக அவர் கூறியதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும், இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின்னரும் பிரதமர் மோடி தனது பொய்களை நிறுத்த வில்லை என்றும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா என்ற இடத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்துப் பெண்களின் தாலி உள்ளிட்ட தங்க நகைகளை பறித்து மற்றவர்களுக்கு மறுவிநியோகம் செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளதாகக் கூறினார்.
ஆனால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இது போன்ற வாசகங்கள் எதுவும் இல்லை.
மற்றொரு கூட்டத்தில், நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முந்தைய காங்கிரஸ் அரசு கூறியதாக மோடி கூறினார்.
ஆனால், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், மத சிறுபான்மை யினர் என அனைத்து பின்தங்கிய மக்களுக்கும் நாட்டின் செல்வத்தின் மீது சம உரிமை உண்டு என 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை திரித்து பொய்களை வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி.
பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், ஆதிவாசிகள், ஏழைகள், சிறுபான்மை யினரின் வாழ்க்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்ற ராகுல் காந்தியின் பேச்சை திரித்து, தனியார் சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட்டு மறுவிநியோகம் செய்யப்படும் என ராகுல் காந்தி பேசியதாகவும், 2 வீடுகள் உள்ளவர்களிடம் இருந்து ஒரு வீடு பறிமுதல் செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளதாகவும் பிரதமர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் மோடி.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இஸ்லாமியர்கள் இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைபாடுகளை திரித்து, ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லீம்க ளுக்கு அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் மோடி பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்றும்அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவரது சொத்துக்கள் வாரிசுகளுக்கு செல்வதை தடுக்கும்வகையில் பரம்பரை சொத்துவரி கொண்டுவரப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளதாக மோடி பேசியது பொய் எனவும் அப்படிப்பட்ட வாசகங்கள் எதுவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை என்றும் Scroll.in என்ற இணைய இதழ் தெரிவித்துள்ளது.
எழுமின்! விழிமின்
ராஜஸ்தான் பிரச்சாரத்தில் ஏப்ரல் 21 அன்று, சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எப்படி அப்பட்டமாக விஷம் கக்கினாரோ அதே வார்த்தைகளை பாஜகவின் முக்கியப் பிரச்சாரகர்களில் ஒரு வரும், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அனுராக் தாக்கூரும் பேசியுள் ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்க ளின் செல்வங்களை எல்லாம் பறித்து முஸ்லிம்க ளிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்றும், இந்து பெண்களின் தாலியை பறித்து விடுவார்கள் என்றும் மோடி பேசிய பேச்சை அவர் அப்படியே எதிரொலித்துள்ளார்.
குறிப்பாக, அடுத்து பல்வேறு கட்டங்களில் வாக்குப்பதிவை சந்திக் கவுள்ள வட மாநிலங்களில் பாஜக இந்தப் பிரச்சா ரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு, தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
ஆனால் தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடு கவலை தரத்தக்கதாகவும், கடும் கண்டனத்திற்கு உரியதாகவும் உள்ளது. ராஜஸ்தானில் மோடி பேசிய வெறுப்பு பேச்சு தொடர்பான புகார் மீது, அவருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு பதிலாக அவரது கட்சியின் தலைவரான ஜே.பி.நட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, மோடியை பகைத்துக் கொள்ளாமல் நழுவியது தேர்தல் ஆணையம்.
இதுபோன்ற அப்பட்டமான வெறுப்புப் பேச்சுகள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவ டிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பது தெரிந்துதான், பாஜகவின் அடுத்தடுத்த தலை வர்கள் மோடியின் அதே விஷத்தை தாங்களும் உமிழத் துவங்கியிருக்கிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறுப்பை வெளிப் படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அப் பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும்.
அரசியல மைப்புச் சட்டத்திற்கும் விரோதமானதாகும். ஆனால் அதை பிரதமரே மீறுகிறார்; அவரது அமைச்சர் படையும் மீறுகிறது.
முற்றிலும் அரசி யல் சட்டத்திற்கு விரோதமாக பேசும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மோடியின் ராஜஸ்தான் பேச்சுக்கு கண்ட னம் தெரிவித்து தில்லியில் உடனடியாக போ ராட்டம் நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலை யில், மோடி மீதும் அனுராக் தாக்கூர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுதியுள்ள புகார் கடிதத்திற்கு இப்போதேனும் செவி சாய்க்குமா தேர்தல் ஆணையம்?