கடைசி ஆயுதம்!
"நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பத்திற்கு தான் தெரியும் தாலி எவ்வளவு முக்கியம் என்று…மனைவியை துரத்தியவருக்குதெரிய வாய்ப்பு இல்லை" -பிரியங்கா காந்தி
டெல்லியில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவம் தாக்குதல்: 3 விவசாயிகள் காயம்,
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால உத்தரவு.
சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
பதஞ்சலி நிறுவன பொய்விளம்பர விவகாரம் உங்க மன்னிப்பை பூதக்கண்ணாடி வைத்து தான் தேடணுமா? பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.
விதிமீறலில் அதானி குழுமம்! வெளியான மற்றொரு உண்மை!
நண்பனே எனது உயிர் நண்பனே
- மு.க.ஸ்டாலின்இந்திய பொருளாதாரத்தையே விற்க வழி இருந்தால், அதுவும் இந்நேரம் அதானி வசம் சென்றிருக்கும் என்பது ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.
, மோடி ஆட்சிக்கு பின், இந்திய துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், மின் உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட எண்ணற்ற அரசு நிறுவனங்கள், அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்பட்டது.
இது குறித்து, கேள்வி எழுப்பியதற்காக, முன்னாள் பிரதமர் வேட்பாளர் என்று கூட பாராமல், ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை நீக்கி, அரசு இல்லத்தை விட்டு வெளியேற்றினர் பா.ஜ.க.வினர்.
எனினும், இந்த அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைக்கு, சட்டப்படி விடை காண்பேன் என ராகுல் காந்தி உச்சநீதிமன்றம் சென்று, தனது மக்களவை உறுப்பினர் பதவியை திரும்பப்பெற்றார்.
ராகுல் காந்தியை தொடர்ந்து, திரிணாமுல் கட்சி மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவும் அதானி - மோடி தொடர்பு குறித்து கேள்வி எழுப்பியதால், மக்களவை உறுப்பினர் பதவியை பறிகொடுக்க நேர்ந்தது.
இவ்வாறான சூழலில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி அன்று, அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தில் முறைகேடு நடப்பதாக அறிக்கை வெளியிட்டது.
அதன் காரணமாக, பா.ஜ.க அரசின் உதவியால் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக உயர்ந்த அதானி சொத்து மதிப்பு, பல மடங்கு வீழ்ச்சியடைந்தது. ஆனால், அப்போதைய நிலையில் அதானி குழுமத்தால், ஹிண்டன்பர்க் அறிக்கை பொய் தகவலை பரப்புகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
எனினும், SEBI விசாரணையில் தொடர் மந்தம் நீடித்து வந்த நிலையில், தற்போது சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு தற்போது ஹிண்டன்பர்க் தெரிவித்தது உண்மை தான் என அம்பலப்பட்டுள்ளது.
இது குறித்து, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், “அதானியின் 12 வெளிநாட்டு நிறுவனங்கள் விதிகளை மீறியிருப்பதாக SEBI கண்டுபிடித்திருக்கிறது. 12 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள், குற்றச்சாட்டை ஏற்காமல் அபராதம் செலுத்தி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாமென SEBI-யை அணுகியிருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் மையமாக இருந்தது இந்த நிதிகள்தான்” என தெரிவித்துள்ளார்.
மக்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “இனி SEBI என்ன நடவடிக்கை எடுக்கும்? அதானி நிறுவனங்களில் விதிகள் மீறி முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களை அமலாக்கத்துறை விசாரிக்குமா? இந்த முதலீடுகள் செய்வதற்கென மட்டுமே அந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டனவா? அல்லது அந்த நிறுவனங்களை வெறுமனே SEBI எச்சரித்து விட்டு விடுமா? விடைதான் எல்லாருக்கும் தெரியுமே!” என குற்றம் சாட்டினார்.
இவ்வாறு, தேர்தல் நேரத்திலும், அதானியை தாங்கிப்பிடிக்கும் மோடி அரசிற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.
கடைசி
ஆயுதத்தையும் பயன்படுத்தினார் மோடிக்குள் தூங்கிக் கொண்டிருந்த மதவெறி விழித்துவிட்டது!
ராஜஸ்தானில் தேர்தல் பரப்புரையின் போது, “காங்கிரஸ் கட்சி ஆட்சியில்இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களைபறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள்.சட்ட விரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியவர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறி யிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன்சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று குறிப்பிட்டார்.ஒரு நாட்டின் பிரதமர் பேசும் பேச்சா இது?
அப்பாவி மக்களிடம் போய், ‘உங்களது வீடு, வாசல், சொத்து, நிலம் அத்தனையும் பறித்து முஸ்லீம்களிடம் கொடுத்துவிடப் போகிறார்கள்’ என்று சொல்லும் கீழான சிந்தனை கொண்டவராக, இந்த நாட்டுக்கு பத்தாண்டு காலம் ஒருவர் பிரதமராக இருந்திருக்கிறார் என்று நினைப்பதே கேவலமாக இருக்கிறது.
அப்படி காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா? இல்லை. ‘யாருடைய சொத்தும் பறிக்கப்படும்’ என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. அதன் தலைவர் கார்கேவும் மறுத்துள்ளார்.
எப்போதாவது மன்மோகன் சிங் அவர்கள் அப்படி பேசி இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை.“பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓ.பி.சி. பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் ஆகியோர் நாட்டின் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்கு பெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும்.வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் ஒன்றிய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும்”என்று மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது பேசியுள்ளார். இந்த நாட்டின் அனைத்து வளங்களும் பட்டியலின, பழங்குடியினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் சிறுபான்மையினருக்கும் சமமாக, முதன்மையாக வழங்க வேண்டும் - – என்ற பொருளில் மன்மோகன் சிங் பேசி இருக்கிறார்.
வளம் என்றால் கல்வி, வேலை வாய்ப்புகள், அதிகாரம், சலுகைகள், திட்டங்கள், பொறுப்புகள் ஆகும். இதுதான் நாட்டின் வளம் ஆகும். இதனை பகிர்ந்து தர வேண்டும் என்றுதான் மன்மோகன் சொல்லி இருக்கிறார். ராஜஸ்தானில் இருக்கும் தனிப்பட்ட ஒவ்வொருவர் சொத்தையும் பறித்து இசுலாமியர்க்கு தரப்போவதாக மன்மோகன் சிங் சொல்லவில்லை. மன்மோகன் சிங் என்ன இப்போது பிரதமர் வேட்பாளரா? அவர் எப்போதோ சொன்னதை இப்போது ஏன் எடுத்து வந்து போர்த்திக் கொள்ள வேண்டும்?
நாட்டின் வளம் என்றால் என்னவென்று தெரியாமல், நாட்டின் வளம் என்றால் வீடு – - நிலம் என்று புரிந்து கொள்பவர்தான் இந்த நாட்டில் பத்தாண்டு காலம் பிரதமராக இருந்துள்ளார்.
இப்படி பேசிய பிரதமர் மோடி, அதிலாவது உறுதியாக இருந்தாரா என்றால் இல்லை. அவரது பேச்சுகள், அவரது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பதிவு செய்யப்படும். ஆனால் ராஜஸ்தானில் பேசிய இந்த பேச்சு அரைகுறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘இஸ்லாமியர்கள்’, ‘ஊடுருவல்காரர்கள்’, ‘அதிக குழந்தைகளை பெற்றெடுப்பவர்கள்’ உள்ளிட்ட வார்த்தைகள் மோடியின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதற்கான வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஏன் அதிகாரப்பூர்வமாக அதைச் சொல்ல மோடியால் முடியவில்லை. சொன்னது பொய்யென்று அவருக்கே தெரியும். அதனால்தான் அதை அவரே மறைத்துவிட்டார்.
ராஜஸ்தானில் மோடி பேசியது கடந்த 20 ஆம் தேதி. 21 ஆம் தேதி உத்திரப்பிரதேசம் போனார். அங்கு இசுலாமிய வாக்காளர்கள் அதிகம். ராஜஸ்தானில் தான் பேசியது தவறு என்று அவர் நினைத்திருக்கலாம். உடனே அந்தர் பல்டி அடித்தார்.
அலிகாரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசும் போது, “இஸ்லாமியசகோதர, சகோதரிகளுக்காகத்தான், நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டில், லஞ்சம் கொடுத்து அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக சவுதி இளவரசியிடம் நான் பேசி இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்துக் கொடுத்தேன். விசாவும் எளிதாக்கப்பட்டது. ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியே ஹஜ் செல்ல முடியும் என்பதால், இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது” என்று குறிப்பிட்டார்.ஒரே நாளில் ஊடுருவல்காரர்கள் எப்படி அன்பானவர்களாக மாறினார்கள்?
இதுதான் நிஜ மோடி. எந்தக் கொள்கையிலும் உண்மையோ, உளமார்ந்த ஈடுபாடோ இல்லாதவர். தனது சுயநலனுக்காக எதையும் அரவணைப்பார், காவு கொடுப்பார். இந்துக்களாக பேசும் இவர், இந்த நாட்டு இந்துக்களுக்காக செய்தது என்ன? அவரது விரல்விட்டு எண்ணக் கூடிய இந்து நண்பர்களை வளப்படுத்தினார். இந்த நாடு வளங்களை அமுக்கிய விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரை இந்த நாட்டை விட்டு தப்ப விட்டார். மற்றபடி இந்துக்களுக்காக எந்த நன்மையும் செய்யாதவர்தான் மோடி.
அவரது ஆட்சியில் அதே இந்துக்களுக்கும் – இசுலாமியர்களுக்கும் –அனைத்து மதத்தவருக்கும் - அனைத்து இனத்தவர்க்கும் - அனைத்து மொழியினருக்கும் ஒரே விதமான துன்பம்தான். இதற்கு ஒரே விதமான முடிவு என்பது, அவரை ஆட்சியில் இருந்து இறக்குவதே! இதனை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பதை மோடியும் உணர்ந்துவிட்டார்.