நஞ்சு மனது!

 மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் பண்ட் 525 கோடி காணவில்லையாம்.  டெபாசிட்டர் எல்லாம் பதட்டத்தில் உள்ளார்கள்.  ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் உள்ளதாம்.  இதன் தலைவர் யாருன்னா  சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் (வின் டிவி முதலாளி)

காங்கிரஸ் கட்சின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது -  மோடி.

மருந்து ஒன்னுதான்! ஆனால் செப்டம்பர் 2022 ல் அதன் விலை ₹80.64 பைசா.நாலே மாசம், எலெக்டோரல் பாண்ட் நன்கொடை கொடுத்துட்டு, அதே மருந்தோட விலை ₹120.96 பைசா! நாலு மாசத்தில் ₹40 விலையை கூட்டி, மக்களிடம் புடுங்கி விடுகிறான்! விலையை ஏற்றுவதால் GST வரியும் கூடும்!இந்த மோடி அரசு தேவையா?

"4 லட்சம்... இல்ல இல்ல 4,000 சீட் ஜெயிப்போம்"மோடி பேரணியில் நிதிஷ்குமார் உளறல்.(பாவம்.அவரே கன்பியூஸ் ஆயிட்டார்)

3வது முறையாக அக்னிபான் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு.

அடுத்தடுத்து சிக்கும் கோடிகள். கணக்கில் வராத பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் தில்லுமுல்லு அம்பலம் .

ரோடு ஷோ. ?

 நஞ்சு மனது!            

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை எங்கும் முஸ்லிம் லீக் முத்திரை பதித்துள்ள தோடு, இடதுசாரிகளின் ஆதிக்கமும் உள்ளது.

 

 பொய்களின் மூட்டையான அந்த அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் இந்தியா வை துண்டு துண்டாக உடைக்க வேண்டுமென்ற முடைநாற்றம் வீசுகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை  உள்ளடக் கம் பற்றிய விமர்சனமல்ல; அவரது உள்ளத்தில் உறைந்திருக்கும் வெறுப்புணர்வைக் கக்கும் நஞ்சு மனத்தின் வஞ்ச எண்ணங்களின் வெளிப்பாடாகும்.

காங்கிரஸ், முஸ்லிம் லீக்,  கம்யூனிஸ்ட்டுகள் பிரிட்டிஷ் ஆட்சியை  அகற்றப் பாடுபட்டனர். ஆனால் இவரது முன்னோடிகள் ஆங்கிலேயர் களுக்கு அடிமைச் சேவகம் புரிந்தனர். காட்டிக் கொடுத்தனர்.

 அதுபோலவே இப்போதும் இந்து மதவெறி கொண்டு முஸ்லிம்கள், கம்யூ னிஸ்ட்டுகள், காங்கிரஸ் மீதும் வெறுப்புணர்வை கக்குகின்றனர். 

அத்தகைய எண்ணம் தானே ஜம்மு-காஷ்மீரை இரண்டு துண்டாக்கி சிதைத் தது. முஸ்லிம்கள் மீதான வெறுப்பு தானே இதற்கு காரணம்.

சுதந்திர இந்தியா அரசியல் விடுதலை மட்டு மின்றி, சமூக பொருளாதார விடுதலையுடன் நாட்டு மக்கள் சமத்துவம் பெற வேண்டும் என்ற  நோக்கிலேயே கம்யூனிஸ்ட்டுகள் களம் கண்ட னர். 

இன்றும் அதைத் தொடருகின்றனர். பிற் போக்குச் சிந்தனை கொண்ட, பழமைவாத சமூக எண்ணம் கொண்ட நிலப்பிரபுத்துவ, முதலாளித் துவச் சார்புடன் குறிப்பாக கார்ப்பரேட் முத லாளிகள் நலனுக்காகவும் இந்துத்துவா கண் ணோட்டத்துடனும் வளர்ச்சியை பாஜக அரசும் மோடியும் கம்யூனிஸ்ட்டுகளின் - இடதுசாரி களின் வளர்ச்சியை விரும்பாததையே அவரது வார்த்தைகள் உணர்த்துகின்றன.

ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அரசின் திட்டங்களால் அனைவரும் பலனடை வதை உறுதி செய்வதே உண்மையான மதச்சார் பின்மை என்றும் அது பாஜக ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மதச்சார் பின்மைக்கும் அரசின் இந்துமதச் சார்பு நிலைச் செயல்பாட்டுக்கும் முட்டுக் கொடுத்து திசை திருப்புகிறார். மதச்சார்பின்மை என்பது எந்த ஒரு மதத்தையும் சாராமல் இருப்பது. 

ஆனால் இவரோ அயோத்தி ராமர் கோவில் திறப்பின்போது பூசாரித்தனம் பண்ணியதை எப்படிக் குறிப்பிடுவது? 

இவர்களது இந்து ராஷ்டிரா - திட்டத்தை அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் திணிப்பது தானே!

இவரது அரசின் திட்டங்களின் பயன் யாரைச் சென்றடைந்திருக்கிறது என்பதற்கு, உல கப் பணக்காரர்கள் பட்டியலில் 10 பேரில் ஒருவ ராக 9ஆம் இடத்தில் முகேஷ் அம்பானியும் 20 பேரில் ஒருவராக 17ஆவது இடத்தில் அதானி யும் இருப்பது தான் சிறந்த எடுத்துக்காட்டு. இத்தகைய இந்துத்துவ - கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசை அகற்ற முழு மூச்சாகச் செயல் படுபவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது இயல்பு தானே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?