உயிரோடு இருப்பதை நிரூபிக்கணும்.

 நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாட்களில், எதிர்க்கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு பார்வையாளர் மாடத்தில்தான் அமர்வார்கள் என்றெல்லாம் சவடால் அடித்தார் பிரதமர் மோடி.

ஆனால் தேர்தல் பிரச்சாரம் துவங்கியவுடன் அவரது சுருதி இறங்கத் துவங்கியது.

 தமிழகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலை யில் பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வும் என தகவல்கள் வருகின்றன. 

இதனால் பதற்றமடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் வழக்கமான வெறுப்பு அரசியலை விசிறி விடத்  துணிந்துள்ளார். 

ஒரு புறத்தில் உலக அளவில்  நாடுகளுக்கு இடையே போர்மூள இருப்பதாக வும் அப்போது இந்தியாவுக்கு வலிமையான தலைவர் தேவை என்றும் பிரதமர் கூறினார். ஆனால் இது எடுபடவில்லை. 

அடுத்து தம்மை பதவியிலிருந்து அகற்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் சதி செய் வதாக புலம்பத் துவங்கினார். இதுவும் எடுபடாமல் போகவே தேர்தல் பிரச்சாரக் களத்தை விஷமாக் கும் வகையில் இந்திய மக்களை மதரீதியாக மோதவிடவும்துணிந்துவிட்டார் மோடி. 

இராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் “காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல்  உரிமை என்று சொன்னார்கள்; இதன்பொருள் என்னவென்றால், அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை பகிர்ந்த ளித்துவிடுவார்கள். 

உங்கள் செல்வத்தை ஊடு ருவல்காரர்களுக்கு  பகிர்ந்தளிக்கப் போகி றீர்களா” என்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கியுள்ள அவர், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று பொருள்படும்படி பேசியுள்ளார். 
 

அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு எந்த வகை யிலும் பொருத்தமில்லாத வார்த்தைகள் இவை. 

உ.பி. சட்டமன்றத் தேர்தலின் போதும் இப்படித் தான் பிரதமரும் ஒன்றிய உள்துறை அமைச்சரும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் தோய்ந்த வார்த்தைகளை வீசினார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட மதம், சாதி மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்களை தாக்கிப் பேசக்கூடாது என்று தேர்தல் நடத்தை விதி கூறுகிறது. ஆனால் பிரதமரின் இந்தப் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் வாய்திறக்க மறுக்கி றது. 

தேர்தல் ஆணையம் உண்மையில் உயிருடன் தான் இருக்கிறதா என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்புகின்றனர். நரேந்திர மோடி தேர்த லில் போட்டியிடுவதை தடை செய்வதோடு அவர் தொடர்ந்து பேச தடைவிதிப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் உயிரோடு இருப்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?