முறைகேடு அம்பலம்!
“மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் பேச்சு நடத்தியதும் நான் சீனாவின் தீவிர ரசிகன் என்றதும் எதைக் காட்டுகிறது?” - ப.சிதம்பரம் .
“பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!” - ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் பாஜகவுக்கு பின்னடைவு.கடந்த 17 ஆம் தேதி, கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்வதற்காக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாவட்டத் தலைமை தேர்தல் அதிகாரி இன்பசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்குப்பதிவானது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜெண்ட் வாக்களித்த போது, காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க.வின் தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட ரசீதும் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.காசர்கோடு அரசு கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா உட்பட பத்து வேட்பாளர்களின் பெயர்கள் இருந்தன. ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு வாக்கு என மொத்தம் பத்து வாக்குகள் செலுத்தப்பட்ட பின்னர் விவிபேட்-இல் பதிவான ரசீதுகள் எண்ணப்பட்டன.
ஆனால், அதில் பத்து ரசீதுகளுக்கு பதிலாக பதினொரு ரசீதுகள் இருந்தன. ‘எண்ணப்படக்கூடாது’ என்று சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த பாஜகவின் தாமரை சின்னம் அச்சிடப்பட்டிருந்த ஒரு ரசீது கூடுதலாக இருந்தது.
இருபது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இந்தப் பிரச்சினை இருந்ததாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி அரசு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
ஏப்ரல் 18 அன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.விற்கு சாதகமாக முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பது பற்றிய விவாதம்,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிலும் முன்னிலைக்கு வந்தது. அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், “கூடுதலாக பா.ஜ.க.வுக்கு வாக்கு பதிவானதாக செய்தியில் உண்மை இல்லை; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த முடியாது” என்று அப்பட்டமாக பொய்யுரைத்தது.
உச்சநீதிமன்றமும் இந்த வழக்கின் இதற்கு முந்தைய அமர்வில், “நாம் தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும்.
ஆனால், கேரளாவிற்கு அடுத்து தமிழ்நாட்டிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோடி அரசு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கான செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கிய இன்று (ஏப்ரல் 19) வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150 வது வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு லைட் எரிவதாக எழுந்த புகாரை அடுத்து தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பா.ஜ.க. சார்புடைய நபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், மோடி அரசு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்த நிலையில், மேற்கூறிய இரு சம்பவங்களும் அதை உறுதி செய்துள்ளன.
ஏற்கெனவே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற தன்னுடைய அடியாட்படை நிறுவனங்கள் மூலம் இந்தியா கூட்டணிக் கட்சியினரின் வீடுகளில் சோதனை மற்றும் கைது செய்வதன் மூலம் அவர்களை அச்சுறுத்துவது, மிரட்டிப் பணிய வைப்பது என்று பாசிச அடக்குமுறைகளை மோடி அரசு ஏவி வருகிறது.
தற்போது தன்னுடைய கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது. இந்நிகழ்வுகள் எல்லாம் மோடி அரசு, எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமில்லாத வகையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதையே நமக்கு உணர்த்துகிறது.